திவஸம், தர்ப்பணம் முதலான பித்ரு காரியங்களும் பரோபகாரத்தைச் சேர்ந்தவைதான் என்று நிறையச் சொல்லியாயிற்று. சிராத்தம் முதலானவை பித்ருக்கள் எங்கே, எப்படிப்பட்ட ஜன்மா எடுத்திருந்தாலும் அங்கே அவர்களுக்கு த்ருப்தி உண்டாக்கும் என்று சொன்னேன்.
ஒருத்தர்
செத்துப் போனவுடனேயே பித்ரு லோகம்போய் விடுவதில்லை; இன்னொரு ஜன்மா எடுத்து விடுவதில்லை; இறந்து போனவனின் ஜீவன் ஒரு வருஷம் பிரயாணம் பண்ணித்தான் பித்ரு ஸ்தானத்தை அடைகிறது. இதை நம் சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிற மாதிரியே க்ரீக் மைதாலஜி முதலான மதாந்தரங்களிலும் சொல்லியிருக்கிறது.
ஜீவன் வைதரணி நதியைக் கடந்து யம பட்டணம் போகவேண்டும் என்று நாம் சொல்கிற மாதிரியே அவர்களும் ஒரு நதியை (Styx) சொல்லி அதைத் தாண்டி மறுலோகத்துக்கு (Hades) போக வேண்டும் என்கிறார்கள். நாம் சொல்கிற மாதிரியே யம பட்டணத்தில் இருக்கிற காவல் நாய்போல அவர்களும் ஒன்றை [Cerberus] சொல்கிறார்கள்.
ஒரு ஜீவன் பரலோகம் செல்வதற்குப் பிடிக்கிற ஒரு வருஷத்தில்தான் அதன் த்ருப்திக்காக மாஸா மாஸம் சில சடங்குகளைச் செய்வது. இம்மாதிரி பரலோக யாத்திரையில் வழிக்குணவு தருவதைக்கூட இதர மதங்களிலும் சொல்லியிருப்பதாகக் கேட்டிருக்கிறேன். Viaticum என்று கிறிஸ்துவர்கள் சொல்வது இதுதான் போலிருக்கிறது.
பிள்ளை குட்டி இல்லாதவர்களுக்கும் நாம் கயை, பத்ரி போன்ற இடங்களில் பிண்டம் போடுவது போலவே, கிறிஸ்துவர்கள் All-Souls Day என்று ஒரு நாளில் எல்லா ஆத்மாக்களின் த்ருப்திக்காகவும் வழிபாடு நடத்துகிறார்கள்.லோகம் பூராவும் இப்படி ஒரு நம்பிக்கை, அபிப்ராயம் இருக்கிறது என்றால் அது ஸத்யமாகத்தான்
பிள்ளை குட்டி இல்லாதவர்களுக்கும் நாம் கயை, பத்ரி போன்ற இடங்களில் பிண்டம் போடுவது போலவே, கிறிஸ்துவர்கள் All-Souls Day என்று ஒரு நாளில் எல்லா ஆத்மாக்களின் த்ருப்திக்காகவும் வழிபாடு நடத்துகிறார்கள். லோகம் பூராவும் இப்படி ஒரு நம்பிக்கை, அபிப்ராயம் இருக்கிறது என்றால் அது ஸத்யமாகத்தான்
இருக்க வேண்டும். ஒரு ஜீவன் இருக்கும்போதும், இறக்கும்போதும், இறந்தபின்பும் செய்யவேண்டிய தொண்டுகளை நிறையச் சொல்லிக்கொண்டே போயிருக்கிறேன். ‘இறக்கும்போது நாம் செய்கிற பணியினால் அந்த ஜீவன் பகவத் ஸ்மரணையோடு உயிரை விட்டால் அது பகவானை அடைந்துவிடுமல்லவா? இதற்கப்புறம் அதற்கு இறந்தபின்
செய்யவேண்டிய ஸம்ஸ்காரம், திவஸம், திங்கள் எல்லாம் எதற்குச் செய்யவேண்டும்?’ என்று கேட்டுவிடக்கூடாது. ஏனென்றால் நமக்குத் தெரிவது அந்த ஜீவனின் அந்திம காலத்தில் அது பகவானை நினைக்கும்படியான முயற்சியை நாம் பண்ணுகிறோம் என்பதுதான். அந்த முயற்சி எவ்வளவு பலித்தது என்பது நமக்குத்
தீர்மானமாகத் தெரியாதது. நாம் கங்கா தீர்த்தம், விபூதி, துளஸி கொடுத்து நாமோச்சாரணம் பண்ணுவதை அந்த ஜீவன் எந்த அளவுக்கு மனஸுக்குள் வாங்கிக்கொண்டது என்பது நமக்குத் தெரியாது. அது பகவத் ஸ்மரணையோடுதான் உயிரை விட்டதா என்பது நமக்குத் தெரியாத விஷயம். ஆனதால், அது பகவானிடந்தான்
போய்விட்டது என்று நாமாகத் தீர்மானம் பண்ணிக்கொண்டு அபரகார்யம், ச்ராத்தம் முதலானவைகளை நிறுத்திவிடக்கூடாது. வேத நெறியில் சொல்லப்பட்டதையே ஏறக்குறைய திருவள்ளுவரும்,
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
‘தென் புலத்தார்’ என்பது பித்ருக்கள்.
