வள்ளலார் மறைந்து 145 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக தமிழ்நாட்டு அரசாங்கம் அவரை கெளரவித்து உள்ளது! முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வள்ளலார் பிறந்த நாளான அக்டோபர் ஐந்தாம் நாள் இனி ஆண்டுதோறும் “தனிப்பெருங்கருணை நாள்”
எனக் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்து உள்ளார்! வள்ளலாருக்கு வடலூரில் 72 ஏக்கர் பரப்பளவில் பெரிய மணிமண்டபம் கட்டும் முயற்சியையும் இந்த அரசு மேற் கொண்டு வருகிறது! வள்ளலார் சென்னை தங்கசாலையில் வாழ்ந்த இடத்திற்கு அண்மையில் அமைச்சர் சேகர்பாபு சென்ற போது சொன்னார்.
முதன்முறையாக வள்ளலார் இல்லம் வந்த அமைச்சர் நான் தான்! இது மதவாத பாஜக அரசை எதிர்கொள்ள ஸ்டாலின் கை கொள்ளும் யுத்த தந்திரங்களில் ஒன்றாகும்!
ஸ்டாலின் அமைதியாக செய்ய வேண்டிய நற்காரியங்களை செய்து செயல்பாட்டாளராக விளங்குகிறார்!
”சாதியும்,மதமும்,சமயமும் தவிர்த்தேன்
சாத்திரக் குப்பையும் தவிர்த்தேன்!”
என்றார்!
மக்கள் பக்தியின் பெயரால், கடவுளின் பெயரால், சடங்குகளின் பெயரால் மேன்மேலும் ஏமாற்றப்பட்டு துன்பத்திற்கு ஆளாவதை காணச் சகியாதவராக பொங்கி எழுந்தார்!
”மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம்
வழிதுறை தெரியாமல் மண் மூடிப் போக!”
என்று ஆவேசமாகப் பாடினார்!
முயன்றுலகில் பயன் அடையா மூடமதமனைத்தும்
முடுகி அழிந்திடவும் ஒரு மோசமும் இல்லாததே!”
மதங்கள் அனைத்தும் அழிந்து போனாலும் அதனால் ஒரு மோசமும் ஏற்படப் போவதில்லை என்று கூறுமளவுக்கு ஒரு புரட்சியாளராகத் திகழ்ந்தவர் வள்ளலார்!
திருவருட்பாக்கள் எளிய முறையில் படித்தவர்களை பற்றி ஈர்க்கும் வகையில் இருந்தன! குறிப்பாக படிக்காத பாமர மக்கள் எளிதில் புரிந்து பாடத் தக்கவையாக இருந்தன! சமஸ்கிருத மந்திரங்கள் கோலோச்சிய இடங்களில்,
தேவாரமும், திருவாசகமும் கொலுவீற்று இருந்த கோவில்களில் மக்கள் வள்ளலாரின் பாடல்களை நெஞ்சுருகப் பாடியதே சனாதவாதிகளுக்கும், ஆன்மீக ஆதிக்கத்தில் திளைத்தவர்களுக்கும் எரிச்சல் தந்தது.
பெரியார் அவர்கள், ”நான் சொன்னால் ஏற்கமாட்டீர்கள்! இதோ தூய துறவி இராமலிங்க அடிகளார் சொல்கிறார். சிந்தித்து பாருங்கள்” என்றார்! அறிஞர் அண்ணா அவர்களும் வள்ளலார் குறித்து சிறிய தனி நூல் ஒன்று எழுதி வள்ளலாரின் புரட்சிக் கருத்துகளை திராவிட இயக்க வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டார்!
ஆனால்,வள்ளலார் நாத்திகத்தை ஏற்கவில்லை! அதே சமயம் வள்ளலாரின் பழுத்த ஆன்மீகப் பார்வை உருவ வழிபாடுகள்,சடங்குகள்,வேதங்கள்,ஆகமங்கள் ஆகிய அனைத்துக்கும் எதிரானதாக இருந்தது! இறைவனை ஜோதி வடிவில் உணரச் சொன்னார்! கருணையுடன் எளியோருக்கு செய்யும் தொண்டே இறை தொண்டாகும் என்றார்.
