புதுடில்லி : ''நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த, பார்லி.,யில் மசோதா நிறைவேற்ற வேண்டும்,'' என, பா.ஜ., - எம்.பி., நிஷிகாந்த் துபே கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் கோடா தொகுதி எம்.பி.,யாக, பா.ஜ.,வை சேர்ந்த நிஷிகாந்த் துபே உள்ளார்.லோக்சபாவில் நேற்று பூஜ்ய நேரத்தில் அவர் பேசியதாவது:
அரசியல் சட்டத்தின் 44வது பிரிவில், பொது சிவில் சட்டம் பற்றி கூறப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது பற்றி ஆய்வு செய்ய, குழு ஒன்றை அமைக்குமாறு, மத்திய அரசுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டுள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகள் முடிய உள்ள நிலையிலும், நம்மால் பொது சிவில் சட்டம் கொண்டு வர முடியாதது துரதிருஷ்டம். அதனால், நாடு முழுதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் வகையில், பார்லி.,யில் மசோதா நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்துமதத்தின் அடிநாதமும் ஆணிவேரும் பெண் பாதுகாப்பும் சுதந்திரமுமே!
மேற்காசிய மதங்களெல்லாம் , ஐரோப்பிய மதங்களெல்லாம் கடவுள் ஒரு ஆண் என்றபொழுது கடவுளில் பாதி பெண், பெண் இல்லாமல் கடவுளே இல்லை என சொன்னமதம் இந்துமதம்.
மேற்காசியாவின் ஆபிரகாம் மனைவிக்கு தெரியாமல் மகனை பலியிட, அதாவது மனைவியினை ஒரு பொருட்டாக மதியாதபொழுது சிறுதொண்டரின் மனைவி சிவனுக்காய் தன் மகனை கணவனோடு சேர்ந்து பலியிட்டாள் என சொன்ன மதம் இந்துமதம்.
ஆண்டாளும், நாயன்மார்களில் 3 வரும் பெண்கள் என்பது இம்மத சிறப்பு; மீதி 60 நாயன்மாரிலும் கணவனோடு பக்திக்கு காவலாய் இருந்த மங்கையர்கரசிகள் உண்டு. இந்துமதம் அந்த சிறப்பை கொடுத்திருந்தது.இங்கு பெண்ணடிமை தனம் ஒரு காலமும் இல்லை,.
இது உங்கள் இடம்: எல்லாம் வெறும் கண்துடைப்பு தான்.. மக்களே உஷார்!
ந.செந்தமிழ் வாணி, காஞ்சிபுரத்திலிருந்து எழுதுகிறார்: 'இரண்டு 'டோஸ்' கொரோனா தடுப்பூசி போட்டோருக்கு மட்டுமே, 'டாஸ்மாக்' கடையில் மது விற்பனை செய்யப்படும்' என, சமீபத்தில் அறிவித்துள்ளது அரசு.
மக்கள் கூடும் அனைத்து பொது வெளியிலும், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டோருக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கப்படும் என்ற ஆணை ஏற்கனவே அமலில் இருக்கிறது. ஆனால், அது வெறும் ஏட்டளவிலும், பேச்சளவிலும் மட்டுமே இருக்கிறது.
கடந்த ஞாயிறு, சென்னையில் பிரபல, 'ஷாப்பிங் மால்' ஒன்றுக்கு சென்றிருந்தேன். உள்ளே வருவோரிடம், ஏதோ பேருக்கு வெப்ப பரிசோதனை செய்து, 'இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்கிறீர்களா?' என்று சம்பிரதாயமாக கேட்க, 'போட்டாச்சு...'
பாபர் வருகைக்கு முன் இந்தியாவில் அனைவரும் ஹிந்துக்களே: அசாம் முதல்வர்
புதுடில்லி: ''ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு இந்தியா. முகலாய மன்னர் பாபர் வருவதற்கு முன், இந்தியாவில் அனைவரும் ஹிந்துக்களாக தான் இருந்தனர்,'' என, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.
இந்திய வம்சாவளி
அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. நேற்று அவர் கூறியதாவது: ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு இந்தியா. உலகில் எந்த நாட்டில் ஹிந்துக்கள் வசித்தாலும், அவர்கள் இந்திய வம்சாவளியினராக தான் இருப்பர்.
