சமூக நீதியோடு சூழலியல் நீதிக்கான எங்கள் பயணம் தொடரும் …

• 2019 ஆம் ஆண்டில் மொத்த உலகமும் உமிழ்ந்திருக்கும் கார்பன் டை ஆக்சைடு 36.4 Gt. தற்போதைய பொருளாதார உற்பத்தி முறைகள் இப்படியே தொடரும் பட்சத்தில் இது தொடர்ந்து அதிகரிக்கவே வாய்ப்பிருக்கிறது.

• இந்நிலையில் 2030 க்குள் இந்த
கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு 18.22 Gt க்குள் குறையாவிட்டால் புவியைக் காலநிலைப் பேரழிவிலிருந்து (Catastrophic Climate events) தடுக்க முடியாது என்று ஐநாவின் காலநிலை மாற்றத்துக்கான அதிகாரப்பூர்வமான அமைப்பான ஐபிசிசி அறிவித்திருக்கிறது.

• மேலும் ‘இனி இயல்புநிலை என்பதே பேரிடர்களுக்கு
நடுவிலேதான்’என்கிறது ஐபிசிசி

• இன்னொருபுறம் யுனிசெப் அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ‘Children's Climate Risk Index’ அறிக்கையில் இந்தியா 26வது இடத்தில் அதாவது காலநிலை மாற்றத்தால் குழந்தைகள் பாதிப்புக்குள்ளாக அதிக வாய்ப்புள்ள நாடுகளின் பட்டியலில் "extremely high risk"என
வரையறுக்கப்படும் பட்டியலில் இருக்கிறது.

• அதே அறிக்கை உலகின்99 விழுக்காட்டுக்கும் மேற்பட்டக் குழந்தைகள் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு தீவிரக் காலநிலைப் பிறழ்வின் விளைவை (வெப்ப அலை, வெள்ளம், வறட்சி போன்றவை) சந்திக்கப்போகிறார்கள் என்கிறது.

• தொடக்கூடாத, கடந்தால் மீளவியலாத புவியின்
9 எல்லைகளை ( 9 Tipping points) மனிதகுலம் கடந்துகொண்டிருக்கிறது.

இதைச் சொல்பவர்கள் குடுகுடுப்பைக்காரர்களோ இல்லை ஜோதிடர்களோ இல்லை மாறாக 196 நாடுகளின் அதிகாரப்பூர்வ அறிவியலாளர்களைப் பிரதிநிதிகளாகக்கொண்ட ஐநாவின் உறுப்பு அமைப்புகள். மேற்கண்டவை இவ்வமைப்புகளின் அறிவியல்பூர்வ தரவுகள்.
பாதுகாப்பானப் பணிச்சூழல்களிலும் வசிப்பிடங்களிலும் அமர்ந்துகொண்டு இந்த அறிவியல் தரவுகளைப் பூச்சாண்டி போல எள்ளி நகையாடுபவரகளுக்கு இவை பொருட்டாக இல்லாமல் இருக்கலாம்.ஆனால் நம் பிள்ளைகளுக்கும் பெருவாரியான விளிம்புநிலை மக்களுக்கும் இது வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டம்.

இந்த உண்மையை
உலகின் ஒவ்வொரு மானிடரும் உணரச் செய்வதன்மூலமே மாற்றத்திற்கான பலத்தையும் அதற்கானக் களத்தை உருவாக்க முடியும்.2030 இல் அடையவேண்டிய உமிழ்வு இலக்கு மிகக்கடுமையான சவால் நிறைந்தது. உலக நாடுகள் அனைத்தின் தீவிர நடவடிக்கையையும் ஒருங்கே கோருவது.
எனினும் உலகின் மொத்த நிலப்பரப்பில் மிகச்சிறிய
அளவிலான ஒரு மாநிலம் இந்தச் சவாலை எதிர்கொள்ள ஒரு அணுவளவு உதவக்கூடும் என்றால் வாய்ப்பை உருவாக்கத் நாங்கள் இன்னும் தீவிரமாகத் தொடர்ந்து பயணிப்போம். - பூவுலகின் நண்பர்கள்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with G. Sundarrajan

G. Sundarrajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SundarrajanG

15 Nov
நேரு பிரதமராக பொறுப்பேற்றவுடன், பெரிய பெரிய திட்டங்களின் மூலம்தான் இந்தியாவை முன்னேற்ற முடியும் என்றும், பெரிய பொதுத்துறை நிறுவனங்களை அமைப்பது மூலம் வளம் மக்களிடமே இருக்கும் என்று எண்ணி் பல நிறுவனங்களை கட்டமைத்தார். ஹிராகுட் மற்றும் பக்ரா அணைகள் புதிய இந்தியாவின்
கோயில்கள் என்றார். மத்திய இந்தியாவில் மிகப்பெரிய சுரங்கங்கள் அமைத்தார் அது 1950களின் பார்வை. நேரு, சாஸ்திரிக்கு பிறகு ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தி “அமைதி பள்ளதாக்கில் திட்டமிடப்பட்ட புனல் மின் திட்டத்தை ரத்து செய்தார், ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற புவி மாநாட்டில் கலந்து கொண்ட ஒரே
உலகத்தலைவர் அவரே. இன்று அவருடைய வாரிசான @RahulGandhi நியாம்கிரி மலைகளில் தாது எடுக்கக்கூடாது என்று போராடிய கோண்ட் பழங்குடி மக்களுடன் நிற்கிறார், நதிநீர் இணைப்பிற்கு எதிராக கடுமையாக குரல் கொடுக்கிறார்.
சூழலியல் கருத்தாக்கங்கள் வலுபெற ஆரம்பித்து,அதன் தாக்கம் அதிகரித்து, மக்களின்
Read 9 tweets
14 Nov
காலநிலை உச்சபுள்ளிகள் (tipping points) ஒன்பதுள்ளன. உச்சபுள்ளிகளை இயல்பாக புரிந்துகொள்வதென்றால், மலை உச்சியில் ஒரு பாறாங்கல்லை வைத்து, உருண்டோடிவிடாமல் இருப்பதற்காக சிறிய கல்லை அடைப்பாக வைப்பார்கள், இந்த சிறிய கல்லை உச்சப்புள்ளியாகவும் பாறையை காலநிலையாகவும் யூகித்துகொள்ளவும். Image
அடைப்பாகவுள்ள சின்ன கல்லை எடுத்துவிட்டால் பாறை எப்படி உருளும் என யாராலும் கணிக்கமுடியாது. அதைப்போலதான், காலநிலை புள்ளிகள் ஒன்பதும் உச்சத்தை தொட்டுவிட்டால் அதன் பிறகு காலநிலையை யாராலும் கணிக்கவோ மட்டுப்படுத்தவோ முடியாது.

சில பத்தாண்டுகளுக்கு முன்னர், புவியின் சராசரி வெப்பநிலை 5
டிகிரியை தொட்டால்தான் இந்த உச்சபுள்ளிகள் செயல்பட ஆரம்பிக்கும் என்றனர்.ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்,சராசரி வெப்பம் 1.5-2 டிகிரி வந்தாலே இந்த உச்சபுள்ளிகள் செயல்பட ஆரம்பித்துவிடும் என்கின்றன ஆய்வுகள்.சமீபத்திய ஆய்வுகள், இதில் சிலது உச்சபுள்ளியை எட்டிவிட்டதாகவும் இன்னும் சில
Read 6 tweets
14 Nov
2015 சென்னை வெள்ளத்திற்கு பிறகு, நீரியல் நிபுணர் பேரா.ஜனகராஜன் ஒருங்கிணைப்பில், சென்னையை வெள்ளத்திலிருந்தும், வறட்சியிலிருந்தும் காப்பாற்ற “மக்கள் வரைவு சாசனம்” (People’s Charter) வெளியிடப்பட்டது.

“இது எங்கள் சென்னை” என்ற கூக்குரலுடன் பள்ளி மாணவ-மாணவியர் 15,000பேர் பேரணியாக Image
மெரினா கடற்கரையில் சென்றனர், இந்த பேரணியை @poovulagu மற்றும் SBOA பள்ளிகள் ஒருங்கிணைத்தன.

மக்கள் சாசனத்தை தூக்கி கொண்டு இரண்டு நாட்கள் கருத்தரங்கம் sboa பள்ளியில் நடத்தினோம்.

சென்னை வளர்ச்சி குழுமத்துடன் இணைந்து சென்னை வெள்ளம் தொடர்பான கருத்தரங்கம்
ஒருங்கிணைத்தோம், அதில் “விமான பாதுகாப்பு நிபுணர்” உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்;அந்த கூட்டம் தொடர்பாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு முரசொலி செய்தி வெளியிட்டது.

