எங்கட்ட சுத்தமா கையில காசு இல்லை நேற்று நைட்டு வரும்போது ATM ல இருந்து cash எடுக்க மறந்திட்டேன், friend இருந்த காசுலதான் night கரும்பு ஜீஸ் குடித்தோம் அவர்ட்டையும் காசு இல்லை, சரின்னு கிளம்பி போயாச்சு எங்க பேவரேட் ரொஸ்டுரேன்ட் ஊருக்கு வெளியே இருக்கு 20 நிமிட பயணம்
Restaurantல card accept தான் பல நேரத்தில swap machine வேலை செய்யலை cash கொடுங்கன்னு சொல்வாங்க இரெண்டு பேர்ட்டையும் நையா பைசா இல்லை சரி போறப்ப ஹைவேல ஒரு ATM machine ல காசு எடுக்க போனேன் card போட்டதும் out of borderன்னு வந்துடுச்சு சரின்னு எடுத்துட்டு கிளம்ப …
அடுத்த ATM machineவை காணோம் எடுத்துட்டாங்க கொஞ்சம் முன்னாடி போனதும் அடுத்த பெட்ரோல் பம்ப் அங்க ATM கண்ணில்பட முன்னோக்கி வேகமாக போனவன் பின்னாடி கார் இல்லைன்னு உறுதி செய்துட்டு சடனாக இடதுபுறமா வளைத்து உள்ளே பேனேன் ட்ரைவ் துருவ் மெஷின் அது , இப்ப மணி 1.50 மெஷின் காலியாக இருந்தது .
போய் card போட்டேன் enter your pin கேட்க அப்பாடி வேலை செய்துன்ட்டு பின் நெம்பரை அமுக்கினேன் ஆனால் screen ல பின் வரலை நம்பர் அமுக்கறேன் பின் நம்பர் வரலை என்னவா இருக்கும்ன்னு 🤔 யோசிப்கதற்குள் எனக்கு பின்னாடி 4பேர் வந்து நிற்குறாங்க மீண்டும் அவசரமாக பின் நம்பரை அமுக்கறேன் வரவில்லை
டக்ன்னு கேன்சல் பட்டனை அமுக்கறேன் ஷாக் அடுச்ச மாதிரி struck ஆகி அப்படியே நிற்க மீண்டும் மீண்டும் அமுக்கறேன் கார்ட் வெளிய வரமாட்டீங்குது முன்னரவாது கார்ட்டை வெச்சு சாப்பிடலாம் இப்ப கார்டும் உள்ள போயிடுச்சு பின்னாடி இருந்த ஒருத்தர் வந்தார் அவரும் அவர் பங்கிற்கு அமுக்கி பார்க்க ..
போதாதிற்கு நண்பனும் அமுக்கி பார்க்க ஹீம்ஹீம் காரை நாகர்த்தி போட்டுட்டு கீழ இறங்கி ட்ரை செய்தேன் ஹீம் ஹீம் … கார்டு மாட்டினதை அப்புறம் பார்ப்போம் சாப்பிட என்ன செய்வது மணி வேற 2 ஆகிடுச்சு.. இரெண்டு பேருக்கும் செம பசி digital card swap செய்து சாப்பிடலாம்ன்னு நினைத்தேன் பட்
மாட்டின கார்டு Wi-Fi card , நான் சாப்பிட்டு முடித்து digital card swap செய்றதுக்குள்ள இந்த card வெளி வந்து வேறயாராவது கையில மாட்டிட்டா குறிப்பிட இடத்தில குறிப்பிட்ட அளவு பின் இல்லாமலே swap செய்திடலாம் அதானல கார்டை அப்படியே விட்டுட்டு போக மனசில்லை ஆனால் பசிக்குது
இன்னொரு ஒரு கார்ட் expired 3வது கார்ட் zero balance நண்பர் புதிது அவரிடம் ACCயே இல்லை, பசி வேற கண்ண கட்டுது சரி மாட்டின கார்டுல இருந்து மொத்த காசையும் ட்ரை செய்திடுவோம்ன்னு அதை எடுத்து zero balance இருக்க கார்டுக்கு transfer செய்தேன் மணி 2.30 அந்த காசு transfer ஆக நேரமெடுக்கும்
Transfer செய்துட்டு மெஷின் பக்கத்துலேயே தேவுடு காத்துட்டு இருந்தேன் ஒரு 15 நிமிடம் கழித்து message வர அப்பாடின்னு செல்லிட்டும் மீண்டும் இரெண்டு முறை cancel பட்டனை அமுக்கி பார்த்தேன் ஹீம. ஹீம்.. வேலைக்காகலை கால் செய்து stop card செய்துட்டு நகர்ந்தேன்.. மணி 2:55
பசி ஒருமாதிரி கண்ணை கட்ட ஆரம்பித்தது ஒரு வழியா கடைக்கு போகும் போது 3.10 போனதும் கவுன்டர்ல ஜனகராஜ் மாதிரி கார்டு இருக்கா கேட்டுட்டு போய் சாப்பிட உட்கார்ந்தேன் பிரியாணி கடைசி பிரியாணி ஆயில வேற இருந்துச்சு ஆனாலும் ருசி குறையாமல் இருந்ததால சாப்பிட்டேன்
அப்ப அப்ப திரும்பி கவுண்டரை பார்த்துக்கிட்டேன் சாப்பிட்டு card swap செய்துட்டு வந்தேன் .. வளர்ந்த எல்ல கட்டமைப்பும் உள்ள இந்த நட்டில் கூட digital transactionல இப்படி ஆகிடுது சாப்பாட்டுக்கு பதிலாக emergency hospital ன்னு வைத்தால் என் நிலமை என்னவாகியிருக்கும் ..
