பிரதமர் மோடியை புகழ்ந்ததால் பி.எச்.டி பட்டத்தை பறித்த முஸ்லீம் பல்கலைக்கழகம்! மதவெறியை மாணவர்களிடம் திணிக்கிறதா?
உத்திர பிரேதேசம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி கடந்தாண்டு டிசம்பர் 22ம் தேதி கலந்து கொண்டு காணொலி வாயிலாகக் உரையாற்றினார்.
இதனை தொடர்ந்து அங்கு படித்து வரும் மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
மேலும்இது குறித்து முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவரான டேனிஷ் ரகீம் என்பவரிடம் செய்தித் தொலைக்காட்சி ஒன்று நிகழ்ச்சி குறித்து பேட்டி எடுத்தது. அதில் ரகீம், பிரதமர் மோடியின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டி பேசினார்.இந்த பேட்டி ஒளிபரப்பானதும்,
பல்கலைக்கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் டேனிஷ்ரகீமை அழைத்து, பிரதமர் மோடியை மீடியாவில் புகழ்ந்து பேசியது நமது பல்கலைக்கழகத்தின் கலச்சாரத்திற்கு எதிரானது. நீ புகழ்ந்து பேசியதை ஏற்க முடியாது. இதற்கான பலனை நீ அனுபவித்தே ஆக வேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தனது 5 ஆண்டு பிஎச்டி ஆராய்ச்சிப்படிப்பை ரகீம் முடித்தார். அதற்காக அவருக்கு பிஎச்டி மொழியியல் பட்டம் வழங்கப்பட்டது. இந்நிலையில் அந்த பட்டத்தை திருப்பி அளிக்கும்படி டேனிஷ் ரகீமிற்கு பல்கலைக்கழகம் திடீரென உத்தரவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்,
இது குறித்து பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்ய நாத் ஆகியோருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளதோடு, உபி உயர்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் டேனிஷ் ரகீமின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் முஸ்லீம் பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில்,டேனிஷ் ரகீம் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை. அவர் மொழியியல் துறையில் விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் மொழி படிப்பில் MA & PhD ஐப் படித்தார். இது மொழியியலில் PhD பட்டத்தையும் வழங்குகிறது.
எல்ஏ எம்-ல் எம்ஏ படித்ததால், லேமில் பிஎச்டி பட்டம் பெற வேண்டும். நிர்வாக முடிவு அரசியலால் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். தவறுதலாக, அவருக்கு மொழியியலில் PhD பட்டம் வழங்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்திற்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.
தவறுதலாக எப்படி PhD பட்டம் கொடுக்கமுடியும் என்பது அனைவரின் கேள்வியாக இருக்கிறது, மேலும் நூற்றாண்டு கால பல்கலைக்கழகத்தில் எப்படி இவ்வாறு தவறிழைப்பர்கள் என்ற கேள்வியும் மேலோங்கியுள்ளது. இது குறித்து யோகி தனிப்பட்ட முறையில் விசாரித்து வருகிறாராம்.
மாணவன் கூறியது உண்மை என்றால் அப்பல்கலைக்கழகம் மீது நடவடிக்கை எடுத்து அரசின் நேரடி கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்படும் என பல்கலைகழக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
கேரளா மாநிலத்திலும் கால் வைத்து அசத்திய அண்ணாமலை... @annamalai_k
அண்ணாமலை அடுத்த மாநிலத்திலும்
கால் வைத்து அசத்தி இருக்கிறார். நேற்று கேரளாவில கண்ணூர் மாவட்டம் தலசேரியில் நடைபெற்ற கே.டி ஜெயகிருஷ்ணன் மாஸ்டர் நினைவு நாளில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கேரளாவை சிறப்பித்து இருக்கிறார்.தலசேரியில் சுமார் 15,000 மக்கள்
நேற்று
ஜெயகிருஷ்ணன் மாஸ்டரின் 22 வது நினைவு நாளில் பேரணியாக சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பயங்கரவாத அரசியலை உலகிற்கு எடுத்து கூறினார்கள்.ஜெயகிருஷ்ணன் மாஸ்டருக்கு நினைவு பேரணி மட்டுமல்லாமல் அஞ்சலி கூட்டமும் நடைபெற்றது.
