வெற்றி அடைவது, தோல்வி பெறுவது... இந்த இரண்டில் எது பிடிக்கும் உங்களுக்கு?’என்று எவரேனும் உங்களிடம் கேட்டால், நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?
'என்ன இது, பைத்தியக்காரத்தனமான கேள்வியா இருக்கே? ஜெயிக்கறதுதான் சுகம்; அதுதான் கம்பீரம்.
யாராவது தோத்துப் போறதுக்கு ஆசைப்படுவாங்களா?’என்பீர்கள். நீங்கள் மட்டுமல்ல... இந்த உலகில் உள்ள சகல மனிதர்களும் வெற்றி பெறுவதற்குத்தான் ஆசைப்படுவார்கள். அந்த வெற்றியில் அகம் மகிழ்ந்து போவார்கள்; நெஞ்சு நிமிர்த்திக் கொள்வார்கள்.
அதேநேரம், தோல்வி வந்துவிட்டால், துவண்டு கதறுவார்கள்; கண்ணீர் விட்டுப் புலம்புவார்கள்.
வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை. அதே நேரத்தில், நாம் யாரிடம் வெற்றி பெற வேண்டும், எவரிடம் தோல்வியைத் தழுவ வேண்டும் என்று மறைமுகமாக நமக்கு அருளியிருக்கிறார் பகவான்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்குத் தாமோதரன் எனும் திருநாமம் உண்டு. தாம்புக் கயிற்றால் ஸ்ரீகிருஷ்ணரின் இடுப்பில் கட்டிய கதையைத்தான் நாம் அறிவோமே! இந்த உலகையே கட்டியாள்கிற கிருஷ்ண பரமாத்மா, ஒரு சிறிய தாம்புக் கயிற்றுக்குக் கட்டுண்டு கிடந்தான்.
கயிற்றை எடுத்து அவனது இடுப்பில் சுற்றிக் கட்டலாம் என்றால், லேசாகப் பெருத்தான் கண்ணபிரான். கயிற்று முனைகளைக் கட்டுவதற்கு இரண்டு அங்குல இடைவெளி இருந்தது. இன்னொரு கயிற்றைச் சேர்த்து, முடிச்சுப் போட்டுக் கட்ட முனைந்தார்கள். இன்னும் சற்றுப் பெருத்தான்.
இப்போதும் இரண்டு அங்குல இடைவெளி இருந்தது. இன்னொரு கயிறு, இன்னொரு இரண்டு அங்குல பருமன்... என்றே இந்த விளையாட்டு நிகழ்ந்து கொண்டிருக்க... அவன் அம்மா சோர்ந்து போனாள். ஆனால், கண்ணன் களைப்படையவில்லை.
அந்தத் தருணத்தில்தான் பகவான் யோசித்தான். ''அடேடே..! இப்போது நாம் யாரிடம் நம் வீரத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறோம்? இதோ... தோல்வியைக் கண்டு அம்மா துவண்டுவிட்டாளே! பாவம் அவள்’ என்று எண்ணியவன், 'இந்த என்னுடைய திமிர்த்தனத்தை உன்னிடம் காட்டியது தவறுதான் தாயே!
நம்முடைய தாய் - தந்தையிடம் தோற்றுப் போவதில் தப்பே இல்லை என்பதை எவ்வளவு சூசகமாக, அழகாக, தெளிவாகச் சொல்லியிருக்கிறான் ஸ்ரீகண்ணபிரான்.
பகவான், கயிற்றுக்கெல்லாம் கட்டுப்படாதவர். பிறகு..? அவர் அன்புக்கும் பாசத்துக்கும் கட்டுப்படுபவர். காதலுக்கும் பிரேமைக்கும் கட்டுண்டு கிடப்பவர். இதனை, 'கண்ணிநுண் சிறுத்தாம்புடன் கட்டுண்டப் பண்ணிய பெரு மாயன்...’எனும் அழகிய பாடல் அற்புதமாக விளக்குகிறது.
