"இஸ்லாமியர்களிடையே உள்ள இரண்டு வழக்கங்கள் மீது பாரதிக்கு உடன்பாடில்லை. ஒன்று அவர்களிடையே உள்ள, கோஷா என்னும் பர்தா அணியும் வழக்கம். அது அவர்களுக்குப் பாதுகாப்பு என்ற வாதத்தை பாரதி ஏற்பதில்லை.' கனி கண்டவன் தோலுரிக்கக் காத்திருப்பேனோ?'
' வன்ன முகத்திரையைக் களைந்திடென்றேன், நிந்தன் மதங் கண்டு துகிலினை வலிதுரிந்தேன்' என்றெல்லாம் எழுதி மூலம் ஒரு பெண்ணை அடைய நினைப்பவருக்கு இந்தத் துணித்திரை பெரும் அரண் அல்ல என்று சுட்டிக்காட்டுக்கிறார்.
”திக்கைத் தொழும் துருக்கர்” என்றும் “தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி / முகமலர் மூடி மறைத்தல்” என்றும் அவரெழுதிய வரிகளில் எல்லாம் உண்மை வழுப்பட்டுள்ளது. துருக்கி நாட்டினைச் சேர்ந்தவர்களே ”துர்க்” என்று சொல்லப்படுவர்.
(அவ்வினம் சார்ந்த இன்னொரு தனி நாடான “துர்க்மெனிஸ்தான்” 1991-இல் உருவானது). தமிழில் இவர்களைத் துருக்கர் என்றும் துருக்கியர் என்றும் சொல்லப்படும். துருக்கர்கள் பெரும்பான்மை முஸ்லிம்கள் என்பது உண்மையே. ஆனால் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள பல நாடுகள் உண்டு.
துருக்கர் என்பது சமயச் சொல் அல்ல, நாட்டையும் இனக்குழுவையும் குறிக்கும் சொல். முஸ்லிம்களைத் துருக்கர் என்றோ அதன் மரூஉவாகத் துலுக்கன் என்றோ குறிப்பிடுவது ’டருக்கி டவல்’ என்பதை ’முஸ்லிம் துண்டு’ என்று சொல்வது போன்றது.
பலதார மணத்தை இகழ்ந்துரைப்பதற்காகவே ரயில்வே ஸ்தானம் கதை எழுதப்படுகிறது. பலதார மணம் செய்து கொள்பவர்கள் ஒரு மனைவியைத் தவிர மற்றவர்களுக்கு மணவிலக்குக் கொடுத்து, அவர்கள் மற்றவர்களை மணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற யோசனை அந்தக் கதையில் வைக்கப்படுகிறது.
இந்த யோசனையை முகமது நபியே தனது கனவில் தோன்றிச் சொன்னதாக பாரதி எழுதுகிறார்."
"ரொம்பத் துணிச்சல்தான்.அந்த துணிச்சலை இஸ்லாமியர்கள் இந்துக் கோயில்களை இடித்ததை விமர்சிக்கப் பயன்படுத்தியிருக்கலாமே?"
பலதார மணம் கூடாது என்பதை வலியுறுத்தி எழுத அவர் ஓர் முஸ்லிமைக் கதாப்பாத்திரமாகப் புனைந்ததன் பின்னணியில் சமய அரசியல் இருக்கிறது என்று வாதிப்பார் உளர். இருக்கலாம். அது தனி ஆய்வு. அக்கதையில் முஸ்லிம் ஒருவன் உடன் பிறந்த சகோதரிகள் இருவரை மனைவியராகக் கொண்டிருந்தான்
என்று பாரதி எழுதியிருப்பார். உடன் பிறந்த சகோதரிகள் ஏக நேரத்தில் ஒரே ஆணுக்கு மனைவியராக இருக்க முடியாது என்பது இஸ்லாமியச் சட்டம் (மனைவி ஒருவர் இறந்து விட்டால் அதன் பின்னர் அப்பெண்ணின் உடன் பிறந்த சகோதரியை மணம் முடிக்க அனுமதி உண்டு).
