ஒரு முறை விடியற்காலையில் பெரியவா தரிசனத்திற்கு மடத்திற்கு ஒருவர் வந்தார். அவர் சின்னதாக வீடு ஒன்றை கட்டியிருந்தார். அதற்கு வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தவே இன்னும் நிறைய காலம் ஆகும் அவருக்கு. அங்கே குடிபோவதென்றால் ஹோமம் போன்ற மங்களச் சடங்குகள் நடத்தியதாக வேண்டும். இன்னும்
வேறு யாரிடமும் இனி கடன் கேட்க முடியாது. புது கிரகத்துக்குப் பெரியவா அனுக்ரகம் கிடைத்தால் நல்லது என உணர்ந்து தரிசனத்திற்கு வந்தார். பெரியவாளிடம் விவரம் கூறி, பூஜையெல்லாம் செய்யச் சௌகரியப்படல்லே. பெரியவா நல்ல நாள் பார்த்துக் கொடுக்கணும் என்று கூறினார். பெரியவா கிழக்கே
பார்த்தார். "இதோ பார், இன்னும் பொழுது விடியல்லே. இது பிரம்ம முகூர்த்தம். உடனே போய் பசு மாடு கன்றை வீட்டுக்குள்ளே ஓட்டு. பால் காய்ச்சிச் சாப்பிடு. பிள்ளையார் படத்துக்கு ஒரு சாண் கதம்பம் போடு."
எவ்வளவு எளிய கிரஹப்பிரவேசம்!
பக்தருக்கு ஏராளமான சந்தோஷம்! பத்து ரூபாயில் கிருஹப்
பிரவேசம்! ஏழு மணிக்குத் திரும்பி வந்தார். பெரியவா சொன்னபடியே சொன்ன முகூர்த்தத்திலே கிரஹப்பிரவேசம் செய்தார். பெரியவா சொன்னபடி சொன்ன முகூர்த்தத்தில் கிரகப்பிரவேசம் நடந்துவிட்டது என்று வந்து கூறினார். மஹா பெரியவா கையை தூக்கி ஆசீர்வதித்தார்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஶ்ரீகிருஷ்ணன்கதைள் சுக்ரீவனுக்கு ராமனின் வீரத்தின் மேல் சந்தேகம். வாலியை வீழ்த்தும் அளவு வலிமை ராமனுக்கு உள்ளதா எனச் சோதிக்க நினைத்தான். அதனால் ராமனுக்கு ஒரு பரீட்சை வைத்தான். துந்துபி என்ற அரக்கன் முன்னொரு சமயம் வாலியுடன் போர் புரிய வந்தான். அந்த துந்துபியைக் கொன்று அவனது
சடலத்தை வாலி தூக்கி எறிந்த போது, அது ரிஷ்யமுக மலையில் சென்று விழுந்தது. அந்தச் சடலம் இருக்கும் இடத்துக்கு ராமனை அழைத்துச் சென்ற சுக்ரீவன், ராமா! இது அன்று வாலி வீசி எறிந்த அரக்கனின் சடலம். இப்போது நீ இதை எடுத்து வீசு. நீ எவ்வளவு தூரம் வீசுகிறாய் என்பதைப் பார்த்து, உன் பலத்தையும்
வாலியின் பலத்தையும் நான் ஒப்பிட்டுப் பார்க்கிறேன் என்றான். அப்போது லக்ஷ்மணன், அண்ணா! உங்கள் இடது திருவடியின் கட்டை விரலால் நெம்பி விடுங்களேன் என்றான். ராமனும் அப்படியே தன் இடது திருவடியின் கட்டை விரலால், பூமியைக் கடந்து அப்பால் செல்லும்படி துந்துபியின் எலும்புக் கூட்டை நெம்பி
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் அரசன் மகேந்திரவர்மன் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தான். பயண வழியில் ஓர் இரவு, அங்கிருந்த நெசவாளி பாஸ்கரனின் வீட்டில் தங்கினான். அவர்களுக்கு தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது. யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என நினைத்துக் கொண்டு
தங்க வசதி செய்து கொடுத்தார்கள். அரசன் மகேந்திரவர்மன் காலையில் எழுந்து கொண்டபோது நெசவாளி பாஸ்கரன் நூல் நூற்கத் தொடங்கியிருந்தான். அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. அரசன் அந்த நெசவாளியிடம் இது என்ன உனது இடது கையில் கயிறு என்று கேட்டான். தொட்டிலில் உள்ள குழந்தையை
ஆட்டுவதற்கானது. குழந்தை அழுதால் இதை இழுப்பேன் என்றான் பாஸ்கரன் நூல் நூற்றுக்கொண்டே. அவன் அருகில் ஒரு நீண்ட குச்சியிருந்தது. இந்தக் குச்சி எதற்கு எனக் கேட்டான் அரசன். வெளியே என் மனைவி தானியங்களை வெயிலில் காயப்போட்டிருக்கிறாள். இந்தக் குச்சியின் மறுமுனையில் கருப்பு கொடியைக் கட்டி
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
துவாபரயுகத்தில் தன் அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில் கிருஷ்ணன் ஒரு நாள் உத்தவரிடம், “இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால் நீங்கள் எதுவுமே என்னிடம் கேட்டதில்லை. என் அவதாரப் பணி முடியும் நேரம் வந்துவிட்டது.
ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டுத்தான் என் அவதாரப் பணியை முடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என ஸ்ரீ கிருஷ்ணன் கூறினான்.
