கடந்த மூன்று வருஷங்களாக கடைசி ஞாயிறன்று நான் ஸ்பெஷல் பிரார்த்தனை செய்து வருகிறேன். (ஒவ்வொரு ஞாயிறன்று காலையில் எனக்கு தெரிந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்து வருகிறேன் என்று இங்கு பலருக்கு தெரியும்).
வருஷத்தின் கடைசி ஞாயிறன்று (வீட்டில் தனியான பிரார்த்தனை செய்து விட்டு) வீட்டுக்கு அருகில் இருக்கும் ஏதாவதொரு கோவிலுக்கு சென்று... அன்று காலையில் யாருக்காக எல்லாம் பிரார்த்தனை செய்தேனோ அவர்களுக்காகவும் அவர்கள் குடும்ப, நட்புக்களுக்காகவும் அபிஷேகம் செய்து விட்டு
எல்லோர் சார்பாகவும் ப்ரசாதம் & அன்னதானம் செய்து வருகிறேன்.
அதன்படி இன்று எல்லாம் இனிதே நடைபெற்று வருகிறது. 11 மணியளவில் எல்லோர்க்குமான போஜனம் வழங்கப்பட இருக்கிறது.
இதை ஏன் செய்ய வேண்டும்???? இதற்கு காரணம்.....
எல்லோர்க்கும் தெரிந்த கதையை சொல்கிறேன். கேளுங்க
*"தர்மம் தலை காக்கும் - தக்க சமயத்தில் உயிர் காக்கும்!!!*
இரக்ககுண பெண்மணி ஒருத்தி தினந்தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் சுவர் மேல் வைப்பாள்...
அவ்வழி திரியும் ஒரு கூனல் முதுகு கிழவன் அதை எடுத்துக் கொண்டு, #ஏதோ_முனகிக்_கொண்டே போவான்.
இது அன்றாட வழக்கமாயிற்று!.
ஒரு நாள் மதில் அருகிலேயே நின்று, கிழவன் என்ன முனகுகிறான் என்று செவிமடுத்து கேட்டாள்.
'இவன் என்ன பித்தனா, இல்ல, சித்தனா, பரதேசி பய' என்று திட்டினாள்.
'நன்றி கெட்ட கூனனை' நினைத்து மன உளைச்சலுக்கு ஆளானாள்!
நாளடைவில் அவளது கோபம் தலைக்கேறி, கொலை வெறியாக மாறியது!
ஒருநாள் இட்லி மேல் விஷம் கலந்து செத்து தொலையட்டும் என மதில் மேல் வைக்கப் போனாள்....
மனம் ஏனோ கலங்கியது; கை நடுங்கியது.
அவன் அப்படி இருந்தாலும், சே...நாம் ஏன் இப்படியாகணும்னு அந்த விஷம் கலந்த இட்லியை சாக்கடையில் எறிந்து விட்டு வேறு நல்ல இட்லியை மதில் மேல் வைத்து விட்டு மனம் அமைதியானாள்.
அவனை அப்படியே அறையலாம் போலிருந்தது, அந்த பெண்மணிக்கு!.
அன்று மதியம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்தாள்;
வாசலில் வாலிபன் ஒருவன் கசங்கிய உடையோடு தள்ளாடிய படி நின்றிருந்தான்.
வேலையோடுதான் வீடு திரும்புவேன் என்று சொல்லி விட்டு ஒரு மாதம் முன்பு வேலை தேடி வீட்டை விட்டு சென்ற #அவளது_ஒரே_மகன்தான் அவன்!.
"அம்மா, வீட்டுக்கு திரும்பி வரும் போது என் பர்ஸ் காணாம போச்சு; கையில காசு இல்ல; தெரிஞ்சவங்க யாரும் கண்ணுல படல; மணிக் கணக்கில நடந்து வந்துட்டே இருந்தேன்;
நல்ல வெய்யில்; அகோரப் பசி வேறு; மயங்கி விழுந்துட்டேன்;
கண் முழிச்சு பாத்தப்போ...
#யாரோ_ஒரு_கூனமுதுகு_கிழவன் என்னை தூக்கி உட்கார வச்சு ரெண்டு இட்லி கொடுத்து சாப்பிடச் சொன்னான். இட்லி சாப்பிட்ட பிறகுதான் எனக்கு உசுரே வந்தது!"*
இதைக் கேட்டதும், பேயறைந்தது போல் அதிர்ச்சி அடைந்தாள்!
விஷம் கலந்த இட்லியை கூனனுக்கு கொடுத்திருந்தால்... அது என் மகனுக்கே எமனாக ஆகியிருக்குமே, ஆண்டவா! என்று நினைத்து தாய் உள்ளம் பதைபதைத்தது; கண்கள் பனித்தன
Kind attention: @SivaRoobini555
மகளே!!! சில நாட்களுக்கு முன்பு நீ காதல் பற்றியும் காமம் பற்றியும் காரசாரமான விவாதம் செய்ததை கொஞ்சம் கற்பனை கலந்த உருவகம் செய்துள்ளேன். 👇👇👇👇👇
#10_வயதில் : நானும் அவனும் வீட்டுப்பாடம் படித்துக்கொண்டிருந்தபோது அவன் வேண்டுமென்றே என் கைகளைத் தொட்டுப் பேனா வாங்கும்போது எனக்கு ஏற்பட்ட உணர்வுதான் காதல் என்பதோ?
ஒரு நிமிடம் பரவசத்தில் உடல் சிலிர்க்க, அதை மறைத்துக் கொள்ளப் பெரும் பிரயத்தனப்பட்டேன்.
#15_வயதில் :
நானும் அவனும் தனியாக இருந்த ஒரு சமயத்தில் கொஞ்சம் எல்லை மீறிப் பிடிபட்டுக்கொண்டோம். சற்றும் தயங்காமல் அவன் பழியைத் தன்மேல் போட்டுக் கொண்டு மரண அடி விழுந்தது அவனுக்கு.
An elderly woman, lying on the bed, said to her elderly husband:
"Listen.. I just looked out the window and thought the garage light was on. Will you go and turn off the garage light?"
The old man got up from the bed with great difficulty, opened the door and came out and saw five or six thieves trying to break into his garage door.
The elder called the nearest police station from there.
"Look... write my address. We're the only two elderly husband and wife at home. Right now five or six burglars have attacked my garage and are breaking into the garage door. Send a police team quickly"