படத்தோட ரிவ்யூ போற முன்னாடி படம் பாக்கதவங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். இது ஒரு டைம் லூப் திரைப்படம் என்பதால், டைம் லூப் என்றால் என்ன என்பதை நன்கு தெரிந்துக்கொண்டு அதன் பிறகு படம் பாருங்கள். டைம் லூப் பற்றிய புரிதல்
இல்லாமல் படத்திற்கு சென்று விட்டு, வந்த காட்சியே வருகிறது நல்லாவே இல்லை என்று ஒரு நல்ல படத்தை பற்றி தவறான விமர்சனம் செய்திட வேண்டாம் 🙏🏼.
#Maanaadu
நண்பரோட காதலை சேர்த்து வைப்பதற்காக துபாயில் இருந்து இந்தியா வருகிறார் #STR , காதலை சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடும் வேளையில்
எதிர்பாராமல் நடக்கும் ஒரு விபத்தால் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள, இறந்தும் விடுகிறார்கள். அங்கிருந்து துவங்குகிறது நாயகன் #STR க்கு டைம் லூப் ♾️. அது ஏன் நடக்கிறது? இவர்கள் சந்தித்த பிரச்சனை என்ன? நாயகனுக்கு ஏன் டைம் லூப் உருவாகிறது? இறுதியில் அந்த டைம் லூப்பில் இருந்து எப்படி
வெளியே வருகிறார்? என்பது மீதி கதை.
உலக சினிமாக்கே உரித்தான பழையை பொலிடிகல் கதை தான், ஆனா அதுக்குள்ள இந்திய சினிமாவே இதுவரை பாக்காத டைம் லூப் அப்படின்ற ஒரு கான்செப்ட்ட கொண்டு வந்து சும்மா விறுவிறுனு கதையை நகர்த்தி சென்றதற்காகவே முதல்ல @vp_offl சாருக்கு ஒரு மிகப்பெரிய பாராட்டுகள்
கொஞ்சம் பிசிறு தட்டுனாலும் படம் அவ்ளோதான், ஆனா ஒவ்வொரு சீனும் நுணுக்கமாக வச்சி செதுக்கியிருக்காரு மனுஷன் 🔥👌🏼👏🏼. சண்டைக் காட்சியாகட்டும், இடையிடையில் பேசும் அரசியல் வசனமாகட்டும், ஒரு சமுதாயத்தை வச்சி எப்டி அரசியல் பண்ணிட்டு இருக்காங்கன்றதாகட்டும், பார்த்து பார்த்து பக்காவா
பண்ணியிருக்கார் மனுஷன் 👌🏼, ஒரு சிறப்பான கம்பேக் 🔥 இதே வழில போனாருனா கண்டிப்பா முக்கிய இயக்குனர்கள் பட்டியல்ல இவரும் இடம் பிடிப்பாரு அதுல எந்த சந்தேகமும் இல்ல. ஒரே வருத்தம் என்னனா #VoiceOfUnity என்ட் டைட்டில் கார்ட்லயாவது வச்சிருந்துறுக்களாம் 😓.
பக்கமா பஞ்ச் பேசாம, கதைக்கு என்ன தேவையோ அதை சிறப்பா பண்ணியிருக்காரு 👌🏼. டைம் லூப்ல மாட்டிக்கிட்டு குழம்புறதாகட்டும், நண்பர்களுக்காக கண்ணீர் சிந்துறதாகட்டும், ஒரு சமுதாயம் மேல பழி விழுந்துறக் கூடாதுனு அதுக்கா இவர் எடுக்குற முயற்சிகளாகாட்டும் தன்னோட பங்களிப்ப நல்லா கொடுத்துறுக்கார்
இவருக்கும் இது ஒரு நல்ல கம்பேக்னு தான் சொல்லனும்.
