ம.பொ.சி. தன் வாழ்நாள் முழுவதும் இந்தியத் தேசியத்தையே தூக்கிப் பிடித்தார். செங்கோல் இதழில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15, ஜனவரி 26, அக்டோபர் 2, காந்தி பிறந்த நாள் திலகர் நாள் (6-8-62 செங்கோல்) தீபாவளி வாழ்த்து கூறும்போது கூட
“நாம் தமிழர்களாக மட்டுமல்லாமல் இந்துக்களாகவும் இந்தியர்களாகவும் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது” (செங்கோல் 24-10-65)
"சித்திரை முதல் நாளைத்தான் ஆண்டு பிறந்த நாளாகக் கொண்டாட வேண்டுமாம். பஞ்சாகத்துக்கு மாற்றான தைத்திங்கள் முதல் நாள் ஆண்டு புத்தாண்டு தேவையில்லை. அரசின் வரவு செலவுத் திட்டத்தை இந்தச் சித்திரையிலே அரசு தொடங்கலாம். 60 ஆண்டு சுழற்சி முறையும் நன்றாகத்தான் உள்ளது." (செங்கோல் 18-4-65)
“நாம் பிரிவினைக் கொள்கையின் எதிரிகள்” (செங்கோல் 8-4-62)
ma_po_sivagnanam17-1-63 அன்று கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் சிலை அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய ம.பொ.சி.
“நான் ஒரு இந்துவாக இருப்பது குறித்து வருத்தமோ, வெட்கமோ படவில்லை.
மாறாக மாபெரும் கலாச்சாரப் பாரம்பரியத்தைச் சார்ந்தவன் என்பதற்காகப் பெருமைப்படுகிறேன். ஒரு இந்துவாக மட்டுமில்லாமல், தேச பக்தியுடைய இந்தியனாகவும் இந்தக் கூட்டத்தில் பேசுகிறேன். நாம் இந்தியர், இந்தியா நம் தாய் நாடு என்பதை மறந்து விடக் கூடாது" என்றார் (செங்கோல் 27-1-63)
பெரியார் பிரிவினைத் தடைச் சட்டத்தை மீறியேனும் ‘தனித் தமிழ் நாடு’ கோரி போராடுவேன் என்கிறார். அண்ணாதுரை பயந்து பின்வாங்கி விட்டார். நான் பயப்படமாட்டேன்; பின் வாங்க மாட்டேன் என்கிறார் பெரியார். இது எவ்வளவு பெரிய அழுத்தமான செய்தி.
இந்திய அரசு பிரிவினைத் தடைச் சட்டத்தை எதிர்த்துப் பெரியார் பொங்கி எழுகிறார். இதைப் பற்றிக் கிண்டலடித்த ம.பொ.சி. "இது வாழைக்கும் அதன் கீற்றுக்கும் நடக்கும் போராட்டம். இதனால் தமிழர்களுக்கு எந்த நன்மையும் விளையப் போவதில்லை" என்கிறார். (செங்கோல் 17-2-63)
"இதுதான் தக்கத்தருணம் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிடுவதே சரியான வழி" என்று ம.பொ.சி. தொடர்ந்து புலம்பி வருகிறார். (செங்கோல் 24-2-63)
"பாரத ஒருமைப்பாடு காணவே தமிழில் இராமக்காதை தந்தார் கம்பர், அயோத்தியில் பிறந்த ராமனும், மிதிலையில் பிறந்த சீதையும் நமக்கு அன்னியராவாரோ? இல்லை உறவினரே!" (செங்கோல் 14-4-63)
ம.பொ.சி.யின் பிள்ளைக்கு இராமன் பெண் கொடுத்தானோ என்னவோ யாருக்கு தெரியும்!?
“பிரிவினைத் தடைச் சட்டம் இயற்றிவிட்டால் மட்டும் போதுமா பிரிவினைக் கொள்கையைத் தீவிரமாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும்”
“தமிழ் நாடு பாரதத்திலிருந்து பிரிக்கப்படுமாயின் அதன் கதியும் பாகிஸ்தானைப் போன்றது தான், தமிழ் நாட்டை இழந்த பின்னும் எஞ்சிய பாரதம் தன் காலிலே நிற்கும். ஆனால் சின்னஞ்சிறிய தமிழகத்தின் கதி என்னவாகும். அதை நினைத்தாலே என் நெஞ்சம் நடுங்குகிறது." (செங்கோல் 18-8-63)
தமிழ்நாட்டைக் காக்காய் தூக்கிக் கொண்டு போய்விடுமா? அதனால்தான் பெரியார் அவர்கள் 1960 வெளியிட்ட சுதந்தர தமிழ் நாடு ஏன்? என்ற நூலின் இறுதிப் பகுதியில் பின் இணைப்பாகத் தமிழகத்தை விட பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் சிறிய நாடுகள் எத்தனை என்ற பட்டியலையே வெளியிட்டார்.
அண்ணா அவர்கள் திராவிட நாடு பிரிவினை கொள்கையைக் கைவிட்டவுடன் அதனை வரவேற்ற ம.பொ.சி.
“பிரிவினை என்ற விஷ விருட்சம் விழுந்து விட்டதென்றால் அது திடீர் சம்பவமன்று பதினோழு ஆண்டுகளாகத் தம்மால் அது தொடர்ந்து தாக்கப்பட்டதால் தான் இப்போது வீழ்ந்தே விட்டது.
பிரிவினையைத் தமிழரசுக் கழகம் எந்த வடிவத்தில் வந்தாலும் எதிர்க்கும். தி. க. நாம் தமிழர் இயக்கங்களையும் எதிர்கின்றோம். இதிலிருந்து என்ன தெரிகிறது தமிழரசு கழகம் ஆரம்ப காலம் முதலே பிரிவினைக்கு எதிராக இந்திய தேசியத்திற்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது." (செங்கோல் 3-11-63)
ஆதிசங்கரரின் வாரீசாக நம்மிடையே வாழ்ந்து வரும் காஞ்சி காமகோடி பீடம் சங்கராச்சாரிய சுவாமிகள், ஆதிசங்கரரைப் பின்பற்றிச் சமயங்களிடையே ஒருமைகாண முயன்று வருகிறார். அவருடைய முயற்சிகள் வரவேற்று பாராட்டத்தக்கவையாகும்.
ஆனால் அந்த பெரியவரும் நோயை அறிந்து அதற்கேற்ற சிகிச்சையில் ஈடுபட்டுருப்பதாக தெரியவில்லை....... நால் வருணங்களில் மேல் வருணத்தவரான அந்தணர்கள் பாரத காலாச்சாரத்தின் காவலர்களாகத் திகழ்ந்தனர் ஒரு காலத்தில். இன்று அவர்கள் அந்த நிலையில் இருப்பதாகச் சொல்வதற்கில்லை.
