#துர்க்கை துர்க்கைதான் ஆதிபராசக்தியாய் அனைத்தும் கைவரச் செய்பவள். துர்காதேவி, ஆர்த்தி தேவி, ஜோதி தேவி என்றும் வட மாநிலங்களில் அழைக்கபடுகிறாள். துர்க்கை புகழ்பெற்ற தமிழ்த் தெய்வம் ஆகும். துர்க்கை என்னும் சொல்லுக்கு வடமொழியில் வெல்லமுடியாதவள் என்று பொருள் தமிழில் வெற்றிக்கு உரியவள்
தேவி மாகாத்மியம் நூலில் துர்க்கை, இரம்பன் எனும் அசுரனின் மகனான மேதியவுணனை அழிப்பதற்காக முத்தேவர்களின் உடலிலிருந்தும், மற்ற தேவர்களிலிருந்தும் ஒளி வடிவில் தோன்றியதாக கூறப்பட்டுள்ளது. துர்தரன், துன்முகன், தூம்ரலோசனன் முதலான மேதியவுணனின் (மகிஷாசுரமர்த்தனன்) படைத்தளபதிகளைக் கொன்று
இறுதியில் அவனையும் அன்னை வதைத்த கதை அந்நூலில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. விந்திய மலைத்தொடர், மற்றும் இமய மலைப் பகுதிகளில் வாழ்ந்த பழங்குடிகள் போர்த் தெய்வமாக துர்க்கையை வணங்குகிறார்கள். பரிபாடல், திருமுருகாற்றுப்படை, சிலப்பதிகாரம் முதலான பழந்தமிழ் இலக்கியங்களில், கொற்றவை என்ற
அன்னைத் தெய்வமாக துர்க்கை பற்றிக் குறிப்பிடுகின்றன. காலில் மேதியவுணனின் எருமைத்தலை கிடக்க, இன்றைய துர்க்கையாகவே காட்சியருளும் கொற்றவையை சிலம்பில் காணலாம். தென்னகத்தில் மிகப்பழைய துர்க்கையின் சிற்பம், கர்நாடகாவின் சன்னடி பகுதியில் கிடைத்த பொ.பி 3ஆம் நூற். சுடுமண் சிற்பம் ஆகும்.
அதிலும் மேதியவுணனைக் கொல்பவளாகவே அவள் காட்சியளிக்கிறாள். இன்னும் மாமல்லபுரத்துப் புகழ்பெற்ற சிற்பங்களில் ஒன்றான, தேவிக்கும் - மேதியனுக்கும் இடையிலான போர்க்காட்சி, வேறெங்கும் காணக் கிடைக்காத சிற்பங்களில் ஒன்றாகும். அதே இடத்தில், சங்கு சக்கரமேந்தி நாற்கரத்தினளாகக் காட்சி தரும்
கொற்றவை முன்பு, நவகண்டப் பலி நிகழும் சிற்பமும், அக்கால வழக்கங்களில் ஒன்றைத் தெளிவாகச் சுட்டிக்காட்டும் சிற்பம்.
நவராத்திரியின் இறுதி நான்கு நாட்களும் (விஜயதசமியும் சேர்த்து) துர்க்கா பூஜை வங்கம், அசாம், ஒடிசா, நேபாளம் ஆகிய மாநிலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
தெலுங்கானாப் பகுதியில், நவராத்திரி நாட்களில் பாதுகாம்மா என்ற பெயரில் அவளைப் போற்றி வழிபடுகின்றனர். மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம், துர்க்கா சப்தசதி முதலான துர்க்கையின் புகழ்பெற்ற துதிப்பாடல்கள் இந்நாட்களில் பாடி வழிபாடு நடக்கிறது. காஷ்மீரில் சாரிகை என்ற பெயரில் துர்க்கை வழிபடப்
படுகின்றாள். பட்டீஸ்வரம் துர்க்கை கோயிலும், விஜயவாடாவிலுள்ள கனகதுர்க்கை ஆலயமும், மைசூர் சாமுண்டேஸ்வரி ஆலயமும் தென்னகத்ததல் பிரபலமாக விளங்குகின்ற துர்க்கை ஆலயங்கள் ஆகும். துர்க்கை தீமைகளையும் பாவங்களையும் அழித்து வெற்றியை அளிப்பவள். ரேணுகா தேவியின் புதல்வரான, சத்திரிய குலத்தை
அழிக்கும் குறிக்கோளைக் கொண்டு, பிரம்மஹத்தி தோஷம் பீடிக்கப்பட்ட பரசுராமர் துர்க்கையை வணங்கி தேவர் உலகம் சென்றார் என்கிறது புராணம். ராவணனை வதம் செய்த ராமரும், கர்ணனை வதம் செய்த அர்ச்சுனனும் கொன்ற பாவம் தீர துர்க்கை பூஜை செய்தனர். துர்க்கை, மரண பயம் நீக்குபவள். பாவத்தை அழிப்பதில்
சிவ அம்சத்தையும், வெற்றியை அளித்து வாழ வைப்பதில் விஷ்ணு அம்சத்தையும், பக்தர்களின் தேவைகளைப் புதிதாகப் படைப்பதில் பிரம்ம அம்சத்தையும் கொண்டவள். இதனால் மந்திர ஜபமாக துர்க்கையைப் பூஜித்தால் முப்பத்து முக்கோடி தேவர்களை ஆராதித்த பலன் கிடைக்கும். துர்க்கையைப் பூஜிக்க உகந்த காலம் ராகு
காலம். ராகு தோஷம் நீங்க இந்த ஆராதனை நடைபெறுவதால், ராகுவின் அதி தேவதையான துர்க்கையை ராகு காலத்திலேயே விளக்கேற்றித் துதித்தால் நல்லது. இவள் கண்ணனுக்கு மூத்தவள் என்பதால், விஷ்ணுவின் அவதாரங்களின் பிறந்த திதிகளான அஷ்டமி, நவமி ஆகியவையும் இவளுக்கு உகந்தவையே.
