திப்பு சுல்தான் இஸ்லாமிய மதவெறியனா?

1782 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது மைசூர் போரில் ஹைதர் அலி இறந்து விடவே அவருடைய மகன் திப்பு சுல்தான் போருக்கு பொறுப்பேற்று போரில் வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டான்.
திப்பு சுல்தானின் ஆட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கப் பட்டிணத்தில் அதுவும் திப்புவின் அரண்மனைக்கு 300 அடி தொலைவில் தான் ஆதி சங்கரனால் தோற்றுவிக்கப்பட்ட சிருங்கேரி சாரதா பீடம் என் அழைக்கப்படும் சங்கர மடம் உள்ளது.
திப்பு சுல்தானும் தன் தந்தை அய்தர் அலியைப் போலவே சிருங்கேரி சங்கர மடத்தினிடம் நல்லுறவு கொண்டிருந்தார் என்று அவர் சங்கர மடத்திற்கு எழுதிய கடிதங்களிலிருந்தும், சங்கர மடத்திலிருந்து திப்புவிற்கு எழுதப்பட்ட பதில் கடிதங்களிலிருந்தும் அறிந்து கொள்ள முடிகிறது.
திப்பு 1790 முதல் 1799ல் இறக்கும் வரை சிருங்கேரி சங்கர மடத்திற்கு இருபத்தியொரு கடிதங்கள் எழுதியிருந்தார். அவை அனைத்தும் பழைய கன்னட மொழியிலானது. அக்கடிதங்கள் அனைத்தும் இன்றும் சிருங்கேரி சங்கர மடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
சங்கர மடத்திலிருந்து திப்புவிற்கு எழுதப்பட்ட பதில் கடிதங்கள் அனைத்தும் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டிருந்தது. திப்புவிற்கு ஓரளவு சமஸ்கிருதம் தெரியும். எனினும் தன்னுடைய பார்ப்பன அமைச்சர்கள் மூலம் திப்பு அவற்றைப் படித்து அறிந்து கொண்டு சங்கர மடத்திற்கு
தேவைப்பட்டபோதெல்லாம் உதவிகளைச் செய்துள்ளார். இந்தக் கடிதங்கள் முழுவதும் மைசூர் ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