இங்குமங்குமாக ஒரு சிலர் இருக்கலாம். பெரும்பாலான அந்தண மக்கள் பரங்கி மொழி மோகத்தில் ஆழ்ந்து பாரதக் கலாச்சாரத்தை பாழ்படுத்துவதற்கு இடமளித்து விட்டனர்...
இந்த சீர்கேட்டிலிருந்து அந்தணர்கள் மீட்கப்படுவார்களானால், மற்ற மூன்று வருணத்தாரும் பழமையில் பற்றுக் கொள்ள வழி பிறக்கும்.
தலைமை தடுமாறினால் பின்பற்றுவோர் நிலை என்னவாகும். இந்த நிலையை ஆச்சாரிய சுவாமிகள் மாற்ற முயலவேண்டும். (23-9-62 செங்கோல்)
ஆச்சாரியாருக்கே அறிவுரை கூறுகிறார் ம.பொ.சி.
21-11-65 செங்கோலில் அதைப் பற்றிய செய்தி உள்ளதே. காஞ்சிபுரம் சென்று இரட்டை மண்டபம் எதிரில் உள்ள விடுதியில் ம.பொ.சி. தங்கியிருந்தார். அப்போது அவரைக் காண வந்த தொண்டர்களிடம் இந்தி படிக்கிறீர்களா என்று கேட்டார்.
இல்லையென்றவுடன் ஏன் படிக்கவில்லை எல்லோரும் இந்தி படியுங்கள் என்றார். பிறகு அங்கு வந்த இந்தி பிரச்சார சபா தலைவரிடம் இங்கு எவ்வளவு பேர் இந்தி படிக்கிறார்கள் என்றார். ம.பொ.சி. 150 பேர் என்று பதில் அளித்தார். இது போதாது. இனி நகரத்திற்கு ஒரு இந்தி பிரச்சார சபா என்ற நிலை மாறிவிடும்.
வட்டத்திற்கு வட்டம் இந்தி வகுப்புகள் நடக்கும். தமிழர்கள் முன்னேறுவார்கள் என்றார் ம.பொ.சி. அடுத்து மாலை 7 மணிக்கு சங்கரமடத்து ஆட்கள் அவரை அழைத்துச் செல்ல வந்தார்கள்.
காஞ்சிபுரம் நகரம் பழைய நகரம் வடமொழிக் கல்லூரியும் இங்கு தான் இருந்தது. சமீபத்தில் காஞ்சி காமகோடி ஆச்சாரி சுவாமிகள் மதுராந்தகத்தில் சமஸ்கிருத வகுப்புகள் நடத்துவதாகப் பத்திரிக்கைகளில் பார்த்தேன். காஞ்சியில் நடத்தினால் பொருத்தமாக இருக்கும் என்று கூறியுள்ளார் ம.பொ.சி.
இருட்டிய பிறகு பாட்டரி வெளிச்சத்தில் அருள் வடிவான கருணை முகம் தெரிந்தது; வணக்கம் என்கிறார் ம.பொ.சி. ‘தங்கள் பணிகளைக் கவனித்து வருகிறேன். நாட்டுக்கு நல்லது செய்கிறீர்கள். சௌக்கியமாக இருங்கள்’ என்று அருள் வாக்குப் பிறந்தது. (செங்கோல் 21-11-65)
சங்கராச்சாரியை நேரில் சந்தித்தவர் ம.பொ.சி.தான். பூரி சங்கராச்சாரியார் பசுவதையைத் தடைச் செய்ய வேண்டும் அதற்காக அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று கூறி உண்ணாவிரதம் இருந்தார். அதை ஆதரித்து ம.பொ.சி. செங்கோலில் எழுதியுள்ளார்.
“பூரி சங்கராச்சாரி சாமிகளின் கோரிக்கை நியாயமானதே. ஆட்சியாளர் அதைச் செய்வதற்குச் சங்கடமேதும் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. அரசு இதைச் செய்யும் நாம் நம்புகிறோம்”.(செங்கோல் 25-12-66)
ம.பொ.சி காந்தி தான் என் தலைவர் என்பார். அந்தக் காந்தியைக் கொலைச் செய்த கூட்டத்தின் தலைவரான வீரசாவர்கரையும் பாராட்டுவார். சாவர்கர் இறந்தபோது அவரின் செயல்களைப் பாராட்டி ம.பொ.சி. தலையங்கம் எழுதினார்.
“சரித்திர நாயகர் சாவர்க்கர் அமரராகிவிட்டார். மனசாட்சி வழி செயல்பட்ட அந்த மாவீரருக்கு நமது அஞ்சலி. அவர் சாதாரண தேசியவாதி அல்ல. ஹிந்து மனம் படைத்த தேசியவாதி ஆவார். அகிம்சாவாதியல்ல,
பலாத்காரத்திலும் நம்பிக்கை உடையவர்” மனசாட்சிப் படி வாழ்ந்த ஒரு பெருந்தலைவர் என்பதற்காக அவரைத் தலையார வணங்குகிறோம். வாழ்க வீர சாவர்க்கரின் புகழ்."
ம.பொ.சி.யின் சமஸ்கிருதப்பற்று
மேகசந்தேசம் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ம.பொ.சி.
"வடமொழிக்கும், தமிழுக்கும் போட்டியோ, போராட்டமோ இருக்க நியாயமில்லை. வடமொழி, தென்மொழி வேற்றுமையோ விரோதமே இல்லை. சமஸ்கிருதம் அந்தணருக்கு மட்டும் உரிய மொழி என்பது அறியாமை.
சமஸ்கிருதத்தை ஒரு சாதியினரின் மொழியாக மட்டுமே பண்டைய தமிழர் கருதவில்லை. பாரதத்தின் பல்வேறு மொழிகளைப் பிணைக்கும் கலாச்சாரம் பொது மொழியாகவே கருதினர். கோவலன் வடமொழி கற்றான்." (செங்கோல் 2-5-65)
இன்னும் ஒரு படி மேலே போய்ச் சொல்கிறார் ம. பொ. சி.
“இந்தியனாகிய நான் குமரி முதல் காஷ்மீரம் வரை பரவிக்கிடக்கின்ற பாரத நிலப்பரப்பிலே ஒவ்வொரு அங்குலத்தின் மீதும் சொந்தங் கொண்டாடுகிறேன். அதுபோல பாரத நாட்டிலுள்ள ஒவ்வொரு மொழியையும் எனது சொந்த மொழியாகக் கருதுகிறேன். ஆனால் தமிழ் மொழியை எனது தாய் மொழியாகக் கருதுகிறேன்.