பித்ருக்களான தாய் தந்தையார்களுக்கும் மூதாதையர்களுக்கும் நமது கடமைகளை எல்லோரும் அவசியம் செய்தாக வேண்டும். ‘மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ’ என்று வேத மாதாவும், இங்கே நம் எல்லோருக்கும் வேத ஸாரத்தையே லகுவாகப் பிழிந்து கொடுத்த அவ்வை, .
‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்றும் சொல்லுகிறார்கள். தாய் தந்தையர் ஜீவிய வந்தர்களாக இருக்கையில், அவர்களிடம் பணிவுடன் நடந்து கொண்டு, அவர்களுக்கு நம்மால் இயன்ற சௌக்கியமெல்லாம் செய்து தரவேண்டும். தாய் தந்தையர் நமக்காக ஆதியில்
செய்துள்ள தியாகங்களுக்கு நாம் பிரதியே செய்ய முடியாது. அவர்களது மனம் கோணாமல் அவர்களை வைத்துக் காக்க வேண்டும்.
அவர்கள் இந்த உலகத்தை விட்டுப்போன பிற்பாடும், அவர்களுக்காக சாஸ்திரப் பிரகாரம் தர்ப்பணம், சிரார்த்தம் (திதி) இவற்றை அனைவரும் தவறாமல் செய்ய வேண்டும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1. கொலுவில் பொம்மைகளுக்கிடையே இடைவெளி இருக்க வேண்டும்.
2. ஒரு படிக்கு பத்து பொம்மைகளுக்கு மேல் அனுமதியில்லை.
3. ஏழு படிகளுக்குமேல் அனுமதி இல்லை.
4. சிறப்பு அனுமதியாக தசாவதாரம் செட்டுக்கு தனிப்படி(!) அனுமதி உண்டு.
பத்து பேரும் ஒருவரே என்பதால் சமூக இடைவெளி தேவையில்லை.
5. பள்ளிகள், கல்லூரிகள் திறக்க அனுமதி அளித்திருப்பதால் கீதோபதேசம் செட் வைக்க அனுமதி வழங்கப்படுகிறது. உபதேசம் செய்பவர், பெறுபவர் ஆகிய இருவரும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். கீதோபதேசக் காட்சி தமிழில் இருக்கவேண்டும்.
6. மொத்த பொம்மைகள் அதிக பட்சம் ஐம்பது மட்டுமே இருக்கலாம்.
7. சுண்டல் வழங்கப்படலாம். ஆனால் அவை சானிடைசரால் அலம்பப்பட்டிருக்க வேண்டும்.
8. பீச் பார்க் ஆகியவை கட்டலாம். அவை காலியாக இருக்கவேண்டியது அவசியம்.
9. அனைத்து விதிகளும் சரிவர பின்பற்றப்படுகிறதா என்று கண்காணிக்க
"தேவைப்படாத நகைகளை அந்தத் தெய்வத்திற்கு, பயன்பாட்டிற்குத் தேவையில்லை என்று கருதுகின்ற நகைகளை, உடைந்த நகைகளை, சிறு சிறு நகைகளை - மும்பையில் இருக்கின்ற ஒன்றிய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கி, அதிலிருந்து பெறப்படுகின்ற தங்கக்கட்டிகளை,
தங்க வைப்பு நிதியில் வைத்து அதில் கிடைக்கின்ற வட்டி தொகையை முழுமையாக தெய்வத் திருப்பணிகளுக்கு, திருக்கோவில்கள் வளர்ச்சிகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டு இருக்கின்றோம்" : அமைச்சர் சேகர்பாபு.
தேவைப்படாத நகைகள் என்ற ஒன்று இல்லவே இல்லை. எப்போது பக்தர்கள் அதை காணிக்கையாக
ஒரு குறிப்பிட்ட கோவிலுக்கு செலுத்தி விட்டார்களோ, அப்போதிலிருந்து அது அந்த கோவிலின் சொத்தாகி விடுகிறது. அந்த சொத்தை நிர்வகிக்க அறங்காவலர்களுக்கு மட்டுமே நிர்வகிக்க உரிமை உள்ளது. ஆனால், அந்த சொத்தை வேறு ஒருவருக்கு கொடுக்க எந்த உரிமையும் இல்லை. ஆகையால் அந்த கோவில் நகைகளின் மூலம்