அறிவுரைஒ!..

ஒருமுறை, ராமகிருஷ்ணரின் சீடரான  பிரும்மானந்தர் படகுப் பயணம் மேற்கொண்டார். படகிலிருந்த  ஒருவன், அவரைக் கேலிசெய்தான்.  பிரும்மானந்தர் வருத்தமடைந்தாலும், அவனைத் தட்டிக் கேட்கவில்லை. குருநாதரிடம் சென்று,  நடந்ததைச் சொன்னார்.
ராமகிருஷ்ணர் அவரிடம், நீ ஏன் அவனைக்  கண்டிக்கவில்லை. தவறு செய்பவனைக்  கண்டிப்பாகக் கண்டிக்க வேண்டும், என்றார்.
மற்றொரு முறை, மற்றொரு சீடரான  விவேகானந்தர் படகில் சென்றார். அதே ஆசாமி  படகில் அவருடன் வந்தான். அவன்,  விவேகானந்தரை கேலி செய்ய ஆரம்பித்தான். விவேகானந்தர் மாவீரர் அல்லவா! கை முட்டியை மடக்கி, அவனை ஓங்கிக் குத்தப் போனார். அவன்  அப்படியே ஒடுங்கி விட்டான்.
இந்த சம்பவத்தை பெருமையாக குருவிடம் வந்து சொன்னார் விவேகானந்தர். உடனே, ராமகிருஷ்ணர் அவரைக் கடிந்து கொண்டார்.  துறவிகளுக்கு பொறுமை வேண்டும். துறவு ஏற்ற நீ இப்படி செய்யலாமா? என்றார்.
அவர் சென்ற பிறகு மற்ற சீடர்கள், குருவே!  நீங்கள் ஆளுக்கொரு அறிவுரையாக மாற்றி  மாற்றி சொன்னது ஏன்? புரிந்து கொள்ள முடியவில்லையே, என்றனர்.
பிரும்மானந்தர் அப்பாவி. அவருக்கு கொஞ்சமாவது உணர்ச்சி வர வேண்டும் என்பதற்காக அப்படி சொன்னேன்.
விவேகானந்தர் உணர்ச்சிவசப்படுபவர். அவருக்கு மேலும் உணர்ச்சியை ஊட்டி கோபக்காரனாக்கக்கூடாது. அவரவர், குணத்திற்கேற்பவே  புத்திமதி சொல்ல வேண்டும். புரிகிறதா? என்றார். சீடர்கள் அவரது அறிவுத்திறன் குறித்து வியந்தனர்.

🇮🇳🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

9 Oct
இது உங்கள் இடம்: அரசியல்வாதிகளே வகுப்பறைக்குள் நுழையாதீர்!

வி.எஸ்.வெங்கடாசலம், செங்கோட்டை, நெல்லை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:

அண்ணா பல்கலை ஆட்சி மன்ற குழு உறுப்பினராக, முதல்வர் ஸ்டாலினின் மகனும், தி.மு.க., இளைஞரணி செயலரும், எம்.எல்.ஏ.,வுமான உதயநிதியை நியமித்துள்ளனர்.
எம்.எல்.ஏ.,க்களுக்கான பிரதிநிதித்துவ பிரிவின் கீழ், அண்ணா பல்கலை சிண்டிகேட் உறுப்பினராக உதயநிதி தேர்வாகி உள்ளார்.

இதை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.துறை நிபுணர், முனைவர் பட்டம் பெற்றவர், விஞ்ஞானி போன்றோர் சிண்டிகேட் உறுப்பினராக வேண்டும்.
அது தான், பல்கலையின் வளர்ச்சிக்கு நல்லது. அதை எம்.எல்.ஏ.,வுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ வழங்குவது நீதியே அல்ல.அரசியல்வாதிகள், பல்கலை சிண்டிகேட் உறுப்பினராக இருப்பதால் என்ன பலன்?
Read 5 tweets
9 Oct
திருமலை  திருப்பதி  தரிசன  நடை முறைகள்

திருமலை சென்று திருப்பதி ஏழுமலையானை  மட்டும்  தரிசித்துவிட்டு வருவது தவறு.    திருமலை  திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தனி  மரபு இருக்கிறது...  இந்த மரபு ராமானுஜர் காலத்தில்,  அவரால்  தொடங்கி,  கடைபிடித்து  வரப்படுகிறது.

🙏🇮🇳1
திருப்பதிக்குச்சென்றால்  திருமலை வெங்கடாசலபதியை தரிசிப்பதற்குமுன்  முதலில்  வணங்கவேண்டிய கோவில்கள் வரிசையில்

1வது கோவில் அலமேலுமங்காபுரம்.

கீழ்திருப்பதியில்  பேருந்து நிலையத்திலிருந்து  5வது கிலோமீட்டரில்    அமைந்துள்ளது. 

