காஞ்சி மஹா பெரியவர், ஒரு நவராத்திரி சமயத்தில் பக்தர்கள் முன்னிலையில் ஆற்றிய அருளுரை
உலகில் தீமை அழிந்து நன்மை பெருகிட நவராத்திரி கொண்டாடப்படுகிறது. ஆண்களுக்கு சிவராத்திரி போன்று, பெண்களுக்கு நவராத்திரி முக்கியம்.
குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகவும், தீர்க்க சுமங்கலியாய் வாழவும் சுமங்கலிகள் இந்த ஒன்பது நாட்களிலும் அம்பிகையை பூஜிக்க வேண்டும்.
முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வழிபட மனதில் தைரியம் வளரும். அடுத்த மூன்று நாட்கள் அம்பிகையை லட்சுமியாக வழிபட செல்வச் செழிப்பு உண்டாகும். அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியாக, தேவியை பூஜிக்க கல்வி வளர்ச்சி மேம்படும். ஞானம் கைகூடும்.
தினமும் காலையில் சர்க்கரைப்பொங்கல், உளுந்தவடையும், மாலையில் சுண்டல், பால் பாயசமும் நைவேத்யம் செய்ய வேண்டும். பத்தாவது நாள் விஜயதசமியாக கொண்டாட வேண்டும்.
இந்நாட்களில் சவுந்தர்ய லஹரி, லட்சுமி, துர்கா அஷ்டோத்ரம், மகிஷாசுர மர்த்தினி ஸ்தோத்திரம், தேவி பாகவதம் போன்றவற்றை பாடலாம். நவராத்திரியின்போது சுமங்கலிகள் நூல் புடவை அணிவது சிறப்பு.
கன்னி பூஜை:
முதல்நாள், ஒரு கன்னிக்கும் (பெண் குழந்தை), ஒரு சுமங்கலிக்கும் பூஜை செய்ய வேண்டும். அந்த குழந்தைக்கு பாவாடை, சட்டை, மஞ்சள், குங்குமம், வளையல், கண்ணாடி, சீப்பு, பூ ஆகியவற்றை வழங்கி மகிழ்விக்க வேண்டும்.
இதே போல், இரண்டாம் நாள் இரு கன்னிகளும், மூன்றாம் நாள் மூன்று கன்னிகளும் என ஒவ்வொரு நாளும் ஒரு குழந்தையை அதிகப்படுத்தி, ஒன்பதாம் நாள் ஒன்பது கன்னிகளுக்கு பூஜை செய்ய வேண்டும். சுமங்கலியைப் பொறுத்தவரை, தினமும் ஒருவரே போதுமானது.
நவராத்திரி பூஜை செய்பவர்கள் மனத்தூய்மை, ஒழுக்கத்துடன் இருப்பது அவசியம். அம்பிகை கொலு வீற்றிருக்கும் இடம் எப்போதும் தூய்மையோடும், கோலம் இட்டு அழகுடனும் இருப்பது மிக அவசியம். பூக்களால் அம்பிகையை தினமும் அலங்காரம் செய்ய வேண்டும்.
கொலு வைத்தவர்கள் துக்க நிகழ்ச்சிக்குப் போகக்கூடாது. தேவி உபாசகர்களை வீட்டிற்கு அழைத்து மரியாதை செய்ய வேண்டும். நவராத்திரியின் போது, வீட்டில் சண்டை சச்சரவு செய்வதோ, வீண் பொழுதுபோக்கு, கேளிக்கைகளில் ஈடுபடுவதோ கூடாது.
காஞ்சிப் பெரியவரின் இந்த அறிவுரைகளைப் பின்பற்றி நவராத்திரியைக் கொண்டாடுங்கள். வாழ்வில் எல்லா நன்மையும் பெற்று மகிழ்வீர்கள்.
ஹர ஹர சங்கர 🇮🇳🙏
ஜெய ஜெய சங்கர 🇮🇳🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அண்ணா பல்கலை ஆட்சி மன்ற குழு உறுப்பினராக, முதல்வர் ஸ்டாலினின் மகனும், தி.மு.க., இளைஞரணி செயலரும், எம்.எல்.ஏ.,வுமான உதயநிதியை நியமித்துள்ளனர்.
எம்.எல்.ஏ.,க்களுக்கான பிரதிநிதித்துவ பிரிவின் கீழ், அண்ணா பல்கலை சிண்டிகேட் உறுப்பினராக உதயநிதி தேர்வாகி உள்ளார்.
இதை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.துறை நிபுணர், முனைவர் பட்டம் பெற்றவர், விஞ்ஞானி போன்றோர் சிண்டிகேட் உறுப்பினராக வேண்டும்.
அது தான், பல்கலையின் வளர்ச்சிக்கு நல்லது. அதை எம்.எல்.ஏ.,வுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ வழங்குவது நீதியே அல்ல.அரசியல்வாதிகள், பல்கலை சிண்டிகேட் உறுப்பினராக இருப்பதால் என்ன பலன்?
