புரிய வேண்டிய புரிதல்கள்..

⚫⚫⚫

வர்ணாசிரமக் கோட்பாட்டை வலியுறுத்தும் வைதீக இந்து மதம் என அழைக்கப்படுகின்ற ஆரிய மதத்திற்கு எதிரான கலகக் குரல் தான் தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்கிற முழக்கம்.

இது இக்காலத்திற்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்ட முழக்கம் அல்ல. காலம் காலமாக - 1/23
தமிழர்கள் தாங்கள் இந்துக்கள் அல்ல என்பதை தங்கள் மீது திணிக்கப்பட்ட இந்துத்துவ அடையாளத்திற்கு எதிராக முழங்கி இருக்கிறார்கள். வரலாற்றில் நமக்குக் கிடைக்கக்கூடிய தொன்ம இலக்கிய சான்றுகளான சங்கப்பாடல்கள் தொடங்கி, சித்தர் பாடல்கள் தொடங்கி, வள்ளலார் வழி வைகுண்டர் வழி என பல கொள்கை- 2/23
வழிகள் பார்ப்பனிய ஆரிய மதமான இந்து மதத்திற்கு எதிரான கலகக் குரல்கள் மட்டுமல்ல, மாற்று பண்பாட்டு வழி தீர்வுகள்.

கடந்த 2009 இன அழிவிற்கு பிறகான தமிழ்த் தேசிய அரசியல் உருவான காலகட்டத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு பார்ப்பனிய ஆரிய இந்து மதத்தின் ஆதிக்க நிலை உச்சத்தில் - 3/23
இருந்ததை உணர்ந்தோம். எனவே தமிழர்கள் வரலாற்று ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் இந்துக்கள் அல்லர் என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டிய ஒரு நிலைக்கு நாங்கள் உந்தப்பட்டோம்.

மேலும் தமிழரின் பல பண்பாட்டு விழுமியங்களை அடையாளங்களை ஆரிய இந்து மதம், செரித்து உள்வாங்கி தனது - 4/23
அடையாளங்களாக வெளிப்படுத்துகிற வரலாற்றுத் திரிபுகளை அடித்து நொறுக்க வேண்டும் என இந்த மண்ணின் பூர்வ குடிமக்கள் முடிவெடுத்தோம்.

லிங்காயத்துகள் போல சீக்கியர்கள் போல நாங்களும் இந்துக்கள் அல்ல என நாம் தமிழர் என்கின்ற வெகுஜன அரசியலாக கட்டமைக்கப்படுகிற இனத்திற்கான அரசியலின் - 5/23
ஊடாகவே தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்பதையும் நாங்கள் கொள்கை முடிவாக அறிவித்தோம்.

இந்தக் கொள்கை முடிவை எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கின்ற எல்லா இடங்களிலும் முழங்குகிறோம். தமிழர்கள் ஏன் இந்துக்கள் அல்ல என்கின்ற கேள்வி இருந்து தமிழர்கள் யார் என்பதான அறிவுத்தேடல் பிறக்கும் என - 6/23
நாங்கள் நம்புகிறோம். அப்படி தமிழர்கள் யார் என தேடுகிற அறிவுத்தேடல் மூலம் தமிழர் என்கின்ற தேசிய இனம் வலிமையற்ற உதிரிச் சமூகமாக மாறுகின்ற அபாயம் தடுக்கப்படும் என்பதை உணர்ந்திருக்கிறோம்.

எனவே தொன்ம இனமான தமிழர் என்கின்ற தேசிய இனத்தின் பண்பாட்டை மீட்க காலப்புழுதியில் - 7/23
புதைந்து கிடக்கும் எம் இனத்தின் மெய்யியல் சிந்தனைகளை மீண்டும் இந்த மண்ணிலே விவாதப் பொருளாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் எங்களது பயணம் அமைகிறது.

இஸ்லாமும் கிறிஸ்தவமும் ஒரு மதம் என்ற அடிப்படையில் அதற்கான அடிப்படைத் தகு நிலைகளை கொண்டிருக்கின்றன. ஆனால் சர் வில்லியம் - 8/23
ஜோன்ஸ் என்கிற ஆங்கிலேய அதிகாரி உருவாக்கிய சொல்லான "இந்து" என்பது ஒரு மதத்தின் பெயர்ச்சொல் அல்ல. அது இந்த மண்ணை ஆண்ட ஆங்கிலேயர் தனது வசதிக்காக உருவாக்கிக் கொண்ட அரசியல் நிர்வாகச் சொல்.

