இப்பாடலில், முறையே சைவம் வைணவம் இஸ்லாம் கிறித்துவம் ஆகிய சமயங்களைக் குறிப்பிட ஒவ்வொரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். அவை அனைத்தையும் உருவகங்கள் என்று குறிப்பிடுகிறார். அதில்தான் சிக்கல் எழுகின்றது.
பாரதியைப் பொருத்தவரை இந்தச் சமயக் கருத்துக்கள் அனைத்தும் உருவகங்களாக இருக்கலாம். அப்படிக் கருதுவதற்கு அவருக்கு உரிமை உண்டு. அதை நாம் மறுக்கவியலாது. ஆனால், அவ்வச்சமயங்களுக்கு இது ஏற்புடையதா? என்று நோக்கும்போது சிக்கல் எழுகிறது.
சிவன் ஆத்தி சூடியவன், சுடுகாட்டுச் சுடலைத் திருநீறு பூசிய வெண் மேனியான், கைலாய பனிவெற்பில் மோன தவத்தில் அமர்ந்துளான் என்பதெல்லாம் உருவகமா? ஆம் என்று ஏற்கிறது சைவம். அச்சமயத்தின் சித்தாந்தம் பயின்றார்க்கு இஃது விளங்கும். சிவன் ஓர் ஆணாகக் காட்டப்படுவது உருவகம்தான்.
பார்வதி பெண்ணாகக் காட்டப்படுவது உருவகம்தான். எனவே பாரதியார் இதனை உருவகம் என்று சொல்வது அச்சமயப்படியே பிழை இல்லை. பாரதியார் சைவ சித்தாந்தத்தில் ஆழங்காற்பட்டவர் என்று சேக்கிழார் அடிப்பொடி தி.ந.ராமச்சந்திரன் விளக்கியுள்ளார். அதற்கு முரணாக பாரதியார் ஒரு கருத்தினை வரைய மாட்டார்.
அடுத்து, ”கருநிறம் கொண்டு பாற்கடல் மிசைக் கிடப்போன்” என்று திருமாலைச் சுட்டுகிறார். கருநிறம் என்பது உருவகமா? ஆம் என்கிறது வைணவம். (விசிஷ்டாத்வைத தரிசன விளக்கம் பயின்றார்க்கு இது விளங்கும்). பாற்கடல் என்பது உருவகமா? ஆம் என்கிறது வைணவ மெய்யியல்.
அடுத்து, “மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்” என்பதை ஓர் உருவகம் என்கிறார் பாரதியார். இதனை உருவகம் என்று சொல்வதன் விளக்கம் என்ன? விடை இல்லை. இதனை உருவகம் என்று சொல்வதை இஸ்லாம் ஏற்காது. அப்படிச் சொல்வது இஸ்லாமிய அடிப்படையை மறுப்பதாகிறது.
பொதுவாகச் சிந்தித்து நோக்கினும் இவ்வரியில் பாரதியார் எவ்வளவு பிழை பட்டிருக்கிறார் என்று விளங்கும். ஆக்கல் காத்தல் அழித்தல் கரத்தல் அருளல் ஆகிய இறைத் தொழில்களைப் பேசுகிறது சைவம் (தொழில் என்பது ஈண்டு செயல் என்று பொருள்.
‘நமக்குத் தொழில் கவிதை’ என்றார் பாரதி. அதற்கு இயங்குதல் என்று பொருள். Job என்று பொருளன்று). இவை எல்லாம் உருவகமே என்றால் அது நாத்திகத்திற்கு இட்டுச் செல்லும்.
’இறைவன் படைக்கிறான்’ என்பது சமயங்களுக்கு எதார்த்தம். நாத்திகப் பார்வையில் அது ஓர் உருவகமே அன்றி எதார்த்தம் அன்று.
‘இறைவன் காக்கின்றான்’ என்பது சமயங்களுக்கு எதார்த்தம். நாத்திகப் பார்வையில் அது ஓர் உருவகமே அன்றி எதார்த்தம் அன்று.
