அமெரிக்காவில் மைசூர் ராக்கெட்களுடன் திப்பு சுல்தானின் ராணுவம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிடும் (1780 ஆங்கிலோ-மைசூர் போர்) ஓவியத்தை NASA வின் Wallops Flight Facility வரவேற்பறையில் வைத்து திப்பு சுல்தானின் ராக்கெட் தொழில்நுட்ப பங்களிப்புக்கு NASA மரியாதை செலுத்தியுள்ளது.
திப்பு சுல்தானின் மறைவுக்கு பிறகு அவரது மைசூர் ராக்கெட் தொழில்நுட்பத்தை ஐரோப்பாவிற்கு எடுத்துச் சென்று 1804 இல் காங்கிரீவ் ராக்கெட் (Congreve Rocket) என்று பெயர் மாற்றினர்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1.முகவுரை
2.இறந்தது யார்?
3.சிக்கிய தடயங்கள்
4.மர்மத்தை விலக்கிய மருத்துவ அறிக்கை
5.இறந்தது சுகுமார குருப்பா?
6.குற்றம் நடந்தது என்ன?
7.கோபாலகிருஷ்ண குருப்
8.ஏன் போலி இறப்பு சான்றிதழ்?
9.வளைகுடா வாழ்க்கை
10.வளைகுடா இளவரசர்
11.என்ன சதித்திட்டம்?
12.அன்றிரவு காரில் ஏறிய நபர்
13.கொல்லப்பட்டது யார்?
14.விசாரணை படலம்
15.வழக்கின் முடிவு
16.தேடும் படலம்
17.உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?
18.முடிவுரை
19.குறிப்பு
20.விவரணைகள்
1.முகவுரை
இக்கட்டுரையை சுகுமார குருப் கூட வாசிக்கக்கூடும்? என்னப்பா! தொடக்கமே விவகாரமாக இருக்கிறதே என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. பின்னர்? 37 வருடங்களாக தேடப்படும் குற்றவாளி எங்கு எப்படி உருமாறி இருக்கிறார் என்பதை யாரறிவார்? அத்தோடு உயிரோடு இருக்கிறாரா? என்பதும் உறுதியாக
படம் பார்ப்பதும் அரசியல் அறிவதும் நம் நாடி நரம்பில் முறுக்கேறிய விஷயம்.
இத்துறையில் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு கள யதார்த்தம் இருப்பது சகஜமானது.
இன்று அந்தந்த காலகட்டத்தில் வெற்றி பெற்ற பழைய சினிமா படங்களை அரசியல் நிகழ்வுகளை சிலர் Cringe என்று சொல்வதை ஜீரணிப்பது கடினமாக உள்ளது.
நாம் பார்த்து கேட்டு அறிந்து வளர்ந்த ஒன்றை நேற்று வந்த யாரோ சொன்னான் எவனோ சொன்னான் என்று போகிற போக்கில் Cringe என்று கேலி பேசி நகர்வது நாகரீகமான செயலாகுமா?
அவரவர் ரசனை அவரவருக்கு உரியது. அட இவனுங்க ரசனை கெட்டவனுங்க என்று எதை வைத்தும் எடை போட முடியாது.
உங்கப்பா 1960 காலகட்ட பாடல்களை விரும்பி கேட்பதால் 2020 பாடல்களை கேட்க விரும்பாததால் அவர் ரசனையே செத்துவிட்டது என்று விமர்சிக்க முடியுமா? அது தகுமா?
Cringe என்று பழைய நிலையை கேலி செய்தால் அதை ரசித்த நம்மையும் சேர்த்து கேலி செய்வதாகும்.
நகைச்சுவை நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை சோகமானது என்பதற்கு சார்லி சாப்ளின் முதல் வடிவேலு வரை யாரும் விதிவிலக்கல்ல. இதில் நாகேஷ் பற்றி ஒரு சில குறிப்புகளை பகிர்கிறேன். பிராமண குடும்பத்தில் பிறந்த நாகேஷ் கிறிஸ்தவ பெண் ரெஜீனாவை திருமணம் புரிந்தார்.
