(இந்த த்ரெட்டில் டேக் செய்த ட்விட்டில் இருந்து ரிப்ளை செய்பவர்கள், என்னைத் தவிர பிற நபர்களை அன்மார்க் செய்து பேசுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏼 நம் பேச்சு அவர்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் 🤗)
நாயகி Jennifer Hills ஒரு எழுத்தாளர், தனது அடுத்த புத்தகத்தை எழுதுவதற்காக தனிமையை நாடி நகரத்தில் இருந்து வெளியே இருக்கும் கிராமம் ஒன்றில் வாடகை வீட்டிற்க்கு வருகிறார்.
வரும் வழியில் பெட்ரோல் பங்க்கில் இருக்கும் சில வாலிபர்கள் இவளை கிண்டல் செய்ய முயற்சிக்க அவர்களை மொக்கை செய்து
விட்டு வருகிறாள்.
முதல் நாள் தன்னை யாரோ கவனிப்பதாக உணர்கிறார், பின் அடுத்த நாளும் அதே போல் நடக்க வெளியே சென்று பார்க்கையில் யாரும் இல்லை. மீண்டும் வீட்டில் வந்து பார்த்தால் பங்கில் பார்த்த அந்த வாலிபர்கள் இவள் வீட்டின் உள்ளே இருக்க, இவளிடம் சில்மிஷம் செய்கிறார்கள். ஆனால்
அங்கிருந்து அவர்களை தள்ளி விட்டு, வீட்டை விட்டு வெளியே காட்டை நோக்கி ஓடுகிறாள். அங்கு Sheriff Storch மீது மோதி விழ, அவளை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்று பார்க்கையில் அங்கு யாரும் இல்லை. நடந்ததை வைத்து இவள் மீதே பழி போடுகிறார் அந்த Sheriff, அதே வேளையில் வெளியே இருந்து அந்த
நால்வரும் வர பின்பு தான் தெரிகிறது இவர்கள் அனைவரும் கூட்டு என்று.
பின் அனைவரும் சேர்ந்து அவளை பாலியல் வன் கொடுமை செய்து தாக்குகிறார்கள், சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து இவள் எழுந்து நடந்து செல்ல, அவளை பின் தொடர்ந்தே அவர்களும் நகர, பின் ஒரு பாலத்தின் மேல் நிற்கும் அவளை அந்த
Sheriff சுட முயற்சிக்க, அவள் அங்கிருந்து கீழே ஓடும் ஆற்றின் உள்ளே விழுகிறாள்.
அந்த கூட்டத்தில் இருந்த ஒருவன் நடப்பதை படம் பிடிக்க அதை வாங்கி உடைத்து எரிக்க உத்தரவிடுகிறான் Sheriff. பின் அவளை தேடும் முயற்சியில் அனைவரையும் ஈடு பட சொல்கிறான் Sheriff, அவளை கண்டு பிடிக்கும் வரையில்
யாரும் ஓய்வெடுக்க கூடாது என்று கூறி தேட ஆரம்பிக்கிறார்கள்.
அவளை கண்டு பிடித்தார்களா? ஆற்றின் உள்ளே விழுந்தவள் என்ன ஆனால்? என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
படத்தின் கடைசி 30 நிமிடங்கள் 🔥💥👌🏼, இறுதி காட்சிகள் சற்று கொடூரமாக இருக்கும் ஆதலால் இந்த திரைப்படத்தை தனியாக
காண்பது நல்லது. படம் முழுக்க 🔞 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க கூடியது, ஆகையால் குடும்பத்துடன் பார்க்க உகந்ததல்ல.
படத்தின் இணைப்பு டெலிகிராமில் இல்லை, வேறொரு நேரடி இணைப்பு தான் உள்ளது. அந்த இணைப்பு வேண்டும் என்பவர்கள் எனை ஃபாலோ செய்து நேரடி செய்தியை (DM) அணுகவும்.