திப்பு சங்கர மடத்திற்குக் கடிதம் எழுதும் போது ஒவ்வொரு முறையும் மிகுந்த மரியாதை கொடுத்து பணிவான வணக்கத்துடன் எழுதுவார்.
திப்பு 1790இல் சிருங்கேரி சங்கராச்சாரிக்கு எழுதிய முதல் கடிதத்தில் ஸ்ரீமத் பரமாம்ச பரிவர ஆச்சாரிய சிருங்கேரி சச்சிதானந்த சாமிகளுக்குத் திப்புவின் வணக்கங்கள் என்றுதான் தொடங்கியுள்ளார். தன் நாட்டு மக்களைப் பாதுகாக்க ஈசுவரனை வேண்டும்படி அக்கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
1791இல் மராட்டிய தளபதி பரசுராமபாகு என்பவன் தலைமையில் சிருங்கேரி சங்கரமடம் கொள்ளை அடிக்கப்பட்டது. அப்போதே சுமார் 60 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் களவாடப்பட்டன. அத்தோடு நில்லாமல் சாரதா தேவியின் சிலையையும் புரட்டிப் போட்டான் அவன்.
அங்கிருந்த பார்ப்பனக் குருக்களையும் கொன்றான் அந்த மராட்டிய தளபதி. கார்கிலாவுக்கு ஓடி ஒளிந்து கொள்ள வேண்டிய நிலை சங்கராச்சாரிக்கு அன்று ஏற்பட்டது.
கார்கிலாவிலிருந்து தமக்கு உதவும்படி திப்புவிற்குக் கடிதம் கொடுத்தனுப்பியிருந்தார் சிருங்கேரி சங்கராச்சாரி. (சிருங்கேரி சங்கர மட கடித எண்கள் 54,55, New History of Marathas by sardesi G.S. Volume III P.180) அக்கடிதத்திற்கு திப்பு பதில் கடிதம் எழுதி உள்ளார் அவை வருமாறு.
புனித இடங்களை அழிப்பவர்கள் தங்களது தீய செயல்களுக்கான பலனை அனுபவிப்பார்கள். குருவுக்குத் தீமை செய்பவர்களுக்கு அழிவே உண்டாகும். சாரதா பீடம் மீண்டும் அமைய 200 ரஹாடி ரொக்கமாகவும், 200 ரஹாடி பொருட்களாகவும் 200 ரஹாடி தானியமாகவும் வழங்கியுள்ளேன்.
மேலும் நிதி தேவையெனில் கொடுக்கும் படி கிராம நிர்வாக அலுவலர்க்கு உத்திரவிட்டுள்ளேன் என திப்பு சிருங்கேரி சங்கராச்சாரிக்கு எழுதி உள்ளார். (திப்புவின் கடித எண் 47)
சிருங்கேரி சங்கராச்சாரி மீண்டும் உதவி கேட்டு திப்புவிற்குக் கடிதம் கொடுத்து அனுப்பியிருந்தார். அதைப் பெற்றுக் கொண்ட திப்பு, சுவாமிகள் உங்கள் கடிதம் வேலூர் வெங்கட்ராம ஜோய்ஸ் மற்றும் அகோபில சாஸ்திரிகள் மூலம் கிடைத்தது. செய்தியை தெரிந்து கொண்டேன்.
உங்களுக்காகப் பல்லக்கு ஒன்று அனுப்பி உள்ளேன். உங்களுக்கு மேலும் நிதி உதவி அளிக்கும் படி நகர நிர்வாகத்திற்கு உத்திரவிட்டுள்ளேன் என எழுதியுள்ளார். (திப்புவின் கடித எண்48)
நரசிம்ம சாஸ்திரி மூலம் சங்கர மடத்திலிருந்து திப்புவிற்கு மீண்டும் கடிதம் கொடுத்தனுப்பப்பட்டது. அக்கடிதத்தை பெற்றுக் கொண்ட திப்பு, 200 ரஹாடி நெல் மற்றும் சாரதா தேவிக்கு அணிவிக்க விலையுயர்ந்த பட்டு புடவையையும் மேலாடையையும்,
சங்கராச்சாரியின் சொந்த பயன்பாட்டிற்கு விலையுயர்ந்த இரண்டு சால்வைகளையும் அசாப் என்பவர் மூலம் அனுப்பி வைத்துள்ளார். (திப்புவின் கடித எண் 49) சிருங்கேரி சங்கராச்சாரி மீண்டும் உதவி கேட்டுத் திப்புவிற்குக் கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தை பெற்றுக் கொண்ட திப்பு,
நாராயணன் என்பவர் மூலம் யானை ஒன்றையும் புதிதாக வெளியிட்ட நாணயங்கள் பலவற்றையும் கொடுத்தனுப்பி உள்ளார். அவை வருமாறு:
இதனுடன் கூடுதலாக ரூ.500 சேர்த்து அனுப்பி வைத்தார். அன்னை சாரதா தேவியின் கோவிலை விரைவில் கட்டி முடித்துக் குடமுழுக்கு நடத்த வேண்டிக் கொண்டார். (திப்புவின் கடித எண் 50) அதே கடிதத்தில் திப்பு மேலும் எழுதி உள்ளதாவது:
1000 பார்ப்பனர்களை அழைத்து 40 நாட்களுக்கு சாஸ்திரா சண்டி ஜபம் செய்ய வேண்டிக் கொண்டார். இதற்கான முழு செலவையும் தாமே ஏற்றுக் கொள்வதாக எழுதியுள்ளார். நாட்டின் எதிரிகளை அழிக்க இந்த ஜபம் பயன்படுமென திப்பு சங்கராச்சாரிக்கு எழுதி உள்ளார்.
கடித எண்கள் 51, 52, 53 ஆகியவற்றிலும் சாஸ்திரா சண்டி ஜபம் நல்ல முறையில் நடத்துவது குறித்த ஏற்பாடுகளைப் பற்றியே எழுதி உள்ளார்.