அது என் வாழ்க்கை மொழியாக அமைந்து விட்டதால் ‘இந்தியன்’ என்ற முறையிலே ‘இந்து’ என்ற வகையிலே சமஸ்கிருதம் எனது கலாச்சார மொழியாகவே இருந்து வருகிறது”. (ம. பொ. சி. தமிழும் சமஸ்கிருதமும் பக். 5)
"இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி சமஸ்கிருதமே என்று சொல்லப்படுகிறது. தமிழிடத்துப் பற்றுடையவர்கள் இதனை மறுக்கத் தேவையில்லை." (ம. பொ. சி. தமிழும் சமஸ்கிருதமும் பக். 19)
"இன்றைய சூழ்நிலையில் தமிழ் நாட்டு இந்துக்கள் மத விஷயத்தில் மறுமலர்ச்சி அடைய வேண்டியிருக்கிறது. இந்திய தேசீய ஒருமைப்பாட்டுக்காவும் அது தேவைப்படுகிறது. அது தவறல்ல என்பதைநாம் உணர வேண்டும்.
இந்திய தேசிய ஒருமைப்பாட்டின் அவசியம் கருதியும் நான் சமஸ்கிருதத்தை வெறுக்க மறுக்கிறேன்" (ம. பொ. சி. தமிழும் சமஸ்கிருதமும் பக்.25 )
"சமஸ்கிருத மொழியைப் பிழையறப் பயின்று புரோகிதத் தொழில் புரிவோர் இருப்பார்களாயின் அந்தப் புரோகிதர்களைக் கொண்டு
தமிழர் தங்கள் வீட்டுத் திருமணங்களைச் செய்வதை ஏற்கலாம்." (ம.பொ.சி. தமிழும் சமஸ்கிருதமும் பக்.38)
“கல்வியின் ஒரு கட்டத்தில் தமிழகத்துப் பள்ளிகளில் சமஸ்கிருதமும் விருப்பப் பாடமாக இருக்கலாம்” (ம.பொ. சி. தமிழும் சமஸ்கிருதமும் பக்.40)
"சமஸ்கிருதம் இந்துக்களின் பொது மொழியாக இருப்பதன் காரணமாக, இம் மொழியில் பீஜமந்திரம் என்று சொல்லப்படுகிறதே அதை மட்டும் திருக்கோயில்களில் அர்ச்சகர் பயன்படுத்தலாம். அதில் தவறில்லை. சமஸ்கிருத அர்ச்சனையை விரும்புவோருக்கும் தடைசொல்லத் தேவையில்லை.
இது இந்து மதத்தவரின் ஒருமைபாட்டுக்கும் உதவிபுரியும்." (ம. பொ. சி. தமிழும் சமஸ்கிருதமும் பக்.41)
"சென்னை சமஸ்கிருதக் கல்லூரி தற்போது தனியார் உதவியால் இயங்கி வருவதாகத் தெரிகிறது. அதற்குப் போதிய அளவு உதவி புரிந்து அதனைத் தமிழக அரசு வலுப்படுத்த வேண்டும்.
இக்கோரிக்கையை ம.பொ.சி.யின் சிஷ்யர் அருகோபாலன் ஜெயாவிடம் கூறி தன் குருநாதரின் கோரிக்கையை நிறைவேற்றலாமே". (ம. பொ. சி. தமிழும் சமஸ்கிருதமும் பக்.58)
சமஸ்கிருத தினத்தை ஒட்டி 26-8-1983இல் ம.பொ.சி. பேசிய பேச்சின் சில பகுதிகளை மேலே தொகுத்து கொடுத்துள்ளேன்.
இவரைத்தான் மாபெரும் தமிழ் தேசியத் தலைவராகத் தமிழ்த் தேசியவாதிகள் தூக்கிப் பிடிப்பது வியப்பாக உள்ளது.
ஏற்கனவே மூவாயிரம் ஆண்டுகளாகச் சமஸ்கிருத மொழியின் ஆதிக்கத்தால்தான் தமிழ் வளர்ச்சி அடையாமல் போய்விட்டது என்பது பாவாணரின் ஆய்வு.
செத்த மொழியான சமஸ்கிருதத்தை உயிர்ப்பிக்க ம.பொ.சி. முன்வந்திருப்பது அவருடைய குருநாதர்களான சத்தியமூர்த்தி, இராஜாஜி ஆகியவர்களை அடியொற்றியே ஆகும். சமஸ்கிருதக் கல்லூரியில் சத்தியமூர்த்தி ஒரு முறை பேசுகிறபோது,
"கொஞ்சம் முயற்சி செய்தால் சமஸ்கிருதத்தை நமக்குப் பயன் தரும் வகையில் இந்தியாவினுடைய பொது மொழியாக்கி விட முடியும்" என்றார். (கு.நம்பிஆருரான் தமிழ் மறுமலர்ச்சியும் திராவிடத் தேசியமும் பக் 331)
ம.பொ.சி.யின் மற்றொரு குருநாதரான இராஜாஜியும் இதே கோரிக்கையை முன்வைத்தார். இந்தி ஆட்சி மொழி ஆணையத்திடம் சாட்சியமளித்த இராஜாஜி, "உங்களால் இந்தியையே ஆட்சி மொழியாக்கி விட முடியுமென்றால்,
ஏன் சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக்கக் கூடாது. இந்தியாவின் மானமே சமஸ்கிருதத்தில் தான் உள்ளது" என்று கூறியுள்ளார். (நம் நாடு, 17-1-56)
1966 மார்ச் 20இல் கும்பகோணத்தில் நடைபெற்ற தமிழரசுக் கழகப் பொதுக்குழவில் சட்டமன்றத் தேர்தலில் ஈடுபடுவது என்று முடிவு செய்தனர்.
அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்
“தெய்வப்பற்று ,பாரத தேசப் பற்று, தேசிய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை, தேசிய ஒருமைப்பாட்டில் ஆர்வம், ஒழுக்கம், கலாச்சாரம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு அரசியல் கட்சியே தமிழரசு கழகம்”. (செங்கோல் 27-3-66)
“இந்தத் தமிழ் நாட்டில் பிரிவினைக் கொள்கைகளை அழுத்தந்திருத்தமாக கண்டித்து இயக்கம் நடத்திய ஒரே கட்சி தமிழரசுக் கழகம் தான்”. (செங்கோல் தலையங்கம் 5-6-66)
"காங்கிரசிலிருந்து வெளியேறிய பிறகும் பனிரெண்டு ஆண்டுகள் நான் காங்கிரசு ஆதரவாளனாகவே இருந்தேன்.
