இன்று சனிக்கிழமை அல்லவா???? அதனால்...

ஶ்ரீனியின் #கதையளப்பு_களஞ்சியம் வழங்கும்....

#கல்யாண_பத்திரிகை

நமஸ்காரம் / ஆசிர்வாதம் / உபயக்ஷேமம்

"அப்பா இருக்காரா தம்பி?" என்று சாயங்காலம் ஒரு பெரியவர் வீட்டுக்குள் வந்தார் என்றால்....

ஒன்று அவர் பையனுக்குக் கல்யாணம்.
இல்லையென்றால் அவர் தெருவில் ஸ்ட்ரீட் லைட் எரியவில்லை என்று அர்த்தம்.

ஸ்ட்ரீட் லைட் மேட்டர் என்றால் வாசலோடு முடிந்துவிடும். "நாளைக்கு கார்ப்பரேஷன் ஆஃபீஸ்ல சொல்லி வர சொல்லிடரேன். சேஷாத்ரி வீட்டுக்கு பக்கத்து வீடு தானே நீங்க?"
ஆனால் மேற்படி சொன்ன முதல் விஷயம் என்றால் பேச்சு கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும்.

"பையனுக்கு கல்யாணம் வெச்சிருக்கேன்" என்று சிரிப்பார்.

என்னமோ பையனுக்கு குண்டு வைத்திருக்கிறேன் என்று சொல்வது போல...

"வெரிகுட் ! வெரிகுட் !"
பத்திரிக்கையில் #பெருமாள் அல்லது #பிள்ளையார் எந்த வடிவத்தில் இருப்பார்கள் என்று பார்ப்பதில் எனக்கு கொஞ்சம் அளவு கடந்த ஆர்வம். ரூமிலிருந்து எட்டிப்பார்ப்பேன்.

இல்லை.

இன்னும் பத்திரிக்கை அஷ்டகோணலாக மடித்து வைத்திருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் கவரிலிருந்து வெளியே வரவில்லை.
பத்திரிக்கை கொண்டு வரும் பைகள் #ரிட்டையர்மெண்ட்_வயதிற்கு_ஏற்ப மாறுபடும்.

இரண்டு காது வைத்த மஞ்சப்பை (இந்த மஞ்சப்பையைப் பற்றி தனி பதிவே போடலாம்), அல்லது கக்கத்தில் இடுக்கிக்கொள்ள வசதியான ஃபோம் லெதர் பை ஒன்று, அல்லது சரவணா ஸ்டோர்ஸ் பை.
அப்பாவுக்கு இது பழகிப்போய் விட்டதால், அதே கேள்விகள் கேட்பார்.

"பொண்ணு என்ன பண்றா?"

"எந்த ஊரிலே வெச்சிருக்கீங்க ?"

"எல்லாம் வாங்கியாச்சா ?"

"அப்படியா ?!"
என்று வரிசை மாறாத அதே கேள்விகள்.

அப்புறம் கவர் சப்தம் கேட்கும்.
"கண்டிப்பா வந்துடனும்.. கிழக்கு எது?" என்று திசை பார்த்து சரவணா ஸ்டோர்ஸ் பையைப் பிரிப்பார்.

அப்பா எழுந்து நின்று "தோ ! இந்தப்பக்கம்" என்பார்.

பயபக்தியுடன் இரண்டு கைகளிலும் பத்திரிக்கையை ஏந்தி "கண்டிப்பா வந்திடுங்க.." என்று பத்திரிக்கை கை மாறும்.
இந்த #கண்டிப்பா_வந்திடுங்க" சுமார் எட்டு அல்லது பத்து தடவை ரிப்பீட் ஆகும்.

எனக்கென்னவோ #வந்துடாதீங்க !" என்று சொல்வது போலவே இருக்கும்.