சென்னையை வெள்ளம் சூழ் நகரமாக இல்லாமல் காப்பதற்கு குடிமை சமூக அமைப்புகள் தரப்பிலிருந்து தொடர்ச்சியாக குரல்கள்
Read 4 tweets
20 Oct
*பத்திரிக்கைச் செய்தி*
*அனைத்துக் கட்சி தலைவர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பு*
அக்டோபர் 20, 2021
[1] கூடங்குளம் அணுமின் நிலையம் தமிழ்நாட்டின் பெரும் தலைவலியாக மாறிக் கொண்டிருக்கிறது. கடந்த 2021 ஜூன் மாதம் 22 அன்று வருடாந்திர பராமரிப்புக்காக நிறுத்தப்பட்ட முதலாவது அணுஉலை,
70 நாட்கள் மூடப்பட்டு,செப்டம்பர் 2 அன்று மீண்டும் திறக்கப்பட்டது. வெறும் 35 நாட்கள் கழிந்ததும் முதலாவது அணுஉலை பழுதுபட்டு அக்டோபர் 8,2021அன்று மீண்டும் மூடப்பட்டது.இந்த கூடங்குளம் கோளாறு வேடிக்கையான விடயமென்பதைத் தாண்டி, விபரீதமாக மாறிக்கொண்டிருக்கிறது. இதுவரை முதல் இரண்டு உலைகள்
நூறு முறைக்கு மேல் பழுடைந்து நின்றுள்ளது.
கூடங்குளத்தில் திறம்பட இயங்காதிருக்கும் முதல் இரண்டு அணுஉலைகளில் நடைபெற்றிருக்கும் மாபெரும் முறைகேடுகள்,ஆபத்துக்கள், பற்றியெல்லாம் ஒரு சார்பற்ற விசாரணை நடத்தி வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். முழு உண்மைகளை மக்களுக்குச் சொல்லும்வரை,
Read 9 tweets
9 Aug
”இனி இயல்பு வாழ்க்கை என்பதே பேரிடர்களுக்கு நடுவில்தான்” வெளியானது ஐ.பி.சி.சி.யின் அறிக்கை.
கடந்த ஜூலை மாதம் உலகின் அனைத்து பிராந்தியங்களும் வெள்ளம், வறட்சி, புயல், நிலச்சரிவு, கடல் நீர் மட்ட உயர்வு, கனமழை, காட்டுத்தீ போன்ற ஏதோ ஒரு பேரிடரால் பாதிக்கப்பட்டோ அல்லது பாதிப்பிலிருந்து
மீண்டுகொண்டோ இருந்தது. இவையெல்லாம் கடந்த சில ஆண்டுகளாக நடந்து கொண்டிருப்பவைதானே இதில் புதிதாக ஏதுமில்லை என நீங்கள் நினைக்கலாம். ஆனால், ஜெர்மனியிலும், பெல்ஜியத்திலும் ஏற்பட்ட கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை காலநிலை மாற்றம் குறித்து தொடர்ச்சியாக கண்காணித்து வரும் எந்த
அறிவியலாளராலும் கணித்திருக்க முடியவில்லை. அறிவியலாளர்கள் பெரிதும் நம்பிக் கொண்டிருந்த பேரிடர்களை முன்கூட்டியே கணித்து விடும் அறிவியல் தொழில்நுட்பங்களால் கூட இந்த வெள்ள பாதிப்பை கணித்திருக்க முடியவில்லை. இன்னும் சில ஆண்டுகளில் காலநிலையில் குறிப்பிட்ட அளவு மாற்றம் நிகழும் என
Read 21 tweets
22 Jul
கெத்தான_மனிதர்கள்:-

ஒரு வாரத்திற்கு ஒரு லட்சத்து எண்பத்தாறாயிரம் டாலர்கள் சம்பாதிக்கும் "Sadio Mane of Senegal" (West Africa) என்றழைக்கப்படும் உலகப்புகழ் பெற்ற கால்பந்தாட்ட வீரர் தனது டிஸ்பிளே உடைந்த மொபைலுடன் ஆங்காங்கேத் தோன்றினார்.
ஒரு நேர்காணலில் அதுகுறித்துக் கேட்கப்பட்டபோது
நான் அதைச் சரி செய்துவிடுவேன் என்று சொல்லியிருந்தார். மீண்டும் “ஏன் நீங்கள் அதைச் சரிசெய்வதற்குப் பதிலாகப் புதிய மொபைலை வாங்கக்கூடாது?” என்று கேட்கப்பட்டபோது “என்னால் ஆயிரம் மொபைல்கள், 10 பெராரி கார்கள், 2 ஜெட் விமானங்கள், வைரங்கள் பதிக்கப்பட்ட கைக்கடிகாரங்களை வாங்கமுடியும்.
ஆனால் நான் ஏன் அவற்றை வாங்க வேண்டும்?” என்று பதில் கேள்வி கேட்டார்.
தொடர்ந்து “நான் வறுமையைப் பார்த்திருக்கிறேன், என்னால் படிக்க முடியவில்லை, அன்று எனக்கு விளையாடக் காலனிகள் இல்லை, நல்ல ஆடைகள் இல்லை, உணவு இல்லை; ஆனால் இப்போது என்னிடம் ஏராளம் இருக்கிறது, அதை வெளிக்காட்டிக்
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(