சனாதனிகள் வள்ளலாரை பெரும் எதிரியாக பாவித்தனர்! அவர்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில் எந்தத் திட்டமிடலும் இல்லாமல் இருந்தது தான் அவர் செய்த பெரும் பிழையாகும்! அவருக்கு எதிரான பரப்புரைகளுக்கு மறுப்புரை வழங்கும் ஒரு படையை அவர் உருவாக்கிக் கொள்ளவில்லை!
”வள்ளலார் பாடியவை அருட்பாக்கள் அல்ல மருட்பாக்கள்’’ என்றெல்லாம் நிறுவ முயன்ற சனாதனக் கூட்டத்தினர் ‘திருவருட்பா தூஷன பரிகாரம்’,’மருட்பா’ உள்ளிட்ட 12 நூல்களை எழுதி அவருக்கு எதிராக வழக்குகள் தொடுத்தும், மக்களை திரட்டியும் அணி சேர்க்க முயன்றனர்!
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நிறுவிய வள்ளலார் , சத்திய தருமச்சாலையையும், சித்தி வளாகத்தையும் உருவாக்கிவிட்டு, ஆன்மீக உணர்விலும், மக்கள் தொண்டிலும் மூழ்கி இருந்தாரேயன்றி இந்த எதிர்ப்புகளுக்கு சரியாக எதிர்வினையாற்றவில்லை!
மநுமுறை கண்ட வாசகத்தில் வள்ளலார் தனக்கு சனாதனிகள் இழைத்த துரோகங்களை மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார்!
“நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ..”
எனத் தொடரும் இந்த பாடல் முழுவதுமே அவர் பட்ட துன்பத்தையும், அவர் காலத்தில் சமூகத்தில் நிலவிய அநீதிகளையும் அடையாளப்படுத்துகின்றன!
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நிறுவிய வள்ளலார் , சத்திய தருமச்சாலையையும், சித்தி வளாகத்தையும் உருவாக்கிவிட்டு, ஆன்மீக உணர்விலும், மக்கள் தொண்டிலும் மூழ்கி இருந்தாரேயன்றி இந்த எதிர்ப்புகளுக்கு சரியாக எதிர்வினையாற்றவில்லை!
மநுமுறை கண்ட வாசகத்தில் வள்ளலார் தனக்கு சனாதனிகள் இழைத்த துரோகங்களை மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார்!
“நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ..”
எனத் தொடரும் இந்த பாடல் முழுவதுமே அவர் பட்ட துன்பத்தையும், அவர் காலத்தில் சமூகத்தில் நிலவிய அநீதிகளையும் அடையாளப்படுத்துகின்றன!
வள்ளலாரின் இறுதிகால பாடல்கள், வாழ்க்கை பதிவுகள் ஆகியவை அவர் சுழன்றடித்த வைதீக சூறாவளியால் கடும் இன்னல்களுக்கு ஆளானதை உறுதிபடுத்துகிறது. அவரது மரணத்தை கொலை என்றே திருவிகவும், மறைமலை அடிகளாரும் உறுதிபடக் கூறி வந்தனர்!
”அவர் தற்கொலை செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளார் என்பதை புறம் தள்ள முடியாது” என பேராசிரியர் வீ.அரசு அந்தக் கால பத்திரிகை பதிவுகளை ஆராய்ந்து எழுதியுள்ளார்!
1874ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி நள்ளிரவில் தனது அறையில் உள்ளே சென்று தாளிட்டுக் கொண்டவர். திரும்பி வரவில்லை. முன்னதாக தன் அறையின் உள்ளே இருந்த விளக்கை வெளியே கொண்டு வந்து வைத்த அவர், தனது சீடர்களிடம் யாரும் அறையைத் திறக்க வேண்டாம் என்று அருளிவிட்டு உள்ளே சென்றார்.
அவர் ஜோதி யாக ஆனாரா, காற்றிலே கலந்தாரா என்பது தெரியாவிட்டாலும், அவர் மரணத்தை வென்ற மாபெரும் ஞானி என்பதை உலகம் உணர்ந்தது.
