#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் கந்தன் என்பவர் ஒருநாள் கோவிலுக்குப் போன போது அந்தக் கோவில் சுவற்றில் பெருமாள் விக்ரகம் இருந்ததை கவனித்து அருகில் சென்று பார்த்தார். அவருக்கு அந்த எழுத்துக்களை படிக்க தெரியும். அதனால் அதை படித்து பார்த்தார். அந்த கல்வெட்டில் இந்த பெருமாளுக்கு யார் ஒரே
சமயத்தில், நூறு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்கிறாறோ, அவருக்கு ராஜ பதவி கிடைக்கும் என்று எழுதி இருந்தது. அதை படித்த கந்தன் அடடா ராஜ பதவி என்றால் சும்மாவா? உடனே, ஓடிச் சென்று ஒரு குடத்தை எடுத்து, பக்கத்திலிருந்த குளத்திலிருந்து தண்ணீர் கொண்டு வந்து, அபிஷேகம் செய்ய ஆரம்பித்தார்.
மனதிற்குள் ஒன்று, இரண்டு என எண்ணிக் கொண்டே அபிஷேகம் செய்ய ஆரம்பித்தார். எழுபது, எண்பது, தொண்ணூறு குடம் ஆயிற்று. உடனே கந்தன் புலம்ப ஆரம்பித்தார். 95 குடம் அபிஷேகம் செய்தாயிற்று, ராஜ பதவிக்கான அறிகுறி ஒன்றுமே தெரியவில்லையே! கிரீடத்தை எடுத்துக்கொண்டு யாராவது வருகின்றனரா என்று
சுற்றும், முற்றும் பார்த்தார். அப்படியாரும் அங்கு வரவில்லை. கந்தனுக்கு இருந்த பொறுமையும் குறைந்தது. சரி எப்படியாவது நூறு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்து விடுவோம் என்று எண்ணி, மறுபடியும் குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்தார். 96, 97, 98. குடம் ஊறினார். மீண்டும் ராஜ
பதவிக்கான அறிகுறியே காணோம் என்று புலம்பினார். பொறுமையை இழக்க ஆரம்பித்தார். 99வது குடமும் அபிஷேகமாகி விட்டது பலன் தெரியவில்லை. நூறாவது குடம் தண்ணீர் கொண்டு வந்து, நூறு என்று சொல்லி அபிஷேக குடத்தை பெருமாள் தலையில் போட்டு உடைத்தார். உடனே, இவர் முன் பெருமாள் தோன்றி, பக்தா! நீ நூறு
குடம் தண்ணீர் அபிஷேகம் செய்தது குறித்து மகிழ்ந்தேன்; ஆனால், பொறுமையை இழந்து, நூறாவது குடத்தை என் மேல் போட்டு உடைத்தது பெரிய அபசாரம். நூறாவது குடத்து தண்ணீரையும் பொறுமையுடன் அபிஷேகம் செய்திருந்தால், உனக்கு ராஜ பதவி கிடைக்க ஏற்பாடு செய்திருப்பேன்.
நீ, கடைசி நேரத்தில் பொறுமையை
இழந்து அபசாரம் செய்து விட்டதால், பொறுமைக்கு அடையாளமாக கழுதையாக ஏழு பிறவி எடுத்து, பின்னர் மனித ஜென்மம் கிடைக்கும் போது, மீண்டும் எனக்கு நூறு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்தால், ராஜ பதவி கிடைக்கும்! என்று கூறி மறைந்து விட்டார். பொறுமை என்பது வெற்றியைப் பெற்றுத்தரும் முக்கியமான குணம்
ஆகும். ஒருவருக்கு எல்லாத் திறமைகளும் இருந்து பொறுமை இல்லாவிட்டால் அவர் வெற்றி பெறுவது கடினம். பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

25 Dec
இன்று தரிசனத்துக்கும் விஸ்வரூப தரிசனத்திற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொண்டேன். அதை பகிர்கிறேன். சாதரணமாக பக்தர்கள் சென்று ஆலயங்களில் இறைவனை பார்த்து வழிபடுவதை #தரிசனம் என்கிறோம். #விஸ்வரூப_தரிசனம் என்றால் அதிகாலை முதல் தரிசனம் என்று பொருள். அவன் திருமஞ்சனத்திற்கு முன்னர் அவனது Image
முந்தைய தினத்தின் அலங்காரத்தில் தரிசிப்பது. இறைவன் நம்மை பார்ப்பது விஸ்வரூப தரிசனம்! காலை முதன் முறை தனக்கு முன் இருக்கும் திரை விலக்கப்பட்டதும், தன்னை பார்க்க யார் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று இறைவன் பார்ப்பார். அப்பொழுது அவரது அருட்பார்வை நேரடியாக நம் மீது விழும். அது
தான் விஸ்வரூப தரிசனத்திற்கு உள்ள சிறப்பு. எனவே இறைவனின் அருட்பார்வை நம் மீது விழவில்லையே என்று ஏங்குபவர்கள் தொன்மையான ஆலயத்தில் தினசரி விஸ்வரூப தரிசனத்திற்கு சென்று வந்தால் விரைவில் அவன் அருட்பார்வை நம் மீது விழுந்து, நம் துன்பங்கள் யாவும் ஒரு முடிவுக்கு வரும் என்பது உறுதி.
