இன்றைய இந்து பெற்றோர்களுக்கான முக்கிய பதிவு இது.
சிறுவயதிலேயே குழந்தைகளின் மனதில் பக்தி என்னும் பயிரை விதைக்க வேண்டும் என்று மகாபெரியவர் அடிக்கடி குறிப்பிடுவது வழக்கம். ஒருமுறை பக்தர் ஒருவர், சுவாமி! குழந்தைகளுக்கு பக்தியில் நாட்டம் வருவதில்லையே என்று குறைப்பட்டுக் கொண்டார்.
“காலம் போகப் போகத்தான் பக்தியின் ருசி புரிய தொடங்கும். வாழ்வில் வரும் அனுபவங்களைப் பொறுத்து, அவர்களின் மனம் கடவுளை நாடத் தொடங்கும். அதுவரை பொறுமையுடன் இருக்கத்தானே வேண்டும்? வலுக் கட்டாயமாக பக்திப்பயிரை விதைத்தால் பலன் கிடைக்குமா?” என்று கேட்டார் சுவாமிகள். பிறகு கனிவுடன், “உன்
வீட்டில் தயிர் கடைந்து வெண்ணெய் எடுப்பதுண்டா?” என்று கேட்டார். அவர், தினமும் தயிர்ப்பானையில் மத்தை வைத்து, கயிறு கட்டி இழுத்துக் கடைவார்களே என்றார். “எந்த வேளையில் கடைவார்கள்? காலையிலா, மத்தியானமா?” என்று கேட்டார் மகா பெரியவர். அதிகாலையில் தான் சுவாமி. “மத்தியானம் அல்லது
சாயந்திரம் கடைவதில்லையே ஏன்?” பதில் தெரியாமல் திகைத்தார் பக்தர். “அதிகாலை சுபமான வேளை. அந்நேரத்தில் வெயில் ஏறாததால் சுற்றுப்புறம் குளிர்ச்சியாக இருக்கும். அப்போது கடைந்தால் வெண்ணெய் பந்தாக திரளும். உருகாமல் கெட்டியாகவும் இருக்கும். சூரியன் வானில் உக்கிரமாகி விட்டால் போச்சு.
வெண்ணெய் திரளாமல், கடையக் கடைய உருகி விடும். அதுபோல, வயதான காலத்தில் மனதில் பல சிந்தனைகளும் அலைமோதும். அப்போது பக்தி என்னும் வெண்ணெய் திரள்வது கடினம். குழந்தைகளின் மனம் குளிர்ச்சியானது. அதில் காம, குரோத சிந்தனை இருக்காது. அப்போது கடவுள் சிந்தனை என்னும் மத்தால் கடைய, பக்தி
என்னும் வெண்ணெய் சுலபமாகத் திரளும். இதனால், பெற்றோர் வாரம் ஒருமுறையாவது குழந்தைகளை கோயிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இந்த பழக்கம் அவர்களுக்கு தக்க பாதுகாப்பு அளிக்கும். துன்பம் வந்தாலும் கடவுள் அருளால் அது நம்மை பாதிக்காது என்ற சிந்தனை உருவாகும். அதனால் பக்திக்கு ஏற்ற வயது
இளமைப் பருவம் தான். புரிகிறதா?” என்றார்.