(இந்த த்ரெட்டில் டேக் செய்த ட்விட்டில் இருந்து ரிப்ளை செய்பவர்கள், என்னைத் தவிர பிற நபர்களை அன்மார்க் செய்து பேசுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏼 நம் பேச்சு அவர்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் 🤗)
9 கதைகள், 9 உணர்ச்சிகள், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் என்று எதிர்பார்ப்பில் எகிற வைத்த #Navarasa எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? எத்தனை ரசங்கள் நம்மை ஈர்த்தது!? வாருங்கள் பார்ப்போம்.
கதையின் துவக்கத்தில் ஒரு கொலை நடக்கிறது, கொலை செய்தவன் எதிரியா? அந்த கொலையை நடக்க விட்டு அமைதியாக இருந்தவர் எதிரியா? என்பதை நம் பார்வையில் விட்டு விடுகின்றனர். தான் செய்தது தவறு என்பதை இருவருமே உணர்ந்தபோது அங்கு எதிரி யாரும் இல்லை என்பது என் கருத்து
(இந்த த்ரெட்டில் டேக் செய்த ட்விட்டில் இருந்து ரிப்ளை செய்பவர்கள், என்னைத் தவிர பிற நபர்களை அன்மார்க் செய்து பேசுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏼 நம் பேச்சு அவர்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் 🤗)
தன் மகளுடன் புதிய வீட்டில் குடியேருகிறார் பத்திரிக்கையாளர் மேதா, மறுபுறம் ஏரியில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓட்டைப் பற்றி விசாரிக்க நியமிக்கப்படுகிறார் ACP சத்யஜித்.
அந்த வீட்டில் அமானுஷ்ய விஷயங்கள் நிகழ அதற்கு காரணமாக இருக்கிறது அங்கிருக்கும் ஃப்ரிட்ஜ். மறுபுறம் பல கோணத்தில்
விசாரணை செய்தும் விடை தெரியாமல் இருக்கிறது சத்யஜித்தின் வழக்கு.
தன் வீட்டில் இவ்வாறு நடக்கிறது இதற்கு என்ன விடை என்று அறிய அமானுஷ்ய ஆராச்சியாளர் Dr. வசுந்தராவை அணுகுகிறார் மேதா. மறுபுறம் மண்டை ஓட்டில் இருக்கும் ஒற்றை பல்லை வைத்து ஒரு க்ளூ கிடைக்க அதை நோக்கி நகர்கிறது சத்யஜித்தி
(இந்த த்ரெட்டில் டேக் செய்த ட்விட்டில் இருந்து ரிப்ளை செய்பவர்கள், என்னைத் தவிர பிற நபர்களை அன்மார்க் செய்து பேசுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏼 நம் பேச்சு அவர்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் 🤗)
Inception பாணியில் மற்றுமொரு Sci-fi ஆக்சன் திரைப்படம் தான் இந்த #Coma .
ஒரு கார் விபத்துக்குப்பின் கண் விழித்து எழும் விக்டருக்கு எங்கு இருக்கிறோம் என்ன என்பது புரியவில்லை, ஆனால் அவன் இருப்பது அவன் அறையில் தான். வீட்டை சுற்றி பார்க்கிறான், ஒரு புகைப்படத்தை எடுத்து பார்க்கிறான்
ஆனால் அதில் அவன் மட்டும் தான் இருக்கிறான் அருகில் உள்ள பெண் யாரென்று தெரியவில்லை. ஃப்ரிட்ஜை திறந்து பார்க்கிறான் எல்லாம் விசித்திரமாக இருக்கிறது, அறை முழுதும் சிதைந்து போன ஒன்றில் இருந்து மீண்டும் புதுப்பிப்பது போன்று நிகழ்கிறது. ஒன்றும் புரியாமல் வெளியே செல்கிறான், அங்கு இருக்கு
(இந்த த்ரெட்டில் டேக் செய்த ட்விட்டில் இருந்து ரிப்ளை செய்பவர்கள், என்னைத் தவிர பிற நபர்களை அன்மார்க் செய்து பேசுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏼 நம் பேச்சு அவர்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் 🤗)
இன்னைக்கு இந்த த்ரெட்ல நாம பாக்கப் போறது, ட்விட்டர்ல
நம்மளோட பழைய ட்விட்களை எப்படி எடுக்குறதுன்றதப் பத்திதான் பாக்க போறோம். அதுக்குளாம் முன்னாடி இந்த RT, Likes லாம் எதுக்கு இருக்கு அதை நாம எதுக்கு யூஸ் பண்ணிட்டு இருக்கோம் அப்படின்றதை மொதல்ல பாப்போம்.
