*பத்திரிக்கைச் செய்தி*
*அனைத்துக் கட்சி தலைவர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பு*
அக்டோபர் 20, 2021
[1] கூடங்குளம் அணுமின் நிலையம் தமிழ்நாட்டின் பெரும் தலைவலியாக மாறிக் கொண்டிருக்கிறது. கடந்த 2021 ஜூன் மாதம் 22 அன்று வருடாந்திர பராமரிப்புக்காக நிறுத்தப்பட்ட முதலாவது அணுஉலை,
70 நாட்கள் மூடப்பட்டு,செப்டம்பர் 2 அன்று மீண்டும் திறக்கப்பட்டது. வெறும் 35 நாட்கள் கழிந்ததும் முதலாவது அணுஉலை பழுதுபட்டு அக்டோபர் 8,2021அன்று மீண்டும் மூடப்பட்டது.இந்த கூடங்குளம் கோளாறு வேடிக்கையான விடயமென்பதைத் தாண்டி, விபரீதமாக மாறிக்கொண்டிருக்கிறது. இதுவரை முதல் இரண்டு உலைகள்
நூறு முறைக்கு மேல் பழுடைந்து நின்றுள்ளது.
கூடங்குளத்தில் திறம்பட இயங்காதிருக்கும் முதல் இரண்டு அணுஉலைகளில் நடைபெற்றிருக்கும் மாபெரும் முறைகேடுகள்,ஆபத்துக்கள், பற்றியெல்லாம் ஒரு சார்பற்ற விசாரணை நடத்தி வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். முழு உண்மைகளை மக்களுக்குச் சொல்லும்வரை,
விரிவாக்கப் பணிகளை நிறுத்திவைக்க வேண்டும்.

[2] ரஷ்யாவோடான 1997 அக்டோபர் ஒப்பந்தத்தின் அடிப்படையில், கூடங்குளம் அணுஉலைகளில் எரிக்கப்படும் எரிகோல்களை ரஷ்யாவுக்கேத் திருப்பி அனுப்பவேண்டும்.

[3] இந்தியாவில் அணுக்கழிவுகளின் ‘ஆழ்நிலக் கருவூலம்’ (Deep Geological Repository) எங்கேக்
கட்டப்போகிறோம் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்த பிறகே, கூடங்குளத்தில் ‘அணுஉலைக்கு அகலே’ (Away From Reactor) அமைப்பைக் கட்டுவது குறித்து மக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும்.
[4] மேற்படி இடைநிலை அணுக்கழிவு மையங்களை நிர்மாணிக்கும் வரை,
கூடங்குளத்தில்3 & 4 அணுஉலைகள் கட்டுவதை நிறுத்திவைக்க வேண்டும்.5 & 6 அணுஉலைகள் கட்டுவதை முற்றிலுமாகக் கைவிட வேண்டும்
[5] தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் அமைக்கப்படும் கூடங்குளம் அணுஉலைப் பூங்கா, வடக்குப் பகுதியில் நிறுவப்படும் கல்பாக்கம் அணுஉலைப் பூங்கா, போன்றவற்றைக் கைவிட்டு,நம்
மாநிலத்தை “அணுத்தீமையற்றத் தமிழ்நாடு” (Nuclear-free Zone Tamil Nadu) என்று அறிவிக்க வேண்டும்.
[6] ரஷ்யா,அமெரிக்கா,பிரான்சு, ஜப்பான் போன்ற வெளிநாடுகளின் தரமற்ற அணுஉலைகளை, தளவாடங்களை வாங்கி, அந்நாடுகளின் பொருளாதாரங்களைத் தூக்கிநிறுத்த உதவாமல், இந்திய மக்களும், தமிழர்களும், எங்களின்
வழித்தோன்றல்களும் நலமாய், பாதுகாப்பாய் வாழ வழிவகை செய்யவேண்டும்.
ஒருங்கிணைப்பு: அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் மற்றும் பூவுலகின் நண்பர்கள்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்குபெற்றவர்கள்
1.தொல். திருமாவளவன்
வி.சி.க
2. ஜவாஹிருல்லா
மனித நேய மக்கள் கட்சி
3. ஆர். பத்ரி CPM
4. த. லெனின் CPI
5. அந்தரிதாஸ்ம.தி.மு.க 6.உமர்பாருக் SDPI
7.வேணுகோபால் த.வா.க
8. நித்தியானந் ஜெயராமன்
Chennai Solidarity Group
9. கோ. சுந்தர்ராஜன்
பூவுலகின் நண்பர்கள்
@thirumaofficial @jawahirullah_MH @tncpim @sdpitnhq @NityJayaraman @VelmuruganTVK @spudayakumar

