(இந்த த்ரெட்டில் டேக் செய்த ட்விட்டில் இருந்து ரிப்ளை செய்பவர்கள், என்னைத் தவிர பிற நபர்களை அன்மார்க் செய்து பேசுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏼 நம் பேச்சு அவர்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் 🤗)
9 கதைகள், 9 உணர்ச்சிகள், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் என்று எதிர்பார்ப்பில் எகிற வைத்த #Navarasa எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? எத்தனை ரசங்கள் நம்மை ஈர்த்தது!? வாருங்கள் பார்ப்போம்.
கதையின் துவக்கத்தில் ஒரு கொலை நடக்கிறது, கொலை செய்தவன் எதிரியா? அந்த கொலையை நடக்க விட்டு அமைதியாக இருந்தவர் எதிரியா? என்பதை நம் பார்வையில் விட்டு விடுகின்றனர். தான் செய்தது தவறு என்பதை இருவருமே உணர்ந்தபோது அங்கு எதிரி யாரும் இல்லை என்பது என் கருத்து
படத்தின் கொலை செய்யப்பட்ட அந்த நபர் யார் என்பது டிரெய்லர் பார்த்த அனைவருக்குமே தெரியும், ஆனால் அதை இறுதிக் காட்சியில் சீன் டிவிஸ்ட் என்கிற பெயரில் காட்டப்பட்டது குறையாக எனக்கு பட்டது. பொறுமை இருந்தால் ஒரு முறை பார்க்கலாம்.
புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் தான் படித்த பள்ளியில் ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுகிறார். அங்கு அவர் தன் பள்ளி நாட்களில் நடந்த நிகழ்வுகளை நகைச்சுவையாக சொல்வது தான் இந்த கதை. சிரிக்க வைக்கும் முயற்சியில் நம்மை சிரிக்க
வைத்தார்களா? வயிறுகுலுங்க சிரிக்க வைக்கவில்லை என்றாலும் சற்று சிரிக்க வைத்து இருக்கிறார்கள், ரசிக்கலாம்.
கதையின் இறுதி பத்து நிமிடங்களை சாப்பிடும் போது பார்க்க வேண்டாம், சற்று முகம் சுழிக்க வைப்பது போன்ற காட்சிகள் நிகழும்.
கதையின் துவக்கத்தில் விஞ்ஞானி ஒருவர் " நம் அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயத்தை செய்து பார்ப்பது நல்ல செயல் அல்ல, அது உங்களை கொன்று விடும் " என்று கேமராவில் பதிவு செய்து விட்டு, தற்கொலைக்கு தயாராகிறார். அவர் ஏன் அவ்வாறு செய்கிறார்? அவர் செய்த
அந்த தவறு என்ன என்பதை கதை கண்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.
நிறைய பேருக்கு படத்தின் வசனங்கள் புரியவில்லை என்று சொல்லியிருந்தார்கள், மீண்டும் ஒரு முறை நன்றாக பாருங்கள் புரியும். அவர் கண்டு பிடித்த அந்த கண்டுபிடிப்புக்கு அவர் சொல்லும் விளக்கங்கள் தான் புரியாமல் போயிருக்கும், மற்றபடி
புரியாமல் போவதற்கு ஒன்றும் இல்லை. கதையும் பார்ப்பவர்களுக்கு புரியும் படி தான் எடுத்திருக்கிறா்கள். குறுகிய நேரத்தில் இப்படி ஒரு SciFi கதையை சொல்லியதற்காகவே @karthicknaren_M பாராட்டலாம். நான்லாம் ஃபேன் ஃபிக்ஷன் பேசுனா தாங்க மாட்ட போன்ற வசனங்கள் ரசிக்கும் படி இருந்தது.