ஸ்ரீகிருஷ்ணரின் இடுப்பிலே அந்தக் கயிற்றுத் தழும்பைக் காணலாம். அது தழும்பு அல்ல; பட்டம். நெற்றியில் கிரீடம் சூட்டிக்கொண்டால், திருமண் இட்டுக் கொண்டால் அந்த இடத்தில் தழும்பேறிக் கிடக்கும், அல்லவா... அப்படித்தான் இது! அந்தப் பட்டம் எதை உணர்த்துகிறது தெரியுமா?
'அடியவர்கள் எவராக இருந்தாலும், அவர்களுக்கு நான் கட்டுண்டு கிடப்பேன்’ என்பதைத்தான் அந்தத் தழும்பின் மூலம் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறார், பகவான் ஸ்ரீகிருஷ்ணர்!
ஆகவே, தாய்- தந்தையிடம் தர்க்கம் வேண்டாம்; சண்டையும் பூசலும் அவசியமில்லை. வெற்றி - தோல்வி என்பதெல்லாம் முக்கியமில்லை. அவர்கள் வெற்றி பெற்றால், அதற்காக மகிழ்வது நீங்கள்தான். பூரிப்பது நீங்கள்தான்!
சரி... ஸ்ரீகிருஷ்ணர் பெற்றோரிடம் தோற்றதைப் பார்த்தோம். ஸ்ரீராமர் தோற்றது தெரியுமா? அவர் யாரிடம் தோற்றுப் போனார் என்பதை அறிவீர்களா?
கோதாவரி நதி. ஸ்ரீராமபிரானுக்கும் சீதாப்பிராட்டிக்கும் நீச்சல் போட்டி. நதிக்கு நடுவில் உள்ள பாறையை யார் முதலில் தொட்டுவிட்டுக் கரைக்கு வருகிறார் என்பது தான் போட்டி. அந்தப் பாறையின் மேலே நடுவராக அமர்ந்திருக்கிறார் ஸ்ரீலட்சுமணர்.
ராவணன் எனும் அரக்கனையே அழித்தொழிக்க அவதரித்த ஸ்ரீராமருக்கு இதெல்லாம் ஒரு போட்டியா என்ன? கரையில் இருந்து சீதை பதினைந்து அடி தூரத்தைக் கடப்பதற்குள், அவர் பாறையைத் தொட்டுவிட்டுத் திரும்பி, பாதி தூரத்தைக் கடந்து வந்து கொண்டிருக்கிறார்.
பரிதவிப்பான சீதையின் திருமுகத்தைப் பார்த்ததும், ஸ்ரீராமபிரானுக்குள் ஒரு யோசனை... 'இங்கே அரக்கனுடனா எனக்குப் போட்டி? யாரை வெல்ல இப்படி மல்லுக்கட்டிக்கொண்டு, வெற்றி பெறும் முனைப்புடன் வெறித்தனமாக நீச்சலடிக்கிறேன்? இதோ... இவள் என் பிரிய சகி அல்லவா?
என் அன்புக்கு உரிய இல்லாள் அல்லவா? அவளைத் தோற்கடித்துவிட்டு, அந்த வெற்றியை எங்கே, எவரிடம் பகிர்ந்துகொண்டு கொண்டாடுவதாம்? தீராத பகையாளியைத் தோற்கடிக்கிற புத்தியுடன் அல்லவா இந்தப் போட்டியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறேன்?’
என்று நினைத்த ஸ்ரீராமர், அப்படியே தண்ணீருக்குள் மூழ்கினார்; அங்கேயே அப்படியே அமர்ந்து கொண்டார்.
அதையடுத்து, சீதாதேவி வேகமாக நீந்திக் கரையை அடைந்தாள்; வெற்றியும் பெற்றாள்.