மகா பெரியவா சரணம்🙏🏻
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சிவசங்கரன் தன்னுடைய தொழிலில் படு தோல்வியடைந்த நிலையில் தெரு முனையில் போவோர், வருவோரை மிகுந்த மனவேதனையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது எதிரில் கல்யாணம் முடிந்த மண்டபத்தில் கட்டப்பட்டு இருந்த வாழை மரத்தில் ஒருவர் தனக்குத் தேவையான வாழை பழங்களை
எடுத்து சாக்கில் நிரப்பிச் சென்றார். சிறிது நேரத்தில் இன்னொரு நபர் அதே வாழை மரத்தில் தனக்குத் தேவையான வாழை இலைகளை அறுத்து எடுத்துச் சென்றார். மீண்டும் ஒருவர் தனக்குத் தேவையான வாழைத் தண்டுகளை எடுத்து சாக்கில் நிரப்பிச் சென்றார். அதன்பின் ஒருவர் வந்து வாழை மர பூவினை பறித்து
சென்றார். கடைசியாக வந்த ஒரு பசுவும் ஆடும் மீதம் கிடந்த வாழை மர நாற்றினையும் சாப்பிட்டு தன் பசியை போக்கிக் கொண்டன. இதைப் பார்த்த படு தோல்வி அடைந்த சிவசங்கரன் மனத்தில், ஒரு சிறிய வாழை மரத்தில் இத்தனை பயன்பாடுகள்
என்றால், இந்த பரந்து, விரிந்து கிடக்கும் இவ்வுலகில் நாம் அனைவரும்
#துர்க்கை துர்க்கைதான் ஆதிபராசக்தியாய் அனைத்தும் கைவரச் செய்பவள். துர்காதேவி, ஆர்த்தி தேவி, ஜோதி தேவி என்றும் வட மாநிலங்களில் அழைக்கபடுகிறாள். துர்க்கை புகழ்பெற்ற தமிழ்த் தெய்வம் ஆகும். துர்க்கை என்னும் சொல்லுக்கு வடமொழியில் வெல்லமுடியாதவள் என்று பொருள் தமிழில் வெற்றிக்கு உரியவள்
தேவி மாகாத்மியம் நூலில் துர்க்கை, இரம்பன் எனும் அசுரனின் மகனான மேதியவுணனை அழிப்பதற்காக முத்தேவர்களின் உடலிலிருந்தும், மற்ற தேவர்களிலிருந்தும் ஒளி வடிவில் தோன்றியதாக கூறப்பட்டுள்ளது. துர்தரன், துன்முகன், தூம்ரலோசனன் முதலான மேதியவுணனின் (மகிஷாசுரமர்த்தனன்) படைத்தளபதிகளைக் கொன்று
இறுதியில் அவனையும் அன்னை வதைத்த கதை அந்நூலில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. விந்திய மலைத்தொடர், மற்றும் இமய மலைப் பகுதிகளில் வாழ்ந்த பழங்குடிகள் போர்த் தெய்வமாக துர்க்கையை வணங்குகிறார்கள். பரிபாடல், திருமுருகாற்றுப்படை, சிலப்பதிகாரம் முதலான பழந்தமிழ் இலக்கியங்களில், கொற்றவை என்ற
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் காசிபர்-கத்ரு தம்பதியரின் மகன் பாற்கடலிலும் வைகுண்டத்திலும் வீற்றிருக்கும் பெருமாளுக்கு படுக்கையாக இருக்கும் ஆதிசேஷன். ஏழு தலைகளைக் குறிக்கும் வண்ணமாக ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளதால், திருப்பதி திருத்தலம் சேஷாசலம் எனப்படுவதும் உண்டு. ஸ்ரீராமர் காலத்தில்
லக்ஷ்மணராக பிறந்து அவருடனே இருந்து உதவி புரிந்தவர். ஸ்ரீகிருஷ்ணர் காலத்தில் பலராமனாக பிறந்து கிருஷ்ணருக்கு உதவி புரிந்தார். இக்கலிகாலத்தில் ராமானுஜராகப் பிறந்து பெருமாளுக்கு தொண்டு செய்தார். ராமன் குழந்தையாக இருந்தபோது, என்ன காரணமென்று புரியாமல் வீல் வீலென்று அழுதார். தாயும்
சேடிகளும் என்னென்னவோ செய்தும் அழுகை நிற்கவில்லை. குலகுரு வசிஷ்டர் தான் தம்பி லக்ஷ்மணனை உடன் உறங்க வையுங்கள் என்று ஆலோசனை கூறினார். குழந்தை ராமன் தனது அணையான லக்ஷ்மணனின் உடல் ஸ்பரிசத்தைப் பெற்றதும் அழுகையை நிறுத்திவிட்டார்.
