அறநிலையத் துறை தணிக்கை பிரிவை நிதித் துறைக்கு மாற்றியது சரியா?
ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வரும் கோவில்களின் நிதி விவகாரங்களை தணிக்கை செய்யும் தணிக்கை பிரிவை, தமிழக அரசின் நிதித் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக வெளியான அரசாணை, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து தமிழக ஆலய பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது:
தமிழக கோவில்களின் வருமானத்தை தணிக்கை செய்யும் பணியை, அறநிலையத் துறைக்குஉள்ளேயே இருக்கும் தணிக்கை பிரிவு கவனித்து வந்தது. இதற்காக, தமிழகம் முழுதும் பல தணிக்கை அலுவலகங்கள் செயல்பட்டன.
அவற்றில் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றினர்.
தணிக்கை பணி செய்வதற்காக, ஒவ்வொரு கோவிலில் இருந்தும், அதன் ஆண்டு வருமானத்தில், 4 சதவீத தொகையை, ஹிந்து சமய அறநிலையத் துறை தனியாக வசூலித்து வந்தது.
இந்த தணிக்கை பிரிவு, பணியை சரிவர செய்யவில்லை; தணிக்கை தொடர்பான ஏராளமான ஆட்சேபனைகளும் நிலுவையில் இருந்தன. மேலும், இந்த தணிக்கை பிரிவே, ஹிந்து சமய அறநிலைய சட்டம் - 1959க்கு எதிரானது என்று குற்றச்சாட்டுகள் எழும்பின.
இந்நிலையை மாற்றி, வெளி தணிக்கை செய்ய உத்தரவிடக்கோரி, கடந்த டிசம்பரில், சென்னை உயர் நீதிமன்றத்தில், பொதுநல வழக்கு தொடர்ந்தேன்.
சில நாட்களுக்கு முன், விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என, நீதிமன்றத்தில் முறையிட்டேன்.
தமிழக அரசு, கோர்ட் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, அவசரமாக தணிக்கை பிரிவை, நிதித் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. இப்படி செய்திருப்பது கூட தவறு தான்.
* ஹிந்து சமய அறநிலையத் துறை சட்டப்பிரிவு 87 - 4ன் படி, - ஆண்டு வருமானம் 1,000 ரூபாய்க்கு கீழ் உள்ள கோவில்களுக்கு மட்டுமே, ஹிந்து சமய அறநிலையத் துறை உள் தணிக்கை செய்ய முடியும்.
பிற கோவில்களுக்கு வெளி தணிக்கை தான் செய்ய வேண்டும். ஆனால், 1976 முதல் வெளி தணிக்கை செய்யவில்லை
* 'தமிழக கோவில்களில், ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர் கீழ் இயங்கும் தணிக்கை பிரிவு, உள் தணிக்கை செய்யும்' என, 1976ல் இயற்றப்பட்ட சட்ட விதிக்கு, தமிழக சட்டசபையின் ஒப்புதல் பெறவில்லை.
ஒப்புதல் பெறாத விதிகள் சட்டப்படி செல்லாது. எனவே, ஹிந்து சமய அறநிலையத் துறை செய்து வந்த உள் தணிக்கை சட்டவிரோதமானது
* ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள கோவில்களில், உடனுக்குடன் தணிக்கை நடக்க வேண்டும். இதுவும் 50 ஆண்டுகளாக நடக்கவில்லை.
அதிக வருமானம் இருக்கும் பல கோவில்களில் கூட, ஆண்டு தணிக்கை நடத்தப்படவில்லை
* ஆண்டு வருமானம், 2 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள கோவில்களில், பட்டய கணக்காளர் மட்டுமே தணிக்கை மேற்கொள்ள வேண்டும் என, வருமான வரி சட்டம் கூறுகிறது.
அப்படி இருக்கும்போது, அன்னதான கணக்குகளை மட்டும் வருமான வரி விலக்கு பெறுவதற்காக, பட்டய கணக்காளரை வைத்து, தணிக்கை செய்து வருமான வரி துறைக்கு கணக்கு காண்பிக்கின்றனர்
* பிற கோடிக்கணக்கான வரவு - செலவுகளை, வெளி தணிக்கைக்கு உட்படுத்துவதில்லை. மேலும், உள் தணிக்கை அறிக்கைகளையும், அறநிலையத் துறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வதில்லை; இவை சட்ட மீறல்கள்
* நான் வழக்கு தொடுத்து நெருக்கடி கொடுத்த பின், தற்போது தமிழக அரசு, திடீரென ஒரு அரசாணையை வெளியிட்டு, ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர் கீழ் இயங்கி வந்த தணிக்கை பிரிவை, நிதித் துறையில் சேர்த்துள்ளது. இந்த அரசாணையில் கூறப்பட்டுள்ள சில தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன
* அறநிலையத் துறை உள் தணிக்கையில் கூறப்பட்ட, 15 லட்சம் தணிக்கை ஆட்சேபனைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. இதன் மதிப்பு 1,300 கோடி ரூபாயை தாண்டும். நிலுவையில் இருக்கும் தொகைக்கு வட்டி போட்டால் அது, 10 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும். இந்த இழப்புக்கு யார் பொறுப்பு?