அதுவரை நடுவராக இருந்த ஸ்ரீலட்சுமணர், தடாலென்று கட்சி மாறி, அண்ணியாருடன் இணைந்து, 'என்ன அண்ணா! அடடா! இப்படி அநியாயமா தோத்துப் போயிட்டீங்களே’என்று ஸ்ரீராமரைக் கேலி செய்தார். சீதையும் ஸ்ரீராமரை வெகுவாகக் கேலி செய்தாள்.
அசோகவனத்தில் சிறை இருந்தபோது, ஸ்ரீராமரை நினைத்தபடியே கிடந்தபோது, அங்கே ஸ்ரீஅனுமன் வர... அவனிடம் இந்தச் சம்பவங்களையெல்லாம் எடுத்துச் சொல்லி, 'ஹூம்... அவரும் நானும் எப்படியெல்லாம் சந்தோஷமும் குதூகலமுமாக வாழ்ந்தோம், தெரியுமா?’என்றபடி ஏக்கப் பெருமூச்சு விட்டாளாம்!
இதைத்தான், 'பத்தினிக்குத் தோற்பான் பரம ரசிகன்’என்று சொல்லி வைத்தனர் நம் முன்னோர். 'மனைவியைத் தோற்கடித்துவிட்டு வெற்றி பெற்ற பூரிப்பை எவரிடம் சொல்லிப் பெருமைப்பட முடியும்?
அவளிடம் தோற்றுப் போனால், அந்தத் தோல்வியைக்கூட அவளிடம் பெருமைபடப் பேசி மகிழலாம்! இன்னும் சொல்லப் போனால், மனைவியிடம் தோற்றுப் போனால், வாழ்வில் ஜெயிக்கலாம்!
ஆக, பெற்றோர்களுக்குக் கட்டுப்படுவதை ஸ்ரீகண்ணனும், மனைவிக்கு விட்டுக்கொடுப்பதை ஸ்ரீராமபிரானும் நமக்கு மிகத் தெளிவாக உணர்த்தியிருக்கிறார்கள். உணர்ந்து, தெளிந்து, செயல்படுபவர்கள் பாக்கியவான்கள்!
இந்த அருங்குணங்களால் திளைத்த ஸ்ரீஆண்டாள், 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’என்று உருகிப் பாடுகிறாள். சீதாபிராட்டியிடம் 'மாயாசிரஸ்’ கொண்டு வந்து காட்டுகிறான் ராவணன். 'இதோ, உன் கணவனின் தலை. அவன் இறந்துவிட்டான்’ என்று மாயத் தோற்றத்தை, கொய்த தலையைக் கையில் வைத்துக் காட்டுகிறான்.
'ஸ்ரீராமர் உயிருடன் இருக்கிறார்’எனும் தகவல் ஏற்கெனவே தெரிந்துவிட்டது சீதாவுக்கு! எனவே, அவள் கலகலவெனச் சிரித்துக்கொண்டே, 'அவர் சாகவில்லை’ என்றாள். 'எப்படிச் சொல்கிறாய்?’என்று ராவணன் கேட்டான்.
அதற்கு அவள், ''எப்போது நான் உயிருடன் இருக்கிறேனோ, அப்போது அவரும் உயிருடன் இருக்கிறார் என்றுதான் அர்த்தம். இப்போது, அவர் உயிருடன் இருக்கிறார். ஒருவேளை நீ சொல்வது போல், அவர் உயிருடன் இல்லையெனில், இந்நேரம் நானும் உயிருடன் இருந்திருக்க மாட்டேன்!'' என்றாள்.
'நீயின்றி நானில்லை; 'நானின்றி அவனில்லை!’ என்பார்கள். பரஸ்பரம் இந்த முக்கியத்துவத்தையும் பேரன்பையும் உணர்ந்துவிட்டால், அந்தத் தம்பதியை எவராலும் எப்போதும் எதுவும் செய்துவிட முடியாது!