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with G. Sundarrajan

G. Sundarrajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SundarrajanG

9 Aug
”இனி இயல்பு வாழ்க்கை என்பதே பேரிடர்களுக்கு நடுவில்தான்” வெளியானது ஐ.பி.சி.சி.யின் அறிக்கை.
கடந்த ஜூலை மாதம் உலகின் அனைத்து பிராந்தியங்களும் வெள்ளம், வறட்சி, புயல், நிலச்சரிவு, கடல் நீர் மட்ட உயர்வு, கனமழை, காட்டுத்தீ போன்ற ஏதோ ஒரு பேரிடரால் பாதிக்கப்பட்டோ அல்லது பாதிப்பிலிருந்து
மீண்டுகொண்டோ இருந்தது. இவையெல்லாம் கடந்த சில ஆண்டுகளாக நடந்து கொண்டிருப்பவைதானே இதில் புதிதாக ஏதுமில்லை என நீங்கள் நினைக்கலாம். ஆனால், ஜெர்மனியிலும், பெல்ஜியத்திலும் ஏற்பட்ட கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை காலநிலை மாற்றம் குறித்து தொடர்ச்சியாக கண்காணித்து வரும் எந்த
அறிவியலாளராலும் கணித்திருக்க முடியவில்லை. அறிவியலாளர்கள் பெரிதும் நம்பிக் கொண்டிருந்த பேரிடர்களை முன்கூட்டியே கணித்து விடும் அறிவியல் தொழில்நுட்பங்களால் கூட இந்த வெள்ள பாதிப்பை கணித்திருக்க முடியவில்லை. இன்னும் சில ஆண்டுகளில் காலநிலையில் குறிப்பிட்ட அளவு மாற்றம் நிகழும் என
Read 21 tweets
22 Jul
கெத்தான_மனிதர்கள்:-

