#உண்மைகள்_உபதேசமாய்!!!

It may look like a survey...

இந்த பதிவை படிக்கும் ஒவ்வொருவருக்கும் வேண்டுகோள்: 👇

1. இதில் வரும் ஒவ்வொரு ட்வீட்டுக்கும்.... அதில் தரப்பட்ட ஒவ்வொரு பழமொழிக்கும்... உங்கள் நினைவில் வரும் நபர்(களை) பெயரை குறிப்பிடுங்கள்....
அவர் இங்கே ட்விட்டரில் இருந்தால் தயவுசெய்து tag செய்ய #வேண்டாம். பெயர் மட்டும் போதும்

2. முதலில் இந்த பதிவை பிடித்திருந்தால் like செய்யுங்கள்; retweet #செய்யாதீர்கள்

3. #கண்டிப்பாக.... இந்த பதிவின் முடிவில் இருக்கும் #பின்னூட்டம் படியுங்கள்... அது #ரொம்பவும்_முக்கியம்
4. அதன் பிறகும் இந்த பதிவு உங்களுக்கு ஏற்புடையதாக இருக்கிறது என்றால்... Retweet செய்யுங்கள்.

சரி.... வாருங்கள்.... பதிவிற்கு போகலாம். மறுபடியும் சொல்கிறேன். இங்கே கீழே கொடுத்திருப்பது எல்லாம்... நம் முன்னோர்கள் சொல்லிச் சென்ற #பழமொழி... #சொலவடை
1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.

2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.

3. நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது.

4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.

5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.

6. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.
7. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.

8. கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட கால் இல்லை.

9. கரும்பு கசப்பது வாய்க்குற்றம்.

10. கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான். மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.

11. காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.
12. கூப்பாட்டால் சாப்பாடாகுமா?

13. எரிகிற வீட்டை அவிக்க கிணறு வெட்ட நாள் பார்த்தது போல, கும்பிட்ட கோயில் தலை மேல் இடிந்து விழுந்தது போல, சில்லரைக் கடன் சீரழிக்கும்.

14. சொப்பனங்கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?

15. உறவு போகாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.

(எத்தனை பெரிய உண்மை...
போய் வந்து கொண்டிருந்தால் தான் உறவு நிலைக்கும். கொடுத்த கடனைக் கேட்டுக் கொண்டே இருந்தால் தான் திரும்பக் கிடைக்கும்).

16. அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் அமிர்தமுமா?
(இன்று பலரும் இப்படித்தானே இருக்கிறார்கள்?)
17. ஆனை இருந்து அரசாண்ட இடத்தில் பூனை இருந்து புலம்பி அழுகிறது!
(எல்லாம் காலத்தின் கோலம்!)

18. அறப்படித்தவன் அங்காடிக்குப் போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.
(அதிகமாய் படித்தவர்கள் பலரும் இப்படித்தான்).
19. உள்ள பிள்ளை உரலை நக்கிக் கொண்டிருக்க மற்றொரு பிள்ளைக்கு திருப்பதிக்கு நடக்கிறாள்.

20. இறுகினால் களி. இளகினால் கூழ்.

21. ஊன்றக் கொடுத்த தடி மண்டையைப் பிளந்தது.

22. எடுப்பது பிச்சை. ஏறுவது பல்லாக்கு.

23. எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?

24. விசாரம் முற்றினால் வியாதி.
25. பைய மென்றால் பனையையும் மெல்லலாம்.
(அதாவது நிதானமாக தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் எத்தனை பெரிய காரியத்தையும் செய்து முடித்து விடலாம்.)

26. காற்றில்லாமல் தூசி பறக்காது.
(நெருப்பில்லாமல் புகையாது என்ற பழமொழிக்கு இணையான இன்னொரு பழமொழி)

27. பண்ணின புண்ணியம் பலனில் தெரியும்.
28. பிடித்த கொம்பும் ஒடிந்தது, மிதித்த கொம்பும் முறிந்தது.
(துரதிர்ஷ்டம் எப்படி எல்லாம் சோதிக்கிறது என்பதற்கான பழமொழி. ஒரு மரத்தில் ஏறி ஒரு கொம்பைப் பிடித்துக் கொள்ளும் போது அது ஒடிந்து போக, கீழே விழாமல் இருக்க இன்னொரு கொம்பில் காலை வைத்து ஊன்றினால் எப்படி இருக்கும்?)
29. பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது.
(பதர் என்பதே அரிசி இல்லாத நெல் தான். அதனால் என்ன தான் குத்தினாலும் அதில் அரிசி கிடைக்க வாய்ப்பில்லை. மனிதனின் பயனில்லாத முட்டாள்தனமான முயற்சி குறித்துச் சொல்லும் பழமொழி)

30. இட்டதெல்லாம் பயிராகாது. பெற்றதெல்லாம் பிள்ளையாகாது.
31. கடைந்த மோரிலே குடைந்து வெண்ணைய் எடுப்பான்.