இன்னனமே பிற தொழிற்களுக்கும் கூட்டுக.
எனில், அருளல் என்பது எப்படி உருவகம் ஆகும்? சமயங்களின்படி அது எதார்த்தம் அல்லவோ?
இறைவன் எல்லோர்க்கும் அருளவே செய்கிறான். பொதுவாக அனைத்துப் படைப்புக்களுக்கும் அவன் அருளுபவை உள்ளன. சிலருக்கு மட்டுமென்று அவன் அருளுவனவும் உள.
ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு நிலைகளில் பல்விதங்களில் அருளுகிறான். இது எல்லாச் சமயத்தவரும் ஒப்பும் கருத்தியல். எனில், மறை அருளல் எப்படி உருவகமாகும்?
“ஏசுவின் தந்தை” என்பது உருவகமா? எதார்த்தமா? “The only begotten son” என்பது உருவகம் என்று பரக்க விளக்குகின்ற கிறித்துவ மெய்யியலாளர்கள் உள்ளனர். ”ஏசுவின் தந்தை” என்பது உருவகமே எனச் சொல்பவர் கிறித்துவத்திலிருந்து விலகியவர் ஆக மாட்டார்.
அப்படிச் சொல்லிக்கொண்டு ஒருவர் கிறித்துவராக இருக்க முடியும். மட்டுமன்று, அப்படிச் சொல்பவர் கிறித்துவ மெய்யியில் தளத்திற்கு உயர்ந்த ஒருவராகவும் (elite level) இருக்க முடியும்.
பொதுவாக, அனைத்துச் சமயங்களிலும், பெரும்பான்மை மக்கள் எதார்த்தம் என்று விளங்குகின்ற பலவும் மெய்யியல் தளத்தில் உருவகங்களாகவே இருக்கும். மெய்யியல் தளத்திலும் சமயங்கள் எதார்த்தம் என்று கொள்வன நாத்திகத்தின் பார்வையில்தான் உருவகங்கள் என்று பார்க்கப்படும்.
நாத்திகத்தைப் பொருத்த மட்டில் கடவுளே ஓர் உருவகம்தான். எனவே, கடவுள் ஓர் உருவகமே என்று சொல்பவர் ஆத்திகராக இருக்க முடியாது. அப்படிச் சொன்ன கணத்திலேயே அவர் ஆத்திகரல்லர், நாத்திகர் என்றாகி விடுகிறது. எனவேதான்,
கடவுளின் எதார்த்தம் என்ன என்பது பற்றிப் பேசுங்கால் (பாரதி சொல்வது போல் உணர்ந்தும் உணராதும் பேசும்போது) ‘அனைத்தையும் மீறிய ஒரு சக்தி’ ‘அண்டங்களை எல்லாம் இயக்கும் பேராற்றல்’ என்றெல்லாம் பேசுவார்களே தவிர ‘கடவுள் ஓர் உருவகம்’ என்று ஆத்திகர்கள் பேசார்.
தெய்வம் உண்டு என்று உரைப்பதே ஆத்திகம் (’தெய்வம் உண்மை என்று தானறிதல் வேண்டும்’ – பாரதியார்). எனினும், கடவுளின் இருப்பை எதார்த்த உண்மை என்று சொல்லும் ஆத்திக நெறிகளும் கடவுளின் மீது பற்பல உருவகங்களை ஏற்றி விளக்கியிருக்கின்றன.