* இவற்றை சரிசெய்யாமல், பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தது, ஹிந்து சமய அறநிலையத் துறையின் முழு சீர்கேட்டையும் அப்பட்டமாக உணர்த்து கிறது
* தமிழக அரசின் நிதித் துறை வாயிலாக, கோவில் கணக்குகளை தணிக்கை செய்வது, வெளி தணிக்கை ஆகாது.
2 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் உள்ள கோவில்களை, நிதித் துறையினர் தணிக்கை செய்ய முடியாது. பட்டய கணக்காளர்கள் மட்டுமே தணிக்கை செய்ய வேண்டும். இந்த விதிமீறல் குறித்தும் வழக்கு தொடுக்க இருக்கிறேன்
* புதிய தணிக்கை நடை முறையால், 40 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் ஆட்சேபனைகளை எப்படி விரைந்து தீர்க்க முடியும். கோவில்கள் அடைந்த நஷ்டத்தை எப்படி ஈடு செய்ய முடியும்; இது குறித்து புதிய அரசாணையில் எதுவும் கூறப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்துமதத்தின் அடிநாதமும் ஆணிவேரும் பெண் பாதுகாப்பும் சுதந்திரமுமே!
மேற்காசிய மதங்களெல்லாம் , ஐரோப்பிய மதங்களெல்லாம் கடவுள் ஒரு ஆண் என்றபொழுது கடவுளில் பாதி பெண், பெண் இல்லாமல் கடவுளே இல்லை என சொன்னமதம் இந்துமதம்.
மேற்காசியாவின் ஆபிரகாம் மனைவிக்கு தெரியாமல் மகனை பலியிட, அதாவது மனைவியினை ஒரு பொருட்டாக மதியாதபொழுது சிறுதொண்டரின் மனைவி சிவனுக்காய் தன் மகனை கணவனோடு சேர்ந்து பலியிட்டாள் என சொன்ன மதம் இந்துமதம்.
ஆண்டாளும், நாயன்மார்களில் 3 வரும் பெண்கள் என்பது இம்மத சிறப்பு; மீதி 60 நாயன்மாரிலும் கணவனோடு பக்திக்கு காவலாய் இருந்த மங்கையர்கரசிகள் உண்டு. இந்துமதம் அந்த சிறப்பை கொடுத்திருந்தது.இங்கு பெண்ணடிமை தனம் ஒரு காலமும் இல்லை,.
இது உங்கள் இடம்: எல்லாம் வெறும் கண்துடைப்பு தான்.. மக்களே உஷார்!
ந.செந்தமிழ் வாணி, காஞ்சிபுரத்திலிருந்து எழுதுகிறார்: 'இரண்டு 'டோஸ்' கொரோனா தடுப்பூசி போட்டோருக்கு மட்டுமே, 'டாஸ்மாக்' கடையில் மது விற்பனை செய்யப்படும்' என, சமீபத்தில் அறிவித்துள்ளது அரசு.
மக்கள் கூடும் அனைத்து பொது வெளியிலும், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டோருக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கப்படும் என்ற ஆணை ஏற்கனவே அமலில் இருக்கிறது. ஆனால், அது வெறும் ஏட்டளவிலும், பேச்சளவிலும் மட்டுமே இருக்கிறது.
கடந்த ஞாயிறு, சென்னையில் பிரபல, 'ஷாப்பிங் மால்' ஒன்றுக்கு சென்றிருந்தேன். உள்ளே வருவோரிடம், ஏதோ பேருக்கு வெப்ப பரிசோதனை செய்து, 'இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்கிறீர்களா?' என்று சம்பிரதாயமாக கேட்க, 'போட்டாச்சு...'
பாபர் வருகைக்கு முன் இந்தியாவில் அனைவரும் ஹிந்துக்களே: அசாம் முதல்வர்
புதுடில்லி: ''ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு இந்தியா. முகலாய மன்னர் பாபர் வருவதற்கு முன், இந்தியாவில் அனைவரும் ஹிந்துக்களாக தான் இருந்தனர்,'' என, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.