நம்மிடம் உள்ள குணங்களில் ஏதேனும் ஒன்று நம்மைப் போலவே வேறொருவருக்கும் இருந்தால், சட்டென்று அவர்கள் மீது சிநேகிதம், பிரியம், வாஞ்சை... நமக்கு வரும் அல்லவா?!
பகவானும் அப்படித்தான்... அவனுடைய குணங்கள் நம்முடைய குணங்களாக இருந்துவிட்டால், இறைவன் நமக்கு சிநேகிதனாக, பிரியம் உள்ளவனாக, வாஞ்சை உள்ளவனாக இருப்பான்!
🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்துமதத்தின் அடிநாதமும் ஆணிவேரும் பெண் பாதுகாப்பும் சுதந்திரமுமே!
மேற்காசிய மதங்களெல்லாம் , ஐரோப்பிய மதங்களெல்லாம் கடவுள் ஒரு ஆண் என்றபொழுது கடவுளில் பாதி பெண், பெண் இல்லாமல் கடவுளே இல்லை என சொன்னமதம் இந்துமதம்.
மேற்காசியாவின் ஆபிரகாம் மனைவிக்கு தெரியாமல் மகனை பலியிட, அதாவது மனைவியினை ஒரு பொருட்டாக மதியாதபொழுது சிறுதொண்டரின் மனைவி சிவனுக்காய் தன் மகனை கணவனோடு சேர்ந்து பலியிட்டாள் என சொன்ன மதம் இந்துமதம்.
ஆண்டாளும், நாயன்மார்களில் 3 வரும் பெண்கள் என்பது இம்மத சிறப்பு; மீதி 60 நாயன்மாரிலும் கணவனோடு பக்திக்கு காவலாய் இருந்த மங்கையர்கரசிகள் உண்டு. இந்துமதம் அந்த சிறப்பை கொடுத்திருந்தது.இங்கு பெண்ணடிமை தனம் ஒரு காலமும் இல்லை,.
இது உங்கள் இடம்: எல்லாம் வெறும் கண்துடைப்பு தான்.. மக்களே உஷார்!
ந.செந்தமிழ் வாணி, காஞ்சிபுரத்திலிருந்து எழுதுகிறார்: 'இரண்டு 'டோஸ்' கொரோனா தடுப்பூசி போட்டோருக்கு மட்டுமே, 'டாஸ்மாக்' கடையில் மது விற்பனை செய்யப்படும்' என, சமீபத்தில் அறிவித்துள்ளது அரசு.
மக்கள் கூடும் அனைத்து பொது வெளியிலும், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டோருக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கப்படும் என்ற ஆணை ஏற்கனவே அமலில் இருக்கிறது. ஆனால், அது வெறும் ஏட்டளவிலும், பேச்சளவிலும் மட்டுமே இருக்கிறது.
கடந்த ஞாயிறு, சென்னையில் பிரபல, 'ஷாப்பிங் மால்' ஒன்றுக்கு சென்றிருந்தேன். உள்ளே வருவோரிடம், ஏதோ பேருக்கு வெப்ப பரிசோதனை செய்து, 'இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்கிறீர்களா?' என்று சம்பிரதாயமாக கேட்க, 'போட்டாச்சு...'
பாபர் வருகைக்கு முன் இந்தியாவில் அனைவரும் ஹிந்துக்களே: அசாம் முதல்வர்
புதுடில்லி: ''ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு இந்தியா. முகலாய மன்னர் பாபர் வருவதற்கு முன், இந்தியாவில் அனைவரும் ஹிந்துக்களாக தான் இருந்தனர்,'' என, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.
இந்திய வம்சாவளி
அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. நேற்று அவர் கூறியதாவது: ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு இந்தியா. உலகில் எந்த நாட்டில் ஹிந்துக்கள் வசித்தாலும், அவர்கள் இந்திய வம்சாவளியினராக தான் இருப்பர்.
