Chocks Profile picture
27 Dec, 163 tweets, 24 min read
*வலைப்பதிவில் (Blog) இது எனது நூறாவது தமிழ் கட்டுரை

/ பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல /

/ முகவுரை /

என்னப்பா! “பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல” என்பது ரீல் படமான சிவாஜி தி பாஸில் ரஜினி பேசிய வசனம் ஆச்சே! அப்படி ரியல் லைப்ல இவ்வசனம் “யாருக்கு பொருந்தும்” என்று யோசிக்கிறீங்களா?
இதுக்கு பொருத்தமான ஒருத்தரு இருக்காருங்க! அப்படி எங்கங்க இருக்காருன்னு யோசிக்கிறீங்களா? அட நம்மூர்லே இருக்காருங்க! கண்டுபிடிச்சிடீங்களா?

ரைட்டு! அவர் தாம் தொண்டு செய்து பழுத்த பழம் பெரியார்!
சமூக முன்னேற்றத்துக்காக பெரியார் ஆற்றிய தொண்டுகள் குறித்து அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ள புத்தகங்களின் பக்கங்கள் மட்டுமே பத்தாயிரத்தை தாண்டுகிறது. இன்றைய உலகில் அனைத்தையும் அனைவராலும் படித்தறிய இயலாத சூழல் காரணமாக சுமார் 30 பக்கங்களில் என் அறிவுக்கு எட்டிய வரையில் பெரியார் ஆற்றிய
தொண்டுகள் குறித்து சுருக்கி இக்கட்டுரையை எழுதியுள்ளேன். உங்களுக்கு நேரம் கிட்டும் போது இக்கட்டுரையை வாசிக்கவும் பகிரவும் வேண்டுகிறேன்.

சுருக்கம் 

1.தொடக்க காலகட்டம்
2.காங்கிரஸ் காலகட்டம்
3.தென்னிந்திய நல உரிமைச் சங்கம்
4.வைக்கம் போராட்டம்
5.காங்கிரஸ் கட்சியுடன் விரிசல்
6.சுயமரியாதை இயக்கம் காலகட்டம்
7.திராவிடர் கழகம் காலகட்டம்
8.பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம்
9.பெரியாரின் சமூக நீதி
10.திராவிட நாடு பயணித்த பாதை
11.பெரியாரும் அம்பேத்கரும்
12.பெரியாரும் மணியம்மையும்
13.பெரியார் மறைந்துவிட்டாரா?
14.திராவிட முன்னேற்ற கழகம்
15.முடிவுரை
16.இதர செய்திகள்
17.விவரணைகள்

1. தொடக்க காலகட்டம்

ஈரோட்டில் “ஈரோடு வெங்கட்ட நாயக்கர் - சின்னத்தாயம்மாள்” தம்பதியினர் தினசரி கூலி வேலைக்கு சென்று பின்னர் மளிகை கடை, அரிசி வியாபாரம் போன்ற தொழில்கள் செய்து நாளடைவில் வணிகர்கள் குடும்பமானது. இத்தம்பதியினருக்கு ஈ.வெ.கிருஷ்ணசாமி,
ஈ.வெ.ராமசாமி என்று இரண்டு ஆண் குழந்தைகளும் பொன்னுத்தாயம்மாள், கண்ணம்மாள் என்று இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தது.

17 செப்டம்பர் 1879 இல் பிறந்த ஈ.வெ.ராமசாமி என்ற ஈ.வெ.ரா தனது சின்னம்மா வீட்டில் குழந்தை பருவத்தில் சில காலம் வளர்ந்தார். சிறு வயதிலே இருந்தே தாழ்த்தப்பட்ட பள்ளி
நண்பர்கள் மீது அன்பு கொண்டு அவர்கள் வீட்டில் பண்டங்கள் உண்பது, தண்ணீர் அருந்துவது போன்ற செயல்களில் பெரியார் ஈடுபட்டார். இதை கண்டு ஈ.வே.ராவை சின்னம்மா வீட்டில் இருந்து அழைத்து வந்த சின்னத்தாயம்மாள் தாழ்த்தப்பட்டவர்களுடன் பழக்கக்கூடாது என்று கடுமையான அறிவுரைகளை வழங்கினார். அதை
காதில் வாங்கி கொள்ளாமல் தாழ்த்தப்பட்ட பள்ளி நண்பர்களுடன் தொடர்ந்து நெருங்கி பழகினார் ஈ.வெ.ரா. நாளடைவில் பள்ளிப்படிப்பில் கவனம் கொள்ளாத ஈ.வெ.ராவை தனது தரகு மண்டியில் பணிக்கு அமர்த்தினார் தந்தை.