இது பாரதியிடம் சுட்டிக் காட்டப்பட்டபோது தவறை ஏற்றுக்கொண்டு விளக்கம் எழுதுவார். ஆனால் அவர் தனது கதையில் திருத்தம் செய்யவில்லை. பொறுப்புள்ள ஓர் எழுத்தாளன் அதைத்தான் செய்ய வேண்டும். மாறாக, தனது கதையில் பிழை சுட்டிக் காட்டப்பட்டமைக்கு பாரதியார் எரிச்சல் அடைகிறார்.
”ஒரே ஒரு கடவுளை மட்டும் வணங்குவதாகக் கூறிக்கொள்ளும் முஸ்லிம்கள் மற்ற மதத்தவர்களைப் போல பல கடவுள் வழிபாடு செய்பவர்களாகவே உள்ளனர்” என்பது மாற்று மதத்தவர்களின் விமர்சனங்களில் முக்கியமானதாகும்.”
இவ்வாறு விமர்சனம் செய்வதற்குச் சில சான்றுகளையும் முன் வைக்கின்றனர்.
முஸ்லிம்கள் ஒரே கடவுளை வணங்குவதாகக் கூறிக் கொண்டாலும் உண்மையில் அவர்கள் மேற்குத் திசையைத் தான் வணங்குகின்றனர்.
எல்லாப் பள்ளிவாசல்களும் மேற்கு நோக்கித் தான் கட்டப்பட்டுள்ளன என்பது அவர்கள் எடுத்துக் காட்டும் சான்றுகளில் ஒன்றாகும்.
பாமர மக்கள் மட்டுமின்றி பண்டிதர்களும் கூட இவ்வாறு விமர்சனம் செய்துள்ளனர். பாரதியார் கூட முஸ்லிம்களைப் பற்றிக் குறிப்பிடும் போது
”திக்கை வணங்கும் துருக்கர்” எனப் பாடியுள்ளார்.
முஸ்லிம்கள் திசையை வணங்குவதாகக் கூறுவதே அடிப்படையில் தவறான வாதமாகும்.
மக்கா நகரில் கஃபா எனும் ஆலயம் இருக்கிறது. அந்த ஆலயத்தை நோக்கித் தொழ வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் கட்டளை. மேற்குத் திசையை நோக்கித் தொழ வேண்டும் என்று கட்டளையிடப்படவில்லை.
மக்காவில் அமைந்த கஃபா ஆலயம் இந்தியாவுக்கு மேற்கில் உள்ளதால் இந்திய முஸ்லிம்கள் மேற்கு நோக்கி ஏக இறைவனை வணங்குகின்றனர்.
உலக முஸ்லிம்கள் அனைவரும் மேற்கு நோக்கித் தொழ மாட்டார்கள். தொழவும் கூடாது.
மக்காவிற்கு மேற்கில் உள்ளவர்கள் கிழக்குத் திசை நோக்கியும்,
மக்காவுக்கு வடக்கே உள்ளவர்கள் தெற்குத் திசை நோக்கியும் மக்காவுக்கு தெற்கே உள்ளவர்கள் வடக்குத் திசை நோக்கியும் தொழுகின்றனர்.
உலக முஸ்லிம்கள் அனைவரும் மேற்குத் திசை நோக்கித் தொழுதால் தான் முஸ்லிம்கள் திசையை வணங்குகிறார்கள் என்ற விமர்சனத்தில் உண்மை இருக்க முடியும்.
கஃபா ஆலயம் நம்மைப் பாக்காது. நமக்கு எந்த உதவியும் செய்யும் ஆற்றல் அதற்குக் கிடையாது. நாம் செய்யும் தவறுகளுக்காக அந்த ஆலயத்தால் நம்மைத் தண்டிக்க முடியாது. மற்ற பொருட்களெல்லாம் அழிந்து போகும் போது அந்த ஆலயம் கூட அழிந்து போய்விடும் என்று தான்
முஸ்லிம்கள் நம்புகிறார்கள். அப்படித் தான் நம்ப வேண்டும்.