கடித எண் 54 இல் சாரதா தேவிக்கு மூன்று கால பூசையும் தவறாமல் நடத்தும்படி வேண்டிக் கொண்டுள்ளார்.
இந்தக் கடிதம் எழுதிய போதும் கங்கராச்சாரி பயணம் செய்ய வேலைபாடுகள் மிகுந்த பல்லக்கு ஒன்றை அனுப்பி உள்ளார்.

சிருங்கேரி சங்கராச்சாரியின் வேண்டுகோளுக்கிணங்கி அரசுப் பணத்தைக் கையாடல் செய்து சிறையில் அடைத்து வைத்திருந்த இரண்டு பார்ப்பனர்களை விடுதலைச் செய்தார். மேலும்,
திப்புவின் ஆட்சியில் நாற்பத்து அய்ந்து ஆயிரம் முதல் அய்ம்பதாயிரம் வரை மிகப்பெரிய எண்ணிக்கையிலான பார்ப்பனர்கள் அரசாங்க வேலைகளில் இருந்தனர். இவர்கள் தவறு செய்தால் தண்டிக்கும் பொறுப்பு அரசிடமிருந்ததை மாற்றி சங்கர மடத்தினிடமே அப்பொறுப்பையும் ஒப்படைத்தார்.
இந்து சாஸ்திரத்தில் என்ன தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோ அதே தண்டனையை நீங்களே ஒரு அலுவலரை அமர்த்தி நிறைவேற்றும்படி சங்கராச்சாரியை திப்பு கேட்டுக் கொண்டார். (திப்புவின் கடித எண் 58) மேலே கண்ட கடிதத்திலேயே சங்காராச்சாரிக்கு வெள்ளை குதிரை ஒன்று அனுப்பி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சிருங்கேரி மடத்தின் சாரதா தேவி கோவிலின் திருவிழாவிற்காக திப்பு தங்கத் தகட்டாலும், வெள்ளிக்குழிழ்களாலும் செய்யப்பட்ட பல்லக்கு ஒன்றை அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார் என்பதை அவருடைய கடிதம் வாயிலாக அறிய முடிகிறது. (திப்புவின் கடித எண் 59)
திப்பு சிருங்கேரி சங்கர மடத்திற்கு ஸ்பதிகலிங்கம் ஒன்றை விலையுயர்ந்த கற்களால் செய்து கொடுத்துள்ளார். (Tippu Sultan a Fanatic. 84) மேலே கண்ட ஆவணங்களின் மூலம் திப்புவிற்கும் சிருங்கேரி மடத்திற்கும் இருந்த நல்லுறவை அறிந்து கொள்ள முடிகிறது.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்குப் பாலமாக இருந்து நேர்மையாக ஆட்சி செய்துள்ளார். மதத்திற்கு அரச செலவு செய்த மொத்த தொகையில் 90% இந்து கோவில்களுக்கும் 10% இசுலாமிய மசூதிகளுக்கும் மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் செலவு செய்துள்ளார்.
திப்புவிற்கும் சிருங்கேரி சங்கர மடத்திற்கும் இருந்த தொடர்புகளை மட்டுமே இங்குச் சுருக்கமாக எழுதி உள்ளேன். திப்புவின் மற்ற பண்புகளும் மிகச்சிறந்தவை. குறிப்பாக உழவர்களுக்கே நிலம் சொந்தம் என்பதை நடைமுறைபடுத்தியவர். எல்லா மதத்தினரையும் சமமாக நடத்திய பண்பாளர். மிகச் சிறந்த கல்வி மான்.
இக்கட்டுரை எழுத பயன்பட்ட நூல்கள்:

1. Tippu Sultan a Fanatic? by V. JALAJA SAKTHI - DASAN.
2. Sringeri Sovemir 1968.
3. The Sword of Tippu Sultan by. BHAGWANGI DWANI
4. History of Sringeri by A.K.SASTRY
5. Secret Correspondence of Tippu Sultan by. KABIR KAUSAR
6. திப்பு விடுதலைப் போரின் முன்னோடி தொகுப்பு Dr. வெ.ஜீவானந்தம்

- வாலாசா வல்லவன்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தீ பரவட்டும்

தீ பரவட்டும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Firebird1506

22 Oct
வள்ளலார் எனும் கலகக்காரரும், திராவிட அரசியலும்!

வள்ளலார் மறைந்து 145 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக தமிழ்நாட்டு அரசாங்கம் அவரை கெளரவித்து உள்ளது! முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வள்ளலார் பிறந்த நாளான அக்டோபர் ஐந்தாம் நாள் இனி ஆண்டுதோறும் “தனிப்பெருங்கருணை நாள்” Image
எனக் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்து உள்ளார்! வள்ளலாருக்கு வடலூரில் 72 ஏக்கர் பரப்பளவில் பெரிய மணிமண்டபம் கட்டும் முயற்சியையும் இந்த அரசு மேற் கொண்டு வருகிறது! வள்ளலார் சென்னை தங்கசாலையில் வாழ்ந்த இடத்திற்கு அண்மையில் அமைச்சர் சேகர்பாபு சென்ற போது சொன்னார்.
முதன்முறையாக வள்ளலார் இல்லம் வந்த அமைச்சர் நான் தான்! இது மதவாத பாஜக அரசை எதிர்கொள்ள ஸ்டாலின் கை கொள்ளும் யுத்த தந்திரங்களில் ஒன்றாகும்!
ஸ்டாலின் அமைதியாக செய்ய வேண்டிய நற்காரியங்களை செய்து செயல்பாட்டாளராக விளங்குகிறார்!
Read 50 tweets
22 Oct
"The Spur Tank Meeting" டி .எம் .நாயர்.
திராவிட மக்களின் போர்க்குரல்

பறையரைவிட்டு இரண்டு, மூன்று பார்ப்பனர்களை அடிக்கும்படி தூண்டியதாகப் பத்திரிகை களில் வாசித்தோம். இராஜாங்க விஷயமான அபிப்ராய பேதமிருந்து இதை சாதி பேதச் சண்டையுடன் முடிச்சுப் போட்டு அடிதடி வரை .... Image
டாக்டர் தரவாட் மாதவன் நாயர் என்ற முழுப் பெயர் கொண்ட டாக்டர் டி.எம். நாயர் தென்னகத்தின் புகழ்பூத்த இந்திய அரசியல்வாதி. சென்னை மாகாணத்தில் திராவிட இயக்கத்தின் முன்னோடி தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை (நீதிக்கட்சி) சர்.பிட்டி. தியாக ராய செட்டியார்,
டாக்டர் சி. நடேச முதலியார் ஆகியோருடன் இணைந்து தோற்று வித்தவர். அச்சங்கத்திற்கான விதிகளை யும் கொள்கை நெறிகளையும் வடித்துத் தந்தவர். மிகத் திறமையும் அறிவாற்ற லும் அஞ்சாமையும் நிறைந்த ஒப்பற்ற தலைவர் டாக்டர் டி.எம். நாயர்.
Read 125 tweets
22 Oct
பெண்கள் மற்றவர்களைத் தவறாகப் பேசினாலும் தவறுதான்.

தவறு என்பதில் ஆண், பெண் பாலின பாகுபாடு கிடையாது.