இந்து ஆன்மீகத்தில் தீவிர நாட்டம் கொண்ட ஈ.வெ.ரா பெற்றோர் வீட்டில் அடிக்கடி பக்தி
பிரசங்கம் நடப்பதுண்டு. கடவுள் நம்பிக்கை கொண்டவராக வளர்க்கப்பட்டாலும் சிறு வயது முதலே பக்தி பிரசங்கம் கேட்டு வந்த ஈ.வெ.ராவுக்கு அப்பிரசங்கத்தில் இருந்த கற்பனைக் கதைகள் முரண்பாடுகளை ஏற்படுத்தியது.

1898 இல் ஈ.வே.ரா தனது தாய்மாமன் மகள் நாகம்மாளை திருமணம் புரிந்து கொண்டார்.
திருமணமான இரண்டாம் ஆண்டில் நாகம்மாள் ஒரு பெண் குழந்தையை பெற்றார். அக்குழந்தை ஆறு மாதமான போது இறந்தது பிறகு குழந்தை பெறுவதை இடையூறாக கருதி குழந்தையே வேண்டாமென்ற முடிவிற்கு வந்தார் ஈ.வே.ரா. 11 மே 1933 அன்று நாகம்மாள் மரணமடைந்தார். நாகம்மாள் மறைவுக்கு ஈ.வே.ரா உருக்கமாக இரங்கல்
செய்தியை எழுதி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாள் தந்தை கோபித்துக் கொண்டார் என்பதால் வருத்தம் கொண்டு துறவறம் மேற்கொள்ள காசிக்கு பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார் ஈ.வே.ரா. அப்போது அவருக்கு வயது சுமார் 25. காசிக்கு செல்லும் வழியில் சில இடங்களில் தங்கி சில நண்பர்களை கண்டுகொண்ட
ஈ.வே.ரா காசியில் சிறு சிறு வேலைகளை செய்தும் பிச்சை எடுத்தும் உண்டார். பார்ப்பனர்களுக்கு கிடைக்கின்ற மரியாதை தாழ்த்தப்பட்டவர்களுக்கு கிடைக்காமல் இருப்பதை கண்டு கடுமையான கோபம் கொண்டார். காசி பயணத்தை முடித்துக் கொண்டு ஆந்திராவில் எலூரு பகுதிக்கு வந்திருந்த ஈ.வே.ரா குறித்து
செய்தியறிந்து அங்கிருந்த மகனை சமரசம் பேசி ஈரோட்டுக்கு அழைத்து வந்த தந்தை நாளடைவில் தரகு மண்டியை ஈ.வே.ரா பெயருக்கு மாற்றி பொறுப்புகளை அவரிடம் கொடுத்தார். அதே காலகட்டத்தில் மக்களோடு மக்களாக வாழ்ந்து சாதி வேறுபாடு பாராமல் அனைத்து மக்களுடன் பாசத்தோடு பழகிய ஈ.வே.ரா ஊருக்குள் நடக்கும்
தகராறுகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டார். நாளடைவில் அரசு ஊழியர்கள், பேராசிரியர்கள், தலைவர்கள் என்று வெளிவட்டார பழக்கவழக்கமும் அதிகரித்தது. தந்தை செய்து வந்த பொறுப்புகளை ஏற்றதால் அறங்காவலர் பொறுப்பை ஏற்று பெரியார் சில கோவில்களை பழுது பார்த்து புதுப்பித்தார்.
நம்பிக்கையற்ற காரியமாகினும் ஒப்படைக்கப்பட்ட வேலைகளை திறம்பட முடிக்கும் ஆற்றல் பெரியாரிடம் இருந்தது. ஈரோடு நகர்மன்ற தலைவராக குடிநீர் வசதி, சாலை வசதி, மின்விளக்கு வசதி போன்ற நற்பணிகளை செய்து மக்களின் நல்லாதரவை பெற்றார். தொடர்ந்து நற்பணிகளை ஆற்றிட அறக்கட்டளைகளை தொடங்கினார்.
1911 இல் காலமான தந்தை வெங்கட்ட நாயக்கரின் வழக்கப்படி உடலை எரியூட்டாமல் எதிர்ப்புகளுக்கு இடையே வள்ளலார் கூற்றுப்படி புதைத்தார்.

