இவர் தான் சபரிமலை ஐயப்பசாமிக்கு 'உறங்கும்பாட்டு ஹரிவராசனம் பாடலை இயற்றியவர்.
சபரிமலையில் ஐயப்பசாமியை உறங்க வைக்கும் ஹரிவராசனம் விஸ்வமோகனம் எனும் உறக்குப்பாட்டு அத்தாழப்பூஜை முடிந்த பின் நடை சாத்தும் பாடலாக ஒலிக்கும்.
இந்தப் பாடலை இயற்றியவர் தமிழகத்தைச் சேர்ந்த கம்பங்குடி ஸ்ரீ குளத்து ஐயர். இவர் 1920 - ஆம் வருடம் இந்தப் பாடலை இயற்றினார்.
இவர் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி எனும் ஊரில் பிறந்தவர். கம்பங்குடி சுந்தரம் குளத்து ஐயர் பிரசுரித்த சாஸ்தா ஸ்துதி கதம்பம் என்ற புத்தகத்தில் உள்ளது ஹரிவராசனம் கீர்த்தனம்.
இவர் ஹரிவராசனம் பாடலை ஐயப்பசாமியை தரிசிக்கும்போது எழுதினார்.
ஒவ்வொரு வரிகளும் ஐயப்ப சாமியே அருளியது போல இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
இவரது முன்னோர்கள் மிகவும் கஷ்டப்பட்டாலும், இவர்களது வீட்டின் வழியாக போவோர் வருவோருக்கும், இல்லாதவர்களுக்கும் உணவளித்து வரும் பழக்கத்தை கடைபிடித்து வந்தனர்.
அப்போது ஐயப்பசாமி, தாயின் தலைவலி போக்கப் புலிப்பாலை எடுக்க அந்த வழியாக வந்துள்ளார். அப்போது மிகவும் களைப்புடன் இருந்த ஐயப்பன் அந்த குடும்பத்தைப் பற்றி கேள்விப்பட்டு வந்து உணவு கேட்டுள்ளார். உணவு ஏதும் இல்லாததால் வீட்டில் இருந்த கம்பு தானியத்தை கூழாக செய்து உணவளித்தனர்.
அதனாலதான் அவர்களது குடும்பம் கம்பங்குடி என அழைக்கப்பட்டது.
அந்த பூர்விகமான குடும்பத்தில் பிறந்தவர்தான் ஹரிவராசனம் பாடலை இயற்றிய கம்பங்குடி
ஸ்ரீ குளத்து ஐயர்.
இந்தப் பாடல் வழக்கத்திற்கு வருவதற்கு முன், சபரிமேலையில் சாந்தியாக இருந்த செங்ஙன்னூர் கிட்டுமணி திருமேணி
நம்பூதிரி புல்லாங்குழல் வாசித்து நடை சார்த்துவது நடப்பில் இருந்தது.
1950 - களில் சபரிமலை ஐயப்பன் கோவில் தீக்கிரையாகி பின் தேவபிரசன்னம் பார்க்கப்பட்டு சபரிமலை கோவிலை மீண்டும் 1951 புனரமைத்தனர்.
அப்போது கோவில் மேல்சாந்தியாக இருந்த ஈஸ்வரன் நம்பூதிரி ஹரிவராசனம் கீர்த்தனம் இரவு அத்தாழப் பூஜையில் ஐயப்பசாமி முன் நின்று ஸ்லோகம் போன்று சொல்வதை மாற்றினார். இது ஐயப்பசாமியை உறங்கவைக்கும் பாடல்போல உள்ளதாகக் கருதி, அத்தாழ பூஜை (இரவு பூஜை) முடிந்து நடை சாத்தும் பாடலாக மாற்றினார்.
மேல் சாந்தியாக இருந்த ஈஸ்வரன் மற்றும் கோவில் ஊழியர்களும் ஹரிவராஸனம் பாட ஆரம்பித்த வழக்கம், ஏசுதாஸின் இனிய குரலில் இந்தப் பாடல் வெளிவந்த பிறகு அந்த இசைத்தட்டை இசைப்பதாக மாறியது.