Read 4 tweets
25 Dec
கணித பாடத்தில் சிரமப்படும் மாணவர்கள் கீழ்கண்ட ஸ்லோகத்தை காலை, மற்றும் மாலை இருவேளையும் 12 தடவை பாராயணம் செய்து வந்தால் மிகவும் நல்ல மதிப்பெண் பெறுவது மட்டுமில்லாமல் கணித பாடமே மிகவும் எளிதானதாகவும், சுலபமானதாகவும் மாறி, கணிதத்தில் மேதை ஆகலாம். இது நாமக்கல் ஸ்ரீ நாமகிரி தாயார் Image
மீது பாடப்பட்ட சுலோகம். கணிதமேதை ராமானுஜத்துக்கு ஸ்ரீ நாமகிரி தாயார் அனுக்கிரகம் செய்து அருளியது:
ஸ்ரீ வித்யா மந்த்ர ரத்னா ப்ரகடித விபவா
ஸ்ரீ ஸுபலா பூர்ண காமா ஸர்வேஸ பிரார்த்திதா
ஸகல ஸுரநுதா ஸர்வ ஸாம்ராஜ்ய தாத்ரி
லக்ஷ்மீ ஸ்ரீ வேத கர்பா விதுரது மதிஸா விஸ்வ கல்யாணபூமா
விஸ்வ Image
ஷேமாத்ம யோகா விமல குணவதி விஷ்ணு வக்ஷஸ்தலஸ்தா

ஶ்ரீ நாமகிரி தாயார் திருவடிகளே சரணம்🙏🏻 Image
Read 4 tweets
25 Dec
Narrated by Sudha Sridharan
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

This is the divine experience of my father, Sri.V. Venkataraman with Sri Maha Periyava. He has narrated an incident that happened to him when he was 11 years old, way back in 1954. Image
During the summer when my father was studying 5th or 6th standard in P.S High school in Mylapore, his father (my grand father Shri. Vaidhyanathan) arranged for his son's upanayam. Since he could not do the upanayanam all by himself due to financial strain, he took his son to
Kanchi Mutt, where there were arrangements made for samashti upanayanam for young boys. My father was taken to Sankara Matham in summer that year, even before appearing for his annual exams that year. The dates of the upanayanam and exams clashed and so he could not write a few
Read 8 tweets
24 Dec
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒருமுறை அரசன் கபிலன் பெரும் போர் ஒன்றிலே வெற்றிவாகை சூடினான். பெரும் களிப்பில் இருந்த அரசன் தன் தளபதிகளை அழைத்து உங்களுக்கு என்ன வேண்டுமோ அதனைக் கேளுங்கள் தருகின்றேன் என்று ஆணையிட்டான். இதுதான் சந்தர்ப்பம் என்று எண்ணி, தளபதிகள் மாளிகை, கோட்டைகள் கட்டித்
தருமாறு கேட்டனர், ஆனால் தளபதி ஜெயந்தன் மட்டும் தனக்கு கொஞ்சம் பொன்னும் பொருளும், இரண்டு வருடத்திற்கான அரச விடுமுறையும் தேவை என்று கேட்டு அன்றே பெற்றுக்கொண்டான் ஜெயந்தன். இதனைப் பார்த்த மற்ற தளபதிகள், அவனைப் பார்த்து முட்டாளே மன்னனிடம் இவ்வளவு அற்பமான கோரிக்கையை கேட்டுப் பெற்றுக்
கொண்டாயே, எங்களைப் போல கோட்டை கொத்தளங்கள் என்று கேட்டிருக்கலாமே என்றார்கள்.
