Kind attention: @SivaRoobini555
மகளே!!! சில நாட்களுக்கு முன்பு நீ காதல் பற்றியும் காமம் பற்றியும் காரசாரமான விவாதம் செய்ததை கொஞ்சம் கற்பனை கலந்த உருவகம் செய்துள்ளேன். 👇👇👇👇👇

அதற்காகத்தான் உன்னை tag செய்கிறேனம்மா

வாழ்க வளமுடன்
எல்லா நலமுடன்
#இதுதான்_காதலென்பதா???

#10_வயதில் : நானும் அவனும் வீட்டுப்பாடம் படித்துக்கொண்டிருந்தபோது அவன் வேண்டுமென்றே என் கைகளைத் தொட்டுப் பேனா வாங்கும்போது எனக்கு ஏற்பட்ட உணர்வுதான் காதல் என்பதோ?

ஒரு நிமிடம் பரவசத்தில் உடல் சிலிர்க்க, அதை மறைத்துக் கொள்ளப் பெரும் பிரயத்தனப்பட்டேன்.
அப்போது என் கண்களில் #நான்_உணர்ந்ததுதான்_ஒருவேளை_சந்தோஷக்_கண்ணீராக_இருக்குமோ?

#15_வயதில் :
நானும் அவனும் தனியாக இருந்த ஒரு சமயத்தில் கொஞ்சம் எல்லை மீறிப் பிடிபட்டுக்கொண்டோம். சற்றும் தயங்காமல் அவன் பழியைத் தன்மேல் போட்டுக் கொண்டு மரண அடி விழுந்தது அவனுக்கு.
இருந்தபோதும் மற்றவர்களின் முன்னால் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

அவன் ரத்தம் பார்த்து என் விழிகளில் கண்ணீர் ரத்தமாக வழிந்தது. #இதுதான்_காதலென்பதா???
#18_வயதில் :
பள்ளிப் பிரிவுபச்சார விழா முடிந்து மனம் முழுதும் இறுக்கமும் தவிப்புமாக நான் அவனிடம் குட்பை சொன்னபோது அவன் என் கைகளை பிடித்து கொண்டு ‘என்னை மறந்து விடுவாயா?’ என்று கலங்கிய கண்களுடன் கேட்டான். என் கண்கள் கண்ணீர் சாகரத்தில் நனைந்திருந்தன. #இதுதான்_காதலென்பதா???
#21_வயதில் :
நானும் அவனும் கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு நீண்ட பயணம் செய்தோம். எத்தனையோ வாய்ப்புக்கள் இருந்தும், ஏன் நானே ஒருவகையில் தயாராக இருந்தும் எண்ணற்ற முறை என்னை முத்தமிட்டிருந்த அவன் அன்று ஏனோ என்னைத் தொடக்கூட இல்லை.
சாதகமான சூழ் நிலையில் கூடச் சுயக் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளும் அவனைப் புரிந்து கொண்ட என் கண்கள் பெருமிதத்தில் வெளியிட்ட கண்ணீரை அவனுக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டேன்.

#இதுதான்_காதலென்பதா????
26 வயதில் :
அந்த நாள் வந்தே விட்டது. நாங்கள் இருந்த திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் அவன் என்னை ப்ரபோஸ் செய்தான். அவனை அவனே முட்டாளாக்கிக் கொண்டதைப்போல அப்படியொரு அறியாமையான வேண்டுதல். அப்போது சொன்னான்: “நான் உன்னை விரும்புகிறேனென்று நீயும் அறிந்திருப்பாய்”
உன்னதப் புன்னகை பூத்த என் இதழ்களின் சிருங்காரத்தை உணரவில்லை

#அப்போதும்_கண்களில்_வழிந்த_அதே_சந்தோஷக்_கண்ணீர்.

#இதுதான்_காதலென்பதா????
#35_வயதில் :
நான் களைப்பாக இருப்பதைப் பார்த்தால் எனக்குக் காஃபி போட்டுக்கொடுத்துத் தூங்க வைத்துவிட்டு அவர் வீட்டு வேலைகளை முழுமையாகச் செய்து முடிப்பார்.
கடைசியில் அவர் என்னருகில் படுத்துக்கொள்ளும்போது நான் விழித்திருப்பதை அறியாமல் நெற்றியில் முத்தமிட்டுக் ‘குட் நைட்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வார்.

#என்_மூடிய_விழிகளுக்குள்_நன்றியின்_கண்ணீர்_தளும்பும்.

#இதுதான்_காதலென்பதா????
#50_வயதில் :
சிக்கலான சமயங்களில் அவர் ஆஃபீஸ் கவலையில் அல்லது உடல் நிலை சரியில்லாமல் இருந்தாலும் என்னைச் சிரிக்க வைப்பதற்காக ஜோக்கடித்து என் சிரிப்பை ரசிப்பார்.

ஆனால்,பாவம் அப்போதும் என் ஆனந்தக் கண்ணீரை அவர் உணர முடியாமல் துடைத்துக் கொள்வேன்.

