பல நாடுகளின் “கதம்பம்” ஒரு கண்டம், இந்தியாவை, எவரும் ஒரு துணைக் கண்டம் சிறு அளவினதான கண்டம் என்றே கூறினர்- கூறுவர். அதன் நிலப்பரப்பைக் கவனித்து மட்டுமல்ல, மக்களின் நிலை, வரலாற்று நிலை, ஆகியவற்றினையும் கவனித்து, அப்படிப்பட்ட துணைக் கண்டத்துக்கு இப்போது,
தயாரிக்கப் படும் ஆட்சி முறைத் திட்டம், என்ன? ஒரு புதிய ஏகாதிபத்தியத் திட்டம் தயாரிக்கப்படுகிறது!
கூட்டாட்சி என்று பெயர் நாட்டின் பல பகுதிகள் ஒன்றோடொன்று கூட்டாகி, அந்தக் கூட்டு விவகாரத்தைக் கவனிக்க, கூட்டுப் பொறுப்பை ஏற்க ஒரு நாடு அலுவலகத்தை, மத்ய சர்க்காரை அமைத்துக் கொள்ளும், பெடரல் முறை, அங்கு, இது தீட்டப்படுவதாகக் கூறுகிறார்கள். ஆனால் திட்டத்தை அலசிப் பார்த்தால்,
இந்தத் துணைக் கண்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாகாணங்களிலும் பலமற்ற, பயன் தரும் காரியமாற்றும் ஆற்றலும் வசதியுமற்ற ஆட்சி முறையும், இந்த மாகாணங்களை ஆட்டி வைக்கும் சூத்திரக் கயிறு, மத்ய சர்க்காரிடத்தில் தரப்பட்டிருப்பதும் விளங்கும்.
வெள்ளையர் மீது குறை கூறியபோது, மிக முக்கியமாக வலியுறுத்தப்பட்ட விஷயம், மாகாணங்களுக்கு, போதுமான மக்களாட்சிக்குத் தேவையான அளவுள்ள, பலமும், அதிகாரமும் தரப்படவில்லை என்பது. மாகாண சுயாட்சி வேண்டும் என்ற மூல முழக்கத்தை மக்கள் மறந்து விட்டிருக்கமாட்டார்கள் என்று நம்புகிறோம்.
இப்போது, தயாரிக்கப்படும் ஆட்சித் திட்டத்தின்படி, இந்த மூல முழக்கம், அடிப்படைக் கோரிக்கை, மாகாண சுயாட்சி, வெறும் கேலிக் கூத்தாக்கப்படுகிறது- மாகாணங்களுக்குத் தரப்படும் அதிகாரத்தின் தன்மை, அளவு, நிதியின் அளவு, வகை, ஆகியவற்றைக் கவனிக்கும்போது, ஒரு பெரிய ஜில்லா போர்டு போன்ற நிலையே,
மாகாணங்களுக்குத் தரப்பட்டிருப்பது விளங்கும்.

வெளிநாட்டுடன் தொடர்பு, உலகப் போக்குவரத்து, உலகில் மற்ற நாடுகளுடன் வியாபாரத் தொடர்பு போன்ற பெரிய இந்தத் துணைக் கண்டத்தின் பாதுகாப்புக்கான, காரியங் களைக் கவனித்துக்கொள்ள மட்டுமே. ஒரு பலம் பொருந்திய அமைப்பு வேண்டும்.
அவ்வளவு பொறுப்பான காரியத்தை எந்த ஒருதனிப்பட்ட மாகாணம் தானாகவே செய்து கொள்ள முடியாது. எனவே, இதற்கோர் மத்திதிய சர்க்கார் வேண்டும் என்றுதான் பலரும் இதுநாள் வரை வாதாடி வந்தனர். இந்தத்துணைக் கண்டத்தை, ஒரே பேரரசுக்கு உட்படுத்த வேண்டும் என்றோ, இங்கு தனிப் பண்புகளுடன் உள்ள,
பல்வேறு பகுதிகளையும், உருக்கி ஒரே அச்சில் வார்த்து எடுக்க வேண்டுமென்றோ எவரும் சொன்னதில்லை! இப்போதோ, இந்த இலட்சியத்துக்கு நேர்மாறான காரியம் நடைபெறுகிறது- மக்களோ, இந்தக் காரியத்தை முன்னின்று நடத்துபவர்கள்.
'நாட்டுப் பற்று'க் கோலம் பூண்டிருப்பதால், மயங்கிப் போயுள்ளனர் நமது உரிமை பறிபோவதை உணராமலுமிருக்கின்றனர்.