இத்தம்பதியினருக்கு ரமேஷ் பாபு, ராஜேஷ் பாபு, ஆனந்த் பாபு என்று 3 ஆண் குழந்தைகள் பிறந்தன. இவர்களின் குடும்ப வாழ்க்கை நெடுநாள் இன்பமாக இருக்கவில்லை ஏனெனில் நாகேஷ் மைத்துனர் செல்வராஜ் மரணம் கொலையா? தற்கொலையா? என்ற விசாரணைக்காக ரெஜீனா மற்றும் குடும்பத்தினரை காவல்துறை கைது செய்தனர்.
உரிய விசாரணைக்கு பிறகு ரெஜீனா மற்றும் குடும்பத்தினர் விடுதலை செய்யப்பட்டனர். இம்மரண வழக்கு விசாரணை தொடர்பாக நாகேஷ் மற்றும் மனோரமா உறவில் விரிசல் ஏற்பட பிறகு 1968க்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை. 1970 நவக்கிரகம் படம் மூலம் நாகேஷையும் மனோரமாவையும் நடிக்க வைக்க முயன்றார் K.B
காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாட்டிற்கு ஆதரவாக கன்னட திரையுலகம் நிற்கவில்லை ஆக கன்னட திரைத்துறையை சேர்ந்த புனித் ராஜ்குமார் மரணத்திற்கு தமிழர்கள் ஏன் இரங்கல் தெரிவிக்க வேண்டும் என்று சில நாம் தமிழர் தம்பிகளின் ட்விட்டை காண நேரிட்டது.
ஏன்டா! நீங்கெல்லாம் மனிதர்களா?
அவனவன் ஊருக்கு தானே அவனவன் நிப்பான்?
இப்போ தமிழ் நாடு தண்ணீருக்கு அண்டை மாநிலங்களை தான் பெருவாரியாக நம்பி இருக்கிறது அதனால் நாம் ஏதோ கடமை கண்ணியம் கட்டுப்பாடு கொண்ட நேர்மையாளர்கள் போல தண்ணீர் அணுகுமுறையில் பிற மாநிலங்களை நடக்க சொல்லி கேட்கிறோம்.
ஒரு வேளை பிற மாநிலங்கள் தமிழ் நாட்டு தண்ணீரை நம்பி இருந்தால் இங்கு தமிழ் நாட்டிலும பல்வேறு பிரிதிவிராஜ் சுகுமாறன் இருந்திருப்பார்களே?
ஆக நமக்கு ஒரு நியாயம் மத்தவங்களுக்கு ஒரு நியாமா?
அதெல்லாம் இப்படி தான் பலரும் இருப்பார்கள் அதை லாபி செய்து சரி செய்ய வேண்டியது அரசு வேலை.
ஒரு கத்தியில் இருக்கூர்மை இருக்க முடியாது என்ற அடிப்படையில் அங்கே பிரச்சனை கிளம்பி அந்த ஒரு கத்தி துண்டாகி விட்டால் அது இரண்டு கத்தியாக மாறக்கூடும். இப்படி வாழ்வில் சில விஷயங்கள் Just Like That என்று அரங்கேறி இருக்கும் ஏனெனில் மனிதர்களுக்கு இடையில் மனக்கசப்பு எழுவது சகஜமானது.
இங்கு சில பிரபலங்களுக்கு இடையில் நிலவிய மனக்கசப்பு குறித்து காண இருக்கிறோம். இந்த செய்தி எல்லாம் உண்மையா? கிசு கிசுவா? என்று கேட்டால் நிச்சயம் கிசு கிசு அல்ல ஆனால் உண்மையா? என்றால் நிச்சயம் அது சம்பந்தப்பட்ட தரப்புக்கு மட்டுமே தெரியும். மற்றவை யூகமாக அமையும்.