32. வாங்குகிற கை அலுக்காது.

33. அடுத்த வீட்டுக்காரரே பாம்பைப் பிடியுங்க. அது அல்லித்தண்டு போல ஜில்லென்றிருக்கும்.

34. உயிரோடு ஒரு முத்தம் தராதவள், செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?

35. அய்யாசாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு
36. அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது.

37. அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி.

38. ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான். ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் விடியாது.

39. ஆயிரம் உடையான் அமர்ந்திருப்பான். அரைப்பணம் உடையான் ஆடி விழுவான்.
40. ஆனை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்டால் கிடைக்குமா?

41. இந்த எலும்பைக் கடிப்பானேன், சொந்தப்பல்லுப் போவானேன்?

42. இந்தக் கூழுக்கா இத்தனை திருநாமம்?

43. இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

44. இடுகிறவள் தன்னவள் ஆனால் முதல் பந்தியில் உண்டால் என்ன, கடைப் பந்தியில் உண்டால் என்ன?
45. உண்டு கொழுத்த நண்டு வளையில் தங்காது..

என்ன.... மேற்கூறிய 45ற்கும் பதில் சொல்லியாச்சா????

இப்போது இந்த #பின்னோட்டம் படித்து விட்டு பிறகு உங்கள் மனநிலையை சொல்லுங்கள்.
பின்னோட்டம்:

அந்த 45 பழமொழிக்கும்... முதலில் நானே அதை எழுதிய பிறகு ஒவ்வொன்றுக்கும் குறைந்த பட்சம் 2/3 பேரின் பெயர்களை எழுதி இருந்தேன்.

அதில் பலரை உங்களுக்கும் தெரியும் தலைவர்கள், அரசியல் பிரபலங்கள், நடிகர்கள், ஏன் நம்மிடையே நம்மோடு இங்கே கைகோர்த்து இருக்கும் நபர்கள் கூட உண்டு
இதைப் படித்த உங்களில் எவ்வளவு பேருக்கு... அந்த 45 அனுபவமொழிகளும் #எதிர்மறை எண்ணங்களை பிரதிபலிக்கிறது என்பது படிக்கும் போதே தோன்றியது

எனக்கு அந்த 45ற்கும் குறைந்த பட்சம் 2/3வரை குறிப்பிட்ட பிறகு தான் தோன்றியது.
அந்த 45க்கும் பதில் எழுதியதும்... எனது மூளை.. சந்தோஷத்தில் துள்ளி குதித்து.... #சபாஷ்_ஶ்ரீனி என்னே உன் அறிவு; என்னே உன் ஆற்றல் என்று முதுகில் தட்டி பாராட்டியது... எனக்கு #தற்பெருமை தாங்கவில்லை... நடிகர் திலகத்தின் கர்வமான ராஜநடை நடந்தேன்....
அப்போது என் பின்னந்தலையில் யாரோ தட்டினார்கள் திரும்பி பார்த்தால் அங்கே

என் #மனது என்னைப் பார்த்து எள்ளி நகையாடியது

ஏண்டா சீனி அந்த 45க்கும் கொஞ்சம் கூட யோசிக்காமல் கிடுகிடுவென 2/3 நபர்கள் பெயரை எழுதிவிட்டு உனக்கு புளகாங்கிதம் வேற ஒரு கேடா? என்று நெத்தியடியாக கேள்வி கேட்டது..
நாம் தான் பகுத்தறிவு பகலவனின் விடியல் வெளிச்சத்தில் விழித்தவன் ஆயிற்றே.. உடனே குறுக்கு கேள்வி கேட்டேன்....

மனசே... சொல்லு.. நான் எழுதிய பதில்களில் (நபர்களின் பெயர்கள்) ஏதாவது தவறு இருக்கிறதா??? இருந்தா சொல்லு... நிச்சயமாக இருக்காது என்று இல்லாத சட்டைக் காலரை தூக்க முயன்றேன்..
மறுபடியும்... தடாலென தலையில் தட்டியது மனசாட்சி....

டேய் சீனி.... திரும்பி அந்த கண்ணாடிய பாத்து நில்லு... இப்போது அந்த 45 பழமொழிகளையும் படி.... ஒவ்வொன்றையும் படித்து விட்டு கண்ணாடியை பார்க்க வேண்டும். உன் பதில்களை (நபர்களின் பெயர்) படிக்காதே
அதாவது 45 தரம் நீ கண்ணாடியை பாக்கணும்... அப்படி பார்த்து கொண்டே படித்து முடித்ததும்...