தான் தூக்கி வளர்த்த, தன்னை விட வயதில் சிரியவனான அண்ணனின் மகன் வளர்ச்சி பிடிக்காத பொறாமை குணம் கொண்ட சித்தப்பா. " நா நல்லா இல்லாட்டியும் பரவாயில்லை, அவன் நன்னா இருக்கப்பிடாது " (இந்த ஒரு வசனத்தை காட்டி ஏமாத்திட்டாய்ங்க🤧) அப்படி என்ன பண்ணாருனு
இவரோட இந்த பொறாமை குணத்தால தான் இவரோட மகள் கல்யாணமான மூன்றே மாதத்தில் கணவனை இழந்து விடுகிறாள், சுப்புவின் நல்ல குணத்தால் அவர் தன் ஏழு மகள்களுக்கும் நல்ல முறையில் திருமணம் செய்து வைக்கிறார்.
பாயசத்தை தயார் செஞ்சு
கவுத்து விட்டதுக்கு, இந்த இந்த.. பாயாசத்தை தயார் பண்ணாமலே இருந்துருக்களாம். நம்ம பாஷைல சொல்லனும்னா " இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்துருக்களாம் ".
ஒரு காலகட்டத்தில் ஈழத்தில் நடக்கும் ஒரு போர் தான் கதைக்களம். அமைதிக்காக நடக்கும் போரில் அமைதிக் கிடைத்ததா? என்ற கேள்வி குறியோடு முடித்திருக்கிறார்கள். ஒரு சில வசனங்கள் ரசிக்கும் படி இருந்தது, மற்றபடி பொறுமை இருந்தால் இருந்தால் ஒரு முறை பார்க்கலாம்.
நக்சலைட் குழுவை வேட்டையாட இராணுவ குழுவோடு சென்றிருக்கும் கணவனின் வருகையை எண்ணி காத்திருக்கும் பெண், கடைசியில் கணவன் வந்தாரா? நக்சலைட் தலைவனை பிடிக்க நாயகன் துணிந்தப்பின் என்ன ஆனது? என்பதை எதையும் தெளிவாக காட்டாமல் முடித்தது, எதுக்கு??
தான் இசையமைத்த திரைப்படம் வெளிவராமல் தள்ளிப்போய்க்கொண்டே இருக்க, தன் தாயை அழைத்துக்கொண்டு லண்டன் சென்று வேர்ல்டு மியூசிக்கில் பார்வையாளர்கள் முன்னிலையில் பாடவேண்டும் என்ற கனவோடு இருக்கும் நாயகன், கதாநாயகியை சந்தித்து காதல் வலையில்
விழுகிறார். அதன் பின் என்ன ஆனது என்பதை கதை கண்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.
ஏற்கனவே கேட்ட சில வசனங்கள் என்றாலும் ரசிக்கும் படி இருந்தது, @pcsreeram மின் ஒளிப்பதிவு அத்தனை அழகு 🤩, @madhankarky வரிகள் விஷுவலுடன் கேட்கும்போது மேலும் ஈர்க்கிறது 😍👌🏼, @singer_karthik இன் பின்னணி இசையும் பாடல்களும் 😍❤️👌🏼.
சிறந்த ரசம்.
மொத்தத்தில் ஒன்பது ரசங்களில் தனிப்பட்ட முறையில் எனை ஈர்த்தது, எனக்கு பிடித்தது.
@netflix தளத்தில் #Navarasa வில் Volume 1 என்று இருக்கிறது. ஒரு வேளை அடுத்த வருடம் Volume 2 எடுப்பதாக இருந்தால் சுவாரஸ்யமான சிறந்த மற்றும் புதுமையான கதைகளையும், புதுமுக திறமையான இயக்குனர்களையும் தேர்வு செய்து அனைவருக்கும் பிடிக்கும் விதமாக எடுங்கள் @NetflixIndia@Netflix_INSouth
(இந்த த்ரெட்டில் டேக் செய்த ட்விட்டில் இருந்து ரிப்ளை செய்பவர்கள், என்னைத் தவிர பிற நபர்களை அன்மார்க் செய்து பேசுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏼 நம் பேச்சு அவர்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் 🤗)
நாயகி Jennifer Hills ஒரு எழுத்தாளர், தனது அடுத்த புத்தகத்தை எழுதுவதற்காக தனிமையை நாடி நகரத்தில் இருந்து வெளியே இருக்கும் கிராமம் ஒன்றில் வாடகை வீட்டிற்க்கு வருகிறார்.