@iam_SJSuryah யப்பா.. யப்பா.. யப்பா.. என்ன மனுஷன் சார் நீங்க என்ன நடிப்பு என்ன நடிப்பு சும்மா பின்னி பெடலெடுத்துட்டீங்க 🔥💥👌🏼👏🏼. நமக்கு ஏன் இந்த நாள் ரிப்பீட் ஆகுதுனு தெரியாம குழம்புறதாகட்டும், அதுல இருந்து தப்பிக்க #STR அ
மிரட்டுறதாகட்டும், பயங்கரமா பண்ணியிருக்காரு மனுஷன் 🔥. ஆப்ட்டர் இன்டர்வெல் க்கு அப்புறம் YG மகேந்திரன் கிட்ட இவர் பேசுற அந்த ஒரு சீன் போதும் இவர் நடிப்ப பத்தி சொல்ல தியேட்டர்ல விசிலும் கிளாப்சும் அல்லுது. #STR , #YGMahenthiran இவரு இவங்க மூணு பேரும் வர்ற அந்த சீன் யப்பா 🤣💥👌🏼
அந்த இடத்தில மூணு பேரோட பெர்பார்மும் பயங்கரம் தியேட்டரே சிரிப்பு சத்ததுல அதிருது 🤣🔥. #SJSuryah இவர் மட்டும் இல்லனா செகன்ட் ஆப்பே இல்ல பயங்கரமா பண்ணியிருக்கார் மனுஷன் 👌🏼👏🏼.
@thisisysr ரொம்ப நாளைக்கு அப்புறம் பின்னணி இசையில பக்காவா பண்ணியிருக்கார் இவருக்கும் ஒரு நல்ல கம்பேக் 🔥.
கேமரா, எடிட்டிங்ன்னு எல்லாமே பயங்கரமா பக்காவா பண்ணியிருக்காங்க 👌🏼. படத்துல ஆங்காங்கே பழைய சிம்பு தெரியக் கூடாதுனு எடிட்டிங்ல கொஞ்சம் மெனக்கட்டுருக்காங்க அது மட்டும் சின்ன மைனஸா நல்லாவே தெரியுது, அதுல இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்களாம் ன்றது என்னோட தனிப்பட்ட கருத்து.
ஓவரால் ஒரு நல்ல டைம் லூப் த்ரில்லர் 💥👌🏼. டைம் லூப் பத்தி நல்லா தெரிஞ்சுட்டு தியேட்டர்ல போய் பாத்தீங்கனா கண்டிப்பா ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல ஆக்சன் த்ரில்லர் படம் பார்த்த ஃபீல இந்த படம் நிச்சயம் கொடுக்கும் அதுக்கு நான் கேரண்டி 😇🤗.
எல்லோரும் அரைச்சு ஓஞ்ச மா(ரிவ்யூ)வ தான் நா இன்னைக்கு அரைக்கப் போறேன், ஏன்னா நா இப்போ தான் பாத்து முடிச்சேன் அதான் 😌.
சின்ன பசங்க விளாட்ற விளையாட்ட பெரியவங்களோட, பிரைஸ் மணி வச்சி, கொஞ்சம் சீரியஸா
விளையாண்டா எப்டி இருக்கும்?! அதான் இந்த #SquidGame .
பணத்தேவை இருக்குற கொஞ்சம் நடுத்தர மக்களா பாத்து டார்கெட் பண்ணி இந்த கேம் குள்ள இழுக்குறாங்க. அப்படி அவங்கள இந்த கேம் குள்ள இழுக்க அதுக்கு ஒரு சின்ன கேம வச்சி அதுல ஜெய்ச்சா இவளோ பணம் தர்றேன்னு சொல்லி ஆரம்பிக்கிறாங்க.