இஸ்லாமும் கிறிஸ்தவமும் தங்களுக்கென தனித்த வழிபாட்டு முறைகளை கொண்டிருக்கின்றன. அதற்கென - 9/23
தனித் தனியாக புனிதநூல்கள் அடையாளம் காட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்து என்று ஆங்கிலேயரால் கட்டமைக்கப்பட்ட மதம் இதுபோன்ற ஓர்மைக் கூறுகளை கொண்டிருக்கவில்லை என்பதோடு மட்டுமில்லாமல், ஒரு மதம் என்கிற முறைமையில் ஆய்வாளர்கள் வரையறுக்கிற காரணிகளோடு இந்து மதம் ஒத்துப் போவதில்லை - 10/23
யார் இந்துக்கள் என்கின்ற கேள்விக்கு இந்து என்கின்ற சொல்லை இந்த நிலத்தில் வாழக்கூடிய கோடிக்கணக்கான மக்களுக்கான பொதுச் சொல்லாக மாற்றிய சர் வில்லியம் ஜோன்ஸ் அளித்த பதில் மிக விசித்திரமானது.

யார் இஸ்லாமியர்கள் இல்லையோ, யார் சீக்கியர்கள் இல்லையோ, யார் கிறிஸ்தவர்கள் இல்லையோ - 11/23
அவர்கள் எல்லாம் இந்துக்கள் என போகிற போக்கில் வரையறுத்த விபரீதத்தை தான் இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

ஏற்கனவே தமிழர் நிலத்தில் சைவம்,மாலியம், பௌத்தம் சமணம் என பல்வேறு நம்பிக்கைகள் இங்கே இருந்தன. மேலும் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பாகவே இருந்த ஆரிய புராதான வைதீக - 12/23
பார்ப்பனிய மதத்திற்கு எதிராக , வருணாசிரம கோட்பாடுகளுக்கு எதிராக தமிழர் மண் உளவியலாகவே எதிர்ப்பு நிலையை கொண்டிருந்தது. ஆனால் ஆங்கிலேயர் தனது நிர்வாக வசதிக்காக இந்து என்கின்ற பொது அடையாளத்துக்குள் தமிழர்களின் அனைத்து விதமான நம்பிக்கைகளையும் அடைத்து ஏற்கனவே இருந்த ஆரிய - 13/23
வைதீக மதத்திற்கு வலுவை சேர்த்தனர்.

இந்து மதத்தை பரப்புவதற்காக சாமி விவேகானந்தர் தமிழகத்திற்கு வந்திருந்தபோது எங்களை இந்துக்கள் என்று நீங்கள் எவ்வாறு அடையாளப் படுத்தலாம் என பேரறிஞர் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை வினா எழுப்பினார்.

எனவே தமிழர்களின் தொன்ம அடையாளங்களை - 14/23
அழிக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்ட இந்து என்கின்ற பொது அடையாள சொல்லை தமிழர்கள் நாங்கள் நிராகரிக்கிறோம் என்பதன் அடிப்படையிலேயே தமிழர்கள் நாங்கள் இந்துக்கள் அல்ல என பேரறிவிப்பு செய்கிறோம்.

தமிழர்கள் எத்தனையோ மதங்களை சார்ந்து வாழ்கிறார்கள்.அயலில் இருந்து இறக்குமதியான - 15/23
இஸ்லாம் கிறிஸ்தவ மதங்களின் மீது நம்பிக்கை கொண்ட தமிழர்களை தாய் மதத்திற்கு திரும்பி வாருங்கள் என்று நாம் அழைக்கவில்லை. அது தேவையும் இல்லை. சொல்லப்போனால் வர்ணாசிரம அடுக்கை, ஆரிய இந்து மதத்தின் ஏற்றத்தாழ்வுகளை வெறுத்த தமிழர்கள்தான் இஸ்லாத்தையும், கிறிஸ்தவத்தையும் - 16/23
ஏற்றார்கள். வர்ணாசிரம கோட்பாட்டை வலியுறுத்துகிற இந்து மத எதிர்ப்பு புள்ளியில் அவர்கள் எங்களோடுதான் நிற்கிறார்கள்.

இந்தப் புரிதலோடு தான் இந்து என்கின்ற அடையாளத்தில் இருந்து தமிழர்கள் வெளிவர வேண்டும்‌ என்கிற அழைப்பினை தான்‌ நாம் தமிழர் கட்சியின் தலைமை - 17/23
ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் அழைப்பு விடுக்கிறார்.