காங்கிரசு எதிரிகளை என் எதிரிகளாகவும் கருதி வந்தேன். தேசியத்தில்-தெய்விகத்தின் விரோதியாகத் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டுள்ள தி.க. தலைவர் ஈ.வெ.ரா. தேசியக் கொடி எரிப்பு, அரசியல் சட்ட எரிப்பு போராட்டம், தேசப்பட எரிப்புப் போராட்டம், தேசிய விடுதலை நாளை,
குடியரசுத் திருநாளைத் துக்க நாளாகக் கொண்டாடியபோதெல்லாம், அதனை முழுமூச்சாக எதிர்த்தது. தமிழ்நாடு காங்கிரசு அன்று அதற்கு வெளியே என் தலைமையில் இயங்கிய தமிழரசு கழகமே." (செங்கோல் 28-8-66)
காலமெல்லாம் தி.க.வையும், தி.மு.க.வையும் திட்டுவதையே தொழிலாகக் கொண்டிருந்த ம.பொ.சி. இராஜாஜியின் வற்புறுத்தலால் வெட்கம், மானம், சூடு, சொரணை, கூச்சம் கொஞ்சமும் எதுவுமே இல்லாமல் 1966இல் தி.மு.க.வின் கூட்டணியில் இணைந்து இரண்டு இடங்களை தன் கட்சிக்குப் பெற்றார்.
1967 சட்ட மன்றத் தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் பார்ப்பனர்கள் அதிகமாக வாழும் தியாகராயர் நகர் தொகுதியில் போட்டியிட்டார். அங்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ம.பொ.சி. முதல் கூட்டத்திலேயே தான் நாவலர் சத்தியமூர்த்தியின் வாரிசாகத் தேர்தலில் போட்டியிடுவதாக பேசினார்.
“தியாகராயர் நகர் தொகுதி வரலாற்றுச் சிறப்புடையது. இந்தத் தொகுதியில் தான் நாவலர் சத்திய மூர்த்தி வாழ்ந்தார். அவருடைய தலைமையின் கீழ் எட்டாண்டுக் காலம் சென்னை மாவட்டக் காங்கிரசின் செயலாளராக இருந்து பணி புரிந்திருக்கிறேன். அவருடன் சிறையில் இருந்துள்ளேன்.
இந்தத் தியாகங்களால் சத்திய மூர்த்தியின் வாரிசாக தேர்ந்தெடுக்கப்பட எனக்கு உரிமையுண்டு.
தலைவர் ராஜாஜி நீண்ட நெடுங்காலம் தியாகராய நகரில் வாழ்ந்தார். அவர்பால் பெருமதிப்புடையவன். அவருடைய பேரன்புக்குரியவன் என்ற முறையிலே,
அவர் வாழ்ந்த தியாகராயர் தொகுதியின் பிரதிநிதியாக இருக்க எனக்குத் திறமையும், உரிமையும் உண்டு. இன்னும் சொன்னால் காங்கிரஸ் மகாசபைத் தலைவர் திரு. கு.காமராஜர் தியாகராயர் தொகுதியில்தான் வாழ்கிறார். அவர் எதிர்முகாமில் இருந்தாலும், அவரும் நானும் சிறையில் ஒன்றாக இருந்துள்ளோம்.
அவர் வாழும் தொகுதியின் பிரதிநிதியாகச் சட்டசபைக்குச் செல்லும் உரிமை எனக்கு உண்டு" என்று பேசினார். (செங்கோல் 22-1-67)
நான் தமிழரசு கழகம் வைத்துள்ளேன் சட்ட மன்றம் சென்றால் தமிழுக்காக பாடுபடுவேன் என்றெல்லாம் அவர் பேசவில்லை.
மாறாக இந்திய தேசிய தலைவர்களின் வாரிசாக தன்னை அடையாளம் காட்டிக் கொள்வதையே பெருமையாக கருதினார்.
ம.பொ.சி. குறிப்பிடும் இந்த சத்தியமூர்த்தி யார்? 1938 இந்தி எதிர்ப்பு போர் நடைபெற்ற போது அருப்புக்கோட்டையில் நடைபெற்ற அரசியல் மாநாடு தலைமை பிரசங்கத்தில்
இந்தி எதிர்ப்பு போரில் ஈடுபடுவோரின் தலைகளை வெட்ட வேண்டும் என்று பேசியவர். இதை மெயில் பத்திரிக்கை மட்டுமே கண்டித்தது. கடற்கரையில் பெரியார் பேசியபோது 50,000 பேர் கலந்து கொண்டனர். அரசுக்கு எதிரான தீர்மானத்தின் மீது 50,000 பேரும் ஓட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.
50,000 பேரின் தலைகலையும் வெட்டவேண்டும். இதுதானா உமது சுயராஜ்ஜியம் என்று எழுதியது இந்த தமிழ்த் துரோகியின் வாரிசுதான் ம.பொ. சி. இந்தியை எதிர்ப்பவர்களைத் தூக்கில் போட வேண்டும் என்று பேசியவர் தானே. (குடியரசு 3-7-1938)
ம.பொ.சி.யின் தலைவர் இராஜாஜி 1938 இல் முதலமைச்சராக இருந்தபோது இந்தியைக் கட்டாயப்படுத்தி தமிழர்களை ஒழிக்க முனைந்தார். 1952 இல் முதலமைச்சராக வந்தபோது குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு தமிழர்களின் எதிர்காலத்தை அழிக்கத் திட்டமிட்டவர் தானே.
26-5-67 இல் சௌகார்பேட்டையில் வடஇந்தியர்கள் நடத்திய வள்ளுவர் - குர்தாஸ் - தாகூர் விழாவில் 'கலச்சார ஒருமைப்பாடு தேவை' என்ற தலைப்பில் பேசிய ம.பொ.சி.
“தமிழகத்தில் தி.மு.க. அமைச்சரவை தோன்றியிருக்கிறது. அதனால் இங்குள்ள வடஇந்தியர்கள் சிறுபான்மையினர் தங்கள் எதிர்காலம் என்ன ஆகுமோ? என்று கவலைப்படத் தேவையில்லை. அரசியலமைப்பின் படி திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி நடத்தினாலும் ஆளுகின்ற
அமைச்சர்கள் அப்பட்டமான தமிழர்கள், தமிழ் மொழியிடத்திலும் தமிழருடைய பண்பாட்டினிடத்தும் அதிகமான பற்றுடையவர்கள். வடக்கே டில்லி - பம்பாய் - அகமதபாத் - கல்கத்தா - ஹைதராபாத் ஆகிய நகரங்களில் வாழும் பல லட்சக்கணக்கான தமிழர்களுக்குப் பாதுகாப்பு தேடுவதிலே அக்கறையுடையவர்கள்.