இந்தியா முழுவதும் பாஜக கால் பாதித்துவிட்டது.தென்னிந்தியாவில் கர்நாடக புதுச்சேரி தவிர தமிழகம்,ஆந்திரா,தெலுங்கானா மாநிலங்களில் கால் பதிக்க சற்று தடுமாறி வந்தது,இந்த நிலையில் தான் பாஜக தெலுங்கானா இடைத்தேர்தலில் பாஜக வெற்றி,தமிழகத்தில் 4 MLAக்கள் என தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது.
ஆந்திராவிலும் பாஜக அரசியல் மிக வேகமாக வளர ஆரம்பித்துள்ளது.
தெலுங்கானா :
தெலுங்கானா அரசியலில் எடால ராஜேந்தர் மூலம் தனது அரசியலை துவக்கியது பா.ஜ.க. தெலுங்கானா மாநில முன்னாள் அமைச்சரும், தெலுங்கானா ராஷ்டிர சமாதி கட்சியின் மூத்த தலைவருமான எடலா ராஜேந்தர் இன்று பாஜகவில் இணைந்தார்.
மாரிதாஸ் பா.ஜ.கவில் இணையப்போவதாகத் தொடர் செய்திகள் வந்த நிலையில் மதுரை சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் மாரிதாஸ் வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.இந்த நிலையில்,
நேற்று சென்னை வந்த மாரிதாஸ் அவர்கள் இன்று பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் பாஜகவின் முக்கிய பொறுப்பாளரும் RSSன் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களையும் மாரிதாஸ் சந்தித்து பேசியுள்ளார்.மாரிதாஸ் அரசியல் வருகிறாரா? என்றால் ஆம் அதற்கான மேல்மட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துவருகிறது.
அமித்ஷா ஆட்டம் ஆரம்பம் ! பஞ்சாபில் பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம் – அமரீந்தர் சிங் அதிரடி ! @AmitShah@capt_amarinder
பஞ்சாபில் பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம் – முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்
பஞ்சாபில் காங்கிரஸ் கதை முடிவுக்கு வர இருக்கிறது. பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்கின் எதிர்ப்பை மீறி சித்துவுக்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை அளித்தது சோனியா குடும்பம்.
இதனால் கடுப்பாகி இருக்கும் அம்ரீந்தர்சிங் சோனியாவுக்கு நேரடியாகவே எச்சரிக்கும் விதத்தில் பஞ்சாப் அரசியலிலும் ஆட்சியிலும் தலையிடுவது நல்லதல்ல இதனால் பின் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கை செய்தார்.இந்த நிலையில் அம்ரீந்தர் சிங் காங்கிரசில் இருந்து வெளியேறி,
தஞ்சையில் தாழ்த்தப்பட்ட சமூக இளைஞரை நிர்வாணப்படுத்தி கொடூர தாக்குதல்.. சமூக நீதி காவலர்கள் அமைதி! @thirumaofficial
தஞ்சை மாவட்டம் தொண்டராம்பட்டு கிராமத்தின் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை ஆடைகளை கழட்டி அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 3 பீர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கருப்பூர் வீராணர் கீழத்தெருவில் வசித்து வருபவர்சதீஷ்குமார். இவர் வெளிநாட்டில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். தனது திருமணத்திற்காக கடந்த ஆண்டு தனது சொந்த ஊருக்குத் வந்த சதீஷ்குமாருக்கு, சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்துள்ளது.
அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் முதலிடம்…ஸ்டிக்கர் ஒட்டிய விடியல் குரூப்! இதெல்லாம் பெருமையா முதல்வரே? #ஸ்டிக்கர்லின்
இந்தியா டுடே ஊடகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் தரக்கூடிய மாநிலமாக இருக்கிறது தமிழகம்.என சர்வே முடிவில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று காலத்தின் போதும் அதாவது அதிமுக ஆட்சியில் இருந்த பொது தமிழகத்தின் பொருளாதார நிலைமை நல்லபடியாக இருந்தது. ஒரு சில மாநிலங்கள் மட்டும்தான் அப்போது எதிர்மறை வளர்ச்சியை பதிவு செய்யவில்லை. அதில் தமிழ்நாடும் ஒன்றாகும்.21.6 லட்சம் கோடி அளவுக்கு,