வரும் வழியில் பெட்ரோல் பங்க்கில் இருக்கும் சில வாலிபர்கள் இவளை கிண்டல் செய்ய முயற்சிக்க அவர்களை மொக்கை செய்து
விட்டு வருகிறாள்.
முதல் நாள் தன்னை யாரோ கவனிப்பதாக உணர்கிறார், பின் அடுத்த நாளும் அதே போல் நடக்க வெளியே சென்று பார்க்கையில் யாரும் இல்லை. மீண்டும் வீட்டில் வந்து பார்த்தால் பங்கில் பார்த்த அந்த வாலிபர்கள் இவள் வீட்டின் உள்ளே இருக்க, இவளிடம் சில்மிஷம் செய்கிறார்கள். ஆனால்
(இந்த த்ரெட்டில் டேக் செய்த ட்விட்டில் இருந்து ரிப்ளை செய்பவர்கள், என்னைத் தவிர பிற நபர்களை அன்மார்க் செய்து பேசுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏼 நம் பேச்சு அவர்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் 🤗)
தன் மகளுடன் புதிய வீட்டில் குடியேருகிறார் பத்திரிக்கையாளர் மேதா, மறுபுறம் ஏரியில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓட்டைப் பற்றி விசாரிக்க நியமிக்கப்படுகிறார் ACP சத்யஜித்.
அந்த வீட்டில் அமானுஷ்ய விஷயங்கள் நிகழ அதற்கு காரணமாக இருக்கிறது அங்கிருக்கும் ஃப்ரிட்ஜ். மறுபுறம் பல கோணத்தில்
விசாரணை செய்தும் விடை தெரியாமல் இருக்கிறது சத்யஜித்தின் வழக்கு.
தன் வீட்டில் இவ்வாறு நடக்கிறது இதற்கு என்ன விடை என்று அறிய அமானுஷ்ய ஆராச்சியாளர் Dr. வசுந்தராவை அணுகுகிறார் மேதா. மறுபுறம் மண்டை ஓட்டில் இருக்கும் ஒற்றை பல்லை வைத்து ஒரு க்ளூ கிடைக்க அதை நோக்கி நகர்கிறது சத்யஜித்தி
(இந்த த்ரெட்டில் டேக் செய்த ட்விட்டில் இருந்து ரிப்ளை செய்பவர்கள், என்னைத் தவிர பிற நபர்களை அன்மார்க் செய்து பேசுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏼 நம் பேச்சு அவர்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் 🤗)
Inception பாணியில் மற்றுமொரு Sci-fi ஆக்சன் திரைப்படம் தான் இந்த #Coma .
ஒரு கார் விபத்துக்குப்பின் கண் விழித்து எழும் விக்டருக்கு எங்கு இருக்கிறோம் என்ன என்பது புரியவில்லை, ஆனால் அவன் இருப்பது அவன் அறையில் தான். வீட்டை சுற்றி பார்க்கிறான், ஒரு புகைப்படத்தை எடுத்து பார்க்கிறான்
ஆனால் அதில் அவன் மட்டும் தான் இருக்கிறான் அருகில் உள்ள பெண் யாரென்று தெரியவில்லை. ஃப்ரிட்ஜை திறந்து பார்க்கிறான் எல்லாம் விசித்திரமாக இருக்கிறது, அறை முழுதும் சிதைந்து போன ஒன்றில் இருந்து மீண்டும் புதுப்பிப்பது போன்று நிகழ்கிறது. ஒன்றும் புரியாமல் வெளியே செல்கிறான், அங்கு இருக்கு
(இந்த த்ரெட்டில் டேக் செய்த ட்விட்டில் இருந்து ரிப்ளை செய்பவர்கள், என்னைத் தவிர பிற நபர்களை அன்மார்க் செய்து பேசுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏼 நம் பேச்சு அவர்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் 🤗)
இன்னைக்கு இந்த த்ரெட்ல நாம பாக்கப் போறது, ட்விட்டர்ல
நம்மளோட பழைய ட்விட்களை எப்படி எடுக்குறதுன்றதப் பத்திதான் பாக்க போறோம். அதுக்குளாம் முன்னாடி இந்த RT, Likes லாம் எதுக்கு இருக்கு அதை நாம எதுக்கு யூஸ் பண்ணிட்டு இருக்கோம் அப்படின்றதை மொதல்ல பாப்போம்.