தென்னாற்காடு கலெக்டர் ஒரு டாக்டருட ன் சித்திவளாகம் விரை ந்தார். உடல் சிதைந்து நாற்றம் எடுக்கும் என்று நம்பிய டாக்டர், அறைக்குள் நுழைந்தவுடன் திகைத்தார். பச்சைக் கற்பூரமணம் கமழ்ந்தது! அங்கிருந்த சீடர்களிடம் வள்ள லார் பற்றி நன்கு விசாரித்து அறிந்த கலெக்டர்,
நாத்திக முகாம்களாலும் கூட வள்ளலாரின் குரல் எதிரொலிக்கப்படுவது அவருடைய பேரறிவின் அடையாளமாகும். எதிரிகளால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார் என்றும் ஒளியோடு ஒளியாய்க் கரைந்தார் என்றும் வள்ளலாரை வைத்தும் புனைகதைகள் எழுதப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.
வள்ளலார் காலத்தில் வாழ்ந்து, அவருடனே 25 ஆண்டுகள் பயணித்த அவருடைய தீவிர சீடரான தொழூவூர் வேலாயுத முதலியார், 1882-ல் சென்னை தியாபிசிகல் சொசைட்டிக்கு வள்ளலார் தொடர்பாகக் கொடுத்திருக்கும் வாக்குமூலத்தில்...
”நான், தென்னிந்தியாவில் புகழ் வாய்ந்த யோகியரான அருட்பிரகாச வள்ளலார் என்னும் சிதம்பரம் இராமலிங்க பிள்ளையவர்களின் சீடன்.
மகாத்மாக்கள் இருக்கிறார்களா என்பதிலும் அவர்களது விசேஹ கட்டளைப்படியே பிரம்மஞான சபை ஏற்படுத்தப்பட்டதா என்பதிலும் ஆங்கிலேயரும் இந்தியருள் சிலரும் ஐயுறுவதாகத் தெரிகிறது.
தாங்கள் பெரிதும் உழைத்து மகாத்மாக்களைப் பற்றி எழுதி வரும் நூலைப் பற்றிக் கேள்வியுற்றேன். எனது குருவைப் பற்றிய சில செய்திகளை வெளிப்படுத்த விரும்புகிறேன்” என்று தொடங்கி.....
அவர் தனது 50 ஆம் வயதை அடைந்த போது (1873) இவ்வுலகைத் தாம் நீப்பதற்கேற்பத் தமது சீடர்களைப் பக்குவப்படுத்தத் தொடங்கினார். தாம் சமாதி கூடுவதற்கு எண்ணியிருப்பதையும் தெரிவித்தார்.1873 ஆம் ஆண்டின் முற்பாதியில் மனித சகோதரத்துவத்தை மிகவும் வற்புறுத்திப் போதித்து வந்தார்.
அவ்வாண்டு இறுதி மூன்று மாதத்தில் பேசுவதையும் உபதேசிப்பதையும் அறவே விடுத்து இடையறா மெளனத்தில் ஆழ்ந்தார். 1874 ஜனவரி மாதம் 30- ஆம் தேதி, நாங்கள் மேட்டுக்குப்பத்தில் எங்கள் குருவைக் கடைசியாகப் பார்த்தோம்.
சீடர்களிடம் அன்போடு விடைபெற்ற பின், ஏற்பாடு செய்திருந்த ஒரு சிறு கட்டிடத்தின் தனி அறை ஒன்றில் நுழைந்து, விரிப்பில் சயனித்துக் கொண்டார். அவரது கட்டளைப் படி அறைக்கதவு பூட்டப்பட்டது.
இருந்த ஒரே துவாரமும் சுவர் வைத்து அடைக்கப்பட்டது.’என்று வள்ளாரின் கடைசி நிமிடங்கள் குறித்து அவர் விவரித்திருக்கிறார். அன்பர்களுக்கு வலி தரும் முடிவு அது.
(அக்டோபர் 5, 1823 – சனவரி 30, 1874)
காணாமல்போனது-மேட்டுக்குப்பம், வடலூர், கடலூர் மாவட்டம்,
ஆறுமுக நாவலர் – வடலூர் ராமலிங்க வள்ளலார்
வடலூர் ராமலிங்க சுவாமிகள் காணாமல் போய் அல்லது மர்மமாக இறந்து ஐந்து வருடங்களுக்கு பின்பாகத்தான் ஆறுமுக நாவலர் காலமானார்.
வடலூர் ராமலிங்க வள்ளலாரை கடுமையாக எதிர்த்து அவர் மீது பொய் வழக்கு போட்டு தோற்றுப்போனவர் ஆறுமுக நாவலர்!
நாவலரின் பின்பலமாக நின்றவர்கள் வைதீகர்கள் .
