பக்தன் : கிருஷ்ணா என் மனம் குழம்புகிறது.
கிருஷ்ணா : குழம்புவதே உன் வேலையா போச்சி.
பக்தன் : குழப்பம் வந்தால் என்னதான் செய்வது ?
கிருஷ்ணா : ஒரு காயம் ஏற்பட்டால் அதை அழுத்தி கொண்டே இருப்பாயா?
பக்தன் : அதெப்படி? வலிக்குமே?
கிருஷ்ணா : அப்படியென்றால் என்ன செய்வாய் ?
பக்தன் : மருந்து போட்டு விட்டு அப்படியே விட்டுவிடுவேன். தானாக ஆறிவிடும்
கிருஷ்ணா : அதே போல்தான். மனதில் வலி ஏற்பட்டால், என் நாமத்தை மருந்தாக நினைத்து ஜெபம் செய்து விட்டு அப்படியே விட்டு விடு. மனதின் காயம் தானாக ஆறிவிடும். காயத்தை அழுத்துவது போல் குழப்பங்களை பற்றி யோசித்து கொண்டே
இருக்காதே. சேற்றுள்ள நீரை கிண்டி கொண்டே இருந்தால், சேறு இன்னும் சுற்றி சுற்றி நீரை இன்னும் அசுத்தமாகும். அதுவே அப்படியே விட்டால், சேறு கீழே படிந்து விடும். நீர் சுத்தமாகும். அதனால் எப்போதெல்லாம் மனதில் குழப்பம், கஷ்டங்கள் தோன்றுகிறதோ, என் நாமத்தை ஜெபித்து கொண்டு அமைதியாக
இரு. உன்னையும் உன் குடும்பத்தையும் உன் வாழ்க்கையும் நான் பார்த்து கொள்கிறேன். நிம்மதியாக இருப்பாயாக.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கார்த்திகை 26, டிசம்பர் 12/12/2021, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி
சிறப்பு : நன்மை வழங்கும் ராமர் வழிபாட்டு நாள். அகோபிலமடம் 45வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்,
வழிபாடு: ராமருக்கு விரதமிருந்து துளசி மாலை சாத்தி வழிபடுதல்.
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ராமாவதாரம்
பரிபூரண அவதாரம் ஆகும். அறமே வாழ்வின் ஆன்மிக ஜோதி. அறத்தை வளர்ப்பதற்கும், மனிதனிடம் மறைந்து கிடக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதற் கும் ஸ்ரீமன் நாராயணன் ராமனாக அவதாரம் செய்தார்.
மனிதன் நீதிமுறைகள், ஒழுக்க நியதிகள் மற்றும் ஆன்மிக லட்சியங்கள் குறித்து உறுதியான கொள்கையுடன் விளங்க
வேண்டும். இப்படி தான் வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியது ராமாவதாரம். ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் என்று வாழ்ந்தவர் அவர்.
ராமன் பிறந்தகாலத்தில் ஐந்து கிரகங்களும் மிகவும் உச்சநிலையில் இருந்தது. அதனால் ராமருடைய ஜாதகத்தை எழுதி, அதை பூஜை அறையில் வைத்து பூஜை செய்பவர்களுக்கு
மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி அன்று சாதாரண மக்களும் அறிந்துணர்வதற்காகப் பரமபதத்தைக் காட்டுவார்கள்.
இந்த வாழ்க்கையில் மனிதனான பின் மிருகத்திலிருந்து நாம் எப்படி மனித நிலைக்கு வந்தோம்…?
மனிதனானபின் எப்படிப் பரமபதம் அடைவது…?
என்று சிந்தித்துச் செயல்படும் நிலைக்குத்தான் பரமபதத்தின் படத்தைப் போட்டு அங்கே காட்டி இருப்பார்கள்.
பரமபதத்தில் நாம் தாயத்தை உருட்டுகின்றோம். உருட்டிக் கொண்டு போனவுடனே
1.முதலில் சிறு பாம்பு கடிக்கும். அது கடித்த பின் மீண்டும் கீழே
கொண்டு போய் விட்டுவிடும்.
2.இதிலிருந்து தப்பித்து மேலே சென்றவுடன் அதை விடப் பெரிய பாம்பு கடித்தவுடன் மேலே இருந்து கீழே வந்து விடுகின்றோம்.
3.இப்படி அதையெல்லாம் தப்பித்து மேலே போகும் போது அதை விடப் பெரிய பாம்பு கடிக்கிறது. மீண்டும் “திரும்பத் திரும்ப வந்து…!” பல சுழற்சிகள்
*ஸ்ரீரங்கம் கோவிலில் நாளை வைகுண்ட ஏகாதசி விழா தொடக்கம்*
பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும். மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது.
பகல்பத்து. ராப்பத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்தாண்டு கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறுகிறது.
இவ்விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. மறுநாள் (சனிக்கிழமை) பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான
திருமொழித்திருநாள் தொடங்குகிறது. அன்றைய தினம் நம்பெருமாள் காலை 7.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.15 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தடைவார். காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை பொதுஜன சேவையுடன், அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை
திருமடந்தை மண்மடந்தை
இருபாலும் திகழத்
தீவினைகள் போயகல
அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ்வேழு
லகத்தவர்பணிய வானோர்
அமர்ந்தேத்த இருந்த இடம்
பெரும்புகழ் வேதியர் வாழ்
தரும் இடங்கள் மலர்கள்
மிகுகைதைகள் செங்கழுநீர்
தாமரைகள் தடங்கள்தொறும்