முகலாய மன்னர் பாபர் 1526ல் இந்தியாவுக்கு வந்தார். அதற்கு முன் வரை இந்தியாவில் ஹிந்துக்கள் மட்டுமே இருந்தனர். வெளிநாடுகளில் வசிக்கும் ஹிந்துக்களுக்கு கஷ்டம் ஏற்பட்டால், அவர்கள் எப்போது வேண்டு மானாலும் இந்தியாவுக்கு வரலாம்; அது, அவர்களது உரிமை.
சோழனிடம் கணக்கராக இருந்த சுதண்மன் என்பவனது கணக்கில் ஏதோ தவறு இருப்பதாக கருதிய சோழன், நாளைக்குள் கணக்கை சீர் செய்து சமர்ப்பிக்காவிடில் தண்டனை என கட்டளையிட்டான். கவலைப்பட்ட கணக்கன் கணக்கு ஏடுகளை சிவ லிங்கத்தின் முன் சமர்ப்பித்து தன்னை காக்க வேண்டினான். 🙏🇮🇳1
இரக்கம் கொண்ட சிவபெருமான், அந்தக் கணக்கன் வடிவிலேயே சென்று கணக்குகளை சீர் செய்து மன்னனை தெளிவிபடுத்தித் திரும்பினார். மறு நாள் ஏதுமறியாத சுதண்மன் அரண்மனை கணக்கு வழக்குகளை எடுத்துக் கொண்டு மன்னரை சந்திக்க சென்றான்.
🙏🇮🇳2
அவனைக் கண்ட மன்னன், "நேற்று இரவே அரண்மனை வந்து என்னை சந்தித்து கணக்குகளை நேர் செய்தீரே! மீண்டும் எமைக் காண வந்த காரணம்?'' என வினவ, கணக்கன் வடிவில் சிவபெருமான் வந்து சந்தேகம் தீர்த்தத்தை எண்ணி மன்னரும் கணக்கனும் மனம் நெகிழ்ந்தனர். 🙏🇮🇳3
வெற்றி அடைவது, தோல்வி பெறுவது... இந்த இரண்டில் எது பிடிக்கும் உங்களுக்கு?’என்று எவரேனும் உங்களிடம் கேட்டால், நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?
'என்ன இது, பைத்தியக்காரத்தனமான கேள்வியா இருக்கே? ஜெயிக்கறதுதான் சுகம்; அதுதான் கம்பீரம்.
யாராவது தோத்துப் போறதுக்கு ஆசைப்படுவாங்களா?’என்பீர்கள். நீங்கள் மட்டுமல்ல... இந்த உலகில் உள்ள சகல மனிதர்களும் வெற்றி பெறுவதற்குத்தான் ஆசைப்படுவார்கள். அந்த வெற்றியில் அகம் மகிழ்ந்து போவார்கள்; நெஞ்சு நிமிர்த்திக் கொள்வார்கள்.
அதேநேரம், தோல்வி வந்துவிட்டால், துவண்டு கதறுவார்கள்; கண்ணீர் விட்டுப் புலம்புவார்கள்.
வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை. அதே நேரத்தில், நாம் யாரிடம் வெற்றி பெற வேண்டும், எவரிடம் தோல்வியைத் தழுவ வேண்டும் என்று மறைமுகமாக நமக்கு அருளியிருக்கிறார் பகவான்.
அறநிலையத் துறை தணிக்கை பிரிவை நிதித் துறைக்கு மாற்றியது சரியா?
ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வரும் கோவில்களின் நிதி விவகாரங்களை தணிக்கை செய்யும் தணிக்கை பிரிவை, தமிழக அரசின் நிதித் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக வெளியான அரசாணை, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து தமிழக ஆலய பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது:
தமிழக கோவில்களின் வருமானத்தை தணிக்கை செய்யும் பணியை, அறநிலையத் துறைக்குஉள்ளேயே இருக்கும் தணிக்கை பிரிவு கவனித்து வந்தது. இதற்காக, தமிழகம் முழுதும் பல தணிக்கை அலுவலகங்கள் செயல்பட்டன.
அவற்றில் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றினர்.
தணிக்கை பணி செய்வதற்காக, ஒவ்வொரு கோவிலில் இருந்தும், அதன் ஆண்டு வருமானத்தில், 4 சதவீத தொகையை, ஹிந்து சமய அறநிலையத் துறை தனியாக வசூலித்து வந்தது.