இராமலிங்க வள்ளலார் மீது நிகழ்த்தப்பட்ட கொடிய தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் பற்றி இதுவரை ஒருவரும் கேள்விகள் எழுப்பியதில்லை.
எந்த ஆத்மீகவாதிகளும் சரி எந்த வைதீக பெருமான்களும் சரி வள்ளலாரின் மறைவு பற்றி வாயே திறக்கவில்லை என்று தெரிகிறது .
எனவே இவர்கள் சந்தேகத்திற்கு உரியவர்கள்தான்.
தமிழ்நாடு முழுவதும் அறிந்த ஒரு மாபெரும் ஆத்மீகவாதியின் மர்ம மரணம் பற்றி ஒரு ஆத்மீக பெருந்தகைகளும் சந்தேக கேள்வி எழுப்பாமை அவர்களும் கூட்டு குற்றவாளிகள்தானோ என்ற சந்தேகத்திற்கு இடம் அளிக்கிறது.
அதிலும் குறிப்பாக ஆறுமுக நாவலர் இந்த குற்றச்சாட்டில் இருந்து தப்ப முடியாது.
மிகப்பெரும் தர்க்கீக வாதங்களும் வழக்கும் இவர்கள் இருவரிடையே இருந்திருக்கிறது.
வள்ளலார் மீது அளவற்ற கோபத்தில் இருந்திருக்கிறார் ஆறுமுக நாவலர் .
வள்ளலாரின் இறப்பு என்பது நாவலரின் கோட்பாட்டு ரீதியான ஒரு எதிரியின் மறைவாகவே இருந்திருக்கிறது
அப்படிப்பட்ட நிலையில் வள்ளலாரின் இறப்பு மர்மமான முறையில் நிகழ்ந்துள்ளது
இது பற்றி நாவலர் சத்தம் போடாமல் மௌனமாகவே இருந்து விட்டார் என்னும் பொழுது சந்தேகம் வருமா வராதா?
வடலூர் ராமலிங்க சுவாமிகள் மர்ம மரணம் சனவரி 30, 1874
ஆறுமுக நாவலர் இறப்பு : திசம்பர் 5, 1879
ஆறுமுக நாவலரின் தமிழக பயணங்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பு ஆறுமுக நாவலர் பாடநூல்கள் அச்சிடுவதற்கு அச்சியந்திரம் வாங்குவதற்காக நல்லூர் சதாசிவம்பிள்ளையுடன்
1849 ஆடி மாதம் சென்னை சென்றார். அங்கு திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவப்பிரசங்கம் செய்து தமது புலமையை வெளிப்படுத்தி நாவலர் பட்டத்தைப் பெற்றார்.
சென்னையில் சிலகாலமிருந்து சூடாமணி நிகண்டுரையும் சௌந்தரியலங்கரி உரையும் அச்சிற் பதித்தபின் ஓர் அச்சியந்திரத்துடன் யாழ்ப்பாணம் திரும்பினார்.
சென்னையில் திருவாசகம், திருக்கோவையார் நூல்களை 1859 வைகாசி மாதம் வெளியிட்டார். பெரியதொரு அச்சியந்திரத்தை விலைக்கு வாங்கி,
சென்னை தங்கசாலைத் தெருவில் வித்தியானுபாலன இயந்திரசாலை என்ற அச்சகம் நிறுவிப் பல நூல்களையும் அச்சிட்டார். சென்னையிலும் திருவாவடுதுறை மற்றும் திருநாகைக்கோராணம் ஆகிய இடங்களில் தங்கி சைவப்பிரசங்கங்கள் செய்தபின் 1862 பங்குனியில் யாழ்ப்பாணம் திரும்பினார்.
1863 மார்கழியில் மீண்டும் தமிழகம் சென்றார். அங்கு இராமநாதபுர சமஸ்தானத்தில் பிரசங்கம் செய்தார். அங்கிருந்து மதுரை சென்று மீனாட்சியம்மை சந்நிதானத்திலே பிரசங்கித்து மீனாட்சிக்கு அணிவிக்கப்பெற்ற பரிவட்டமும் பூமாலையும் அணிவிக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டார்.
குன்றக்குடியிலுள்ள திருவண்ணாமை ஆதீனத்தில் அவர் செய்த பிரசங்கத்தை மெச்சி நாவலரை பல்லக்கில் ஏற்றித் தம்பிரான்கள், ஓதுவார்கள் சூழ்ந்து வர சகல விருதுகள், மங்கல வாத்தியங்களுடன் பட்டணப் பிரவேசம் செய்வித்தார்கள்.