இப்போது சொல்லு..... அந்த 45 பழமொழிக்கும் உன் பதில்கள் முழுமையாக இருந்ததா???? - மனசாட்சி உறுத்தியது
அப்போதும் தைரியம் இல்லாமல்.... வெளிப்படையாக உண்மையை உரக்கச் சொல்ல தயங்கி.... நான் எழுதிய பதில்களில் இருந்த நபர்களின் பெயர்களை உடனடியாக நீக்கி விட்டேன்.

ஏனெனில்.....

அந்த 45க்கும்... கண்ணாடியை பார்த்து படிக்கும் போது... #என்_பெயர் தான் எனக்கு முதலாவதாக தோன்றியது.
வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும்.. பல்வேறு நிலைகளில்... பல்வேறு பருவங்களில்.. ஏன்... தினந்தோறும்.. பல்வேறு தருணங்களில்....

நான் அந்த 45ல் ஏதாவது ஒன்றில் பொருந்தி இருந்தேன் / இருக்கிறேன் என்பது அப்போது தான் இந்த மரமண்டையில் உதித்தது
இதைப் படித்து முடித்ததும்.... உங்களுக்கு என்ன தோன்றுகிறது??? தைரியம் இருந்தால்.. சொல்லுங்கள்

வாழ்க வளமுடன்
எல்லா நலமுடன்

@mohamedathau @rnsaai @BKannigaa @Sri_Sri_yd @GuhanRamya @Raja18812397 @sri88839783 @Subashcovai @naturaize @rprabhu @aarjeekaykannan @bullettuupandi

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Srinivasa Iyer ஶ்ரீநிவாஸ ஐயர்

Srinivasa Iyer ஶ்ரீநிவாஸ ஐயர் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @srinivasan19041

13 Nov
இன்று சனிக்கிழமை அல்லவா???? அதனால்...

ஶ்ரீனியின் #கதையளப்பு_களஞ்சியம் வழங்கும்....

#கல்யாண_பத்திரிகை

நமஸ்காரம் / ஆசிர்வாதம் / உபயக்ஷேமம்

"அப்பா இருக்காரா தம்பி?" என்று சாயங்காலம் ஒரு பெரியவர் வீட்டுக்குள் வந்தார் என்றால்....

ஒன்று அவர் பையனுக்குக் கல்யாணம்.
இல்லையென்றால் அவர் தெருவில் ஸ்ட்ரீட் லைட் எரியவில்லை என்று அர்த்தம்.

ஸ்ட்ரீட் லைட் மேட்டர் என்றால் வாசலோடு முடிந்துவிடும். "நாளைக்கு கார்ப்பரேஷன் ஆஃபீஸ்ல சொல்லி வர சொல்லிடரேன். சேஷாத்ரி வீட்டுக்கு பக்கத்து வீடு தானே நீங்க?"
ஆனால் மேற்படி சொன்ன முதல் விஷயம் என்றால் பேச்சு கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும்.

"பையனுக்கு கல்யாணம் வெச்சிருக்கேன்" என்று சிரிப்பார்.

என்னமோ பையனுக்கு குண்டு வைத்திருக்கிறேன் என்று சொல்வது போல...

"வெரிகுட் ! வெரிகுட் !"
Read 17 tweets
13 Nov
இன்று 13/11/2021 சனிக்கிழமை #குருப்பெயர்ச்சி

கீழேயுள்ள பதிவு ஆன்மீக பதிவு இல்லை; ஆனால் இதுவொரு #ஆன்மபதிவு

#நீள்பதிவு

குரு என்ற வார்த்தையின் அர்த்தம்?

குரு என்றால் யார்?

நம் வாழ்க்கைக்கு குரு அவசியமா?

குரு இல்லாமல் பயணிக்க முடியாதா?
#இந்தியாவைத் தவிர உலகத்தின் எந்த பகுதியிலும் #குரு" என்கிற விஷயம் பற்றி பெரிய சிலாகிப்பு இருக்கிறதா என்ற கேள்வி எனக்குள் உண்டு.

இல்லையோ என்ற எண்ணமும் உண்டு.

#இந்துமத_தத்துவத்தில் குரு என்கிற விஷயத்திற்கு மிக மிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கிறது.
இந்த குரு ஆச்சார்யன் அல்ல,

பாடம் சொல்லி கொடுக்கிறவரோ,

வித்தை சொல்லிக் கொடுக்கிறவரோ,

பழக்க வழக்கங்கள் சொல்லிக் கொடுக்கிறவரோ அல்ல.