பெண்ணுரிமை குரல்கள் ,பெண்களுக்கு நடக்கும் அவலங்களுக்கு டிவிட்டரில் முதல் குரல்கள் ,அண்ணாமலை குஷ்பூவை பேசினால் கூட குஷ்புக்கு டிவிட் போட்டு என்னக்கா ஆறுதல் சொல்வது போல் வசன நடை , Image
ஒரு முறை குஷ்புவே இந்த அம்மணியை போம்மான்னு சொன்னதெல்லாம் பதிவில் உள்ளது .

தன்னை ஒருவர் டிவிட்டரில் எதிர்த்து பேசினால் அவற் பணிபுரியும் கம்பெனிக்கே சென்று மிரட்டுவது ,அதே நிறுவனத்திலிருந்து வேலையை விட்டு தூக்குவது ,கொலை , Image
கொள்ளை பலானா பெரிய மேட்டர்கள் தலையீடு ,டிவிட்டர் பிரபலம் என்ற பெயரில் உல்லாச வாழ்க்கை Image
Read 24 tweets
21 Oct
(குரு -சிஷ்யன்) நாம் தமிழர் வரலாறு

நாம் தமிழர் மணியரசனும் -சீமானும் டுபாக்கூர் நம்பர் 2🙃

டுபாக்கூர் நம்பர் 1🙃

இந்தி வெறியர் ம.பொ.சி.யும், பதவி வெறியர் ஆதித்தனாரும் தான் இன்றைய தமிழ்த்தேசியவாதிகள் அனைவருக்கும் தலைவர்களாய்த் தெரிகிறார்கள்.
Read 10 tweets
21 Oct
ம.பொ.சி. தன் வாழ்நாள் முழுவதும் இந்தியத் தேசியத்தையே தூக்கிப் பிடித்தார். செங்கோல் இதழில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15, ஜனவரி 26, அக்டோபர் 2, காந்தி பிறந்த நாள் திலகர் நாள் (6-8-62 செங்கோல்) தீபாவளி வாழ்த்து கூறும்போது கூட
“நாம் தமிழர்களாக மட்டுமல்லாமல் இந்துக்களாகவும் இந்தியர்களாகவும் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது” (செங்கோல் 24-10-65)
"சித்திரை முதல் நாளைத்தான் ஆண்டு பிறந்த நாளாகக் கொண்டாட வேண்டுமாம். பஞ்சாகத்துக்கு மாற்றான தைத்திங்கள் முதல் நாள் ஆண்டு புத்தாண்டு தேவையில்லை. அரசின் வரவு செலவுத் திட்டத்தை இந்தச் சித்திரையிலே அரசு தொடங்கலாம். 60 ஆண்டு சுழற்சி முறையும் நன்றாகத்தான் உள்ளது." (செங்கோல் 18-4-65)
Read 109 tweets
21 Oct
பெ.மணியரசன் புரட்டுக்கு பதிலடி

'கிறிஸ்தவர்கள்-முஸ்லிம்கள் தவிர்த்த இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருமே இந்துக்கள் ஆவார்கள்'. இதன்படி நாத்திகன், பகுத்தறிவுவாதி, பரதேசி முதலிய சகலரும் இந்துக்கள் ஆகி சூத்திரர், பார்ப்பானின் தாசி மகன் என்று ஆகிவிடுகிறார்கள்.
"தமிழ் இந்து" என்று பேசிவரும் திரு.பெ.மணியரசன் அண்மையில் ஒரு நேர்காணலில், "பெரியாரும் பெரியாருடையத் தொண்டர்களும் இந்து மதத்தில் தான் இருக்கிறார்கள், மதத்தை ஒழிக்க முடியாது என்று பெரியாரே ஒப்புக்கொண்டு விட்டார், இந்து மதத்தை எதிர்க்கிறோம் என்று பொய்யாகச் சொல்லிவிட்டு
பெரியாரியலாளர்கள் இந்து மதத்திலேயே இருக்கும்போது நாங்கள் நேர்மையாக தமிழ் இந்து என்று அடையாளப்படுத்துவதில் என்ன தவறு?" என்று நம்மை நோக்கிக் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதைப் பற்றிய உங்களுடையக் கருத்து.
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(