நாம் தமிழர் கட்சியில் எத்தனையோ இஸ்லாமியர்கள், கிருத்தவர்கள் கட்சியின் உயர் நிர்வாக பொறுப்பில் இருக்கின்றார்கள். அண்ணன் சீமானின் கருத்தை மிகச் சரியாக புரிந்து கொண்டு அண்ணனோடு - 18/23
பயணிக்கிறார்கள். இஸ்லாமிய மக்களை பாதிக்கின்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஒவ்வொரு பள்ளிவாசலிலும் போராடிய இஸ்லாமிய தமிழர்களோடு களத்தில் நின்ற ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும்தான். அதன் காரணமாக தமிழகத்தில் வழக்கு பெற்ற ஒரே ஒரு அரசியல் தலைவர் அண்ணன் சீமான் - 19/23
மட்டும்தான்.

இதைப் புரிந்து கொண்டு , வெகு காலத்திற்குப் பிறகு இஸ்லாமிய, கிறிஸ்தவ இளைஞர்கள் திராவிட கட்சிகளை விட்டு தமிழ் தேசியத்தின் மீது நம்பிக்கை கொண்டு நாம் தமிழர் கட்சியை நோக்கி நகருகின்ற காட்சிகளை பொறுக்க முடியாமல் தான் இதுபோன்ற வெட்டி ஒட்டி அவதூறுகளை பரப்ப - 20/23
வேலைகளை திராவிட ஆதரவாளர்கள் திட்டமிட்டு செய்கிறார்கள்.

எங்களுக்கு முன்னால் இருந்த முன்னோர்கள் வள்ளலார் வழி வைகுண்டர் வழி என்றெல்லாம் கட்டமைத்து விட்டு இந்து மதத்தில் சங்கமித்து விட்டார்கள் என தீவிர திராவிட ஆதரவாளர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

எங்களை அவர் எச்சரிக்க - 21/23
தேவையில்லை. தன் கட்சியில் 90 சதவீதம் இந்துக்கள் தான் இருக்கிறார்கள் என இந்து மதத்தை நம்புகிற திமுக தலைவரை அவர் எச்சரித்தால் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது.

ஏனெனில் திராவிடம் தான் ஆரியத்தை தமிழக நிலத்தில் விதைத்த, காப்பாற்றுகிற, கூட்டணி அரசியல் செய்கிற வேலையை - 22/23
திறம்பட செய்து வருகிறது.

இதை தெளிவாக புரிந்து கொண்டு, அண்ணன் சீமான் அவர்களது கருத்தை வெட்டி ஒட்டி அவதூறு பரப்புவர்களின் அரசியல் பிழைப்பு தனத்தை அம்பலப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.



#வழக்கறிஞர்_மணி_செந்தில்.
#நாம்_தமிழர்_கட்சி - 23/23
“Un roll” @threadreaderapp

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sakthivel Gunasekaran.

Sakthivel Gunasekaran. Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @sakthi_racer

19 Oct
*உறவுகளுக்கு வணக்கம்!!!.*

*நாம் தமிழர் கட்சியின் பனை விதைத் திருவிழா*

*நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் வடக்கு தொகுதி 2021 வேட்பாளரும் கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை மாநில செயலாளருமான நேர்மைமிகு செ‌.ஈஸ்வரன் தலைமையில்*

*திருப்பூர் வடக்கு தொகுதி இணை செயலாளர் - 1/5
செரால்ட் எட்வர்ட் சிங்.
துணை தலைவர்
தாமஸ் செல்வன்
ஆகியோர் முன்னிலையிலும்*

சுற்றுச்சூழல் பாசறை கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை
வீரத்தமிழர் முன்னணி இணைந்து

*நேற்று ஞாயிற்றுக்கிழமை 17-10-21 மாலை 3 மணி முதல் 6மணிவரை திருப்பூர் வடக்கு தொகுதி - 2/5
பொங்குபாளையத்தில் விட்டு பெய்த மழையிலும். 250க்கு மேற்பட்ட பனை விதைகளை நட்டு இறுதி வரை களத்தில் நின்று களமாடிய அனைத்து உறவுகளுக்கும் எங்களின் புரட்சி வாழ்த்துக்களும் நன்றிகளும்..

என
சீவானந்தம்.
*ஒன்றிய தலைவர்
நாம் தமிழர் கட்சி*
95666 10611 - 3/5
Read 6 tweets
17 Oct
. *🇰🇬நாம் தமிழர் கட்சி🇰🇬*
*🇰🇬சிவகங்கை மாவட்டம்🇰🇬*
*🇰🇬காரைக்குடி தொகுதி🇰🇬*
*🇰🇬🇰🇬 தேவகோட்டை மேற்கு 🇰🇬🇰🇬*