அங்கிருந்து திருப்பெருந்துறை, திருப்பள்ளிருக்குவேளூர், சீர்காழி ஆகிய தலங்களை வணங்கிச் சிதம்பரம் சேர்ந்தார்.அங்கு 1864 ஐப்பசியில் சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவினார்
1866 மார்கழி மாதம் சென்னை திரும்பி சைவப்பிரசங்கங்கள் செய்வதிலும் நூல்கள் அச்சிட்டு வெளியிடுவதிலும் நாவலர் ஈடுபட்டார்.
1869 ஆனியில் மீண்டும் சிதம்பரம் சென்றார். பின் தருமபுரி, திருவிடைமருதூர், திருவேட்டக்குடி, காரைக்கால், கோடிக்கரை ஆகிய தலங்களைத் தரிசித்த
பின்னர் 1870 பங்குனியில் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார்.
பிற்சேர்க்கை : வடலூர் ராமலிங்க சுவாமிகள் சனவரி 30, 1874 அன்று மர்மமான முறையில் காணாமல் போனார்! வள்ளலார் கொலைசெய்ப்பட்டு இருக்கலாம் என்றுதான் கருதவேண்டும் .
பார்ப்பனீயம் தங்கள் சித்தாந்தத்திற்கு சவாலாக இருப்பவர்களை கொலைசெய்வது என்பது அவர்களின் பாரம்பரிய வரலாறாகும் நந்தன் ஜோதியில் கலந்தார் அதாவது உயிரோடு கொழுத்தப்பட்டார் .
அவர்களின் சம்பந்தரே தமிழை உயர்த்தி பிடித்ததால் அவரும் அவரின் திருமணத்திற்கு வந்தோரும் கூண்டோடு ஜோதியில் ஐக்கியமாகினர் இந்த வரிசையில் இன்னும் பலர் உள்ளனர் .
இற்றைக்கு சரியாக நூற்று நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு வள்ளலாரும் உருத்தெரியாமல் உலகை விட்டு அகற்றப்பட்டார் வள்ளலார்
காற்றோடு கலந்து விட்டார் என்று கதை அழைக்கப்பட்டது இன்றுவரை இந்த கதைதான் வெற்றிகரமாக பரப்புரை செய்யப்படுகிறது.
வள்ளலார் காற்றோடு கலந்த கதையின் சந்தர்ப்ப சூழ்நிலையின் தன்மையை அவதானித்தால் இது ஒரு கட்டுக்கதை என்று இலகுவாக கண்டுபிடித்து விடமுடியும்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
"The Spur Tank Meeting" டி .எம் .நாயர்.
திராவிட மக்களின் போர்க்குரல்
பறையரைவிட்டு இரண்டு, மூன்று பார்ப்பனர்களை அடிக்கும்படி தூண்டியதாகப் பத்திரிகை களில் வாசித்தோம். இராஜாங்க விஷயமான அபிப்ராய பேதமிருந்து இதை சாதி பேதச் சண்டையுடன் முடிச்சுப் போட்டு அடிதடி வரை ....
டாக்டர் தரவாட் மாதவன் நாயர் என்ற முழுப் பெயர் கொண்ட டாக்டர் டி.எம். நாயர் தென்னகத்தின் புகழ்பூத்த இந்திய அரசியல்வாதி. சென்னை மாகாணத்தில் திராவிட இயக்கத்தின் முன்னோடி தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை (நீதிக்கட்சி) சர்.பிட்டி. தியாக ராய செட்டியார்,
டாக்டர் சி. நடேச முதலியார் ஆகியோருடன் இணைந்து தோற்று வித்தவர். அச்சங்கத்திற்கான விதிகளை யும் கொள்கை நெறிகளையும் வடித்துத் தந்தவர். மிகத் திறமையும் அறிவாற்ற லும் அஞ்சாமையும் நிறைந்த ஒப்பற்ற தலைவர் டாக்டர் டி.எம். நாயர்.