திருமலை சென்று திருப்பதி ஏழுமலையானை மட்டும் தரிசித்துவிட்டு வருவது தவறு. திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தனி மரபு இருக்கிறது... இந்த மரபு ராமானுஜர் காலத்தில், அவரால் தொடங்கி, கடைபிடித்து வரப்படுகிறது.
🙏🇮🇳1
திருப்பதிக்குச்சென்றால் திருமலை வெங்கடாசலபதியை தரிசிப்பதற்குமுன் முதலில் வணங்கவேண்டிய கோவில்கள் வரிசையில்
1வது கோவில் அலமேலுமங்காபுரம்.
கீழ்திருப்பதியில் பேருந்து நிலையத்திலிருந்து 5வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது.
🙏🇮🇳2
இங்கு பத்மாவதி தாயார் சன்னதி உள்ளது. அலர்மேல்மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து உளமாற வணங்க வேண்டும். தாயாரின் பரிந்துரை அடிப்படையில்தான் பெருமாளின் கருணை கிடைக்கும்.
காலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது மணிவரை கோயில் திறந்து இருக்கும்.
நவராத்திரி அன்று கொலு எப்படி வைக்க வேண்டும் என்பதைப்பற்றி தெரிந்துகொள்ளலாம்.
கொலு வைப்பவர்கள் புரட்டாசி அமாவாசை நாளில் (மகாளய அமாவாசை) கொலு வைத்து விட வேண்டும். கொலு என்றால் அழகு.
கொலு வைக்கும் முன் வீட்டை சுத்தமாக்கி, அழகிய கோலங்கள் போடவேண்டும். பொம்மைகளை வரிசைப்படுத்த வேண்டும்.
*கொலு பொம்மை தத்துவம்*
மனிதன், குடும்ப வாழ்விலும், ஆன்மிக வாழ்விலும் படிப்படியாக முன்னேறவேண்டும் என்பதை நவராத்திரியின் கொலு படி தத்துவம் உணர்த்துகிறது. கொலுவில் ஒன்பது படிகள் அமைப்பது சிறப்பு.
நிலக்கரி சுரங்கமே தந்தும் சும்மா இருந்த மின் வாரியம்
சென்னை:மத்திய அரசு ஒடிசாவில் உள்ள சந்திரபிலா நிலக்கரி சுரங்கத்தை வழங்கி, ஐந்து ஆண்டுகளாகியும் நிலக்கரி எடுத்து வராததே, தற்போது தமிழக மின் வாரியம் நிலக்கரி தட்டுப்பாட்டில் சிக்கி இருப்பதற்கு முக்கிய காரணமாகும்.
துாத்துக்குடி, சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில், மின் வாரியத்திற்கு 4,320 மெகா வாட் திறனில் ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன.72 ஆயிரம் டன் தேவைஅவற்றில் தினமும் முழு மின் உற்பத்திக்கு பயன்படுத்த, 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை.
அதில், 60 ஆயிரம் டன், ஒடிசா மாநிலத்தில் உள்ள தால்சர், ஐ.பி., வேலி மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள மத்திய அரசின் சுரங்கங்களில் இருந்து பெறப்படுகிறது.
அ.கணேசன், பேட்டை, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த ஏப்ரலில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு செலவிட்ட கணக்குகளை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துள்ளன.
விளம்பரங்கள், நட்சத்திரப் பேச்சாளர்களின் பயணச் செலவு மற்றும் வேட்பாளர்களுக்கு கொடுத்தது ஆகியவை அடங்கலாக, தி.மு.க., 114.14 கோடி ரூபாயும், அ.தி.மு.க., 57.33 கோடி ரூபாயும் மட்டுமே செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.,வுக்கு தேர்தல் வியூகம் அமைத்து கொடுத்த பிரசாந்த் கிஷோருக்கே, 380 கோடி ரூபாய் தட்சணை கொடுத்தனர். இதை எந்த கணக்கில் சேர்ந்துள்ளனர் என்பது தெரியவில்லை. 'பொய் சொல்லும் வாய்க்கு, போஜனம் கிடைக்காது' என்று ஒரு சொலவடை உண்டு.
தேனி மாவட்டம் சுருளிமலை அருள்மிகு சுருளிவேலப்பர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலாகும். இங்கு சுருளிவேலப்பர் மூலவராக உள்ளார்.
🇮🇳🙏1
சிவனின் திருமணத்தின் போது அனைவரும் இமயமலைக்குச் சென்று விட வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்ந்தது. இதனால் உலகு சமநிலையை இழக்க சிவன் தென்பொதிகை எனும் இம்மலைக்கு அகத்தியரை அனுப்பி உலகை சமப்படுத்தினார். பின் இங்குள்ள குகையில் அகத்தியருக்கு மணக்கோலத்தில் சிவன் காட்சியளித்தார்.
🇮🇳🙏2
இங்குள்ள அதிசயம் என்னவென்றால் இங்குள்ள விபூதிக்குகையில் மணல் ஈரம் பட்டு காய்ந்த பின்பு விபூதியாக மாறுகிறது. 🇮🇳🙏3