மேலும் அவளுக்கே உரித்தான
அமாவாசை, பவுர்ணமி திதிகள் மற்றும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளும் இவளை ஆராதிப்பதற்குச் சிறந்த நாட்களாகும்.
அனைத்து துன்பங்களையும் நீக்கி வளமான வாழ்வை தரும் துர்க்கா தேவி சரணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது பதினாறு வகை தெய்வீகப் பொருட்கள் வெளிவந்தன. அவற்றுள் பாஞ்சஜன்யம் எனும் சங்கும், திருமகளும் வர மஹாவிஷ்ணு இடக்கையில் சங்கையும் வலக்கையில் தேவியையும் ஏற்றுக் கொண்டார். பாஞ்சஜன்யம் கிருஷ்ணருக்கு கிடைத்தது வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது.
சாந்தீபனி முனிவருக்கு குருதட்சணையாக என்ன வேண்டும் என்று கேட்ட போது குருவின் மனைவி, கண்ணீர் விட்டபடி #பஞ்சஜனன் என்ற கடல் அரக்கன் தங்கள் மகனைக் கடத்திக் கடற் பாதாள அறையில் வைத்திருப்பதாகவும் குரு தட்சணையாக அவனை மீட்டுத் தரும்படியும் வேண்டினாள். கிருஷ்ணரும் பலராமரும் கடலரசனை அழைத்து
வழி கேட்டுச் சென்று அரக்கனை எதிர்த்துப் போரிட்டுச் சாம்பலாக்கி விட்டு, குரு மகனை மீட்டுத் தந்தனர் கிருஷ்ணரும் பலராமரும். பஞ்சஜனனின் சாம்பலே ஒன்று திரண்டு சங்காகியதால் சங்கிற்குப் பாஞ்சஜன்யம் என்ற பெயர் ஏற்பட்டது. இதை வெற்றியின் சின்னமாகக் கிருஷ்ண பரமாத்மா கையில் எடுத்து ஊதத்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சம்பு தீவில் சரஸ்வதி ஆற்றங்கரையில், குனி எனும் முனிவர் தவமியற்றி வந்தார். அந்த ரிஷிக்கு பணிவிடை செய்ய கன்னிகை ஒருத்தி வந்தாள். அவளது நோக்கம், முனிவரின் தர்மபத்தினியாகி தானும் இறைபதம் அடைய வேண்டும் என்பதாகும். ஆனால் அந்த முனிவரோ முக்தியை நாடி தவம் இயற்றி
இறைவனடி சேர்ந்து விட்டார்.
தன் விருப்பம் நிறைவேறாத அந்தப் பெண், காடு களைச் சுற்றி வந்தான். அவளது உண்மையான விருப்பத்தை அறிந்த காலவ முனிவர், அவளை மணம் புரிந்தார். அவர்களுக்கு முன்னூற்று அறுபது பெண்கள் பிறந்தார்கள். தர்ம பத்தினியாக வாழ்ந்த அந்தப் பெண் பரமபதம் அடைந்தார். இதனால் தன்
முன்னூற்று அறுபது கன்னிகைகளுக்கும் மணம் முடித்து வைக்க வேண்டிய பெரும் பொறுப்பு காலவ முனிவரை வந்து சேர்ந்தது.
தன்னுடைய நிலையைக் கூறி, வேதமூர்த்தியாகவும் ஞான பிரானாகவும் விளங்கும் ஆதி வராகரை வேண்டினார். வராக மூர்த்தி அவருக்கு காட்சி தந்தார்.
‘கவலையுறாதீர்கள் காலவ முனிவரே! நானே
#கார்த்திகைஸ்பெஷல்
ஸ்வாமி சரணம்🙏🏻
மகரஜோதி அன்று சபரிமலையில் ஐயப்பன் திருவாபரணங்கள் அணிந்து பூரண சொரூபனாகக் காட்சி கொடுப்பான். திருவாபரணம் பந்தள ராஜா அரண்மனையில் இருந்து 3 பெட்டிகளில் கொண்டுவரப்படும். பக்தர்கள் அதைக் காணும்போதே மெய்சிலிர்ப்பதைக் காண முடியும். இந்தத் திருவாபரணப்
பெட்டியில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள பலருக்கும் ஆவல் உண்டு. மூன்று
திருவாபரணப் பெட்டிகளில் ஒன்று ஆபரணப்பெட்டி, இன்னொன்று வெள்ளிப்பெட்டி, மற்றது கொடிப்பெட்டி. இதில் ஆபரணப் பெட்டியில்தான் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள் இருக்கும்.