2. காங்கிரஸ் காலகட்டம்

இந்தியாவின் விடுதலைக்காக போராடி வந்த காங்கிரஸ் மீது ஈர்க்கப்பட்டு 1914 முதல் உள்ளூரிலும் வெளியூரிலும் நடைபெற்ற காங்கிரஸ்
கூட்டங்களில் கலந்து கொள்ள தொடங்கினார். 1917 இல் ஈ.வே.ராமசாமி நாயக்கர் பெயரில் ஒட்டிக்கொண்டிருந்த நாயக்கர் என்ற சாதிப் பெயரை நீக்கி ஈ.வே.ரா என்றானார். காங்கிரஸ் ஆதரவாளராக விளங்கிய ஈ.வே.ரா 1919 இல் தனது தொழிலை விட்டுவிட்டு நகர்மன்ற தலைவர் பதவி உட்பட 29 பொதுப் பதவிகளை ராஜினாமா
செய்துவிட்டு காங்கிரஸில் அதிகாரப்பூர்வ உறுப்பினராக இணைந்தார். 1921 இல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1924 இல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காங்கிரஸில் பயணித்த காலத்தில் சேலம் ராசிபுரம் பகுதியை சேர்ந்த
டாக்டர் வரதராஜலு நாயுடு, சேலம் தொரப்பள்ளி பகுதியை சேர்ந்த சி.இராஜகோபாலாச்சாரி (ராஜாஜி), காஞ்சிபுரம் தண்டலம் பகுதியை சேர்ந்த திரு.வி.கலியாணசுந்தரனார் (திரு.வி.க) உட்பட பலர் ஈ.வே.ராவுக்கு நெருங்கிய நண்பர்களாக விளங்கினர்.
காந்தியின் மீது ஈடுபாடு கொண்ட ஈ.வே.ரா. குடும்பத்தினருடனும் மக்களுடனும் இணைந்து கதராடை விற்றார், கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார். பனை மரங்களில் இருந்து கள் இறக்கப்படுவதால் அம்மரங்களை வெட்டுவது மதுவிலக்கு பிரச்சாரத்திற்கு துணை நிற்கும் என்று காந்தி வேண்டுகோள் வைத்தார்.
தமிழ்நாட்டில் பனை மரத்தில் மட்டுமல்ல தென்னை மரத்தில் இருந்தும் கள் இறக்கப்படுவதுண்டு. அதையொட்டி சேலம் தாதம்பட்டி பகுதியில் குத்தகைக்கு கொடுத்திருந்த தனது தென்னை மரத்தோப்பில் இருந்து கள் இறக்க வேண்டாமென கோரிக்கை வைத்தார். அதற்கு குத்தகைக்காரர் மறுக்கவே இரவோடு இரவாக சுமார் 500
தென்னை மரங்களையும் வெட்டி சாய்த்தார். 1921 இல் ஈரோட்டில் கள்ளுக்கடை மறியலில் செய்ததற்காக பெரியார் சிறையில் அடைக்கப்பட்டார். 28 டிசம்பர் 1921 அன்று காந்தி தனது “Young India” பத்திரிகையில் ஈ.வே.ராவின் கள்ளுக்கடை மறியல் குறித்து பாராட்டி எழுதினார்.
3.தென்னிந்திய நல உரிமைச் சங்கம்