#இதுதான்_காதலென்பதா???
#62_வயதில் :
தனது கடைசி மூச்சின் சுவாசத்தின்போது அவர் சொன்னார் : “... எனக்கு எல்லையில்லாத காதலைக் கொடுத்தாய். என் ஆண்மையைப் பெருமிதத்துடன் வாழ் நாள் முழுக்க உணரச் செய்தாய். ஒரு காதலின் பின்னால் எனக்கு இவ்வளவு உன்னதமான வாழ்வு கிடைக்குமென்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. நன்றி”
#என்_கைகளைப்_பற்றியிருந்த_அவரின்_கரங்கள்_இறுதியாகத்_துவண்டுவிட்டன.

என் விழிகளில் நிரந்தரக் கண்ணீர்த்துளிகளைப் பரிசளித்துவிட்டு எப்போதும் எங்கேயும் என்னைக் கூடவே அழைத்துச்செல்லும் அவர் இப்போது முதல்முறையாக என்னை விட்டுவிட்டுச் சென்றார்.
இந்தமுறை நான் கண்ணீரைத் துடைக்கவில்லை.............

#இதுதான்_காதலென்பதா????

பின்குறிப்பு: போன வருஷம் இதே டிசம்பர் 35ல் எனது பள்ளித் தோழன் கொரோனாவுக்கு பலியானான். அவன் மனைவியும் எங்கள் பள்ளித் தோழி தான்.

ஐந்து தசாப்த இளமையான காதல்!!!
இன்று காலை அந்த தோழியிடம் பேசிக்கொண்டு இருந்த போது மேற்சொன்ன வாழ்க்கையை நினைவு கூர்ந்தாள்.

அவள் சொன்னபோதும் அழுது விட்டேன்.

இதனை எழுதும்போதும் என் கண்களை கண்ணீர் மறைக்கிறது

ஏனெனில்....

இதுதான் நான் பார்த்த #உண்மைக்_காதல்

வாழ்க வளமுடன்
எல்லா நலமுடன்

@drmathimaths @Radigua_V

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Srinivasa Iyer ஶ்ரீநிவாஸ ஐயர்

Srinivasa Iyer ஶ்ரீநிவாஸ ஐயர் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @srinivasan19041

26 Dec
இன்று டிசம்பர் 26. 2021ன் கடைசி ஞாயிற்றுக்கிழமை.

கடந்த மூன்று வருஷங்களாக கடைசி ஞாயிறன்று நான் ஸ்பெஷல் பிரார்த்தனை செய்து வருகிறேன். (ஒவ்வொரு ஞாயிறன்று காலையில் எனக்கு தெரிந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்து வருகிறேன் என்று இங்கு பலருக்கு தெரியும்).
வருஷத்தின் கடைசி ஞாயிறன்று (வீட்டில் தனியான பிரார்த்தனை செய்து விட்டு) வீட்டுக்கு அருகில் இருக்கும் ஏதாவதொரு கோவிலுக்கு சென்று... அன்று காலையில் யாருக்காக எல்லாம் பிரார்த்தனை செய்தேனோ அவர்களுக்காகவும் அவர்கள் குடும்ப, நட்புக்களுக்காகவும் அபிஷேகம் செய்து விட்டு
எல்லோர் சார்பாகவும் ப்ரசாதம் & அன்னதானம் செய்து வருகிறேன்.

அதன்படி இன்று எல்லாம் இனிதே நடைபெற்று வருகிறது. 11 மணியளவில் எல்லோர்க்குமான போஜனம் வழங்கப்பட இருக்கிறது.

இதை ஏன் செய்ய வேண்டும்???? இதற்கு காரணம்.....

எல்லோர்க்கும் தெரிந்த கதையை சொல்கிறேன். கேளுங்க
Read 18 tweets
25 Dec
#காலையில்_நடக்க சொன்னார்கள்..

#நடந்தேன்.

#நேராக_நடக்க_கூடாது, #எட்டு_போட்டுத்_தான் நடக்கணும்னு சொன்னாங்க

#தடுக்கி_கீழே_விழுந்தது_தான்_மிச்சம் (ஆனாலும் மீசையிலா மண் ஒட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)
#காலையில்_எழுந்தவுடன்_ஒரு_டம்ளர்_தண்ணீர் குடித்து கொண்டு இருந்தேன்.

போதாது போதாது.. #அதனுடன்_எலுமிச்சையும்_பிழிந்து_குடிக்கணும் னு சொன்னாங்க....

#கேன்சர்_உறுதியாக_வராதாம்.!!

#உருளைக்கிழங்கு அளவோடுதான்
#ருசியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

வாயு என்றார்..
வாயில் படுவதை மறந்தேன்
Read 10 tweets
24 Dec
ஶ்ரீனியின் #கதையளப்பு_களஞ்சியம் வழங்கும்.....

#வீட்ல_சும்மா_தானே_இருக்கா???