(உ-ம்: ‘ஆணல்லன் பெண்ணல்லன் அல்லாது அலியும் அல்லன்’ என்று திருமாலின் எதார்த்தம் உரைக்கிறார் நம்மாழ்வார். இது கடவுட் கொள்கை. ‘பச்சை மா மலை போல் மேனி / பவழ வாய் கமலச் செங்கண்’ என்று தொண்டரடிப்பொடியாழ்வார் செய்திருக்கும் வருணனை உருவகம். இதனை மாலிய மெய்யியல் பயின்றோர் அறிவர், ஏற்பர்)
’மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்’ என்பது இஸ்லாத்தில் பொது நிலையிலும் மெய்யியல் நிலையிலும் எதார்த்தமே அன்றி உருவகமன்று. அதனை உருவகம் என்று சொல்பவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர் ஆகிறார்.
ஏனெனில், நபிகள் நாயகத்திற்குத் திருமறை (இறக்கி) அருளப்பட்டது என்பது இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகளுள் ஒன்று. இறை நம்பிக்கையை மெய்ப்படுத்தும் கொள்கைகளுள் ஒன்று (’ஈமானே முஃபஸ்ஸல்’ என்று சொல்லப்படுவன). அதை மறுப்பவன், எதார்த்தம் அல்ல - உருவகமே என்பவன் இறையை மறுத்தவனே.
எவ்வொரு இஸ்லாமிய மெய்யியலாளரும், சூஃபி ஞானியருள் எவரும் மறையருள் புரியப்பட்டது எதார்த்தமன்று உருவகமே என்று சொன்னதில்லை என்பதை மனம் கொள்க.
எனில், இஸ்லாத்தில் இறைவனைக் குறித்த உருவகங்களே கிடையாதா? என்று கேள்வி எழலாம். விளக்குவாம்.
உருவகங்களைப் பொருத்த மட்டில் இஸ்லாத்தின் மீதான ஓர் அவதானம் அனைவருக்கும் உண்டு. அதாவது, உருவகங்கள் உருவ நிலைக்கு இறங்குவதை இஸ்லாம் மிகக் கண்டிப்புடன் மறுத்துவிடுகிறது. இஸ்லாம் உருவ வழிபாட்டுக்கு எதிரானது என்பது அனைவரும் அறிந்ததே.
அடுத்து, படைப்பில் எதுவும் இறைவனுக்கான உருவகமன்று. எப்பொருளையும் சுட்டிக்காட்டி ‘இது இறைவனுக்கான உருவகம்’ என்று இஸ்லாத்தில் சொல்ல முடியாது. மக்கா நகரில் இருக்கும் கஃபா என்னும் ஆதி ஆலயம் – அதுவுமே இறைவனுக்கான உருவகம் அல்ல. அதாவது,
அதனை இறைவன் என்று உருவகித்தல் கூடாது. உருவகித்து அதனை வழிபடுதல் கூடாது. ‘பிறையை வணங்கும் துருக்கர்’ என்றொரு அபத்தமான கருத்தை பாரதிதாசன் பாடியிருக்கிறார். பிறையை இறைவனாக உருவகிப்பதெல்லாம் இஸ்லாத்தில் இல்லை.
இஸ்லாத்தில் இறைவன் மீதான உருவகங்கள் என்பது வருணிப்புக்கள் என்ற நிலையில் மட்டுமே நிற்பன. அவ்வருணிப்புக்கள் முதன்மையாக ’முஹம்மது நபிக்கு மறையருள் புரியப்பட்ட’ வேதமான குர்ஆனில் உள்ளன. அந்த வருணனைகளை “முதஷாபிஹாத்” (உருவகங்கள்) என்றே குர்ஆன் அழைக்கிறது.
அவற்றை எதார்த்தங்களாக எடுத்தல் பிழை என்பது இஸ்லாமிய மெய்யியல் அறிஞர்களும் இறைநேசர்களான சூஃபி ஞானியரும் கொண்டுள்ள பார்வை (அவற்றை எதார்த்தமாக எடுத்துக்கொண்டு நம்புவோரும் உளர். அவர்தம் பார்வை எனக்கு உடன்பாடில்லை.)