திருவாபரணம் 1. திருமுக மண்டலம்
எனப்படும் முக கவசம். 2. பூரணா புஷ்கலா தேவியருடைய உருவங்கள். 3. பெரிய வாள் மற்றும் சிறிய வாள்.
4 இரண்டு யானை உருவங்கள். 5. கடுவா எனப்படும் புலி உருவம். 6. வில்வமாலை. 7. சரப்பொளி மாலை. 8. நவரத்தின மாலை. 9. வெள்ளிகட்டிய வலம்புரிச் சங்கு.
இவை இந்த ஆபரணப் பெட்டியில் இருக்கும். அடுத்த
#MahaPeriyavaa#YogiRamsurathkumar
Once during the mid-eighties, Pujya Sri Maha Periyava desired to see Bhagavan Yogi Ramsuratkumar and invited him through a personal attendant. He asked the personal attendant to bring Yogiji. Yogiji, accepting the invitation of Kanchi Sri Maha
Periyava, went to Kanchipuram. Sri Maha Periyava sat down and so did Yogi. Maha Periyava and Yogi looked at each other. They did not speak a word to each other verbally. After looking at each other for sometime, Kanchi Sri Maha Periyava, laughing lightly, said to His personal
attendant who had brought Yogi to Kanchi, “The matter for which he came is over. You may take him back to Tiruvannamalai.”
Did they meet just to see each other or did they exchange some news? Nothing could be comprehended. Yogi went back to Tiruvannamalai. Later when Yogiji was
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சிவசங்கரன் தன்னுடைய தொழிலில் படு தோல்வியடைந்த நிலையில் தெரு முனையில் போவோர், வருவோரை மிகுந்த மனவேதனையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது எதிரில் கல்யாணம் முடிந்த மண்டபத்தில் கட்டப்பட்டு இருந்த வாழை மரத்தில் ஒருவர் தனக்குத் தேவையான வாழை பழங்களை
எடுத்து சாக்கில் நிரப்பிச் சென்றார். சிறிது நேரத்தில் இன்னொரு நபர் அதே வாழை மரத்தில் தனக்குத் தேவையான வாழை இலைகளை அறுத்து எடுத்துச் சென்றார். மீண்டும் ஒருவர் தனக்குத் தேவையான வாழைத் தண்டுகளை எடுத்து சாக்கில் நிரப்பிச் சென்றார். அதன்பின் ஒருவர் வந்து வாழை மர பூவினை பறித்து
சென்றார். கடைசியாக வந்த ஒரு பசுவும் ஆடும் மீதம் கிடந்த வாழை மர நாற்றினையும் சாப்பிட்டு தன் பசியை போக்கிக் கொண்டன. இதைப் பார்த்த படு தோல்வி அடைந்த சிவசங்கரன் மனத்தில், ஒரு சிறிய வாழை மரத்தில் இத்தனை பயன்பாடுகள்
என்றால், இந்த பரந்து, விரிந்து கிடக்கும் இவ்வுலகில் நாம் அனைவரும்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் காசிபர்-கத்ரு தம்பதியரின் மகன் பாற்கடலிலும் வைகுண்டத்திலும் வீற்றிருக்கும் பெருமாளுக்கு படுக்கையாக இருக்கும் ஆதிசேஷன். ஏழு தலைகளைக் குறிக்கும் வண்ணமாக ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளதால், திருப்பதி திருத்தலம் சேஷாசலம் எனப்படுவதும் உண்டு. ஸ்ரீராமர் காலத்தில்
லக்ஷ்மணராக பிறந்து அவருடனே இருந்து உதவி புரிந்தவர். ஸ்ரீகிருஷ்ணர் காலத்தில் பலராமனாக பிறந்து கிருஷ்ணருக்கு உதவி புரிந்தார். இக்கலிகாலத்தில் ராமானுஜராகப் பிறந்து பெருமாளுக்கு தொண்டு செய்தார். ராமன் குழந்தையாக இருந்தபோது, என்ன காரணமென்று புரியாமல் வீல் வீலென்று அழுதார். தாயும்
சேடிகளும் என்னென்னவோ செய்தும் அழுகை நிற்கவில்லை. குலகுரு வசிஷ்டர் தான் தம்பி லக்ஷ்மணனை உடன் உறங்க வையுங்கள் என்று ஆலோசனை கூறினார். குழந்தை ராமன் தனது அணையான லக்ஷ்மணனின் உடல் ஸ்பரிசத்தைப் பெற்றதும் அழுகையை நிறுத்திவிட்டார்.