🙏🇮🇳2
இங்கு பத்மாவதி தாயார் சன்னதி உள்ளது. அலர்மேல்மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து உளமாற வணங்க வேண்டும்.  தாயாரின்  பரிந்துரை   அடிப்படையில்தான்  பெருமாளின்  கருணை  கிடைக்கும்.

காலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது மணிவரை கோயில் திறந்து இருக்கும்.

🙏🇮🇳3
Read 49 tweets
8 Oct
*நவராத்திரி பற்றிய சிறப்பு பதிவுகள் :*

நவராத்திரி அன்று கொலு எப்படி வைக்க வேண்டும் என்பதைப்பற்றி தெரிந்துகொள்ளலாம்.

கொலு வைப்பவர்கள் புரட்டாசி அமாவாசை நாளில் (மகாளய அமாவாசை) கொலு வைத்து விட வேண்டும். கொலு என்றால் அழகு.
கொலு வைக்கும் முன் வீட்டை சுத்தமாக்கி, அழகிய கோலங்கள் போடவேண்டும். பொம்மைகளை வரிசைப்படுத்த வேண்டும்.
*கொலு பொம்மை தத்துவம்*

மனிதன், குடும்ப வாழ்விலும், ஆன்மிக வாழ்விலும் படிப்படியாக முன்னேறவேண்டும் என்பதை நவராத்திரியின் கொலு படி தத்துவம் உணர்த்துகிறது. கொலுவில் ஒன்பது படிகள் அமைப்பது சிறப்பு.
Read 19 tweets
8 Oct
நிலக்கரி சுரங்கமே தந்தும் சும்மா இருந்த மின் வாரியம்

சென்னை:மத்திய அரசு ஒடிசாவில் உள்ள சந்திரபிலா நிலக்கரி சுரங்கத்தை வழங்கி, ஐந்து ஆண்டுகளாகியும் நிலக்கரி எடுத்து வராததே, தற்போது தமிழக மின் வாரியம் நிலக்கரி தட்டுப்பாட்டில் சிக்கி இருப்பதற்கு முக்கிய காரணமாகும்.
துாத்துக்குடி, சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில், மின் வாரியத்திற்கு 4,320 மெகா வாட் திறனில் ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன.72 ஆயிரம் டன் தேவைஅவற்றில் தினமும் முழு மின் உற்பத்திக்கு பயன்படுத்த, 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை.
அதில், 60 ஆயிரம் டன், ஒடிசா மாநிலத்தில் உள்ள தால்சர், ஐ.பி., வேலி மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள மத்திய அரசின் சுரங்கங்களில் இருந்து பெறப்படுகிறது.
Read 11 tweets
8 Oct
இது உங்கள் இடம்: உண்மையே உன் விலை என்ன?

அ.கணேசன், பேட்டை, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த ஏப்ரலில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு செலவிட்ட கணக்குகளை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துள்ளன.
விளம்பரங்கள், நட்சத்திரப் பேச்சாளர்களின் பயணச் செலவு மற்றும் வேட்பாளர்களுக்கு கொடுத்தது ஆகியவை அடங்கலாக, தி.மு.க., 114.14 கோடி ரூபாயும், அ.தி.மு.க., 57.33 கோடி ரூபாயும் மட்டுமே செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.,வுக்கு தேர்தல் வியூகம் அமைத்து கொடுத்த பிரசாந்த் கிஷோருக்கே, 380 கோடி ரூபாய் தட்சணை கொடுத்தனர். இதை எந்த கணக்கில் சேர்ந்துள்ளனர் என்பது தெரியவில்லை. 'பொய் சொல்லும் வாய்க்கு, போஜனம் கிடைக்காது' என்று ஒரு சொலவடை உண்டு.
Read 5 tweets
8 Oct
சுருளிமலை அதிசயம்....!

தேனி மாவட்டம் சுருளிமலை அருள்மிகு சுருளிவேலப்பர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலாகும். இங்கு சுருளிவேலப்பர் மூலவராக உள்ளார்.

🇮🇳🙏1
சிவனின் திருமணத்தின் போது அனைவரும் இமயமலைக்குச் சென்று விட வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்ந்தது. இதனால் உலகு சமநிலையை இழக்க சிவன் தென்பொதிகை எனும் இம்மலைக்கு அகத்தியரை அனுப்பி உலகை சமப்படுத்தினார். பின் இங்குள்ள குகையில் அகத்தியருக்கு மணக்கோலத்தில் சிவன் காட்சியளித்தார்.

🇮🇳🙏2
இங்குள்ள அதிசயம் என்னவென்றால் இங்குள்ள விபூதிக்குகையில் மணல் ஈரம் பட்டு காய்ந்த பின்பு விபூதியாக மாறுகிறது. 🇮🇳🙏3
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(