ருக்கு... காய்கறிகள் வாங்கி கொடுத்தது பத்து மணிக்கு ... இப்ப மணி 1ஆறது.. சாப்பாடு ரெடியான்னு கேட்டா இன்னும் கொஞ்ச நேரம் ஆகும்ன்னு சொல்றியே!
சமைக்குறது அவ்ளோ ஈசியா?! ஒருநாளைக்கு சமைச்சு பாரு அப்ப தெரியும் எங்க கஷ்டம்..

அடியேய்! (#எங்களுக்கும்_கோபம்_வரும்ல!!!) ஹோட்டலிலும், கல்யாண மண்டபத்திலும் 500, 1000 பேர்ன்னு விதம் விதமா சமைக்குற சமையல் மாஸ்டர்கூட இம்புட்டு சலிச்சுக்க மாட்டாங்கடி..
ஒரு டம்ளர் அரிசி போட்டு சோறு பொங்க இப்படி சலிச்சுக்கிட்டு அதையே சொல்லி சொல்லி காட்டுறீங்கடி இந்த பொம்பளைங்க...

யோவ்! (என்னம்மா இது.... பொசுக்குன்னு #யோவ்னு சொல்லிட்ட.... அது நம்ப ஃபிரண்டு @anexcommie நம்பள சொல்றதும்மா...
Read 23 tweets
23 Dec
#Seniors_are_Seniors

An elderly woman, lying on the bed, said to her elderly husband:
"Listen.. I just looked out the window and thought the garage light was on. Will you go and turn off the garage light?"
The old man got up from the bed with great difficulty, opened the door and came out and saw five or six thieves trying to break into his garage door.
The elder called the nearest police station from there.
"Look... write my address. We're the only two elderly husband and wife at home. Right now five or six burglars have attacked my garage and are breaking into the garage door. Send a police team quickly"
Read 8 tweets
19 Dec
ஒரு கதையின் மூலமாக இருவருக்கு எடுத்து சொல்ல விழைகிறேன்

@SivaRoobini555 நேற்றைய தினம் ஆண்கள்/பெண்கள் காதல்/காமம் பற்றி ஆணி அடித்தாற்போல் அனல்வீசி விவாதம் செய்து கொண்டு இருந்தார்.

@esan_shiv அவருக்கு இரண்டாவதாகவும் பெண் குழந்தை பிறந்துள்ளது பற்றி சொல்லி இருந்தார்.
இருவருக்கும் நல்லாசிகளுடன் இந்த கதையை சமர்ப்பிக்க எண்ணுகிறேன்👇👇👇

*👫பெண்💏* *பார்ப்பது*
*👁👀...???*

ஒரு *வாலிபன்🤴🕺🤵👨
தன்னுடைய *குருவிடம்...👵👴 எனக்கு என் தாயார் *திருமணம்💏* முடிக்க ஆசைப்படுகிறார்.

குருவே எனக்கும் அதில் *ஆசை💝* தான்...
நான் *எப்படிப்பட்ட❓ பெண்ணை🙋👩* திருமணம் செய்வது என்றான்...???

அப்போது அந்த குரு #பல்வகை_பெண்களின்_குணாதிசயங்கள் பற்றி இப்படி சொன்னார்.

புற அழகு குறைவாக இருந்தாலும் அக அழகு நிறைந்தவளை திருமணம் செய்து கொள்!

ஏனெனில் #புறத்தோற்றம்_இன்றோடு...

#அகத்தோற்றம்_என்றென்றும் !!!
Read 12 tweets
18 Dec
#ஊர்_சுற்றி

ரம்பம் போட்டு ரொம்ப நாளாச்சோ????
@@@#####

சார் எங்க கிளம்பிட்டீங்க?

பசங்களுக்கு மொட்டை அடிக்க......

எங்க ?!

வேறு எங்க தலையிலதான்!!

கடிக்காதீங்க. எந்த ஊர்ல?

மூத்தவன் #திருப்பதிக்கு_பழனிலயும், இளையவன் #பழனிக்கு_திருப்பதியிலும்.
ஏன் சார் இரண்டு பேருக்கும் #ஒரே_இடத்துல அடிக்ககூடாதா?

அதெப்படி சார் முடியும்? இவன் தல வேற, அவன் தல வேற இல்ல?!

இல்லை சார்! நான் சொன்னது ஒரே ஊர்ல அடிக்கக் கூடாதான்னுதான்

நான் #பழனியில் வேலை பார்த்தப்போ #திருப்பதி பிறந்தான்.
#திருப்பதியில் வேலை பார்த்தப்போ #பழனி பிறந்தான்.
#திருப்பதிக்கு_திருப்பதின்னு பேர் வச்சதால, #திருப்பதிக்கு_திருப்பதில மொட்டை அடிக்க முடியுமா?

#திருப்பதி_பழனில பொறந்ததால #திருப்பதிக்கு_பழனிலதான் மொட்டை போடறோம்.

அதேபோல, #பழனிக்கு_பழனின்னு பேர் வச்சதால #பழனிக்கு_பழனில மொட்டை அடிக்கமுடியுமா?!
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(