பெண்ணுரிமை குரல்கள் ,பெண்களுக்கு நடக்கும் அவலங்களுக்கு டிவிட்டரில் முதல் குரல்கள் ,அண்ணாமலை குஷ்பூவை பேசினால் கூட குஷ்புக்கு டிவிட் போட்டு என்னக்கா ஆறுதல் சொல்வது போல் வசன நடை ,
ஒரு முறை குஷ்புவே இந்த அம்மணியை போம்மான்னு சொன்னதெல்லாம் பதிவில் உள்ளது .
தன்னை ஒருவர் டிவிட்டரில் எதிர்த்து பேசினால் அவற் பணிபுரியும் கம்பெனிக்கே சென்று மிரட்டுவது ,அதே நிறுவனத்திலிருந்து வேலையை விட்டு தூக்குவது ,கொலை ,
கொள்ளை பலானா பெரிய மேட்டர்கள் தலையீடு ,டிவிட்டர் பிரபலம் என்ற பெயரில் உல்லாச வாழ்க்கை
ம.பொ.சி. தன் வாழ்நாள் முழுவதும் இந்தியத் தேசியத்தையே தூக்கிப் பிடித்தார். செங்கோல் இதழில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15, ஜனவரி 26, அக்டோபர் 2, காந்தி பிறந்த நாள் திலகர் நாள் (6-8-62 செங்கோல்) தீபாவளி வாழ்த்து கூறும்போது கூட
“நாம் தமிழர்களாக மட்டுமல்லாமல் இந்துக்களாகவும் இந்தியர்களாகவும் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது” (செங்கோல் 24-10-65)
"சித்திரை முதல் நாளைத்தான் ஆண்டு பிறந்த நாளாகக் கொண்டாட வேண்டுமாம். பஞ்சாகத்துக்கு மாற்றான தைத்திங்கள் முதல் நாள் ஆண்டு புத்தாண்டு தேவையில்லை. அரசின் வரவு செலவுத் திட்டத்தை இந்தச் சித்திரையிலே அரசு தொடங்கலாம். 60 ஆண்டு சுழற்சி முறையும் நன்றாகத்தான் உள்ளது." (செங்கோல் 18-4-65)
1782 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது மைசூர் போரில் ஹைதர் அலி இறந்து விடவே அவருடைய மகன் திப்பு சுல்தான் போருக்கு பொறுப்பேற்று போரில் வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டான்.
திப்பு சுல்தானின் ஆட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கப் பட்டிணத்தில் அதுவும் திப்புவின் அரண்மனைக்கு 300 அடி தொலைவில் தான் ஆதி சங்கரனால் தோற்றுவிக்கப்பட்ட சிருங்கேரி சாரதா பீடம் என் அழைக்கப்படும் சங்கர மடம் உள்ளது.
திப்பு சுல்தானும் தன் தந்தை அய்தர் அலியைப் போலவே சிருங்கேரி சங்கர மடத்தினிடம் நல்லுறவு கொண்டிருந்தார் என்று அவர் சங்கர மடத்திற்கு எழுதிய கடிதங்களிலிருந்தும், சங்கர மடத்திலிருந்து திப்புவிற்கு எழுதப்பட்ட பதில் கடிதங்களிலிருந்தும் அறிந்து கொள்ள முடிகிறது.
'கிறிஸ்தவர்கள்-முஸ்லிம்கள் தவிர்த்த இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருமே இந்துக்கள் ஆவார்கள்'. இதன்படி நாத்திகன், பகுத்தறிவுவாதி, பரதேசி முதலிய சகலரும் இந்துக்கள் ஆகி சூத்திரர், பார்ப்பானின் தாசி மகன் என்று ஆகிவிடுகிறார்கள்.
"தமிழ் இந்து" என்று பேசிவரும் திரு.பெ.மணியரசன் அண்மையில் ஒரு நேர்காணலில், "பெரியாரும் பெரியாருடையத் தொண்டர்களும் இந்து மதத்தில் தான் இருக்கிறார்கள், மதத்தை ஒழிக்க முடியாது என்று பெரியாரே ஒப்புக்கொண்டு விட்டார், இந்து மதத்தை எதிர்க்கிறோம் என்று பொய்யாகச் சொல்லிவிட்டு
பெரியாரியலாளர்கள் இந்து மதத்திலேயே இருக்கும்போது நாங்கள் நேர்மையாக தமிழ் இந்து என்று அடையாளப்படுத்துவதில் என்ன தவறு?" என்று நம்மை நோக்கிக் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதைப் பற்றிய உங்களுடையக் கருத்து.