மதபோதகரும் அல்ல.

ஒரு மதத்தின்
சட்ட திட்டங்களை,
ஆசார அனுஷ்டானங்களைச் சொல்லித் தருபவரும் அல்ல.
Read 25 tweets
13 Nov
*Padmashri Harekala Hajabba*

*Sri Chethan owns four semiconductor companies in the world and an Aristocratic industrialist and graduate from IIT Chennai and MS from USA* writes an *introspective article which is worh reading :-* Image
“Gentlemen, *I have been having a very weird and uneasy feeling since the time I saw the tweet about Harekala Hajabba*. I haven’t been able to decipher what that is, but it made me sleepless last night. I was up at around 5:30 am with the hope that I will find someone to talk to,
and share what I have been thinking about. My wife isn’t at home, and my dad and daughter are fast asleep. I can’t call anyone of you at 5:45 am. So, I thought I will just keep typing what comes to my mind.

*After I went a bit deep into what Harekala Hajabba was doing*,
Read 14 tweets
5 Nov
Forwarded as received in whatsapp

இது ஒரு நீள்பதிவு. விளக்கமான பதிவு

ஓ....ஹோ..... இதுக்காகத்தான் திராவிடாஸ்ரமப் போராளிகள் எல்லாம் இந்தக் கதறு கதறுதா?

பதிவை ஆழ்ந்து படித்து உள்வாங்குங்கள்//

புதிய கல்விக் கொள்கையும்,
திராவிஷ வர்ணாசிரமும்:
🙏 மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைப் பற்றிய அனல் பறக்கும் விவாதங்களும், கருத்துக்களும் தமிழகத்தில் மட்டுமே பார்க்க முடிகிறது.

மற்ற மாநிலங்களில் இதைப்பற்றி மக்களும் சரி, அரசும் சரி வரவேற்கிறார்கள்.
ஒவ்வொரு மண் சார்ந்த இனம் சார்ந்த மாநிலங்களில் மட்டும் இதில் திருத்தங்களைப் பரிந்துரைக்கின்றனரே தவிர #திட்டத்தையே_கொண்டு_வரக்கூடாது என #எவரும்_எதிர்க்கவில்லை

ஏன் தமிழ் நாட்டில் மட்டும் இந்த கூச்சல்கள்...? எதிர்ப்புகள்...? ஆர்ப்பாட்டங்கள்...? அலப்பறைகள்....?
Read 53 tweets
4 Nov
Light symbolizes knowledge, and darkness, ignorance.

The Para Bramha is the "Knowledge Principle" (Chaitanya) who is the source, the enlivener and the illuminator of all knowledge.

Hence light is worshiped as the Para Bramha himself. Image
Knowledge removes ignorance just as light removes darkness.

Also knowledge is a lasting inner wealth by which all outer achievement can be accomplished.

Hence we light the lamp to bow down to knowledge as the greatest of all forms of wealth. Image
When you light a lamp, you light your soul.

The flame of a lamp always burns upwards.

Similarly, we should acquire such knowledge to take us towards higher ideals. Image
Read 4 tweets
3 Nov


நம்ப #வந்த_வாராவதியார் (Cambridge @naturaize) தீபாவளிக்காக ஸ்வீட் வாங்க போவதாக மேலே குறிப்பிட்ட பதிவில் சொல்லி இருந்தார்.

#நாமா அவர்களே உங்களுக்கு கடைகளில் கிடைக்கும் ஸ்வீட் திருப்திகரமாக இல்லை என்றால் கவலையே படாதீர்கள்.... இந்த ஶ்ரீனி இருக்க பயமேன்
#ஶ்ரீனியின்_அடுப்பங்கறை_அட்டகாசம்!!!!! (Or) தயாரிப்பில் #மைசூர்_அல்ஜாங்_பர்ஃபி"

கதை, திரைக்கதை, வசனம், பின்னணி இசை, இயக்கம்
"கதையளப்பு களஞ்சியம்" ஶ்ரீனி

(கதை எல்லாம் என்னோட கற்பனை தான்... யாருட்ட இருந்தும் ஆட்டய போடலை.... சொன்னா நம்புங்க... ப்ளீஸ்)
டைட்டில் கார்டு முடிஞ்சதும்... சைலண்ட்.....ட்..... Start ..... Camera.... Action.....

ஒரே புகை மூட்டம்..... புகையைத் தாண்டி.... கேமரா போகுது.... அங்கே.....

"எமலோகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது" என்ற பெயர்ப் பலகை..... அப்படியே கேமராவை.... ரைட்ல திருப்பி.... முன்னே போனால்.....
Read 24 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(