கஃபா ஆலயமே! நீ தான் எங்களின் துன்பங்களைத் துடைக்க வேண்டும் எங்கள் வாழ்வை வளப்படுத்த வேண்டும் என்று இஸ்லாத்தைப் பற்றி சிறிதளவு ஞானமுள்ள முஸ்லிம்கள் கூட நினைப்பதில்லை. நினைக்கவும் கூடாது.
கஃபா எனும் ஆலயத்தை நோக்கித் தொழுமாறு கட்டளையிடும் திருக்குர்ஆன் அக்கட்டளையுடன் முக்கிய அறிவுரையையும் சேர்த்துக் கூறுகிறது.
கஃபாவை நோக்கும் போது கஃபா தான் கடவுள் என்றோ கஃபாவுக்குள் தான் கடவுள் இருக்கிறான் என்றோ எண்ணி விடக் கூடாது. என்று தெளிவாக அறிவுறுத்தி விட்டுத்தான் கஃபாவை நோக்குமாறு குர்ஆன் கட்டளையிட்டுள்ளது.
கஃபா இருக்கும் திசையையும் வணங்கவில்லை. மாறாக கடவுளின் கட்டளைப்படி கஃபாவை நோக்கியவர்களாக அந்த ஒரு கடவுளைத் தான் வணங்குகிறார்கள்.
கஃபாவை நோக்கி முஸ்லிம்கள் அல்லாஹ்வைத் தான் வணங்குகிறார்கள் என்பதை தொழுகையில் கூறப்படும் ஜெபங்களிலிருந்தும் உறுதி செய்யலாம்.
பைத்துல் முகத்திஸ் இதனை பைதுல் மக்திஸ் எனவும் குறிப்பிடுவது வழக்கம். இதன் கருத்து தூய இல்லம், புனித இல்லம் என்பதாகும். இங்கு நபி ஸுலைமான் /தானியல் ஹீப்ரு மொழியில் 'பெத்ஹம்மிக்தாஷ்' எனப் பெயரிட்டு அழைத்தனர்.
அப்பெயரே அரபு மொழியில் பைத்துல் முகத்தஸ் என ஆயிற்று. காலப்போக்கில் இந்தப் புனித இல்லம் அமைந்திருந்த முழுப் பிரதேசமும் இப்பெயராலேயே அழைக்கப்படலாயிற்று. பொதுவாக இந்த மஸ்ஜிதை அல் அக்ஸா அல்லது மஸ்ஜிதுல் அக்ஸா எனவும் அழைப்பர்.
பிர்அவ்னின் துன்பத்திலிருந்து யூதர்களை மீட்டு அங்கு குடியேறினார்கள். பழைய அஸ்திவாரத்தின் (பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலுள்ள ஒரு நபியினால் கட்டப்பட்ட பள்ளியின்) மீது ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். அதிலே குர்ஆனில் கூறப்பட்ட
'தாபூத்' என்ற பெட்டியையும், அவர்களுக்கு அருளப்பட்ட கட்டளைகளையும் வைத்துப் பாதுகாத்தார்கள். மிகவும் புனிதமாகக் கருதப்பட்ட (குர்பான் கல்) பலிபீடமும் அங்கு இருந்தது. அதன் திசையிலேயே யூதர்களின் வணக்கம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
•பழைய ஜெருசலேம் உலகப் பாரம்பரியச் சொத்தாக (World Heritage) வகைப்படுத்தப்பட்டுள்ளது. அர்மீனியக் குடியிருப்பு, கிறித்தவக் குடியிருப்பு, யூத குடியிருப்பு, முஸ்லிம் குடியிருப்பு என நான்கு குடியிருப்புகளை உள்ளடக்கியது பழைய ஜெருசலேம்.