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
கண்வ மகரிஷி ஆசிரமம் ஒன்றை நிர்வகித்து வந்தார், மிகப் பழமையான ஆசிரமம் அது.
ரிக் வேத காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்தது அது. பக்தர்கள் எப்போதும் நிரம்பி வழிவார்கள். உலகமெங்கும் அந்த ஆசிரமத்துக்கு நல்ல பெயர் இருந்தது. ஆனால் கொஞ்ச காலமாக ஆசிரமம் பொலிவிழக்கத்
துவங்கியதை உணர்ந்தார் கண்வ மகரிஷி. காரணம், சீடர்களுக்குள் ஒற்றுமை இல்லை. நூற்றுக் கணக்கான சீடர்கள் அந்த ஆசிரமத்தில் உண்டு. தான் என்கிற கர்வமும், போட்டி மனப்பான்மையும் அவர்களுக்குள் நிரம்பி அடிக்கடி சீடர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டார்கள். கண்வ மகரிஷி மிகவும் நொந்து போனார்
சஞ்சலமடைந்தார். இப்படியே சென்றால், பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் ஆசிரமம் சீர் குலைந்து விடுமோ என்ற கவலை அவரை வதைத்தது. இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவது எப்படி என்று யோசித்தார். அப்போது முனிவரின் பால்ய கால நண்பரான சகல கலைகளையும் கற்ற இன்னொரு முனிவர் தசீசி முனிவர்,
Mr @annamalai_k speaks wonderfully about our religion, spirituality and science in Tamil. All Hindus who understand Tamil must listen to his speech. He knows so much, a gift to @BJP4TamilNadu
நம் பாரதம் உலகுக்கே ஒளிகாட்டியாய் வழிகாட்டியாய் காலம் காலமாக இருந்து வருகிறது. சில தலைமுறைகலாக அதை நாம் உணராமல் விட்டுவிட்டோம்.
கந்தர் சஷ்டி கவசத்தின் அருமை பெருமை பற்றிய புரிதல் நமக்கில்லை என்பது நம் துரதிர்ஷ்டம்
இடது காலால் எமனை உதைத்தார், அக்கால் திருவானைக்கால். ஈசனிடம் மரணத்தில் இருந்து காக்க வேண்டுவதே ஸ்ரீ மஹா மிருத்யுஞ்சய மந்திரம் ஆகும். நம் இந்து மதத்தின் படி உடலின் மரணம் மீண்டும் மீண்டும் நிகழக்கூடியது ஆனால் ஆத்மாவிற்கு மரணம் கிடையாது, அது மோட்சம் அடையும் வரை மீண்டும் மீண்டும்
இப்புவியில் பிறப்பு இறப்பு என்னும் சுழலில் சிக்கி கொண்டு உள்ளது . இச்சூழலில் இருந்து காப்பாற்ற வேண்டுவதே இச்சுலோகத்தின் கருத்து ஆகும் என்று சொல்லி இருக்கிறார் காஞ்சி மகா பெரியவா.
பிரம்மிருஷி வஷிஷ்ட மைத்ரவரூணி வழங்கிய ரிக் வேதத்தின் 7 வது மண்டலத்திலிருந்து வந்தது. நோய், உடல் நல
குறைபாடு உள்ளவர்கள் இந்த மந்திரத்தை தொடர்ந்து தினமும் சொல்லி வந்தால் விரைவில் நோய் குணமாகும்.
“ஓம் த்ரியம்பகம் யஜா மஹே, சுகந்திம் புஷ்டி வர்தனம்;
உருவாருகமிவ பந்தனான், ம்ரித்யோர் மோக்ஷியே மா அம்ருதாத்.”
இதன் பொருள் :
ஓம் – பிரணவ மந்திரம்
த்ரியம்பகம் – மூன்று கண்களை உடைய பெருமானே