இந்திய வம்சாவளி
அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. நேற்று அவர் கூறியதாவது: ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு இந்தியா. உலகில் எந்த நாட்டில் ஹிந்துக்கள் வசித்தாலும், அவர்கள் இந்திய வம்சாவளியினராக தான் இருப்பர்.
முகலாய மன்னர் பாபர் 1526ல் இந்தியாவுக்கு வந்தார். அதற்கு முன் வரை இந்தியாவில் ஹிந்துக்கள் மட்டுமே இருந்தனர். வெளிநாடுகளில் வசிக்கும் ஹிந்துக்களுக்கு கஷ்டம் ஏற்பட்டால், அவர்கள் எப்போது வேண்டு மானாலும் இந்தியாவுக்கு வரலாம்; அது, அவர்களது உரிமை.
சோழனிடம் கணக்கராக இருந்த சுதண்மன் என்பவனது கணக்கில் ஏதோ தவறு இருப்பதாக கருதிய சோழன், நாளைக்குள் கணக்கை சீர் செய்து சமர்ப்பிக்காவிடில் தண்டனை என கட்டளையிட்டான். கவலைப்பட்ட கணக்கன் கணக்கு ஏடுகளை சிவ லிங்கத்தின் முன் சமர்ப்பித்து தன்னை காக்க வேண்டினான். 🙏🇮🇳1
இரக்கம் கொண்ட சிவபெருமான், அந்தக் கணக்கன் வடிவிலேயே சென்று கணக்குகளை சீர் செய்து மன்னனை தெளிவிபடுத்தித் திரும்பினார். மறு நாள் ஏதுமறியாத சுதண்மன் அரண்மனை கணக்கு வழக்குகளை எடுத்துக் கொண்டு மன்னரை சந்திக்க சென்றான்.
🙏🇮🇳2
அவனைக் கண்ட மன்னன், "நேற்று இரவே அரண்மனை வந்து என்னை சந்தித்து கணக்குகளை நேர் செய்தீரே! மீண்டும் எமைக் காண வந்த காரணம்?'' என வினவ, கணக்கன் வடிவில் சிவபெருமான் வந்து சந்தேகம் தீர்த்தத்தை எண்ணி மன்னரும் கணக்கனும் மனம் நெகிழ்ந்தனர். 🙏🇮🇳3
வெற்றி அடைவது, தோல்வி பெறுவது... இந்த இரண்டில் எது பிடிக்கும் உங்களுக்கு?’என்று எவரேனும் உங்களிடம் கேட்டால், நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?
'என்ன இது, பைத்தியக்காரத்தனமான கேள்வியா இருக்கே? ஜெயிக்கறதுதான் சுகம்; அதுதான் கம்பீரம்.
யாராவது தோத்துப் போறதுக்கு ஆசைப்படுவாங்களா?’என்பீர்கள். நீங்கள் மட்டுமல்ல... இந்த உலகில் உள்ள சகல மனிதர்களும் வெற்றி பெறுவதற்குத்தான் ஆசைப்படுவார்கள். அந்த வெற்றியில் அகம் மகிழ்ந்து போவார்கள்; நெஞ்சு நிமிர்த்திக் கொள்வார்கள்.
அதேநேரம், தோல்வி வந்துவிட்டால், துவண்டு கதறுவார்கள்; கண்ணீர் விட்டுப் புலம்புவார்கள்.
வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை. அதே நேரத்தில், நாம் யாரிடம் வெற்றி பெற வேண்டும், எவரிடம் தோல்வியைத் தழுவ வேண்டும் என்று மறைமுகமாக நமக்கு அருளியிருக்கிறார் பகவான்.
புதுடில்லி : ''நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த, பார்லி.,யில் மசோதா நிறைவேற்ற வேண்டும்,'' என, பா.ஜ., - எம்.பி., நிஷிகாந்த் துபே கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் கோடா தொகுதி எம்.பி.,யாக, பா.ஜ.,வை சேர்ந்த நிஷிகாந்த் துபே உள்ளார்.லோக்சபாவில் நேற்று பூஜ்ய நேரத்தில் அவர் பேசியதாவது:
அரசியல் சட்டத்தின் 44வது பிரிவில், பொது சிவில் சட்டம் பற்றி கூறப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது பற்றி ஆய்வு செய்ய, குழு ஒன்றை அமைக்குமாறு, மத்திய அரசுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டுள்ளது.