🌹 🌿 சொர்க்கம் பக்கத்தில் ஸ்ரீரங்கம் (வைகுண்ட ஏகாதசி 14.12.2021)🌿 🌹
🌹 🌿 ✨ குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு
உடலெனக் குருகு மாலோ என் செய்கேன் உலகத்தீரே.✨🌿🌹
🌹 🌿 பொருள்:
🌹 🌿 கடல் போல கரிய நிறம் கொண்ட ரங்கநாதனின் அழகை எப்படி சொல்லுவேன்?
🌹 🌿 மேற்கில் தலையும்,
🌹 🌿 கிழக்கில் திருவடியும் நீட்டியபடி,
🌹 🌿 வடக்கில் முதுகை காட்டி துயில்கிறான்.
🌹 🌿 தெற்கிலுள்ள இலங்கையைப் பார்த்தபடி இருக்கும் அவனது அழகு உருவம் கண்டு உள்ளமும், உடலும் உருகி விட்டது. செய்வதறியாமல் திகைத்து நிற்கிறேன்.
🌹 🌿 சொர்க்கம் என்பது வேறு எங்கும் இல்லை, அது நம் மனதில் தான் இருக்கிறது. அதை வாழும் காலத்திலேயே அனுபவிக்கலாம்
என்பது தான், சொர்க்க வாசல் திறப்பின் தத்துவம்.
🌹 🌿 ஆழ்வார்களால் பாடல் பெற்ற 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது திருச்சி அருகில் உள்ள ஸ்ரீ ரங்கம். இங்கு பள்ளி கொண்ட கோலத்தில் மகாவிஷ்ணு காட்சியளிப்பதால் இவ்வூரை முன்பு 'ஸ்ரீ ரங்கநாதன் பள்ளி" என்றே அழைத்தனர்.
🌹 🌿 ஸ்ரீ ரங்கத்தில் உள்ள இவ்விக்ரகத்தை பூலோகத்தை ஆண்ட சூரியகுல மன்னன் இக் ஷ்வாகு, பிரம்மாவிடம் இருந்து பரிசாகப் பெற்றான். இக் ஷ்வாகுவின் வம்சா வழியில் வந்தவரே, ராமபிரான். அவர் அச்சிலையை ராவணனின் சகோதரனான விபீஷணருக்கு தன் பட்டாபிஷேக பரிசாகக் கொடுத்தார்.
🌹 🌿 விபீஷணர் அதை பிராண வாக்ருதி எனும் விமானத்தில் வைத்து ஆகாய மார்க்கமாக எடுத்துச் சென்ற போது, காவிரி நதிக்கரையில் கோவில் கொள்ள விரும்பிய பெருமாள், அவருக்கு உடல் சோர்வை ஏற்படுத்தினார். அதனால் அரங்கம் எனும் மேட்டுப்பகுதியில் பெருமாளை வைத்துவிட்டு நீராடிய
வீபிஷணரால் மீண்டும் அவ்விடத்தில் இருந்து விக்ரகத்தை எடுக்க முடியவில்லை.
🌹 🌿 பின் சோழ மன்னன் தர்மவர்மன் அவ்விடத்தில் கோவில் கட்டினான், அக்கோவில் சிதிலமடைந்து, காவிரி ஆற்றில் புதைந்தது. தர்மவர்மனின் மரபில் வந்த கிள்ளி வளவன், ஒருமுறை காட்டிற்கு வேட்டையாடச்
சென்றவன் மரநிழலில் இளைப்பாறினான். அம்மரத்தில் வசித்த கிளி, மன்னனிடம் "மன்னா... பாற்கடல் வாசனான மகாவிஷ்ணு, இங்கே ரங்கநாதராகப் பள்ளி கொண்டுள்ளார். ஸ்ரீ ரங்கம் எனும் திருத்தலம் இது" என்று ரங்கநாதரின் வரலாற்றை எடுத்துச் சொன்னது.
அப்போது, பெருமாள் தோன்றி தன் இருப்பிடத்தை, கிள்ளி
வளவனுக்கு காட்டியருளினார். மெய்சிலிர்த்த மன்னன், அங்கே அழகிய கோவிலை எழுப்பினான்.