டிஜிட்டல் essay தான் ஆனால் இந்த மாதிரி நிலமைக்கு யார் பதில் சொல்வது? யார் பொறுப்பு? அதனால முடிஞ்ச அளவு குறைந்த பட்ச காசை கையில் எப்பவும் வைப்போம்.. டிஜிட்டல் luxury ஆகவும் direct cash யை necessary ஆக உபோயகித்து கொள்வோம் .. 🙏🏽 இவ்வளவு தான் நாட்டமை தீர்ப்பு .
பெரும் பெண் பட்டாளங்களுக்கு இடையில் பிறந்த ஒற்றை ஆண்பிள்ளை, அதனால என்னவோ எனக்கு எப்பவும் ஏதவாது ஒரு கூட பிறக்காத உறவில்லாத அக்காகள் கூடவே இருக்காங்க.. அந்த அக்காகளும் சீக்கரமாக தம்பி ஆக்கிடுறாங்க பள்ளிபருவத்தில் தோழினாலும் என்னைவிட மூத்தவள்
பக்கத்துவீடு ஒரு வகுப்பு முன்னால், அவளோட ஆதிக்கம் என் மீது இருந்தது பள்ளியில தப்பு செய்தால் வரிஞ்சு கட்டி ஆசிரியரிடம் பேசுவது, அதை படி இதை படின்னு பத்தம்வகுப்பு தேற காரணமான தோழியான அக்கா, டிப்பளமோல அக்காதேவதைகளுக்கு விடுப்புதான் போல, வேலைக்கு போகும் போது பஸ்ல பல அக்காக்கள்
எனெனில் நான் மட்டுமே குட்டி பையன் 🤣 அதனால எல்ல அக்காகளும்,சக்லெட் ,காரப்பொறி வாங்கி தரும் அக்காகள் தான், அலுவலகம் கம்பெய்ன்ட் ஆபிஸ் அதனால அங்க இரெண்டு கம்பெனிகள் அதில் ஒரு கம்பெணியில் மொத்தமும் பெண்கள்தான் இல்லை இல்லை எல்லாமே அக்காகள் தான்
PLC & HMI பற்றி சிலர் தொடர சொன்னதால் எனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன் இங்கு automation துறையில் லெஜன்ட்ஸ் யாரவது இருந்தால் தங்கள் அனுபவத்தை பகிரலாம் எல்லோரும் சேர்ந்து கற்றுக்கொள்வோம்..
PLC எப்படி choose செய்வது என்பதை பகிர முற்படுகிறேன்
PLC ல நிறைய brands இருக்கு ஆனால் அடிப்படையில் தேர்வு செய்யும் போது I/O’s வெச்சுதான் தேர்வு செய்றோம்
I/O னா🤔
input /output
அப்படினா🤔
அப்படினா விட்டுல இருக்க சுவிட்ச் input,லைட்டு output
புரியுது ஆனால் புரியலை 😜
சாட்டையை சூழற்றுபவன் input ஐய்யோ அம்மான்னு வலில கத்தறவன் output
நல்ல புரியுதுமாம்ஸ்🤣
எத்தனை பேர் சாட்டையை சுழற்றாங்க எத்தனை பேர் கத்தறாங்கன்னு கணக்கு பார்த்த போதும்..
இதற்கு நீ என்னை சாட்டையிலேயே அடிச்சு கொன்னுடு..