மறுபடியும் யதாஸ்தானத்தில் உட்கார்ந்து கொள்வார்கள்.
அப்பா பத்திரிக்கையை கவரிலிருந்து வெளியே எடுத்து #கணக்கு_வாத்தியார்_பேப்பர்_திருத்துவது போல கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்து கொண்டு* படிப்பார்.

பத்திரிக்கை கொடுத்தவர் போகும் வீடுகளிலெல்லாம் இதையே அனுபவித்து வந்ததனால் பழகிப்போய் இருக்கும்.
முப்பது வினாடிகளுக்கு முன் இவர்கள் பேசிய அதே விஷயங்கள்தான் பத்திரிக்கையில் போட்டிருக்கும் என்றாலும்....

*படிக்கவில்லை என்றால் தவறாக நினைத்துக்கொள்வாரோ என்று அப்பாவும்....*
*"எல்லாம் நான் சொன்னதுதான் இருக்கு. மெதுவா படிச்சுக்குங்க. நான் வர்ரேன்" என்று சொன்னால் அப்பா தவறாக நினைத்துக்கொள்வாரோ என்று வந்திருப்பவரும்* ....

#பரஸ்பரம்_யோசித்துக்_கொள்வர்.

"ஓஹோ! எம்.சி.ஏ. படிச்சுருக்காளா ?"

"ஆமாம். எம்.சி.ஏ. படிச்சிருக்காங்க".

"ஓஹோ! சவுத் போக் ரோடா !"
"ஆமாம். நம்ம சிவாஜி வீடு பக்கத்துல தான். இங்க கிட்டக்கதான் இருக்கு. அதனால கண்டிப்பா வந்திரனும்".

பத்திரிக்கை முழுவதும் ஸ்கேன் செய்துவிட்டு பத்திரிக்கையை மூடிவிட்டு பின்பக்கம் பார்ப்பார்.

"மேனகா கார்ட்ஸா ! நல்லா இருக்கு."

"ஆமாம் ! மேனகா கார்ட்ஸ். நம்ம கோயம்பேடுல இருக்கே !".
"வெரிகுட். வெரிகுட்.".

"அப்போ நான் கிளம்பறேன். வீட்டுல எல்லாரையும் கூட்டிட்டு வந்துடனும். உங்க பொண்ணுங்க ரெண்டு பேரையும் அழைச்சுக்கிட்டு வாங்க" என்று எழுந்திருப்பார்.

"எனக்கு ஒரு பொண்ணு; மூணு பையன்கள்" என்று சிரித்துக்கொண்டே சொல்வார் அப்பா.
"ஓ. சாரி. நான் கன்ஃப்யூஸ் பண்ணிக்கிட்டேன். அவசியம் வந்திடுங்க. போயிட்டு வ்ர்ரேன்ப்பா. நீங்களும் வந்திருங்க.. " என்று வாசலில் செருப்புப் போட்டுக் கொண்டு கிளம்புவார்.

நான் என் ரூமைவிட்டு வெளியே வந்து பத்திரிக்கையைப் பிரித்தால்...
#பெருமாள்_அலர்மேல்மங்கை படம் டாலடிக்கும். தக தக வென்று ஜிகினா பேப்பரில்.

#உள்ளேதான்_அதிர்ச்சி_காத்திருக்கும்

........
........
........
........
........
........
*பத்திரிக்கை #தெலுங்கில்_ப்ரிண்ட்_ஆகியிருக்கும்.