இக்கோவிலில் மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி திதியன்று சொர்க்கவாசல் திறக்கப்படும். இதை "பரமபதம்" என்பர். வாழ்க்கை என்பது, ஏற்ற இறக்கங்கள் கொண்டது.
🌹 🌿 பரமபத விளையாட்டில் ஏணிகளும், பாம்புகளும் இருக்கும். ஏணி இருக்கும் இடத்துக்கு, காய் நகர்ந்தால் உச்சத்துக்குப் போகும், பாம்பு இருக்கும் கட்டத்துக்குப் போனால், அதனிடம் கடிபட்டு கீழே இறங்கி விடும். வாழ்க்கையிலும் இதேமாதிரி தான் சில சமயங்களில், சறுக்கல்
பெரிதாகவும், உயர்ச்சி அதிகமாகவும் இருக்கும். எப்படி இருந்தாலும் மனிதன் கலங்கவோ, கர்வம் கொள்ளவோ கூடாது.
🌹 🌿 ஆனால் பரமபத வாசல் வழியாக வரும் பெருமாள் நிலையானவர். அவரது திருவடி தரிசனம், நமக்கு நிலையான வாழ்வைத் தரும். அவரது திருவடியைப் பற்றினாலோ,
இன்பமும், துன்பமும் ஒன்றாகவே தெரியும்; சொர்க்கம் நம் அருகிலேயே இருப்பது போன்ற உணர்வு தோன்றும். இதுவே, பரமபத வாசல் திறப்பு தத்துவம்.
🌹 🌿 வைகுண்ட ஏகாதசி விரதத்தை, எட்டு முதல், 80 வயது வரை உள்ளவர்கள் அனுஷ்டிக்க வேண்டும் என்று சாஸ்திரம்
சொல்கிறது. விரதம் இருப்பவர்கள், முதல் நாளான தசமி அன்று ஒருபொழுது உணவு உண்ண வேண்டும். ஏகாதசி நாளில் உண்ணுவதையும், உறங்குவதையும் தவிர்ப்பது நல்லது. அன்று துளசி இலை பறிக்கக் கூடாது. பூஜைக்கு வேண்டிய துளசியை, முதல் நாளே பறித்து வைத்து விட வேண்டும்.
🌹 🌿 மறுநாளான துவாதசியன்று, சூரியோதயத்திற்குள் நீராடி, துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். பலவகை காய்கறிகள் மற்றும் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை உணவில் இடம் பெற வேண்டும்.
🌹 🌿 அகத்திக்கீரையில் பாற்கடல் அமுதமும், நெல்லி,
சுண்டைக்காயில் லட்சுமியின் அருளும் இருப்பதாக ஐதீகம். காலையில் உணவை முடித்து, பகல் முழுவதும் உறங்காமல், நாராயண நாமத்தை ஜெபிக்க வேண்டும். வைகுண்ட ஏகாதசி விரதமிருந்து, வாழும் காலத்திலும், வாழ்க்கைக்குப் பிறகும், சொர்க்கத்தில் இருக்கும் பாக்கியம் பெறுவோம்!. 🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கார்த்திகை 26, டிசம்பர் 12/12/2021, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி
சிறப்பு : நன்மை வழங்கும் ராமர் வழிபாட்டு நாள். அகோபிலமடம் 45வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்,
வழிபாடு: ராமருக்கு விரதமிருந்து துளசி மாலை சாத்தி வழிபடுதல்.
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ராமாவதாரம்
பரிபூரண அவதாரம் ஆகும். அறமே வாழ்வின் ஆன்மிக ஜோதி. அறத்தை வளர்ப்பதற்கும், மனிதனிடம் மறைந்து கிடக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதற் கும் ஸ்ரீமன் நாராயணன் ராமனாக அவதாரம் செய்தார்.
மனிதன் நீதிமுறைகள், ஒழுக்க நியதிகள் மற்றும் ஆன்மிக லட்சியங்கள் குறித்து உறுதியான கொள்கையுடன் விளங்க
வேண்டும். இப்படி தான் வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியது ராமாவதாரம். ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் என்று வாழ்ந்தவர் அவர்.