*காரைக்குடி சட்டமன்ற தொகுதி தேவகோட்டை வட்டம், கண்ணங்கோட்டை ஊராட்சி, நாச்சியார்புரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கடந்த - 1/5
25 வருடங்களுக்கு முன்னதாக இலவச வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்றுவரை அதனை அரசாவணப்படுத்தி பயனாளிகளுக்கு பட்டா வழங்காததை கண்டித்து, இன்று...,*

*நாம் தமிழர் கட்சி* யின் தமிழ்த்திரு. *ஐயா கரு_சாயல்ராம்* அவர்கள் தலைமையில் *பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களை - 2/5
ஒருங்கிணைத்து தேவகோட்டை, ராம்நகர் பகுதியில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பதிவுகள்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த, சிவ்கங்கை மாவட்ட நாம் தமிழர் நிர்வாகிகள், காரைக்குடி தொகுதி பொறுப்பாளர்கள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் - 3/5
Read 6 tweets
17 Oct
நாம்தமிழர்கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக
நேற்று(16-10-2021)
சென்னை நந்தம்பாக்கம், ஐ.டி.பி.எல். மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றுவருகிற பனைச்சந்தைத் திருவிழாவை ,தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தொடங்கிவைத்து,
பனைப் பொருளாதாரத் திட்ட - 1/
வரைவு-2021ஐ வெளியிட்டார்

பனையை வைத்தே தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்பதற்கான வழிகளை சான்றுடன் விளக்கும் *"பனைப் பொருளாதாரத் திட்டவரைவு-2021"*

இத்திட்டவரைவை அனைவரும் படித்து, மற்றவர்களுக்கும் பகிருங்கள் 🔁 - 2/3
இன்று முழுவதும் பனையும், பனைச்சந்தையும் பேசுப்பொருளாக ஆக்குவோம்!

நாம் தமிழர்!

#PalmExpo2021_NTK - 3/3
Read 4 tweets
17 Oct
இது கதை அல்ல.
--------------------

2009-ல் போர் முடிந்த கையோடு, ராணுவ தளபதி சரத் பொன்சேகாவை ஓரம்கட்டினார் கோத்தபய ராஜபக்சே.

முக்கிய காரணம் போராளிகளிடம் இருந்து எடுத்த பல பல்லாயிரம்கோடி ஆயுத தளவாடங்கள். கூடவே தங்கம், பணம் என்று..

அந்த அதிநவீன ஆயுதங்கள் எல்லாம் போராளி - 1/10
இயக்கம் சொந்தமாக வாங்கியவை, உலக நாடுகள் பலவும் இலங்கைக்கு கொடுத்த, ராணுவத்திடம் இருந்து பறித்தவைகள்.

அவற்றை எல்லாம் கப்பல் கப்பலாக தாய்லாந்து பாக்கெட் துறைமுகத்திற்கு கடத்தினார் கோத்தபயா. அங்கிருந்து பாகிஸ்தானின் கராச்சி. பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானில் இருந்த - 2/10
தீவிரவாத இயக்கமான ஜெய் இ முகமத் பெற்றுக்கொண்டது.

கோத்தபயாவிற்காக முன்னின்று செய்தவர், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தலைவராக இருந்த அகமத் சையத் பாஷா. ஆயுதங்களை பெற்றுக்கொண்டவர் ஜெயிஷ் ஈ முகமத் அமைப்பின் தலைவர் மசூத் அன்ஸார்.

பணத்திற்கு பதிலாக பல மடங்கு போதைப் பொருள் - 3/10
Read 11 tweets
17 Oct
🙏🙏 கவியரசு கண்ணதாசன் நினைவுதினம் இன்று
17/10/2020.🙏🙏🙏
------------------------------------
நீ நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த நிலையிலும் உனக்கு
மரணமில்லை !

எமனுக்கு என்ன கோபமோ - இல்லை ... தமிழ்க் கவிஞர்களுக்கு என்ன சாபமோ தெரிவில்லையே ! - 1/6
மீசைக் கவிஞர் பாரதி முதல், ஆசைக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வரை
தமிழ்க் கவிஞர்கள் பலரையும் - இளமை துள்ளுகிற வயதிலே சாவு, காவு கொண்டு விட்டது.

அந்த வரிசையில், கவியரசர் கண்ணதாசனும் சாகக்கூடாத வயதில் சாவின் கரத்தில் விழுந்துவிட்டார் - 2/6
என் கூடு விட்டு ஆவி போகும்முன்னால் நாடு வாழ நான் கவிபாடவேண்டும் என்பார். அந்த ஆசை கண்ணதாசனுக்கு அப்படியே நிறை வேறிவிட்டது.
.

கண்ணதாசன், காலத்தை வென்ற கவிஞன். 33 ஆண்டில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைத் தந்தவர்.

கவியரசு 21 வயதில் - 3/6
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(