ஒரு வாரத்திற்கு ஒரு லட்சத்து எண்பத்தாறாயிரம் டாலர்கள் சம்பாதிக்கும் "Sadio Mane of Senegal" (West Africa) என்றழைக்கப்படும் உலகப்புகழ் பெற்ற கால்பந்தாட்ட வீரர் தனது டிஸ்பிளே உடைந்த மொபைலுடன் ஆங்காங்கேத் தோன்றினார்.
ஒரு நேர்காணலில் அதுகுறித்துக் கேட்கப்பட்டபோது
நான் அதைச் சரி செய்துவிடுவேன் என்று சொல்லியிருந்தார். மீண்டும் “ஏன் நீங்கள் அதைச் சரிசெய்வதற்குப் பதிலாகப் புதிய மொபைலை வாங்கக்கூடாது?” என்று கேட்கப்பட்டபோது “என்னால் ஆயிரம் மொபைல்கள், 10 பெராரி கார்கள், 2 ஜெட் விமானங்கள், வைரங்கள் பதிக்கப்பட்ட கைக்கடிகாரங்களை வாங்கமுடியும்.
ஆனால் நான் ஏன் அவற்றை வாங்க வேண்டும்?” என்று பதில் கேள்வி கேட்டார்.
தொடர்ந்து “நான் வறுமையைப் பார்த்திருக்கிறேன், என்னால் படிக்க முடியவில்லை, அன்று எனக்கு விளையாடக் காலனிகள் இல்லை, நல்ல ஆடைகள் இல்லை, உணவு இல்லை; ஆனால் இப்போது என்னிடம் ஏராளம் இருக்கிறது, அதை வெளிக்காட்டிக்
Read 4 tweets
12 Jul
கடந்த வாரம்தான் பாக்கிஸ்தானில் உள்ள ஒரு நகரமும், ஐக்கிய அரபு எமீரகத்தில் ஒரு நகரத்திலும் “வெட் பல்பு வெப்பநிலையை” (wet-bulb) எட்டிவிட்டது என்று கவலையோடு @Poovulagu குழுவில் விவாதித்து கொண்டிருந்தோம்,ஆனால் இன்று சென்னை நகரமே அந்த வெப்பநிலையை நெருங்கி கொண்டிருப்பதாக செய்திகள்
வருகின்றன. ஒவ்வொரு நகரத்திற்கும் பகுதிக்கும், அதன் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் (humidity) இவற்றைக்கொண்டு இந்த வெட் பல்பு வெப்பநிலை கணக்கிடப்படுகிறது. இந்த வெப்பநிலையை ஒரு பகுதி எட்டிவிட்டால் அதன்பிறகு நம் உடல் தன்னைத்தானே குளிர்வித்துக் கொள்ளும் தன்மையை இழந்துவிடும். அதற்குபிறகு
குளிர்சாதன வசதியில்லாமல் இருக்கமுடியாது. அப்படியெனில் விவசாயம், கட்டிடவேலை போன்ற வெளிப்புரத்தில் நடைபெறக்கூடிய வேலைகளை செய்யமுடியாது. எவ்வளவுதான் அதிக வெப்பத்திற்கு பழகியிருந்தாலும் இந்த WBT 32’டிகிரியை எட்டிவிட்டாலே அதன்பிறகு எந்தவேலையும் செய்யமுடியாது, 35டிகிரியை எட்டிவிட்டால்
Read 5 tweets
19 Jun
தமிழ்நாட்டை இராணுவமயமாக்க ஒன்றிய அரசுகள் தொடர்ந்து முயற்சி செய்துவருகின்றன. இந்தியாவிலேயே இரண்டு இடங்களில் அணுவுலைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான், உலகமே கைவிட்ட ஈனுலைகள் மூன்று கல்பாக்கத்தில் அமைக்கப்படுகின்றன. ஈனுலைகள்தான் ப்ளுட்டோனியத்தின் ஊற்று, இந்தியாவில் உள்ள கனநீர் உலைகளின்
அணுக்கழிவுகள் கல்பாக்கத்தில்தான் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. இரண்டாவது மறுசுழற்சி மையமும் கல்பாக்கத்தில் அமைகிறது, மறுசுழற்சி மையங்களில் அணுக்கழிவுகளில் இருந்து ப்ளுட்டோனியம் பிரித்தெடுக்கப்படுகிறது என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை. கூடங்குளத்தில் 6உலைகளும் அமைக்கப்படும்
பட்டச்சத்தில் உலகில் ஒரே இடத்தில் 6000மெவா உற்பத்தி செய்யும் அணுவுலைகளின் பட்டியலில் இணைந்துவிடும், இங்கேயே மென்நீர் உலைகளிலிருந்து வரும் அணுக்கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான ஆலைகள் அமைக்கப்படும்.இன்னும் 20-30ஆண்டுகளில் நியூட்ரினோ ஆயுதங்களை உருவாக்க பயன்படும்ஆய்வகம் தமிழ்நாட்டில்
Read 7 tweets
6 Jun
ஆண்டிபயாடிக்ஸ் பயன்பாடு குறித்த ஒருங்கிணைந்த நெறிமுறையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அளவிற்கு அதிகமாக அல்லது தேவையில்லாமல் பயன்படுத்தப்படும் ஆண்டிபயாடிக்ஸால் நம் உடம்பில் உள்ள “நோய்க் கிருமி எதிர்ப்பு கட்டமைப்பு” வலுவிழக்கிறது. ஆங்கிலத்தில் Anti-microbial resistance (AMR) என்று
அறியப்படும் இந்த கட்டமைப்புதான் பல்வேறு கிருமிகளால் நமக்கு ஏற்படும் நோய்கள் வராமல் தடுக்கிறது. ஏஎம்ஆர்தான்“சுகாதார துறையின் காலநிலை மாற்றம் என்கின்றன” ஆய்வுகள்.அடுத்த 30 ஆண்டுகளில் இதனால் 1கோடிக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மருத்துவ துறையில்
பயன்படுத்தப்படும் மருந்துகளை தவிர தொழில்முறை இறைச்சி உற்பத்தியிலும் பயன்படுத்தபடும் ஆண்டிபயாடிக்ஸ் மற்றும் வளர்ச்சி ஊக்கிகளும் ஏம்எம்ஆரை வலுவிழக்கச் செய்யும் வேலையை செய்கிறது. அதனால்தான் “மருந்தை மீறிய காசநோய் மற்றும் மலேரியா நோய்கள்”(drug resistant TB &Malaria) அதிகமாகின்றன.
Read 5 tweets
5 Jun
கொரோனா தொற்று நமக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துகிறது. இனிமேல் மனித நலன் என்ற ஒன்று தனியாக கிடையாது, காட்டுயிர் நலன், தாவர நலன், சூழலியல் நலன் இவை எல்லாமும் இணைந்ததுதான் மனித நலனாக இருக்க முடியும். காலநிலை மாற்றம் தாவரங்களின் ஊட்டச்சத்து அளவை (Nutritional value) சுமார் 10-12% வரை
குறைக்கிறது, அதனால் நமக்கு தேவைப்படும் உணவின் அளவு அதிகரிக்கும். காடுகள் அழிக்கப்படுவதால் காட்டுயிர்களின் வாழ்விடங்கள் சுருங்குகின்றன, இவை எல்லாம் மனித நலனில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.
உலகநாடுகள் எல்லாம் "ஒருங்கிணைந்த நலன்" (One Health) குறித்த முன்னெடுப்புகளைதான்
அறிவித்து வருகின்றன. தமிழகத்திலும் இது குறித்த விவாதங்கள் துவங்கவேண்டும். ஒருங்கிணைந்த நலன் எதை குறிக்கும், தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமுறைகளின் ஒருங்கிணைந்த மருத்துவம் எவ்வாறு நடக்கவேண்டும் என்பது குறித்தெல்லாம் இன்று இரவு 9.15 மணிக்கு நம்முடன் ட்விட்டர் ஸ்பேசஸில்
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(