கே.ஜே. யேசுதாஸ் 1975 - ஆம் ஆண்டு தமிழ், மலையாளம் மொழிகளில் வெளிவந்த 'சுவாமி ஐயப்பன் ' திரைப்படத்தில் முதன் முறையாக இந்தப் பாடலை பாடினார்.
அதற்கு தேவராஜன் என்பவர் இசையமைத்தார். அந்த மெட்டில் அமைந்த ஹரிவராசனம் பாடல்தான் இன்றுவரை சபரிமேலையில் நடைசாத்தும் பாடலாக ஒலிக்கிறது.
ஸ்வாமியே சரணம் ஐயப்பா🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இது உங்கள் இடம்: எல்லாம் வெறும் கண்துடைப்பு தான்.. மக்களே உஷார்!
ந.செந்தமிழ் வாணி, காஞ்சிபுரத்திலிருந்து எழுதுகிறார்: 'இரண்டு 'டோஸ்' கொரோனா தடுப்பூசி போட்டோருக்கு மட்டுமே, 'டாஸ்மாக்' கடையில் மது விற்பனை செய்யப்படும்' என, சமீபத்தில் அறிவித்துள்ளது அரசு.
மக்கள் கூடும் அனைத்து பொது வெளியிலும், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டோருக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கப்படும் என்ற ஆணை ஏற்கனவே அமலில் இருக்கிறது. ஆனால், அது வெறும் ஏட்டளவிலும், பேச்சளவிலும் மட்டுமே இருக்கிறது.
கடந்த ஞாயிறு, சென்னையில் பிரபல, 'ஷாப்பிங் மால்' ஒன்றுக்கு சென்றிருந்தேன். உள்ளே வருவோரிடம், ஏதோ பேருக்கு வெப்ப பரிசோதனை செய்து, 'இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்கிறீர்களா?' என்று சம்பிரதாயமாக கேட்க, 'போட்டாச்சு...'
பாபர் வருகைக்கு முன் இந்தியாவில் அனைவரும் ஹிந்துக்களே: அசாம் முதல்வர்
புதுடில்லி: ''ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு இந்தியா. முகலாய மன்னர் பாபர் வருவதற்கு முன், இந்தியாவில் அனைவரும் ஹிந்துக்களாக தான் இருந்தனர்,'' என, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.
இந்திய வம்சாவளி
அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. நேற்று அவர் கூறியதாவது: ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு இந்தியா. உலகில் எந்த நாட்டில் ஹிந்துக்கள் வசித்தாலும், அவர்கள் இந்திய வம்சாவளியினராக தான் இருப்பர்.
முகலாய மன்னர் பாபர் 1526ல் இந்தியாவுக்கு வந்தார். அதற்கு முன் வரை இந்தியாவில் ஹிந்துக்கள் மட்டுமே இருந்தனர். வெளிநாடுகளில் வசிக்கும் ஹிந்துக்களுக்கு கஷ்டம் ஏற்பட்டால், அவர்கள் எப்போது வேண்டு மானாலும் இந்தியாவுக்கு வரலாம்; அது, அவர்களது உரிமை.
சோழனிடம் கணக்கராக இருந்த சுதண்மன் என்பவனது கணக்கில் ஏதோ தவறு இருப்பதாக கருதிய சோழன், நாளைக்குள் கணக்கை சீர் செய்து சமர்ப்பிக்காவிடில் தண்டனை என கட்டளையிட்டான். கவலைப்பட்ட கணக்கன் கணக்கு ஏடுகளை சிவ லிங்கத்தின் முன் சமர்ப்பித்து தன்னை காக்க வேண்டினான். 🙏🇮🇳1
இரக்கம் கொண்ட சிவபெருமான், அந்தக் கணக்கன் வடிவிலேயே சென்று கணக்குகளை சீர் செய்து மன்னனை தெளிவிபடுத்தித் திரும்பினார். மறு நாள் ஏதுமறியாத சுதண்மன் அரண்மனை கணக்கு வழக்குகளை எடுத்துக் கொண்டு மன்னரை சந்திக்க சென்றான்.