பெருமானே நீ வாழச் சொன்ன வழி வேறு. நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு. ராஜசூயத்தில் தொடங்கி குருக்ஷேத்திரத்திலே முடித்து வைத்து
நீ ஒரு நாடகம் நடத்தினாயே மகாபாரத நாடகம், அதில் நீ ஏற்ற பாத்திரத்தில், நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத உண்மைகள் பல உள்ளன. அவற்றிற்கெல்லாம் காரணங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள நெடுநாளாக ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா என்றார் உத்தவர்.
“உத்தவரே அன்று குருக்ஷேத்திரப் போரில்
#பிபின்ராவத் பயணம் செய்த எம்ஐ-17வி5 ஹெலிகாப்டர் பொருட்களை ஏற்றிச் செல்லும் வகையிலும், வீரர்களை ஏற்றிச் செல்லும் வகையிலும் உலகிலேயே அதிநவீன ஹெலிகாப்டர். தீயணைப்பு ப்பணி, பாதுகாப்புப் பணி, கண்காணிப்பு, மீட்புப்பணி ஆகியவற்றுக்குப் பயன்பத்தபடும் ரகம். கடுமையான மழை பெய்யும் பகுதி,
கடற்பகுதி, பாலைவனம் ஆகியவற்றிலும் இந்த ரக ஹெலிகாப்டர் சிறப்பாக பறக்கும் தன்மை கொண்டது. விமானி அமரும் முன்பகுதி விசாலமானது. விரைவாக பொருட்களையும், ஆட்களையும் ஏற்றும் வகையில் பின்பற கதவுகள் இழுவை மூலம் திறகுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. பாராசூட் உபகரணங்கள், தேடுதல் விளக்குகள்,
எப்எல்ஐஆர் சிஸ்டம், எமர்ஜெனிஸ் ப்ளோட்டிங் சிஸ்டம் ஆகியவை இதில் உள்ளன. 13,000 கிலோ எடையை தூக்கிக் கொண்டு பறக்கும் திறன்கொண்டது. 36 ராணுவ வீரர்கள், 4.50 டன் பொருட்களை சுமந்து செல்லும் திறன் படைத்தவை. எதிரிகளின் இருப்பிடத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தவும், நகரும் இலக்குகளை
பஞ்சாயதன பூஜை - மஹா பெரியவா
எல்லாக் குடும்பத்திலும் ஒரு மணிச் சத்தம் கேட்க வேண்டும். ஈஶ்வரன், அம்பாள், விஷ்ணு, விநாயகர், சூரியன் இந்த ஐந்து பேருக்கும் மூர்த்தி வைத்துப் பூஜை செய்ய வேண்டும். இதற்குப் பஞ்சாயதன பூஜை என்று பெயர். அங்கங்களோடு விக்கிரகங்களாக இல்லாமல் இந்த ஐந்தையும்
இயற்கையாகவே கிடைக்கும் ஐந்து வஸ்துக்களில் ஆவாஹனம் செய்து பூஜை செய்வது சம்பிரதாயம். ஈஶ்வரனுக்குரிய பாண லிங்கம் நர்மதை நதியில் ஓங்கார குண்டத்தில் கிடைக்கிறது. அம்பிகையின் ஸ்வரூபமான ஶ்வர்ணமுகி ஶிலா என்ற கல் ஆந்திராவில் ஶ்வர்ணமுகி ஆற்றில் கிடைக்கிறது. அது தங்க ரேக் ஒடிய கல்.
விஷ்ணுவின் வடிவமான ஶாலக்கிராமம் நேபாளத்தில் கண்டகி நதியில் அகப்படுகிறது.
சூரியனுக்குரிய ஸ்படிகம் தஞ்சாவூரில் வல்லத்துக்குப் பக்கத்தில் கிடைக்கிறது. விநாயகருக்கு உருவான ஸோணபத்ரக் கல், கங்கையிலே கலக்கிற ஸோணா (ஸோன் என்பார்கள்) நதியில் கிடைக்கிறது. இந்த ஐந்தையும் ஒரிடத்தில் வைத்தால்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சுதா என்ற பெண் ஒரு மகானிடம் சென்று அய்யா என் கணவருக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வருகிறது, என்னை அவர் புரிந்து கொள்வதில்லை, தினந்தோறும் எங்களுக்குள் பிரச்சினையாகவே பொழுது விடிகிறது. என் திருமண வாழ்க்கை நிம்மதி பெற எனக்கு ஏதாவது யோசனை சொல்லுங்கள் என்றாள்.
ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு மகான் சொன்னார், "ஊருக்கு வெளியே இருக்கும் காட்டில் ஏதாவது ஒரு விலங்கிற்கு 30 நாள் உணவு கொடு. 30 நாட்களுக்கு பிறகு என்னை வந்து பார் உன் பிரச்சினைக்கான வழியை சொல்கிறேன்!"என்றார். குழப்பத்தில் இருந்த சுதா தன் கணவருக்கும் தனக்கும் சண்டையில்லாத நிம்மதியான
வாழ்க்கை கிடைத்தால் போது என்ற எண்ணத்தில் தைரியத்துடன் மகான்
சொல்லியது போல அடர்ந்த காட்டிற்குள் சென்று தான் கொண்டு வந்த மாமிசத்தை ஒரு இலையில் வைத்துவிட்டு தூரத்தில் ஒரு மரத்திற்கு பின்னால் ஒளிந்து கொண்டாள் சுதா. மாமிசத்தின் வாடை காடெங்கும் வீச வெகுநாட்களாக அங்கு இறை கிடைக்காத ஒரு