ராமன் பிறந்தகாலத்தில் ஐந்து கிரகங்களும் மிகவும் உச்சநிலையில் இருந்தது. அதனால் ராமருடைய ஜாதகத்தை எழுதி, அதை பூஜை அறையில் வைத்து பூஜை செய்பவர்களுக்கு
பக்தன் : கிருஷ்ணா என் மனம் குழம்புகிறது.
கிருஷ்ணா : குழம்புவதே உன் வேலையா போச்சி.
பக்தன் : குழப்பம் வந்தால் என்னதான் செய்வது ?
கிருஷ்ணா : ஒரு காயம் ஏற்பட்டால் அதை அழுத்தி கொண்டே இருப்பாயா?
பக்தன் : அதெப்படி? வலிக்குமே?
கிருஷ்ணா : அப்படியென்றால் என்ன செய்வாய் ?
பக்தன் : மருந்து போட்டு விட்டு அப்படியே விட்டுவிடுவேன். தானாக ஆறிவிடும்
கிருஷ்ணா : அதே போல்தான். மனதில் வலி ஏற்பட்டால், என் நாமத்தை மருந்தாக நினைத்து ஜெபம் செய்து விட்டு அப்படியே விட்டு விடு. மனதின் காயம் தானாக ஆறிவிடும். காயத்தை அழுத்துவது போல் குழப்பங்களை பற்றி யோசித்து கொண்டே
இருக்காதே. சேற்றுள்ள நீரை கிண்டி கொண்டே இருந்தால், சேறு இன்னும் சுற்றி சுற்றி நீரை இன்னும் அசுத்தமாகும். அதுவே அப்படியே விட்டால், சேறு கீழே படிந்து விடும். நீர் சுத்தமாகும். அதனால் எப்போதெல்லாம் மனதில் குழப்பம், கஷ்டங்கள் தோன்றுகிறதோ, என் நாமத்தை ஜெபித்து கொண்டு அமைதியாக
மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி அன்று சாதாரண மக்களும் அறிந்துணர்வதற்காகப் பரமபதத்தைக் காட்டுவார்கள்.
இந்த வாழ்க்கையில் மனிதனான பின் மிருகத்திலிருந்து நாம் எப்படி மனித நிலைக்கு வந்தோம்…?
மனிதனானபின் எப்படிப் பரமபதம் அடைவது…?
என்று சிந்தித்துச் செயல்படும் நிலைக்குத்தான் பரமபதத்தின் படத்தைப் போட்டு அங்கே காட்டி இருப்பார்கள்.
பரமபதத்தில் நாம் தாயத்தை உருட்டுகின்றோம். உருட்டிக் கொண்டு போனவுடனே
1.முதலில் சிறு பாம்பு கடிக்கும். அது கடித்த பின் மீண்டும் கீழே
கொண்டு போய் விட்டுவிடும்.
2.இதிலிருந்து தப்பித்து மேலே சென்றவுடன் அதை விடப் பெரிய பாம்பு கடித்தவுடன் மேலே இருந்து கீழே வந்து விடுகின்றோம்.
3.இப்படி அதையெல்லாம் தப்பித்து மேலே போகும் போது அதை விடப் பெரிய பாம்பு கடிக்கிறது. மீண்டும் “திரும்பத் திரும்ப வந்து…!” பல சுழற்சிகள்
*ஸ்ரீரங்கம் கோவிலில் நாளை வைகுண்ட ஏகாதசி விழா தொடக்கம்*
பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும். மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது.
பகல்பத்து. ராப்பத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்தாண்டு கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறுகிறது.
இவ்விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. மறுநாள் (சனிக்கிழமை) பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான
திருமொழித்திருநாள் தொடங்குகிறது. அன்றைய தினம் நம்பெருமாள் காலை 7.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.15 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தடைவார். காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை பொதுஜன சேவையுடன், அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை
திருமடந்தை மண்மடந்தை
இருபாலும் திகழத்
தீவினைகள் போயகல
அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ்வேழு
லகத்தவர்பணிய வானோர்
அமர்ந்தேத்த இருந்த இடம்
பெரும்புகழ் வேதியர் வாழ்
தரும் இடங்கள் மலர்கள்
மிகுகைதைகள் செங்கழுநீர்
தாமரைகள் தடங்கள்தொறும்