ஒரே புகை மூட்டம்..... புகையைத் தாண்டி.... கேமரா போகுது.... அங்கே.....
"எமலோகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது" என்ற பெயர்ப் பலகை..... அப்படியே கேமராவை.... ரைட்ல திருப்பி.... முன்னே போனால்.....
ஒரு பெரிய அரியணையில்.... எமதர்ம ராஜா... ரொம்ப கோபமா இருக்கார்.....
சித்ரகுப்தா.... ஏன் இவ்வளவு நேரம்? இந்த மானிடப் பதர் செய்த வினைகளின் படி.... இவனுக்கு சொர்க்கமா.... அல்லது.... நரகமா.... சீக்கிரம் சொல்லேன்யா....
சித்ரகுப்தன் ரொம்ப பதட்டத்துடன்... கையில் சுவடிகளை... புரட்டி புரட்டி பார்த்து கொண்டு இருந்தான்...
என்ன ஆச்சு.... சித்ரகுப்தா!!! ஏதேனும் குளறுபடியா????
இல்லை ராஜா.... பூலோகத்தில் ஶ்ரீனி என்று அழைக்கப்பட்ட இந்த மானிடனுக்கு.... net effectஆ..... சொர்க்கம் தான்......
வெற்றி..... வெற்றி..... (சினிமாவில் ஹீரோவோட முதல் வசனம் positive ஆகத்தான் இருக்கணும் என்பது சினிமா சென்டிமென்ட்)
கேமரா ஒரு semi circle வளைவு திரும்பி..... நம்ப ஹீரோவின்.... கால் பெருவிரலில் ஆரம்பித்து...
காலின் ஐந்து விரல்கள்.... பாதம்.... கணுக்கால்.... இப்படியே மெதுவாக சென்று.... நம்ப சீனியின் முகத்தை காட்டும் போது.... சீனி மறுபடியும்... வெற்றி..... வெற்றி..... என்று முழங்கினான்....
Backgroundல சீனியின் மைண்ட் வாய்ஸ்:
நாமதான்... எந்தவொரு நல்ல காரியமும் தப்பித் தவறி கூட பண்ணது இல்லையே.... என்ன இந்த எமலோகம்.... நம்ப ஊரு கவர்மென்ட் ஆஃபீஸ் மாதிரி... தப்புத் தப்பாதான் வேலை செய்வாங்க போல... சரி. நமக்கு நல்லது தானே. வாயை மூடிக்கொண்டு சும்மா வேடிக்கை பார்க்கலாம்!!!!
சீனியின் மைன்ட் வாய்ஸை கேட்ட சித்ரகுப்தன் சீனியைப் பார்த்து "நாங்க எந்த தப்பும் பண்ணல.. நீ செஞ்ச ஒரே நல்ல காரியம் தான்... உன்னை சொர்கத்தில் சேர்க்கப் போகிறது."
அப்படி என்ன நல்ல காரியம் - இது எமன்.
இவன் (சீனி) போன வருஷம் தீபாவளி சமயத்தில் செய்த sweet(!!😢😢) சரியாக வரவில்லை என்று குப்பையில் போட.... அதை எடுத்து கொண்டு போன ஒரு பிச்சைக்காரன் தன் வீட்டுக்கு போய் படுத்த படுக்கையில் இருந்த அவன் தாயின் வாயில் ஊட்டினான்.
நெடுங்காலமா இப்பவோ.. அப்பவோ...ன்னு இழுத்து கொண்டு இருந்த அந்த பிச்சைக்காரனின் தாய்... இந்த சீனி தூக்கி போட்ட so called sweetஆல்... பட்டென்று உயிரை விட்டாள்....
போராடிக் கொண்டிருந்த ஒரு உயிரை உய்வித்த புண்ணியம் தான் இந்த சீனியை சொர்க்கம் அனுப்ப போகிறது....
அட.... ராமா.... இப்படி ஒரு விஷயமா.... திகைத்து நின்றான் சீனி.
போன வருஷம் தீபாவளி சமயத்தில்... சீனி புதிதாக try பண்ணின sweet தான்....#மைசூர்_அல்ஜாங்_பர்ஃபி".
பாத்திரத்தில் இருந்து எடுக்க முடியாமல்.... வானவில்லின் காணப்படும் வண்ணங்களில் எல்லாம் மாறுபட்டு... வேறுபட்ட ஒரு மாதிரி.... பிங்க்-ஊதா-கருப்பு கலந்து ஒரே புதிய கலரில் படு பயங்கரமாய் இருந்ததால்...
ஓசைப்படாமல் ஒரு கவரில் பாத்திரத்தோடு pack பண்ணி குப்பைத் தொட்டியில் போட்டதற்கு... இப்படி ஒரு பலனா.... என்று புளகாங்கிதம் அடைந்த சீனி சொர்க்கம் செல்ல தயார் ஆனான்.
கவனிக்க: சமீபத்தில் பார்த்த ஒரு நிகழ்வின் கதையாக்கம் இது
&&&&&&&
அந்த வீட்டின் முற்றத்தில் முருங்கை மரத்தில் அமர்ந்திருந்த அந்த காகம் கரைந்தது.
உள்ளேயிருந்து முற்றத்திற்கு வந்த முதியவர் ஒருவர் கரைந்து கொண்டிருந்த அந்த காகத்தை அண்ணாந்து பார்த்தார்.
"ஏன் இப்படி காலையிருந்து கத்தி கொண்டேயிருக்கிறாய்?" யாராவது வரப்போறாங்களா என்ன? என்று கேட்டபடி கீழேயிருந்து கல் எடுத்து எறியும் பாவனையில் ஓரு முறை கீழே குனிந்து நிமிர்ந்து கையை ஆட்டியபடி "சூ" "சூ" என்றபடி அதை விரட்டினார்.
சிறிது நேர அமைதிக்குப்பின் மறுபடியும் அந்த காகம் கரைய ஆரம்பித்தது.
அதன் ஓயாத கரைதலுக்கு செவிமடுத்து வீட்டின் உள்ளிருந்து ஒரு மூதாட்டி வெளிவந்து கண்ணை இடுக்கியபடி மரத்திலிருந்த அந்த காக்கையை உற்று நோக்கினாள்.