பண்ணி, அதை நம்மளோட ப்ரொபைல் பக்கம் (அல்லது) TL (Time Line) பக்கம் கொண்டு வர்ற ஆப்ஷன் தான் இது. அடுத்து
♥️ (Likes) - இந்த ஆப்ஷன் எதுக்குனா, நாம போட்ட முக்கியமான ட்விட்ட நாம சீக்கிரமா எடுக்கனும் இல்ல இன்னொருத்தவங்க போட்ட நல்ல (அல்லது) முக்கியமான ட்விட்ட நாம ஈஸியா எடுக்கனும் அப்படி
(இந்த த்ரெட்டில் டேக் செய்த ட்விட்டில் இருந்து ரிப்ளை செய்பவர்கள், என்னைத் தவிர பிற நபர்களை அன்மார்க் செய்து பேசுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏼 நம் பேச்சு அவர்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் 🤗)
ஒரு பண்டிகை நாளான்று தன் வீட்டில் இருக்கும் அண்ணனை விளையாட அழைக்கிறாள் ஷ்ரேயா, அவன் நான் தபேலா வாசிக்க வேண்டும் என்று செல்கிறான். பிறகு தன் சித்தப்பாவிடம் நான் ஒளிந்து கொள்கிறேன் கண்டு பிடியுங்கள் என்று சொல்லி செல்கிறாள், அவரும் எண்ணிக்கொண்டு இருக்கிறார். வீட்டின் பல பகுதிகளில்
ஒளியும் ஷ்ரேயா கண்டு பிடித்துவிடுவார் என எண்ணி யோசிக்க, வீட்டின் வெளிய கிறிஸ்துவ வழி பாட்டுடன் கல்லறைக்கு சென்று கொண்டு இருப்பவர்களோடு இவளும் சென்று அங்கு ஒளிந்து கொள்கிறாள். சிறிது நேரத்தில் வந்தவர்கள் எல்லாம் சென்று விட, ஷ்ரேயாவின் பின்னால் இருந்து யாரோ அவளை கல்லால் அடிக்க
96 பாணியில் 90களில் நடக்கும் ஒரு பள்ளிப்பருவ காதல் கதை, படம் முழுக்க கதாநாயகியின் பார்வையிலே திரைக்கதை நகரும். ஒரு பெண் காதல் வயப்பட்டால் ஆணை எப்படி பார்ப்பாள், எப்படி ரசிப்பாள் என்பதை அவ்வளவு அழகாக காட்டியிருப்பார்கள்.
மேலே உள்ள புகைப்படத்திலேயே பார்த்தால் தெரியும், ஒருவித வெக்கம் சூழ்ந்த காதல் பார்வையுடனே ரசிப்பாள் மீரா. ஒரு பெண் ஆணை ரசிப்பதை இவ்வளவு அழகாக இதுவரை எந்த படத்திலும் நான் பார்த்ததில்லை. மீராவாக நடித்திருக்கும் #TejuBelawadi முகத்தில் அத்தனை முகபாவனைகள். காதலனை ரசிக்கும்போது, தன்னை
இழிவாக பேசும் ஒருவன் முன் கெத்தாக நடக்கும்போது, மனம் நொந்து நிற்கும் காதலனிடம் பாசமாக கொஞ்சும் போது, விடுமுறை இடைவெளிக்குப்பின் காதலனை ஏக்கத்துடன் விடாமல் பார்த்து ரசிப்பது, பாகுபாடு பார்த்து பேசும் காதலனிடம் பரிதாபமாக பேசும்போதும் எத்தனை எத்தனை பாவனைகள் 😍👏🏼👏🏼👏🏼.