மொழி, கலை, எனும் உயிர்ப்பிரச்னைகள், முதற்கொண்டு வரி, அதிகாரம், எனும் பிரச்னை கள் வரையிலே, `மத்ய சர்க்கார்' ஆதிக்கம் செலுத்துவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு விட்டது!
மாகாணங்களின் நல்வாழ்வுக்குத் தேவையான, சகல காரியத்தையும் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, உட்பாதுகாப்பு, வளத்தை ஏற்படுத்துவது போன்ற சகல காரியமும் மாகாண சர்க்காரின் பொறுப்புகள் இவைகள் சரிவரச் செய்யப்பட்டால்தான், அன்னியராட்சி ஒழிந்து, நமது ஆட்சி ஏற்பட்டது,
அதன் பயனாகப் புது வாழ்வுப் பெற்றோம் என்று மக்கள் பூரிப்புடன் கூற முடியும். இந்த வெற்றி கிடைக்க வேண்டு மானால், மாகாண சர்க்காருக்குப் பணம் ஏராளமாக வேண்டும்- வளரக்கூடிய வரிவகை வேண்டும்.
புதிய திட்டம், முதலில் இதற்கு வழி அமைக்கவில்லை-
மாகாணங்களுக்கென ஒதுக்கி வைக்கப்படும் வரி, மாகாணங்களின் பெரிய பொறுப்புகளை நிறைவேற்றுவதற்குப் போதுமானது அல்ல.

அதிகாரங்களைப் பற்றியோ, கூற வேண்டியதில்லை- மத்திய சர்க்காரின் ‘எடுபிடி’ களாக மட்டுமே, மாகாண சர்க்கார்கள் இருக்க முடியும், எதற்கும் “டில்லி தேவதை”களின், உத்தரவு, தேவை!
நாட்டுக்கு ஏதேனும் “நெருக்கடி” என்று தோன்றினால், மத்திய சர்க்கார, இந்த ‘அல்ப சொல்ப’ அதிகாரத்தையும் கூட ரத்து செய்துவிடலாம்!. “நெருக்கடி” என்பதற்கு வியாக்யானம் கூறும் பொறுப்பும் மத்திய சர்க்காருடையது.
இந்திய துணைக்கண்டத்துக்கு ஒரு அரசு என்ற திட்டம் வகுக்கப்பட்டால், இப்படித்தான் மாகாணங்களைப் பட்டினி போடும் திட்டமாக இருக்குமென்பதை அறிந்துதான் நாம், திராவிட நாடு, தனியாட்சி பெற வேண்டும் என்று கூறி வந்தோம்- கூறி வருகிறோம்.
அந்தத் திட்டம் மக்களின் கருத்துக்குப் புரியாதபடி செய்ய “தேசியக் கோலத்தைத்தான் ஒரு சிலர் மிக மிகச் சாமர்த்தியமாகப் பயன் படுத்துகின்றனர்.

இந்திய துணைக் கண்டத்தை ஒரு குடைக் கீழ் ஆள முயற்சித்தவர்களின், “கதி” பற்றி வரலாறு, நன்கு நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
வெளிநாட்டு வெறியர்கள் இந்தத் துணைக் கண்டத்தின் மீது மோத நினைத்தால், நாம் ஒன்று படவும்- கூட்டாகப் பணிபுரியவும்- ஒரு அமைப்பு இருக்கட்டும்- அந்தப் பலத்தைத் தேடித்தர, “மாகாணங்கள்” தத்தமது வசதிக்கு எற்றபடி முன்வர வேண்டுமென்பதற்கான ஓர் திட்டம் தீட்டுவோம் - வேண்டாம் என்பாரில்லை.
ஆனால், ஒவ்வொரு பகுதியும் அதிலும் சிறப்பாக, தனியாட்சி செலுத்தி வந்த, செலுத்து வதற்குத் தகுதியும் திறமையும் வாய்ந்த, தனிப் பண்பு கொண்ட மக்கள் வாழ்கின்ற பகுதிகளை, ஒரே பட்டியில் போட்டு அடைத்து அதிகாரமற்ற, பொருள் பலமற்ற இடங்களாக்கி, அவ்வளவு அதிகாரங்களையும், பொருள் பலமற்ற இடங்களாக்கி,
அவ்வளவு அதிகாரங்களையும் மத்ய சர்க்கார் எனும் ஒரே இடத்தில், குவித்து விடுவது நல்லதல்ல- நடைமுறைக்கு ஏற்றதல்ல- ஜனநாயகமல்ல- பாசீசத்துக்குத்தான் வழி கோலும்.