அதில் இருக்கும் வெகு குறைவான இங்லீஷ் வார்த்தைகள் -

M.C.A

SOUTH BOAG ROAD, T.NAGAR

MANEKA CARDS
இந்த கதையளப்பை படிக்க வேண்டிய தலையெழுத்து உள்ளவர்கள்:

@rprabhu @naturaize @raaga31280 @aarjeekaykannan @Sri_Sri_yd @bullettuupandi @vibhu_prabhu @vedag69 @Prabhug17198363 @Radhiga_v @VasaviNarayanan @revenge1967 @BKannigaa @GopalanVs2 @krishnananban55 @BUSHINDIA @savithrikailash

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Srinivasa Iyer ஶ்ரீநிவாஸ ஐயர்

Srinivasa Iyer ஶ்ரீநிவாஸ ஐயர் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @srinivasan19041

13 Nov
இன்று 13/11/2021 சனிக்கிழமை #குருப்பெயர்ச்சி

கீழேயுள்ள பதிவு ஆன்மீக பதிவு இல்லை; ஆனால் இதுவொரு #ஆன்மபதிவு

#நீள்பதிவு

குரு என்ற வார்த்தையின் அர்த்தம்?

குரு என்றால் யார்?

நம் வாழ்க்கைக்கு குரு அவசியமா?

குரு இல்லாமல் பயணிக்க முடியாதா?
#இந்தியாவைத் தவிர உலகத்தின் எந்த பகுதியிலும் #குரு" என்கிற விஷயம் பற்றி பெரிய சிலாகிப்பு இருக்கிறதா என்ற கேள்வி எனக்குள் உண்டு.

இல்லையோ என்ற எண்ணமும் உண்டு.

#இந்துமத_தத்துவத்தில் குரு என்கிற விஷயத்திற்கு மிக மிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கிறது.
இந்த குரு ஆச்சார்யன் அல்ல,

பாடம் சொல்லி கொடுக்கிறவரோ,

வித்தை சொல்லிக் கொடுக்கிறவரோ,

பழக்க வழக்கங்கள் சொல்லிக் கொடுக்கிறவரோ அல்ல.

மதபோதகரும் அல்ல.

ஒரு மதத்தின்
சட்ட திட்டங்களை,
ஆசார அனுஷ்டானங்களைச் சொல்லித் தருபவரும் அல்ல.
Read 25 tweets
13 Nov
*Padmashri Harekala Hajabba*

*Sri Chethan owns four semiconductor companies in the world and an Aristocratic industrialist and graduate from IIT Chennai and MS from USA* writes an *introspective article which is worh reading :-*
“Gentlemen, *I have been having a very weird and uneasy feeling since the time I saw the tweet about Harekala Hajabba*. I haven’t been able to decipher what that is, but it made me sleepless last night. I was up at around 5:30 am with the hope that I will find someone to talk to,
and share what I have been thinking about. My wife isn’t at home, and my dad and daughter are fast asleep. I can’t call anyone of you at 5:45 am. So, I thought I will just keep typing what comes to my mind.

*After I went a bit deep into what Harekala Hajabba was doing*,
Read 14 tweets
11 Nov
#உண்மைகள்_உபதேசமாய்!!!

It may look like a survey...

இந்த பதிவை படிக்கும் ஒவ்வொருவருக்கும் வேண்டுகோள்: 👇

1. இதில் வரும் ஒவ்வொரு ட்வீட்டுக்கும்.... அதில் தரப்பட்ட ஒவ்வொரு பழமொழிக்கும்... உங்கள் நினைவில் வரும் நபர்(களை) பெயரை குறிப்பிடுங்கள்....
அவர் இங்கே ட்விட்டரில் இருந்தால் தயவுசெய்து tag செய்ய #வேண்டாம். பெயர் மட்டும் போதும்

2. முதலில் இந்த பதிவை பிடித்திருந்தால் like செய்யுங்கள்; retweet #செய்யாதீர்கள்

3. #கண்டிப்பாக.... இந்த பதிவின் முடிவில் இருக்கும் #பின்னூட்டம் படியுங்கள்... அது #ரொம்பவும்_முக்கியம்
4. அதன் பிறகும் இந்த பதிவு உங்களுக்கு ஏற்புடையதாக இருக்கிறது என்றால்... Retweet செய்யுங்கள்.