அவங்களும் பணத்தேவைக்காக ஒத்துக்கிட்டு விளாட்றாங்க, அதுல ஜெய்ச்சி முடிச்சோன இந்த மாதிரி நெறைய விளையாட்டு இருக்கு அதுல நீங்க கலந்துக்கிட்டு ஜெயிச்சா இந்த மாதிரி நெறைய காசு சம்பாதிக்கலாம்ன்னு சொல்றாங்க. ஒத்துக்க மறுத்தோன ஒரு கார்ட் கைல கொடுத்து நீங்க மனசு மாறுனா இந்த நம்பர்க்கு கால்
(இந்த த்ரெட்டில் டேக் செய்த ட்விட்டில் இருந்து ரிப்ளை செய்பவர்கள், என்னைத் தவிர பிற நபர்களை அன்மார்க் செய்து பேசுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏼 நம் பேச்சு அவர்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் 🤗)
நாயகி Jennifer Hills ஒரு எழுத்தாளர், தனது அடுத்த புத்தகத்தை எழுதுவதற்காக தனிமையை நாடி நகரத்தில் இருந்து வெளியே இருக்கும் கிராமம் ஒன்றில் வாடகை வீட்டிற்க்கு வருகிறார்.
வரும் வழியில் பெட்ரோல் பங்க்கில் இருக்கும் சில வாலிபர்கள் இவளை கிண்டல் செய்ய முயற்சிக்க அவர்களை மொக்கை செய்து
விட்டு வருகிறாள்.
முதல் நாள் தன்னை யாரோ கவனிப்பதாக உணர்கிறார், பின் அடுத்த நாளும் அதே போல் நடக்க வெளியே சென்று பார்க்கையில் யாரும் இல்லை. மீண்டும் வீட்டில் வந்து பார்த்தால் பங்கில் பார்த்த அந்த வாலிபர்கள் இவள் வீட்டின் உள்ளே இருக்க, இவளிடம் சில்மிஷம் செய்கிறார்கள். ஆனால்
(இந்த த்ரெட்டில் டேக் செய்த ட்விட்டில் இருந்து ரிப்ளை செய்பவர்கள், என்னைத் தவிர பிற நபர்களை அன்மார்க் செய்து பேசுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏼 நம் பேச்சு அவர்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் 🤗)
9 கதைகள், 9 உணர்ச்சிகள், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் என்று எதிர்பார்ப்பில் எகிற வைத்த #Navarasa எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? எத்தனை ரசங்கள் நம்மை ஈர்த்தது!? வாருங்கள் பார்ப்போம்.
கதையின் துவக்கத்தில் ஒரு கொலை நடக்கிறது, கொலை செய்தவன் எதிரியா? அந்த கொலையை நடக்க விட்டு அமைதியாக இருந்தவர் எதிரியா? என்பதை நம் பார்வையில் விட்டு விடுகின்றனர். தான் செய்தது தவறு என்பதை இருவருமே உணர்ந்தபோது அங்கு எதிரி யாரும் இல்லை என்பது என் கருத்து
(இந்த த்ரெட்டில் டேக் செய்த ட்விட்டில் இருந்து ரிப்ளை செய்பவர்கள், என்னைத் தவிர பிற நபர்களை அன்மார்க் செய்து பேசுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏼 நம் பேச்சு அவர்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் 🤗)
தன் மகளுடன் புதிய வீட்டில் குடியேருகிறார் பத்திரிக்கையாளர் மேதா, மறுபுறம் ஏரியில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓட்டைப் பற்றி விசாரிக்க நியமிக்கப்படுகிறார் ACP சத்யஜித்.
அந்த வீட்டில் அமானுஷ்ய விஷயங்கள் நிகழ அதற்கு காரணமாக இருக்கிறது அங்கிருக்கும் ஃப்ரிட்ஜ். மறுபுறம் பல கோணத்தில்
விசாரணை செய்தும் விடை தெரியாமல் இருக்கிறது சத்யஜித்தின் வழக்கு.
தன் வீட்டில் இவ்வாறு நடக்கிறது இதற்கு என்ன விடை என்று அறிய அமானுஷ்ய ஆராச்சியாளர் Dr. வசுந்தராவை அணுகுகிறார் மேதா. மறுபுறம் மண்டை ஓட்டில் இருக்கும் ஒற்றை பல்லை வைத்து ஒரு க்ளூ கிடைக்க அதை நோக்கி நகர்கிறது சத்யஜித்தி