சரி சரி.. எவ்வளவு சுவிட்ச் இருக்கு எவ்வளவு லைட் இருக்குதுன்னு கணக்கெடுத்த போதும்
ஒரு அழகான காதல் கதை எழுதனும்னு ஆசை ஆனால் என்ன யோசிச்சாலும் கற்பனையா எதுவும் தோனவே இல்லை. அப்புறம் உண்மையா ஒருவளின் காதல் என்னை உலுக்கியது அதை சுவரஸ்யத்தோடு பகிர முற்படுகிறேன்.
அவள் என் தோழியின் சித்தியின் பெண்,தோழி பாடிய என்புரணத்தால் பேச முற்பட்டால் ஒருநாள்.
ஆம் மெஜேஞ், வாட்சப் இல்லை FBயின் ஆரம்ப நிலை, வீடியோகால் இல்லாத கற்காலம் அது msg வழியாக ஊடுருவினால், அவள் புதிதாக MSCக்கு சேர்ந்து இருந்தால் நான் கோவையில் கல்லூரி முடித்து பணிபுரிந்தேன், மெதுவாய் அறிமுகமானால், தோழியின் அனுமதியோடு அவளோடு பேச ஆரம்பித்தேன்.
அவளின் நாய் செத்த சோகம்,மாமா பெண் தந்தா பேனா வின் மகிழ்ச்சி அப்பா தந்தா புது நோட்டுகள்ன்னு எனக்கு சின்னதாய் தோன்றியதை அவள் பெரியதாய் மகிழ்ந்தால், துக்கப்பட்டால் மழலையை போல, சில மெஜேஜ், அப்புறம் சில நொடி பேச்சு, என உறவு இருந்தது. கல்லூரி தொடங்கும் முன்பு என்னை ஒன்று கேட்டால்
நான் மறந்துடக்கூடாது என்பதற்காக எழுதுகிறேன்,அதை உருப்படியாக எழுதுவோம் என எழுதமுற்படுகின்றேன்..
ஒரு இயந்திரத்தை ஆட்டோமெஷின் இயந்திரமாக மாற்றுவது அ வடிவமைப்பது எப்படி அதற்கான ஆரம்ப வழிமுறைகள் எழுதுகிறேன் நேரம் கிடைக்கும் போது இதை தொடர்ச்சியாக எழுதுகிறேன்
ஓர் இயந்திரத்தை automation முறையில் வடிவமைக்க உள்ள வழிகள்.
HMI - PLC ( பல brand இருக்கு ஆனால் கன்செப்ட் ஒன்று தான் இதுதான் மூலதனம் இது உபோயகப்படுத்தவில்லையெனில் control components அதிகமாகும் பின்பு பட்ஜெட் எகிறிநிற்கும் அதனால் இதை கற்று சரியான brand and model தேர்வு செய்யவும்
PLC இருந்த போதுமா வேற எதுவும் வேனாமா என்றால் அடுத்த 3 முக்கியமானவை
அக்னிகுஞ்சு : சூர்யா செஞ்சது தப்புதான் ஜீ
மீ : என்ன தப்பு பார்த்தீங்க காலண்டர்தான் மாத்தியாச்சே
அ: சூர்யா மன்னிப்பு கேட்டா முடிஞ்சுடும் அவனுக்கு என்ன அவ்வளவு ஈகோ
மீ: உங்களுக்கு என்னடா அவ்வளவு அதுப்பு மிரட்டினா அடங்கிடனுமா
அ: சூர்யா பேசிட்டு வீட்டுக்குள்ள இருப்பாரு
எங்காளுக கோவத்தில குடிசையை கொளுத்தி விடுவானுக பாதிக்கறது மீண்டும் அந்த ஒடுக்கப்பட்ட சமுதாயம்தாங்க இதற்கு ஒரு மன்னிப்பு கேட்க வேண்டியதுதானே அடுத்த கார்த்தி படம் வந்தாலும் தியேட்டரை கொளுத்துவோங்கோ
மீ : ஏதாவது கொளுத்தட்டே இருப்பாங்களா, அதுதான் உங்க சங்கம் பேசுச்சே அப்புறம்
சின்னாய்யா எதற்கு சூர்யாக்கு கடிதம் எழுதி தூபம் போட்டார்
அ: எங்க ஓட்டெல்லாம் பாஜகவிற்கு போகுதுங்க அதான் 10.5% மறைக்கனும் மீண்டும் ஓட்டு எங்க பக்கம் வைக்கனும்
மீ: நீங்க சம்பாரிக்க ஒருத்தன் தன்மானத்தை விட்டு மன்னிப்பு கேட்கனுமா
அ: இல்ல ஜீ சூர்யாவை மன்னிப்பு கேட்காம விடமாட்டாங்க