தமிழரின் பண்டைய கால உணவு என்ன? இட்லி இந்தோனேசியாவிலிருந்து வந்தது. சாம்பார் மராட்டியர்களிடம் இருந்து வந்தது. பரோட்டாவும், பிரியாணியும் அராபியர்களிடம் இருந்து வந்தது. காய்கறிகளை அவித்து, பொரித்து உண்ணும் பழக்கம் வட இந்தியாவிலிருந்து வந்தது. #தமிழர்உணவு
சங்க இலக்கியங்களில் நமது உணவைத் தேடினால், நீக்கமற நிறைந்திருப்பது ‘கள்ளும் இறைச்சியும்’! கள் என்றால் பனை அல்லது தென்னை மரத்திலிருந்து வருவது மட்டுமல்ல. அரிசி, தேன், மூங்கிலரிசி என பலவித பொருட்களிலிருந்து சங்ககாலத்தில் மது தயாரித்திருக்கிற பாடல்கள் உள்ளன (e.g. நறும்பிழி).
ஒவ்வொரு வகை கள்ளுக்கும் தனித்தனியே பெயர்கள் உள்ளன. மண்ணில் புதைத்து அவற்றை ferment செய்யப்பட்ட விதமும் நமது செய்யுள்களில் காணமுடியும். ஒவ்வொரு வகை மதுவுக்கும் இணையான இறைச்சி வகையையும் காணமுடியும். #தமிழர்உணவு
அதற்கான recipe புத்தகம் தமிழில் இருந்ததையும் சிறுபாணாற்றுப்படையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
எங்கே இந்த உணவுப் பழக்கத்தைத் தொலைத்தோம்? #தமிழர்உணவு
பௌத்தர்களும், ஜைனர்களும் கள்ளுக்கும், இறைச்சிக்கும் எதிராகப் பேசினார்கள். காரணம், திருக்குறள் அல்ல. அதற்கான காரணம் வட இந்தியாவிற்கானது.
(Another deviation from the topic - ‘உண்ணற்க கள்ளை’ என்று திருவள்ளுவர் சொன்னது ‘சாப்பாட்டுக்குப் பதிலாக கள்ளை மட்டும் குடிக்காதே’ என்று புலவர் தமிழ்நாடன் போன்றோர் அர்த்தப்படுத்தியிருக்கிறார்கள்.)
அதன்பிறகு வந்த பக்தி இயக்கம், அந்த பௌத்த, சமண கொள்கைகளை அப்படியே உள்வாங்கிக்கொண்டது.
சிலர் கிறிஸ்தவர்களாக மாற்றம் செய்யப்பட்டபோதும், அதே காரணம் தொடர்ந்தது. கள் இறக்க பிரிட்டிஷார் வரி விதித்தார்கள். காந்தி, ராஜாஜி, பெரியார் எல்லாம் கள்ளுக்கு எதிராக வெடித்தார்கள். #தமிழர்உணவு
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Long thread: Connections between #Tamil and #Portuguese
When we land in a new country, we generally ask how they say ‘Thank you’ or ‘good morning’ in their language. When we landed in Lisbon, we asked the cab driver: “How do you call a window in Portuguese?” He said, “Janela”.
The emergency windows in Portugal read as ‘Janela de Emergencia’. We continued, “How do you call table in Portuguese?” He said, “Mejai”. We didn’t stop. “How do you call a ‘key’?” “Shavi”, he helped us in the pronunciation. #tamil#Portuguese
Many roof top restaurants in Lisbon are named as “Varanda de Lisboa” (Balcony of Lisbon). Many of us who speak Tamil might have thought Jannal, Mejai, Varanda and Chavi are Tamil words or Sanskrit loan words. They are not. #தமிழ்#tamil_portuguese
Long thread: Tamil and Germany connections/ தமிழ்-ஜெர்மனி
தமிழ் நாட்டுக்கும், ஜெர்மனிக்கும் உள்ள தொடர்பு ஒரு மறக்கப்பட்ட வரலாறு. 1700-களிலிருந்து 1800-கள் வரை எறக்குறைய ஒரு நூற்றைம்பது ஆண்டுகள் வரலாறு. #tamil#tamilgermany
இங்கே ப்ரொட்டஸ்டன்ட் கிறிஸ்தவத்தைப் போதிக்க வந்தவர்கள், தமிழால் ஈர்க்கப்பட்டு வந்த வேலையை மறந்துவிட்டு, ஏகப்பட்ட தமிழ் நூல்களை ஜெர்மனியில் மொழி பெயர்த்து பதிப்பித்தார்கள். இப்போது அவற்றை தமிழர்களும் மறந்துவிட்டார்கள், ஜெர்மானியர்களும் மறந்துவிட்டார்கள். நிற்க.
‘மண்ணாங்கட்டி’ என்று அறிவில்லாதவனை, அறிவில்லாதவற்றை குறிக்க தமிழில் உபயோகிக்கும் வார்த்தை. எந்த சங்க இலக்கியத்தில் தேடினாலும் மண்ணாங்கட்டி என்ற வார்த்தை கிடைக்காது. #மண்ணாங்கட்டி#tamilgermany