•ஹீப்ரு மொழியில் 'யெருஷ்லாயீம்' என்றும், அரபியில் 'அல்-குதஸ்' என்றும் அழைக்கப்படும் ஜெருசலேம் நகரம் உலகின் பழமையான நகரங்களில் ஒன்று. அல் குதஸ் என்ற அரபியவார்த்தையின் பொருள் அமைதியின் உறைவிடம்.
•இஸ்ரேல்-அரபு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனைகளில் பிரதானமாக விளங்குகிறது ஜெருசலேம். அதற்கு காரணம் யூதம், இஸ்லாம் மற்றும் கிறித்துவ மதத்தினர் இந்த நகரை புனித நகராக கருதுவதே.
•பைபிளின் பழைய ஏற்பாட்டின்படி, ஏறக்குறைய கி.மு. 1000 ஆண்டுகளில் இஸ்ரேல் மன்னர் தாவீது இஸ்ரேல் ஐக்கிய ராஜ்ஜியத்தின் தலைநகராக ஜெருசலேம் நகரை நிறுவினார். தாவீது மன்னரின் மகன் சாலமன் ஜெருசலேமில் புகழ்வாய்ந்த ஆலயம் ஒன்றை கட்டமைத்தார். எனவே, இஸ்ரேலுக்கு ஜெருசலேம் புனித நகராக மாறியது.
மூஸா (மோசஸ்) அவர்களுக்குப் பின் ஹாரூன் அவர்கள் இப்பள்ளிவாசலைப் பொறுப்பேற்றுப் பாதுகாத்து வந்தார்கள். மூஸா அற்புத (அஸாவும்) கைத்தடியும் அப்பெட்டியில் வைக்கப்பட்டது. இப்போது அதன் புனிதம் அதிகப் படுத்தப்பட்டு விட்டது. ஹாருனுக்கு பின் யூதர்கள் பள்ளிவாசலைப் பாழடைய விட்டனர்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ம.பொ.சி. தன் வாழ்நாள் முழுவதும் இந்தியத் தேசியத்தையே தூக்கிப் பிடித்தார். செங்கோல் இதழில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15, ஜனவரி 26, அக்டோபர் 2, காந்தி பிறந்த நாள் திலகர் நாள் (6-8-62 செங்கோல்) தீபாவளி வாழ்த்து கூறும்போது கூட
“நாம் தமிழர்களாக மட்டுமல்லாமல் இந்துக்களாகவும் இந்தியர்களாகவும் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது” (செங்கோல் 24-10-65)
"சித்திரை முதல் நாளைத்தான் ஆண்டு பிறந்த நாளாகக் கொண்டாட வேண்டுமாம். பஞ்சாகத்துக்கு மாற்றான தைத்திங்கள் முதல் நாள் ஆண்டு புத்தாண்டு தேவையில்லை. அரசின் வரவு செலவுத் திட்டத்தை இந்தச் சித்திரையிலே அரசு தொடங்கலாம். 60 ஆண்டு சுழற்சி முறையும் நன்றாகத்தான் உள்ளது." (செங்கோல் 18-4-65)
1782 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது மைசூர் போரில் ஹைதர் அலி இறந்து விடவே அவருடைய மகன் திப்பு சுல்தான் போருக்கு பொறுப்பேற்று போரில் வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டான்.
திப்பு சுல்தானின் ஆட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கப் பட்டிணத்தில் அதுவும் திப்புவின் அரண்மனைக்கு 300 அடி தொலைவில் தான் ஆதி சங்கரனால் தோற்றுவிக்கப்பட்ட சிருங்கேரி சாரதா பீடம் என் அழைக்கப்படும் சங்கர மடம் உள்ளது.