சரி.... வாருங்கள்.... பதிவிற்கு போகலாம். மறுபடியும் சொல்கிறேன். இங்கே கீழே கொடுத்திருப்பது எல்லாம்... நம் முன்னோர்கள் சொல்லிச் சென்ற #பழமொழி... #சொலவடை
Read 27 tweets
5 Nov
Forwarded as received in whatsapp

இது ஒரு நீள்பதிவு. விளக்கமான பதிவு

ஓ....ஹோ..... இதுக்காகத்தான் திராவிடாஸ்ரமப் போராளிகள் எல்லாம் இந்தக் கதறு கதறுதா?

பதிவை ஆழ்ந்து படித்து உள்வாங்குங்கள்//

புதிய கல்விக் கொள்கையும்,
திராவிஷ வர்ணாசிரமும்:
🙏 மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைப் பற்றிய அனல் பறக்கும் விவாதங்களும், கருத்துக்களும் தமிழகத்தில் மட்டுமே பார்க்க முடிகிறது.

மற்ற மாநிலங்களில் இதைப்பற்றி மக்களும் சரி, அரசும் சரி வரவேற்கிறார்கள்.
ஒவ்வொரு மண் சார்ந்த இனம் சார்ந்த மாநிலங்களில் மட்டும் இதில் திருத்தங்களைப் பரிந்துரைக்கின்றனரே தவிர #திட்டத்தையே_கொண்டு_வரக்கூடாது என #எவரும்_எதிர்க்கவில்லை

ஏன் தமிழ் நாட்டில் மட்டும் இந்த கூச்சல்கள்...? எதிர்ப்புகள்...? ஆர்ப்பாட்டங்கள்...? அலப்பறைகள்....?
Read 53 tweets
4 Nov
Light symbolizes knowledge, and darkness, ignorance.

The Para Bramha is the "Knowledge Principle" (Chaitanya) who is the source, the enlivener and the illuminator of all knowledge.

Hence light is worshiped as the Para Bramha himself. Image
Knowledge removes ignorance just as light removes darkness.

Also knowledge is a lasting inner wealth by which all outer achievement can be accomplished.

Hence we light the lamp to bow down to knowledge as the greatest of all forms of wealth. Image
When you light a lamp, you light your soul.

The flame of a lamp always burns upwards.

Similarly, we should acquire such knowledge to take us towards higher ideals. Image
Read 4 tweets
3 Nov


நம்ப #வந்த_வாராவதியார் (Cambridge @naturaize) தீபாவளிக்காக ஸ்வீட் வாங்க போவதாக மேலே குறிப்பிட்ட பதிவில் சொல்லி இருந்தார்.

#நாமா அவர்களே உங்களுக்கு கடைகளில் கிடைக்கும் ஸ்வீட் திருப்திகரமாக இல்லை என்றால் கவலையே படாதீர்கள்.... இந்த ஶ்ரீனி இருக்க பயமேன்
#ஶ்ரீனியின்_அடுப்பங்கறை_அட்டகாசம்!!!!! (Or) தயாரிப்பில் #மைசூர்_அல்ஜாங்_பர்ஃபி"

கதை, திரைக்கதை, வசனம், பின்னணி இசை, இயக்கம்
"கதையளப்பு களஞ்சியம்" ஶ்ரீனி

(கதை எல்லாம் என்னோட கற்பனை தான்... யாருட்ட இருந்தும் ஆட்டய போடலை.... சொன்னா நம்புங்க... ப்ளீஸ்)
டைட்டில் கார்டு முடிஞ்சதும்... சைலண்ட்.....ட்..... Start ..... Camera.... Action.....

ஒரே புகை மூட்டம்..... புகையைத் தாண்டி.... கேமரா போகுது.... அங்கே.....

"எமலோகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது" என்ற பெயர்ப் பலகை..... அப்படியே கேமராவை.... ரைட்ல திருப்பி.... முன்னே போனால்.....
Read 24 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(