அதற்கு அந்த தளபதி ஜெயந்தன் நானா முட்டாள்? எனக்கு இன்றைக்கே நான் கேட்டது கிடைத்துவிட்டது. நீங்கள் கேட்பது கிடைக்க சில காலம் ஆகலாம். கோட்டை கொத்தளங்கள் கட்ட வருடக் கணக்காகும். ஒரு வேளை மன்னன் கபிலன் வேறொரு
Read 6 tweets
24 Dec
திருமயிலை #ஸ்ரீகபாலீஸ்வரர் #கற்பகாம்பாள் அடியார் கூட்டத்தில் தலைசிறந்தவர் ஸ்ரீ முத்துலக்ஷ்மி எனும் மூதாட்டி. பல வருடங்களாக கற்பகாம்பாள் சன்னிதியில் லலிதா ஸஹஸ்ரநாமம், ஸௌந்தர்யலஹரி முதலியவற்றை மனமுருகி பாராயணம் நெய்த இவர் தான் மட்டும் இந்த நற்பணியை செய்யாமல் தன் போன்ற மாதர்களையும்
சேர்த்துக் கொண்டு பாராயணம் செய்வார். அவர்களுக்கும் இதை பிழையின்றி சொல்லிக் கொடுத்து ஈடுபடுத்தியதால் அந்த மாதர்சங்கம் (சுவாஸினி மண்டலி) அவரை குரு பாட்டி என்றே அழைப்பது வழக்கம்.
அந்த குரு பாட்டிக்கு ஒரு நாள் அதிகாலை 3 1/2 மணிக்கு கனவு வந்தது. அதில் ஸஹஸ்ரநாமம் பொறித்த தங்கக்காசு
மாலையை அணிந்து கொண்டு அன்னை கற்பகாம்பாள் நிற்க உடன் மஹா பெரியவரும் நிற்கிறார். ஆனந்தம் கொண்ட பாட்டி, அன்னையிடம் உனக்கேது ஸஹஸ்ரநாம மாலை, காஞ்சி காமாக்ஷிக்கு தானே பெரியவா பண்ணிப் போட்டா என்று கேட்க உடனே அருகில் நிற்கும் காஞ்சி மஹான் “ஆமாம் நான் காமாக்ஷிக்கு போட்டேன். கற்பகத்துக்கு
Read 16 tweets
24 Dec
#மார்கழிஸ்பெஷல் #தர்மசாஸ்திரம்
பீஷ்ம பிதாமஹர் அம்புப்டுக்கையில் இருந்து கொண்டு யுதிஷ்டிர மஹாராஜாக்கு உரைத்த தர்ம சாஸ்திரம்:
எவனெருவன் தனுர் (மார்கழி) மாசத்தில் சந்திரன் மூல நட்சத்திரத்தில் வரும்போது அன்றைய தினத்தில் ஸ்ரீமன் நாராயணை தியானிக்கிறானோ அவனுக்கு சௌக்கியம் உண்டாகும். மூல
நட்சத்திரத்தை ஸ்ரீமன் நாராயணனுடைய திருப்பாதங்களாகவும் ரோகிணியை கணுக்கால்களாகவும் அஸ்வினியை முழங்கால்களாகவும் பூராட உத்திராட நட்சத்திரத்தை துடையாகவும் பூர உத்திரங்களை மறைவு ஸ்தானமாகவும் கிருத்திகையை இடுப்பாகவும் பூரட்டாதி உத்திரட்டாதி நட்சத்திரத்தை நாபியாகவும் ரேவதியை வயிறாகவும்
அவிட்டத்தை முதுகாகவும் அனுஷத்தை மார்பாகவும் விசாக நட்சத்திரத்தை கைகளாகவும் ஹஸ்த நட்சத்திரத்தை நுனிகையாகவும் புனர்பூசத்தை விரல்களாகவும் ஆயில்யத்தை நகங்களாகவும் கேட்டையை கழுத்தாகவும் ஸ்ரவணத்தை காதாகவும் புஷ்யத்தை வாயாகவும் ஸ்வாதியை பல்லும் உதடுமாகவும் சதய நட்சத்திரத்தை
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(