ஆதனால், தமிழகத்தில் உள்ள வடஇந்தியர்களின் நலன்களுக்கு பாதுகாப்பளிப்பதன் மூலம் தான் வடக்கே உள்ள தமிழர்களின் நலன்களுக்கும் பாதுகாப்பு தேட முடியும்மென்பதனை தமிழக அமைச்சர்கள் அறிவார்கள்.
கேவலம் கட்சிப்பூசல் காரணமாக இங்குள்ள தமிழர்களிலே சிலர்
(தி.க.வினர்) உங்களைப் பயமுறுத்தும் வகையில் பிரச்சாரம் செய்யலாம். அதனை நம்பாதீர்கள். இதனை, தமிழக அமைச்சர்களின் நண்பன் என்ற முறையிலேயே உறுதியாக கூறுகின்றேன்." (செங்கோல் 4-6-67)
இங்குள்ள வடநாட்டினரை தாக்கினால் அங்கே தமிழர்கள் தமிழர்கள் தாக்கப்படுவார்கள்
என்பதை சூசகமாக ம.பொ.சி. தெரிவிக்கிறார். வடநாட்டான் எதிர்ப்பு கூடாது என்கிறார்.
"எனக்கு அரசியல் உணர்வு பிறந்த காலந்தொட்டு, நான் இந்தியா முழுவதையும் எனது தாய்நாடாகக் கருதி வந்திருக்கின்றேன். இன்றும் அதே உணர்வுடனேயே - நீங்களும் - நானும் இந்தியர்கள் என்ற நினைப்புடன்
இந்த விழாவில் பேசுகிறேன்."
கூட்டணி தி.மு.க.வுடன் ஆனால் இவருடைய உள்ளத்தில் நிறைந்திருந்த இந்திய தேசிய குப்பைகளே.
நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் தமிழப்பேரரசு ஒன்றை அமைக்கப் போவதாக ஆதித்தனார் தமிழப் பேரரசு என்ற நூலை வெளியிட்டார். அதைக் கண்டித்த ம.பொ.சி.
“இந்தியத் தொடர்பிலிருந்து தமிழகத்தை பிரித்துவிட எண்ணமாம். இலங்கை இந்திய பகுதிகளையும் தமிழகத்தோடு சேர்க்க தொண்டு செய்யப் போகிறாராம். இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டுத் தலைவர்கள் உதவியை வழங்குவது காலித்தனம்”. (செங்கோல் 23-2-1958)
இலங்கையின் நட்புக்காக 22 இலட்சம் தமிழர்களை பலியிடுவதா, பாக்கிஸ்தான் நட்புக்காக காஷ்மீரைப் பறிகொடுக்க இந்தியா தயாரா என்று கேட்ட ம.பொ.சி. (செங்கோல் 6-12-1964) இரண்டே ஆண்டுகளில் தன் நிலையை மாற்றிக் கொள்கிறார்.
"தமிழர் - சிங்களவர் உறவு நீடிக்க வேண்டும். தமிழர் என்ற பெயரால் உங்கள் உள்ளத்தில் வளர்ந்துள்ள இன உணர்ச்சியை இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராகச் செல்ல அனுமதிக்காதீர்கள். தமிழ் பேசி தமிழராக வாழ்ந்ந்தாலும் உங்கள் தாயகம் இலங்கைதான்.
பிளவுக்கு இடமின்றி ஒன்றுபட்டு வாழுங்கள். சாஸ்திரி - சிறிமாவோ ஒப்பந்தத்தை நான் எதிர்க்கவில்லை. அந்த ஒப்பந்தம் வெளியானபோது நான் எதிர்ப்பு காட்டியது உண்மை. இப்போது நிலைமை மாறிவிட்டது. இந்திய வம்சாவளி தமிழர்களை இனி கடவுள் தான் காப்பற்றவேண்டும்" என்று கூறிவிட்டார். (செங்கோல் 14-8-66)
"பொதுவாக, காந்தியடிகள் காண விரும்பிய இராமராஜ்யத்தை காண்பதே நாட்டு மக்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும். காந்தியடிகள் ராமராஜ்யத்தை விரும்பியது, தமக்கா அன்று நமக்காக! ஆகவே அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதொன்றே நம்முடைய வேதனைகளுக்கெல்லாம் பரிகாரம்." (செங்கோல் 2-10-66)
ராமராஜ்யம் வந்தால் நம்முடைய எல்லா வேதனையும் தீர்ந்து விடும் என்கிறார் ம.பொ.சி.
உணவுப்பஞ்சம் தீரவும் ம.பொ.சி. பெரிய உண்மையை கண்டுபிடித்துவிட்டார்.
26.10.65. கந்தர்சஷ்டி விழாவில் பேசிய ம.பொ.சி. "தெய்வ பக்தியின் பெயரால் நம்முன்னோர் கடைபிடித்த அமாவாசை, கிருத்திகை, ஏகாதேசி,
சஷ்டி விரதங்களை இன்றும் நாம் அனைவரும் சரியாக கடைபிடித்தால் உணவுப் பற்றாக்குறை தீர்ந்து விடுமே!” என்கிறார் (செங்கோல் 7-11-65).
ஈழ விடுதலைப் போராட்டத்தை ம.பொ.சி. என்றுமே ஆதரித்ததில்லை. ஒரு முறை எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது “நீங்கள் விரும்பினால்
பிரபாகரனைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்” என்று ம.பொ.சி.யிடம் கூறினார். ஆனால் அவரது புலிப்போக்கு எனக்குப் பிடிக்காததால் அவரை நானாகச் சென்று பார்ப்பதைத் தவிர்த்தேன் என்கிறார் ம. பொ. சி. (ம. பொ. சி., ஈழத்தமிழரும் நானும் பக். 190)
"நான் காந்தியத்தை ஏற்று, அந்த தத்துவியலின் தலைமையில் நடந்த சாத்வீகப் போரிலும் ஈடுபட்டு, இந்தியா சுதந்திரம் பெறப் பாடுபட்டவனானதால் உலகில் எந்த ஒரு நாடும் தனது சுதந்திரத்திற்காக வன்முறையில் ஈடுபடுவதை நான் ஆதரிப்பதற்கில்லை.
அந்த வகையில் தான் என் இனத்தவரான ஈழத்தமிழர் தனிஈழ நாடு கோரி நடத்தும் பயங்கர இயக்கத்தை அது தோன்றிய நாள் முதலே நான் ஆதரிக்கவில்லை. தனி ஈழநாடு கோரும் பயங்கரவாதிகளின் முன் வரிசைத் தலைவர்களில் எவரையும் நான் சந்தித்ததில்லை (ம.பொ.சி., ஈழத்தமிழரும் நானும் பக். 186).
விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்றும் பிரபாகரனை பார்க்க விரும்பவில்லை எனக் கூறும் ம.பொ.சி. தான் தமிழ்த் தேசியக் கட்சியினருக்கு மண்ணுரிமை போராளியாம். நாம் தமிழர் இயக்க சீமானுக்கு பிரபாகரனும், தலைவர் பிரபாகரனை கண்டித்து, பார்க்க மறுத்த ம. பொ. சி. யும் தலைவர்! என்ன கொள்கையோ!!
இந்திய அமைதிப்படை இலங்கைக் சென்று பல ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்து விட்டு வந்ததை வரவேற்ற ம.பொ.சி. இராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு, துக்ளக்சோ, ஜெயகாந்தன் வரிசையில் இருந்து கொண்டு ஊர் ஊராகச் சென்று
தமிழர் விரோதப் பிரச்சாரத்தை மேற்கொண்டார் என்பது இந்தத் தலைமுறையினர் அனைவரும் அறிந்ததே.
1971இல் தேர்தலில் தோற்றுவிட்ட ம.பொ.சி. தன் தமிழரசு கழகம் தேர்தல் கட்சியல்ல என்று அறிவித்துவிட்டார். 1972இல் கருணாநிதியின் தயவால் மேலவை உறுப்பினரானார். 1976 இல் தமிழ்நாட்டில் பிற மொழியினர் என்ற நூலை எழுதிய ம.பொ.சி. 1977இல் தி.மு.க. தோற்றுவிட்டவுடன்,
மலையாளியான எம்.ஜி.ஆரிடம் ஓடினார். அவரிடம் கெஞ்சி கூத்தாடி மேலவைத் தலைவர் பதவியையும் அனுபவித்தார். 1986இல் மேலவை கலைக்கப்பட்டவுடன் இனி மேய்ச்சலுக்கு திராவிட இயக்கத்தில் ஒன்றும் இல்லை என்று தெரிந்தவுடன்,
தன் தாய்க் கழகமான காங்கிரசில் தமிழின துரோகி வாழப்பாடி சால்வை போர்த்த தமிழ் ஈழத்தைக் கொன்றொழித்த இராஜீவ் காந்தி முன்னிலையில் 1989இல் சேர்ந்தார். ம.பொ.சி.யின் போலி தமிழரசு கழகம் காங்கிரசில் இரண்டற கலந்துவிட்டது. ம.பொ.சி. என்றுமே தமிழ்த் தேசியராக ஒரு நாளும் இருந்ததில்லை.
அவரைத்தான் இன்றைய தமிழ்த் தேசியவாதிகள் தமிழ்த்தேசத் தலைவராகத் தூக்கிப் பிடிக்கின்றனர்.
எம்.ஜி.ஆர். மேலவை தலைவர் பதவி கொடுக்கவே அவரைப் பாராட்டி நீண்ட தொடர் கட்டுரையை செங்கோல் இதழில் எழுதி வந்தார். பூங்கொடி பதிப்பகம் அதனை தொகுத்து “எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் இருந்த உறவு” என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டிருக்கிறது.
1954இல் குலக்கல்வி திட்டத்தை திரும்ப பெற மறுத்து முதலமைச்சர் பதவி விலகி சென்று விட்டார் இராசாசி. பெரியாரின் ஆதரவுடன் காமராசர் முதலமைச்சரானார். அப்போது காமராசை ‘பச்சைத் தமிழன்’ எல்லோரும் அவரை ஆதரிக்க வேண்டுமென பெரியார் கேட்டுக் கொண்டார்.
இதைக் கண்டித்த ம.பொ.சி. “பச்சோந்தி ஈ. வெ.ரா. காமராசரைப் பச்சைத் தமிழன் என்கிறார்” (செங்கோல் 12-7-54) என்று எழுதினார்.
உண்மையில் தன் வாழ்நாள் முழுவதும் பச்சோந்தியாக வாழ்ந்தவர் ம.பொ.சி.யே. முதலில் சத்தியமூர்த்தி, அடுத்தது இராஜாஜி, பிறகு காமராசர், அகில இந்திய அளவில் காந்தி, நேரு. நேரு மறைந்த போது நான் என் தலைவரை இழந்துவிட்டேன் என்று தலையங்கம் எழுதினார்.
தமிழரசு கழக கொடிகளை ஒரு வாரம் அரைக்கம்பத்தில் பறக்கவிட்டார். சென்னையில் மவுன ஊர்வலம் நடத்தினார்.
1964 முதல் அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிவந்தார். 1967இல் சட்ட மன்றத்தில் தி.மு.க.
ஆட்சியின் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து பேசிய ம.பொ.சி., தி.மு.க.விற்கு விசுவசாமாக நடந்து கொண்டார். அண்ணா மறைந்தவுடன் கலைஞரிடம் போய் மேலவை உறுப்பினரானார். தி.மு.க. தோற்றவுடன் எம்.ஜி.ஆரிடம் போய் அவருக்கு நல்ல பிள்ளையாக நடந்து கொண்டு மேலவைத் தலைவரானார்.
அங்கிருந்து ராஜீவ்காந்தியிடம் ஓடினார். எங்கெங்கு தாவுகிறாரே அதற்கு ஏற்றபடி தாளம் போட்டு உண்மையான பச்சோந்தியாக வாழ்ந்து காட்டினார்.
ம.பொ.சி. தமிழ்த் தேசியக் காவலரும் அல்ல, தமிழ்த் தேசியத் தலைவருமல்ல. அவர் முழுக்க முழுக்க இந்திய தேசியவாதியே ஆவார்.
ஆதித்தனார் தன்னைப் பற்றி கூறியது.
“1939இல் மலேயாவில் பாரிஸ்டராகத் தொழில்புரிந்து வந்தபோது தமிழகத்தில் ‘தமிழ்நாடு தமிழருக்கே!’ என்ற குரல் கிளம்பியதைக் கேட்டேன் அந்த இலட்சியத்திற்குத் தொண்டாற்றும் எண்ணத்தோடு மனைவி மக்களோடு சென்னை வந்து சேர்ந்தேன்.
சென்னைக்குக் கப்பலில் வந்து இறங்கிய அன்று திருக்கழுக்குன்றத்தில் நடைபெற்ற நீதிக் கட்சியின் மாநாடு நடைபெற்றது. உடனே சென்னையிலிருந்து ஒரு வாடகை காரை அமர்த்திக் கொண்டு திருக்கழுக்குன்றம் போனேன். தலைவர் பெரியார் அவர்களைச் சந்தித்தேன்.