🙏🇮🇳2
அவனைக் கண்ட மன்னன், "நேற்று இரவே அரண்மனை வந்து என்னை சந்தித்து கணக்குகளை நேர் செய்தீரே! மீண்டும் எமைக் காண வந்த காரணம்?'' என வினவ, கணக்கன் வடிவில் சிவபெருமான் வந்து சந்தேகம் தீர்த்தத்தை எண்ணி மன்னரும் கணக்கனும் மனம் நெகிழ்ந்தனர். 🙏🇮🇳3
வெற்றி அடைவது, தோல்வி பெறுவது... இந்த இரண்டில் எது பிடிக்கும் உங்களுக்கு?’என்று எவரேனும் உங்களிடம் கேட்டால், நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?
'என்ன இது, பைத்தியக்காரத்தனமான கேள்வியா இருக்கே? ஜெயிக்கறதுதான் சுகம்; அதுதான் கம்பீரம்.
யாராவது தோத்துப் போறதுக்கு ஆசைப்படுவாங்களா?’என்பீர்கள். நீங்கள் மட்டுமல்ல... இந்த உலகில் உள்ள சகல மனிதர்களும் வெற்றி பெறுவதற்குத்தான் ஆசைப்படுவார்கள். அந்த வெற்றியில் அகம் மகிழ்ந்து போவார்கள்; நெஞ்சு நிமிர்த்திக் கொள்வார்கள்.
அதேநேரம், தோல்வி வந்துவிட்டால், துவண்டு கதறுவார்கள்; கண்ணீர் விட்டுப் புலம்புவார்கள்.
வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை. அதே நேரத்தில், நாம் யாரிடம் வெற்றி பெற வேண்டும், எவரிடம் தோல்வியைத் தழுவ வேண்டும் என்று மறைமுகமாக நமக்கு அருளியிருக்கிறார் பகவான்.
புதுடில்லி : ''நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த, பார்லி.,யில் மசோதா நிறைவேற்ற வேண்டும்,'' என, பா.ஜ., - எம்.பி., நிஷிகாந்த் துபே கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் கோடா தொகுதி எம்.பி.,யாக, பா.ஜ.,வை சேர்ந்த நிஷிகாந்த் துபே உள்ளார்.லோக்சபாவில் நேற்று பூஜ்ய நேரத்தில் அவர் பேசியதாவது:
அரசியல் சட்டத்தின் 44வது பிரிவில், பொது சிவில் சட்டம் பற்றி கூறப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது பற்றி ஆய்வு செய்ய, குழு ஒன்றை அமைக்குமாறு, மத்திய அரசுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டுள்ளது.
அறநிலையத் துறை தணிக்கை பிரிவை நிதித் துறைக்கு மாற்றியது சரியா?
ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வரும் கோவில்களின் நிதி விவகாரங்களை தணிக்கை செய்யும் தணிக்கை பிரிவை, தமிழக அரசின் நிதித் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக வெளியான அரசாணை, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து தமிழக ஆலய பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது:
தமிழக கோவில்களின் வருமானத்தை தணிக்கை செய்யும் பணியை, அறநிலையத் துறைக்குஉள்ளேயே இருக்கும் தணிக்கை பிரிவு கவனித்து வந்தது. இதற்காக, தமிழகம் முழுதும் பல தணிக்கை அலுவலகங்கள் செயல்பட்டன.
அவற்றில் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றினர்.
தணிக்கை பணி செய்வதற்காக, ஒவ்வொரு கோவிலில் இருந்தும், அதன் ஆண்டு வருமானத்தில், 4 சதவீத தொகையை, ஹிந்து சமய அறநிலையத் துறை தனியாக வசூலித்து வந்தது.