பண்ணி, அதை நம்மளோட ப்ரொபைல் பக்கம் (அல்லது) TL (Time Line) பக்கம் கொண்டு வர்ற ஆப்ஷன் தான் இது. அடுத்து
♥️ (Likes) - இந்த ஆப்ஷன் எதுக்குனா, நாம போட்ட முக்கியமான ட்விட்ட நாம சீக்கிரமா எடுக்கனும் இல்ல இன்னொருத்தவங்க போட்ட நல்ல (அல்லது) முக்கியமான ட்விட்ட நாம ஈஸியா எடுக்கனும் அப்படி
(இந்த த்ரெட்டில் டேக் செய்த ட்விட்டில் இருந்து ரிப்ளை செய்பவர்கள், என்னைத் தவிர பிற நபர்களை அன்மார்க் செய்து பேசுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏼 நம் பேச்சு அவர்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் 🤗)
ஒரு பண்டிகை நாளான்று தன் வீட்டில் இருக்கும் அண்ணனை விளையாட அழைக்கிறாள் ஷ்ரேயா, அவன் நான் தபேலா வாசிக்க வேண்டும் என்று செல்கிறான். பிறகு தன் சித்தப்பாவிடம் நான் ஒளிந்து கொள்கிறேன் கண்டு பிடியுங்கள் என்று சொல்லி செல்கிறாள், அவரும் எண்ணிக்கொண்டு இருக்கிறார். வீட்டின் பல பகுதிகளில்
ஒளியும் ஷ்ரேயா கண்டு பிடித்துவிடுவார் என எண்ணி யோசிக்க, வீட்டின் வெளிய கிறிஸ்துவ வழி பாட்டுடன் கல்லறைக்கு சென்று கொண்டு இருப்பவர்களோடு இவளும் சென்று அங்கு ஒளிந்து கொள்கிறாள். சிறிது நேரத்தில் வந்தவர்கள் எல்லாம் சென்று விட, ஷ்ரேயாவின் பின்னால் இருந்து யாரோ அவளை கல்லால் அடிக்க
96 பாணியில் 90களில் நடக்கும் ஒரு பள்ளிப்பருவ காதல் கதை, படம் முழுக்க கதாநாயகியின் பார்வையிலே திரைக்கதை நகரும். ஒரு பெண் காதல் வயப்பட்டால் ஆணை எப்படி பார்ப்பாள், எப்படி ரசிப்பாள் என்பதை அவ்வளவு அழகாக காட்டியிருப்பார்கள்.
மேலே உள்ள புகைப்படத்திலேயே பார்த்தால் தெரியும், ஒருவித வெக்கம் சூழ்ந்த காதல் பார்வையுடனே ரசிப்பாள் மீரா. ஒரு பெண் ஆணை ரசிப்பதை இவ்வளவு அழகாக இதுவரை எந்த படத்திலும் நான் பார்த்ததில்லை. மீராவாக நடித்திருக்கும் #TejuBelawadi முகத்தில் அத்தனை முகபாவனைகள். காதலனை ரசிக்கும்போது, தன்னை
இழிவாக பேசும் ஒருவன் முன் கெத்தாக நடக்கும்போது, மனம் நொந்து நிற்கும் காதலனிடம் பாசமாக கொஞ்சும் போது, விடுமுறை இடைவெளிக்குப்பின் காதலனை ஏக்கத்துடன் விடாமல் பார்த்து ரசிப்பது, பாகுபாடு பார்த்து பேசும் காதலனிடம் பரிதாபமாக பேசும்போதும் எத்தனை எத்தனை பாவனைகள் 😍👏🏼👏🏼👏🏼.