அவரிடம் நான் என் கருத்தைத் தெரிவித்தவுடன் மாநாட்டுப் பந்தலுக்குள் அண்ணா அவர்களைச் சுட்டிக் காட்டி 'அண்ணாதுரை இருக்கிறார்; அவருடன் பேசுங்கள்' என்று கூறி அனுப்பி வைத்தார்.
மாநாடு முடிந்த பிறகு அண்ணா அவர்களோடு நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்பு எனக்கு அன்று கிடைத்தது. தமிழ்மொழிக்கு ஒரு மறுமலர்ச்சி தேவை என்ற கருத்தை மிகவும் வலியுறுத்திப் பேசினார். தமிழக்கும் தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் அவருடன் சேர்ந்து தொண்டாற்ற உறுதி கொண்டு இருக்கிறேன்
என்று கூறி அவரிடம் விடைபெற்று கொண்டார்." (முகிலை இராச பாண்டியன், நாம் தமிழர் இயக்கம் பக். 51)
“1942இல் திரும்பி வந்தேன் மதுரையில் ‘தமிழன்’ என்ற வார இதழைத் தொடங்கினேன். அப்போது அண்ணா அவர்கள் தமிழன் பத்திரிகைக்கு ஒரு வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார்.
அதை இன்னும் நான் வைத்திருக்கிறேன்.” (முகிலை இராச பாண்டியன், நாம் தமிழர் இயக்கம் பக்.61, 62)
அப்போதுதான் நாம் தமிழர் இயக்கத்தை தொடங்கியதாகக் கூறுகிறார்கள். ஆனால் அந்த இயக்கம் நீண்ட நாள் நீடிக்கவில்லை, 1945இல் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார் ஆதித்தனார்.
1946இல் காங்கிரசின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமேலவை உறுப்பினர் ஆனார். அப்போது இருந்த காங்கிரசு அரசு பனைமரத்துக்கு வரி விதித்தது. இது கள் இறக்கும் தொழிலாளர்களை பாதித்தது. இதை எதிர்த்து போராட்டம் நடத்தி சட்ட மேலவை உறுப்பினர் பதவியையும் தூக்கி எறிந்துவிட்டார்.
1951இல் பிரஜா கட்சியில் சேர்ந்தார். அது 1952இல் பிரஜா சோசலிஸ்ட் கட்சியாக மாறியது. 1952இல் தேர்தலில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அந்த கட்சியின் முடிவின்படி 30-8-1955 முதல் 18-9-55 வரை கிசான் போராட்டம் நடத்தினார்.
உழவர்கள் மறியல் சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டார்கள். அந்த கட்சியின் பலம் அவ்வளவுதான் தமிழ்நாட்டில். (முகிலை இராச பாண்டியன், நாம் தமிழர் இயக்கம் பக்.67)
அந்த கட்சி அடுத்தத் தேர்தலில் வெற்றிபெறாது என்று தெரிந்தவுடன் அதிலிருந்து விலகி சுயேச்சையாக 1957இல் சாத்தான்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1958 பிப்ரவரி ஒன்பதாம் நாள் மீண்டும் நாம் தமிழர் இயக்க கூட்டத்தை நடத்தினார்.
1960 சூன் 5 ஆம் நாள் தந்தை பெரியாருடன் இணைந்து தமிழ்நாடு நீங்கலாக இந்திய தேசப்பட எரிப்புப் போராட்டம் நடத்தினார். அப்போதுதான் பெரியாரிடம் பக்குவமாக பேசி பெரியார் திடல் இடத்தில் பாதியை எனக்கு எழுதிக் கொடுத்தால் நீங்கள் வாங்கிய முழுத் தொகையையும் கொடுத்து விடுகிறேன்
என்று கூறி பெரியார் திடலின் முன் பக்கமாக உள்ள இடத்தை வாங்கிக் கொண்டு தினத்தந்தி அலுவலகம் வைத்தார்.
1960 இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினார். 1959இல் தமிழப் பேரரசு என்ற நூலை எழுதினார். அப்போது அது தமிழ் நாட்டில் தடை செய்யப்பட்டது.
1965இல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஆதித்தனார் உண்மையான தமிழ்த் தேசியராக விளங்கியது 1958 முதல் 1965 வரை 7 ஆண்டுகள் மட்டுமே. ஆதித்தனாரே தி.மு.க.வில் இணைந்ததைப் பற்றி கூறுகிறார்.
“1965 இல் பாதுகாப்புக் கைதியாக என்னை நான்காவது முறையாக சிறைப்படுத்தினார்கள். அந்த சமயத்தில் ஒரு நாள் ‘பரேலில்’ வந்திருந்தேன். பரேலில் இருந்து லீவில் வந்திருந்த நான் ‘கலைஞர்’ அவர்களை
‘மேகலா’ அலுவலகத்தில் சந்தித்துப் பிரிவினைத் தடைச் சட்டம் வந்து விட்டதால் தி.மு.க.வில் இரண்டறச் சேர்ந்து விடுவதாகத் தெரிவித்து விட்டு மறுநாள் கோவைச் சிறைக்குப் போய்விட்டேன்”.
அதன்பிறகு கூட்டணி அமைப்பதில் அறிஞர் அண்ணாவுடனும், கலைஞர் அவர்களுடனும் சேர்ந்து பல திட்டங்களைத் தீட்டினேன் என்கிறார். இது முத்தாரத்தில் ஆதித்தானரே எழுதியது.
ம.பொ.சி. காங்கிரசில் 1989இல் சேரும் வரை தமிழரசு கழகம் என்ற பெயரை வைத்துக் கொண்டுதான் இருந்தார். ஆதித்தனார்
அவராகவே விரும்பி தி.மு.க.வில் சேர்ந்துவிட்டார். 1967 தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக வந்தவுடன் அவைத் தலைவராக ஆதித்தனாரை நியமித்தனர். 1969இல் அமைச்சரானார். 1972இல் நடைபெற்ற தேர்தலிலும் வெற்றிபெற்று மீண்டும் அமைச்சரானார்.
1980 தேர்தலில் இவருக்கு தேர்தலில் நிற்க சீட்டு தரவில்லை என்பதால், எம்.ஜி.ஆரிடம் ஓடிச்சென்று அ.தி.மு.க.வில் சேர்ந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். பதவி வெறியரான இவர்தான் அருகோபாலனின் இன்னொரு தமிழ்த்தேசியத் தலைவராவார்.
எந்தப் பதவிக்கும் ஆசைப்படாமல் 1938 முதல் இந்தி ஆதிக்கத்தையும், வடவர் ஆதிக்கத்தையும் எதிர்த்து வந்த பெரியார், 1956 முதல் 1973 இல் அவர் மறையும் வரையில் சுதந்திர தமிழ்நாடு விடுதலைக்காக பாடுபட்ட பெரியார் இவருக்கு வேப்பங்காய் கசக்கிறது. இவர் என்ன தமிழ்த் தேசியவாதியோ!!