முகலாய மன்னர் பாபர் 1526ல் இந்தியாவுக்கு வந்தார். அதற்கு முன் வரை இந்தியாவில் ஹிந்துக்கள் மட்டுமே இருந்தனர். வெளிநாடுகளில் வசிக்கும் ஹிந்துக்களுக்கு கஷ்டம் ஏற்பட்டால், அவர்கள் எப்போது வேண்டு மானாலும் இந்தியாவுக்கு வரலாம்; அது, அவர்களது உரிமை.
சோழனிடம் கணக்கராக இருந்த சுதண்மன் என்பவனது கணக்கில் ஏதோ தவறு இருப்பதாக கருதிய சோழன், நாளைக்குள் கணக்கை சீர் செய்து சமர்ப்பிக்காவிடில் தண்டனை என கட்டளையிட்டான். கவலைப்பட்ட கணக்கன் கணக்கு ஏடுகளை சிவ லிங்கத்தின் முன் சமர்ப்பித்து தன்னை காக்க வேண்டினான். 🙏🇮🇳1
இரக்கம் கொண்ட சிவபெருமான், அந்தக் கணக்கன் வடிவிலேயே சென்று கணக்குகளை சீர் செய்து மன்னனை தெளிவிபடுத்தித் திரும்பினார். மறு நாள் ஏதுமறியாத சுதண்மன் அரண்மனை கணக்கு வழக்குகளை எடுத்துக் கொண்டு மன்னரை சந்திக்க சென்றான்.
🙏🇮🇳2
அவனைக் கண்ட மன்னன், "நேற்று இரவே அரண்மனை வந்து என்னை சந்தித்து கணக்குகளை நேர் செய்தீரே! மீண்டும் எமைக் காண வந்த காரணம்?'' என வினவ, கணக்கன் வடிவில் சிவபெருமான் வந்து சந்தேகம் தீர்த்தத்தை எண்ணி மன்னரும் கணக்கனும் மனம் நெகிழ்ந்தனர். 🙏🇮🇳3
புதுடில்லி : ''நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த, பார்லி.,யில் மசோதா நிறைவேற்ற வேண்டும்,'' என, பா.ஜ., - எம்.பி., நிஷிகாந்த் துபே கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் கோடா தொகுதி எம்.பி.,யாக, பா.ஜ.,வை சேர்ந்த நிஷிகாந்த் துபே உள்ளார்.லோக்சபாவில் நேற்று பூஜ்ய நேரத்தில் அவர் பேசியதாவது:
அரசியல் சட்டத்தின் 44வது பிரிவில், பொது சிவில் சட்டம் பற்றி கூறப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது பற்றி ஆய்வு செய்ய, குழு ஒன்றை அமைக்குமாறு, மத்திய அரசுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டுள்ளது.
அறநிலையத் துறை தணிக்கை பிரிவை நிதித் துறைக்கு மாற்றியது சரியா?
ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வரும் கோவில்களின் நிதி விவகாரங்களை தணிக்கை செய்யும் தணிக்கை பிரிவை, தமிழக அரசின் நிதித் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக வெளியான அரசாணை, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து தமிழக ஆலய பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது:
தமிழக கோவில்களின் வருமானத்தை தணிக்கை செய்யும் பணியை, அறநிலையத் துறைக்குஉள்ளேயே இருக்கும் தணிக்கை பிரிவு கவனித்து வந்தது. இதற்காக, தமிழகம் முழுதும் பல தணிக்கை அலுவலகங்கள் செயல்பட்டன.
அவற்றில் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றினர்.
தணிக்கை பணி செய்வதற்காக, ஒவ்வொரு கோவிலில் இருந்தும், அதன் ஆண்டு வருமானத்தில், 4 சதவீத தொகையை, ஹிந்து சமய அறநிலையத் துறை தனியாக வசூலித்து வந்தது.