இறைவன் அர்ஷு என்னும் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறான் என்பது அத்தகைய உருவகங்களுள் ஒன்று. அர்ஷு என்பது எங்கே இருக்கிறது? ஏழு வானங்களுக்கு அப்பால். இறைவன் அமர்தல் படுத்தல் நிற்றல் நடத்தல் ஓடுதல் முதலிய உருவம் சார்ந்த, படைப்புச் சார்ந்த,
குறிப்பாக மனிதனொப்புச் செயல்களை (anthropomorphic movements) விட்டும் தூய்மையானவன். எனினும் இத்தகைய செயலகளைக் கொண்டு அவன் வருணிக்கப்பட்டுள்ளான். அவை உருவகங்களே. முஸ்லிம்கள் அனைவருமே அவை உருவகங்களே என்று ஏற்கிறார்களா என்று கேள்வி எழின், குறைந்தபட்சம்,
அவை உருவகங்கள் என்று சொல்லும் ஒரு தரப்பாவது இஸ்லாத்தில் இருக்கிறது. அப்படியானதொரு செய்தியைச் சுட்டி ‘உருவகத்தாலே உணர்ந்துணராது’ என்று பாரதியார் பாடியிருப்பார் எனில் அவரது பாடல் பிழை பட்டிருக்காது.
உதாரணமாக, ”மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்” என்னுமிடத்தில் ”எழுவான் கடந்த அருஷினில் அமர்ந்தோன்” என்று பாடியிருக்கலாம். அப்போது அதனை உருவகம் என்று சொல்வதில் சிக்கல் இருக்காது.
’கம்பன் ஏமாந்தான்’ என்று எழுதினார் கண்ணதாசன். என்ன ஏமாற்றம்? ‘இளம் கன்னியரை ஒரு மலரென்றானே, கற்பனை செய்தானே’ என்று அது ஓர் அழகியல் பாடல்.
பாரதிதாசனைத் தமிழினத்தின் கவிஞன் என்று பேசினால் ’பாரதிக்கும்கூட தடுமாற்றம் இருக்கத்தான் செய்தது ’
ம.பொ.சி. தன் வாழ்நாள் முழுவதும் இந்தியத் தேசியத்தையே தூக்கிப் பிடித்தார். செங்கோல் இதழில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15, ஜனவரி 26, அக்டோபர் 2, காந்தி பிறந்த நாள் திலகர் நாள் (6-8-62 செங்கோல்) தீபாவளி வாழ்த்து கூறும்போது கூட
“நாம் தமிழர்களாக மட்டுமல்லாமல் இந்துக்களாகவும் இந்தியர்களாகவும் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது” (செங்கோல் 24-10-65)
"சித்திரை முதல் நாளைத்தான் ஆண்டு பிறந்த நாளாகக் கொண்டாட வேண்டுமாம். பஞ்சாகத்துக்கு மாற்றான தைத்திங்கள் முதல் நாள் ஆண்டு புத்தாண்டு தேவையில்லை. அரசின் வரவு செலவுத் திட்டத்தை இந்தச் சித்திரையிலே அரசு தொடங்கலாம். 60 ஆண்டு சுழற்சி முறையும் நன்றாகத்தான் உள்ளது." (செங்கோல் 18-4-65)
1782 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது மைசூர் போரில் ஹைதர் அலி இறந்து விடவே அவருடைய மகன் திப்பு சுல்தான் போருக்கு பொறுப்பேற்று போரில் வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டான்.
திப்பு சுல்தானின் ஆட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கப் பட்டிணத்தில் அதுவும் திப்புவின் அரண்மனைக்கு 300 அடி தொலைவில் தான் ஆதி சங்கரனால் தோற்றுவிக்கப்பட்ட சிருங்கேரி சாரதா பீடம் என் அழைக்கப்படும் சங்கர மடம் உள்ளது.