இந்தி வெறியர் ம.பொ.சி.யும், பதவி வெறியர் ஆதித்தனாரும் தான் இன்றைய தமிழ்த்தேசியவாதிகள் அனைவருக்கும் தலைவர்களாய்த் தெரிகிறார்கள். சுதந்திரத் தமிழ்நாடு அடைந்தே தீருவேன் என்று போராடி வந்த பெரியார் இவர்களுக்கு தமிழினத் துரோகியாய் தெரிகிறார்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வள்ளலார் மறைந்து 145 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக தமிழ்நாட்டு அரசாங்கம் அவரை கெளரவித்து உள்ளது! முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வள்ளலார் பிறந்த நாளான அக்டோபர் ஐந்தாம் நாள் இனி ஆண்டுதோறும் “தனிப்பெருங்கருணை நாள்”
எனக் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்து உள்ளார்! வள்ளலாருக்கு வடலூரில் 72 ஏக்கர் பரப்பளவில் பெரிய மணிமண்டபம் கட்டும் முயற்சியையும் இந்த அரசு மேற் கொண்டு வருகிறது! வள்ளலார் சென்னை தங்கசாலையில் வாழ்ந்த இடத்திற்கு அண்மையில் அமைச்சர் சேகர்பாபு சென்ற போது சொன்னார்.
முதன்முறையாக வள்ளலார் இல்லம் வந்த அமைச்சர் நான் தான்! இது மதவாத பாஜக அரசை எதிர்கொள்ள ஸ்டாலின் கை கொள்ளும் யுத்த தந்திரங்களில் ஒன்றாகும்!
ஸ்டாலின் அமைதியாக செய்ய வேண்டிய நற்காரியங்களை செய்து செயல்பாட்டாளராக விளங்குகிறார்!
"The Spur Tank Meeting" டி .எம் .நாயர்.
திராவிட மக்களின் போர்க்குரல்
பறையரைவிட்டு இரண்டு, மூன்று பார்ப்பனர்களை அடிக்கும்படி தூண்டியதாகப் பத்திரிகை களில் வாசித்தோம். இராஜாங்க விஷயமான அபிப்ராய பேதமிருந்து இதை சாதி பேதச் சண்டையுடன் முடிச்சுப் போட்டு அடிதடி வரை ....
டாக்டர் தரவாட் மாதவன் நாயர் என்ற முழுப் பெயர் கொண்ட டாக்டர் டி.எம். நாயர் தென்னகத்தின் புகழ்பூத்த இந்திய அரசியல்வாதி. சென்னை மாகாணத்தில் திராவிட இயக்கத்தின் முன்னோடி தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை (நீதிக்கட்சி) சர்.பிட்டி. தியாக ராய செட்டியார்,
டாக்டர் சி. நடேச முதலியார் ஆகியோருடன் இணைந்து தோற்று வித்தவர். அச்சங்கத்திற்கான விதிகளை யும் கொள்கை நெறிகளையும் வடித்துத் தந்தவர். மிகத் திறமையும் அறிவாற்ற லும் அஞ்சாமையும் நிறைந்த ஒப்பற்ற தலைவர் டாக்டர் டி.எம். நாயர்.
பெண்ணுரிமை குரல்கள் ,பெண்களுக்கு நடக்கும் அவலங்களுக்கு டிவிட்டரில் முதல் குரல்கள் ,அண்ணாமலை குஷ்பூவை பேசினால் கூட குஷ்புக்கு டிவிட் போட்டு என்னக்கா ஆறுதல் சொல்வது போல் வசன நடை ,
ஒரு முறை குஷ்புவே இந்த அம்மணியை போம்மான்னு சொன்னதெல்லாம் பதிவில் உள்ளது .
தன்னை ஒருவர் டிவிட்டரில் எதிர்த்து பேசினால் அவற் பணிபுரியும் கம்பெனிக்கே சென்று மிரட்டுவது ,அதே நிறுவனத்திலிருந்து வேலையை விட்டு தூக்குவது ,கொலை ,
கொள்ளை பலானா பெரிய மேட்டர்கள் தலையீடு ,டிவிட்டர் பிரபலம் என்ற பெயரில் உல்லாச வாழ்க்கை
1782 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது மைசூர் போரில் ஹைதர் அலி இறந்து விடவே அவருடைய மகன் திப்பு சுல்தான் போருக்கு பொறுப்பேற்று போரில் வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டான்.
திப்பு சுல்தானின் ஆட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கப் பட்டிணத்தில் அதுவும் திப்புவின் அரண்மனைக்கு 300 அடி தொலைவில் தான் ஆதி சங்கரனால் தோற்றுவிக்கப்பட்ட சிருங்கேரி சாரதா பீடம் என் அழைக்கப்படும் சங்கர மடம் உள்ளது.
திப்பு சுல்தானும் தன் தந்தை அய்தர் அலியைப் போலவே சிருங்கேரி சங்கர மடத்தினிடம் நல்லுறவு கொண்டிருந்தார் என்று அவர் சங்கர மடத்திற்கு எழுதிய கடிதங்களிலிருந்தும், சங்கர மடத்திலிருந்து திப்புவிற்கு எழுதப்பட்ட பதில் கடிதங்களிலிருந்தும் அறிந்து கொள்ள முடிகிறது.
'கிறிஸ்தவர்கள்-முஸ்லிம்கள் தவிர்த்த இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருமே இந்துக்கள் ஆவார்கள்'. இதன்படி நாத்திகன், பகுத்தறிவுவாதி, பரதேசி முதலிய சகலரும் இந்துக்கள் ஆகி சூத்திரர், பார்ப்பானின் தாசி மகன் என்று ஆகிவிடுகிறார்கள்.
"தமிழ் இந்து" என்று பேசிவரும் திரு.பெ.மணியரசன் அண்மையில் ஒரு நேர்காணலில், "பெரியாரும் பெரியாருடையத் தொண்டர்களும் இந்து மதத்தில் தான் இருக்கிறார்கள், மதத்தை ஒழிக்க முடியாது என்று பெரியாரே ஒப்புக்கொண்டு விட்டார், இந்து மதத்தை எதிர்க்கிறோம் என்று பொய்யாகச் சொல்லிவிட்டு
பெரியாரியலாளர்கள் இந்து மதத்திலேயே இருக்கும்போது நாங்கள் நேர்மையாக தமிழ் இந்து என்று அடையாளப்படுத்துவதில் என்ன தவறு?" என்று நம்மை நோக்கிக் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதைப் பற்றிய உங்களுடையக் கருத்து.