@annadurai_tn , (புதிய ஏகாதிபத்யம்!, கட்டுரை, திராவிட நாடு, 14–11–1948)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Arignar Anna | அறிஞர் அண்ணா

Arignar Anna | அறிஞர் அண்ணா Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @annadurai_tn

30 Oct
இந்திய ஒன்றியம் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த நாள் நவம்பர் 1, 1956 பற்றி , 4–11–1956 திராவிட நாடு இதழில் "வாழ்க தமிழகம், வருக திராவிடம்" எனும் தலைப்பில் தம்பிக்கு அண்ணாவின் கடிதம்.

தமிழக அமைப்பு - நேரு பண்டிதரின் திறமை -பாரதத்தில் தமிழ்நாடு
தமிழகம் திருநாள் கொண்டாடுகிறது - தாயகம் விழாக் கோலம் பூண்டிருக்கிறது - திருநாட்டைப்பெற்றோம், இனி இதன் ஏற்றம் வளரத்தக்க வகையிலே பணிபுரிதலே நமது தலையாய கடன் என்று,தமிழ்ப் பெருங்குடி மக்களெல்லாம் உறுதிகொண்டிடும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது -
கொடியும், படையும், முரசும் அரசின் முறையும் வேறு வேறு எனினும், எல்லா முற்போக்குக் கட்சிகளும், தாயகத்தின் திருவும் திறனும் செழித்திடப் பணியாற்ற வேண்டும் என்பதிலே, முனைந்து நிற்கின்றன - புதிய தமிழகம் கண்டோம், இது புதியதோர் உலகிலே உரிய இடம் பெற்றுத் திகழ்ந்திட வேண்டும் -
Read 70 tweets
18 Jun
புராண இதிகாச "மனுதரும" ஒழிப்பு

கம்ப ராமாயணம் பெரிய புராணம், மனுநீதி முதலிய புத்தகங்களைச் சுயமரியாதைக்காரர்கள் தீ வைக்கப் போவதை குறித்து, இந்து பத்திரிகை 17.01.43-ல் ஓர் உபதலையங்கத்தில் ஓர் ஒப்பாரி வைத்து அழுதிருக்கிறது.
உனக்கு வேண்டாதவைகளைக் கொளுத்த உனக்குச் சுதந்திரமிருக்கும்போது, எனக்கு வேண்டாதவைகளை நான் கொளுத்தினால் நீ என்ன கேட்பது, பாலம் கட்டினால் இருகரைக்கும்தானே? உனக்கொரு வழக்கு மற்றவர்களுக்கு ஓர் வழக்கா? இதற்குச் சர்க்கார் உதவி தேடுவது வேறா?
நிற்க! சுயமரியாதைக்காரர்கள் கம்பராமாய ணத்தையும், பெரியபுராணத்தையும், தமிழ் அபிமானம் கருதித் தீக்கிரையாக்குவதினின்றும் விலக்கிவிட்டு மனுஸ்மிருதியை மட்டுமூ எரியவிடுவார்களா; அதை தீக்கிரையாக்க வேண்டியது அவசியத்திலும் அவசியம்.
Read 5 tweets
30 Jan
காந்தி பார்ப்பன கோட்ஸேவால் படுகொலை செய்யப்பட்டதை ஒட்டி,
உலகப்பெரியார் காந்தி என்னும் தலைப்பில் அண்ணாவின் வானொலிப் பேச்சு, 1948