திப்பு சுல்தானும் தன் தந்தை அய்தர் அலியைப் போலவே சிருங்கேரி சங்கர மடத்தினிடம் நல்லுறவு கொண்டிருந்தார் என்று அவர் சங்கர மடத்திற்கு எழுதிய கடிதங்களிலிருந்தும், சங்கர மடத்திலிருந்து திப்புவிற்கு எழுதப்பட்ட பதில் கடிதங்களிலிருந்தும் அறிந்து கொள்ள முடிகிறது.
'கிறிஸ்தவர்கள்-முஸ்லிம்கள் தவிர்த்த இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருமே இந்துக்கள் ஆவார்கள்'. இதன்படி நாத்திகன், பகுத்தறிவுவாதி, பரதேசி முதலிய சகலரும் இந்துக்கள் ஆகி சூத்திரர், பார்ப்பானின் தாசி மகன் என்று ஆகிவிடுகிறார்கள்.
"தமிழ் இந்து" என்று பேசிவரும் திரு.பெ.மணியரசன் அண்மையில் ஒரு நேர்காணலில், "பெரியாரும் பெரியாருடையத் தொண்டர்களும் இந்து மதத்தில் தான் இருக்கிறார்கள், மதத்தை ஒழிக்க முடியாது என்று பெரியாரே ஒப்புக்கொண்டு விட்டார், இந்து மதத்தை எதிர்க்கிறோம் என்று பொய்யாகச் சொல்லிவிட்டு
பெரியாரியலாளர்கள் இந்து மதத்திலேயே இருக்கும்போது நாங்கள் நேர்மையாக தமிழ் இந்து என்று அடையாளப்படுத்துவதில் என்ன தவறு?" என்று நம்மை நோக்கிக் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதைப் பற்றிய உங்களுடையக் கருத்து.
‘இந்து’வில் என்ன தமிழ் இந்து, ஆரிய இந்து?
- சுப.வீரபாண்டியன்
தங்களைத் தமிழ் இந்துக்கள் என்று அறிவித்துக் கொள்ள இன்று சிலர் முடிவெடுத்துள்ளனர். அது அவர்கள் விருப்பமும், உரிமையும் சார்ந்தது. ஆனால் அப்படி அறிவித்துக் கொள்வதற்கு முன்,
“திராவிடம் என்ற சொல் சங்க இலக்கியத்தில் இருக்கிறதா?” என்று கேட்ட அவர்கள், இந்து என்ற சொல் சங்க இலக்கியத்தில் எத்தனை இடங்களில் இருக்கிறது என்று சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்.
brahmin childrenகிருத்துவர்களும், இஸ்லாமியர்களும் தங்களுக்குள் ஒருங்கிணைப்புப் பணிகளை செய்து
கொண்டிருக்கிறார்களாம். எனவே சைவர்கள், வைணவர்கள் எல்லோரும் இந்துக்கள், அதாவது தமிழ் இந்துக்கள் என்ற பெயரில் இணைய வேண்டுமாம். எனவே இந்த ஒற்றுமை முயற்சி, கிறித்துவ, இஸ்லாமியர்களுக்கு எதிரானது போலிருக்கிறது. அதைத்தான் ஆர்.எஸ்.எஸ்., பாஜக ஆகியனவும் முன்வைக்கின்றன.
@tamizhprasad இப்படித்தான் ஒரு நண்பர் திப்பு சுல்தான் -கொடவர்கள் கூர்க் -அவரின் போராட்டம் பற்றி பதிவு போட சொன்னார் . நானும் மைசூர் ஆர்காலஜிகல் சர்வே படி பதிவிட்டேன் . கர்நாடாகாவிலிருந்து இருபதுக்கும் மேற்பட்டோர் வந்து
டிவிட்டரில் விமர்சனம் செய்ய நான் பதிலுக்கு ஹிந்தியில் அர்ச்சனை செய்ய அது டிவிட்டர் வயோலேசனில் மாட்டி தொடர்ந்து போன் மற்றும் 24 மணி நேரம் பதிவு தடை .