திப்பு சுல்தானும் தன் தந்தை அய்தர் அலியைப் போலவே சிருங்கேரி சங்கர மடத்தினிடம் நல்லுறவு கொண்டிருந்தார் என்று அவர் சங்கர மடத்திற்கு எழுதிய கடிதங்களிலிருந்தும், சங்கர மடத்திலிருந்து திப்புவிற்கு எழுதப்பட்ட பதில் கடிதங்களிலிருந்தும் அறிந்து கொள்ள முடிகிறது.
'கிறிஸ்தவர்கள்-முஸ்லிம்கள் தவிர்த்த இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருமே இந்துக்கள் ஆவார்கள்'. இதன்படி நாத்திகன், பகுத்தறிவுவாதி, பரதேசி முதலிய சகலரும் இந்துக்கள் ஆகி சூத்திரர், பார்ப்பானின் தாசி மகன் என்று ஆகிவிடுகிறார்கள்.
"தமிழ் இந்து" என்று பேசிவரும் திரு.பெ.மணியரசன் அண்மையில் ஒரு நேர்காணலில், "பெரியாரும் பெரியாருடையத் தொண்டர்களும் இந்து மதத்தில் தான் இருக்கிறார்கள், மதத்தை ஒழிக்க முடியாது என்று பெரியாரே ஒப்புக்கொண்டு விட்டார், இந்து மதத்தை எதிர்க்கிறோம் என்று பொய்யாகச் சொல்லிவிட்டு
பெரியாரியலாளர்கள் இந்து மதத்திலேயே இருக்கும்போது நாங்கள் நேர்மையாக தமிழ் இந்து என்று அடையாளப்படுத்துவதில் என்ன தவறு?" என்று நம்மை நோக்கிக் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதைப் பற்றிய உங்களுடையக் கருத்து.
‘இந்து’வில் என்ன தமிழ் இந்து, ஆரிய இந்து?
- சுப.வீரபாண்டியன்
தங்களைத் தமிழ் இந்துக்கள் என்று அறிவித்துக் கொள்ள இன்று சிலர் முடிவெடுத்துள்ளனர். அது அவர்கள் விருப்பமும், உரிமையும் சார்ந்தது. ஆனால் அப்படி அறிவித்துக் கொள்வதற்கு முன்,
“திராவிடம் என்ற சொல் சங்க இலக்கியத்தில் இருக்கிறதா?” என்று கேட்ட அவர்கள், இந்து என்ற சொல் சங்க இலக்கியத்தில் எத்தனை இடங்களில் இருக்கிறது என்று சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்.
brahmin childrenகிருத்துவர்களும், இஸ்லாமியர்களும் தங்களுக்குள் ஒருங்கிணைப்புப் பணிகளை செய்து
கொண்டிருக்கிறார்களாம். எனவே சைவர்கள், வைணவர்கள் எல்லோரும் இந்துக்கள், அதாவது தமிழ் இந்துக்கள் என்ற பெயரில் இணைய வேண்டுமாம். எனவே இந்த ஒற்றுமை முயற்சி, கிறித்துவ, இஸ்லாமியர்களுக்கு எதிரானது போலிருக்கிறது. அதைத்தான் ஆர்.எஸ்.எஸ்., பாஜக ஆகியனவும் முன்வைக்கின்றன.
@tamizhprasad இப்படித்தான் ஒரு நண்பர் திப்பு சுல்தான் -கொடவர்கள் கூர்க் -அவரின் போராட்டம் பற்றி பதிவு போட சொன்னார் . நானும் மைசூர் ஆர்காலஜிகல் சர்வே படி பதிவிட்டேன் . கர்நாடாகாவிலிருந்து இருபதுக்கும் மேற்பட்டோர் வந்து
டிவிட்டரில் விமர்சனம் செய்ய நான் பதிலுக்கு ஹிந்தியில் அர்ச்சனை செய்ய அது டிவிட்டர் வயோலேசனில் மாட்டி தொடர்ந்து போன் மற்றும் 24 மணி நேரம் பதிவு தடை .