உலக உத்தமர்,மறைந்ததால் உள்ளம் நொந்து கிடக்கும் நாம், ஒருவருக்கொருவர் ஆறுதல் மொழி கூறிக் கொள்ளும் நிலையிலே இருக்கிறோம். ஒரு கிழமைக்கு மேலாகிவிட்டது. 1/
இழிகுணத்தான், மானிலம் போற்றும் மகாத்மாவைக் கொலை செய்து, உலகம் இன்றும் அழுதுகொண்டுதான் இருக்கிறது. அவருடைய மாண்புகளைப் பற்றிப் பேசாத நாடில்லை, எழுதாத ஏடில்லை. எங்கும் கலக்கம் – ஏக்கம். எவருக்கும் தாங்கொணாத் துக்கம். அதை மாற்ற அவரைப்பற்றிப் பேச முனைகிறோம். 2/
ஒவ்வொரு பேச்சும், மீண்டும் மீண்டும், கண்ணீரைக் கொண்டுவரவே உதவுகிறது. மூண்ட தீ அணையவில்லை துக்கம் தரும் நிலை அது. ஆனால் அவர் புகழ் ஒளிபரவுகிறது. அதை எண்ணுவோம்; ஆறுதல் பெற முயற்சிப்போம். 3/
Read 13 tweets
22 Dec 20
231.நாம் யாருக்கும் மேலல்ல! யாரும் நமக்கு மேலோர் அல்ல! நாம் ஆள ஆட்கள் வேண்டாம்! நம்மை ஆளவும் ஐயர்மார் வேண்டாம்! நம்மிடையே தரகர் கூடாது, தாயையும் ஆகாது, சேரியும் கூடாது, அக்ரகாரமும் ஆகாது, யோக யாக புரட்டுகள், புரோகித பித்தலாட்டம், மனுக்கொடுமை வேண்டாம்.
மனிதர் யாவரும் சரி நிகர் சமமாக வாழ்வோம் என்று கூறுபவர் எப்படி தம்மை இந்து என்று கூறிக்கொள்ள முடியும்? மூட மதிக்காரர், கொடுமைக்காரர், அடிமை சூத்திரன் என்று கூறிக்கொள்ள எப்படித்தான் மனம் இடம் தரும்? எப்படித்தான் துணியும்? இந்து மதம் என்பதிலே உள்ளக் கடவுள் முறை, சமுதாய முறை,
மதக்கதைமுறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவைகளை அலசிப்பார்த்த பிறகு யாருக்குத்தான் தன்னை ஓர் இந்து என்று கூறிக்கொள்ள மனம் இடம் தரும்? பாம்பை எடுத்து படுக்கையில் விட்டுக்கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா? வீதிக் குப்பையை வீட்டுக்குள் கொண்டுபோய்ச் சேர்ப்பாரா?
Read 10 tweets
17 Dec 20
அறிஞர் அண்ணாவின் நீதிக்கட்சி பொன்விழா உரை

நீதிக்கட்சியின் வரலாறு, ஓர் அரசியல் கட்சியின் வரலாறு அல்லது தமிழக அரசியல் வாழ்க்கையின் ஓர் ஆராய்ச்சியேயாகும். உப்பு பல பண்டங்களுடன் கலந்து சுவை கூட்டுவதைப்போல நீதிக்கட்சியின் பண்பாடு, இன்று பல கட்சிகளிலும் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.
நீதிக் கட்சியினர் 17 ஆண்டுக்காலம் ஆட்சி நடத்தினர். அவர்கள் காலத்தில்தான் “கோயில் சொத்துக்களுக்குக் கணக்கு வைக்க வேண்டும்” என்று கூறும் அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் போன்ற சிறந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
நீதிக் கட்சியின் ஆட்சி நடைபெற்ற அந்த நாட்களில், இந்தியாவில் “இரட்டை ஆட்சிமுறை” செயலில் இருந்தது. முக்கியமான அதிகாரங்களையெல்லாம் ஆங்கிலேயர்கள் தங்கள் கையில் வைத்துக்கொண்டு , சில்லறை அதிகாரங்களை மட்டுமே மாநில ஆட்சியாளர்களிடம் தந்தனர்.
Read 11 tweets
14 Nov 20
தீ....வாளி!

தமிழரின் தன்மானத்தைச் சுட்டுக் கருக்கும் ஆரியத் தீ! தமிழரின் வாழ்வைச் சித்திரவதை செய்யும் வாளி! இந்தத் தீவாளி, வருகிறது. தீபம் ஏற்றுங்கள், புத்தாடை புனையுங்கள், புன்முறுவல் செய்யுங்கள் என்று புராணீகர்கள் கூறுவர், தீபாவளி ஸ்நானம் என்று மகத்துவம் கூறுவர்,
மடைத்தனத்தை வளர்க்க, தன்மானமுள்ள தமிழரே! தீபாவளி கொண்டாட வேண்டாம் என்று உம்மைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் - காரணத்தோடு. முரட்டுப் பிடிவாதக்காரரும், மூடமதியிலே மூழ்குவதிலே, சேற்றிலே அமிழ்ந்து ஆனந்திக்கும் எருமைபோலக் களிப்போரும், எட்டிலே உள்ள எதற்கும், எம்மால் புதுப்பொருள்
கூறமுடியும், புலமையின் காரணமாக, என்று கூறுவோருக்கும், மனைதோறும் அகல்விளக்குச் சுடர்விடும் அழகு, நமது நாட்டுக்கலையின் கனிவு என்றுகூறும் கலாரசிகர்கட்கும், நாம், மதிவழிநடமின் என்று கூறி, சொல்லை இழக்க விரும்பவில்லை. புறம்போக்கு நிலத்திலே பொழுது புலருமுன் ஆரம்பித்து,
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(