காந்தி கொள்கைகளை பின்பற்றி ஈ.வே.ரா காங்கிரஸில் தீவிரமாக கட்சி பணிகளை ஆற்றி வந்த நேரத்தில் காங்கிரஸுக்கு மாற்றாக 20 நவம்பர் 1916 அன்று சி.நடேசன், டி.எம்.நாயர், பிட்டி தியாகராயர் ஆகிய மூவரும் பல்வேறு தோழர்களுடன் இணைந்து பார்ப்பனர் அல்லாதவர்களின்
உரிமைகளை உயர்த்தும் நோக்கில் “தென்னிந்திய நல உரிமைச் சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கி சமூக நீதி கொள்கைகளை மக்களிடம் பிரச்சாரம் செய்து வந்தனர். நாளடைவில் இவ்வமைப்பு “ஜஸ்டிஸ்” (Justice) பத்திரிகையை நடத்திவர அப்பெயராலே “நீதிக்கட்சி” (Justice Party) என்று அழைக்கப்பட்டது.
இதற்கிடையே 20 செப்டம்பர் 1917 அன்று காங்கிரஸில் இருந்து பார்ப்பனர் அல்லாதவர்கள் விலகாமல் இருக்க காங்கிரஸ் சார்பில் சென்னை மாகாண சங்கம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.

1920 சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற நீதிக்கட்சியானது 16 செப்டம்பர் 1921 அன்று பார்ப்பனர்
அல்லாதவர்கள் (அனைத்து மதத்தினரும்) வகிக்கும் பதவிகளின் விகிதத்தை அதிகரிக்க முதல் வகுப்புவாரி அரசாங்க ஆணை பிறப்பித்தது. இதுவே இந்தியாவில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு கொள்கைகளுக்கு முன்னோடியானது. மேலும் 1921 இல் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.
4.வைக்கம் போராட்டம்

கேரளாவில் திருவாங்கூர் அரசின் கீழ் வைக்கம் சோமநாதர் கோவிலின் வழிபாட்டு உரிமை நம்பூதிரிகளின் வசம் இருந்தது. ஈழவர்களும் மற்றும் பிற கீழ் சாதிகளும் கோவிலுக்குள் செல்லவும் கோவிலை சுற்றியிருக்கும் தெருக்களில் நடக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. 1905 இல்
திருவாங்கூர் நம்பூதிரிகளின் அநீதிக்கு எதிராக ஈழவர்கள் நடத்திய போராட்டத்தை திவான் வேலுப்பிள்ளை முறியடித்தார். பின்னர் திருவாங்கூர் ராஜ்யத்தின் சட்டசபையில் (Sree Moolam Popular Assembly) ஸ்ரீ நாராயண குருவின் பரிபாலன சபை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களான போது இக்கோரிக்கை
மீண்டும் எழுந்தது ஆனால் உடனடியாக நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து 30 மார்ச் 1924 அன்று ஸ்ரீ நாராயண குருவின் சீடரான டி.கே.மாதவன் முயற்சியில் கோவிலுக்குள் செல்லவும் கோவிலை சுற்றியிருக்கும் தெருக்களில் நடக்கவும் அனுமதி அளிக்கக் கோரி வைக்கம் போராட்டம் ஆரம்பமானது. வைக்கம் போராட்டம்
துவங்கிய போது தினமும் ஒற்றை எண்ணிக்கையில் சிலர் கோவிலுக்கு அருகில் தடுக்கப்பட்ட பகுதியில் நின்று போராட அவர்களை திருவாங்கூர் அரசு கைது செய்திட என்று இப்படி சுமார் ஒரு வாரம் தொடர்ந்து நடைபெற்றது. இறுதியில் போராட்ட தலைவர்களான டி.கே.மாதவன், கே.பி.கேசவமேனன், ஜார்ஜ் ஜோசப் போன்றவர்களை
திருவாங்கூர் அரசு கைது செய்தது.

போராட்டத்தில் தொய்வு ஏற்பட அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் இருந்து ஆதரவு திரட்ட போராட்ட குழுவினர் முடிவு செய்தனர். அதை தொடர்ந்து மே மாதம் 1924 இல் வைக்கம் போராட்ட குழுவினரிடம் இருந்து போராட்டத்தில் கலந்துகொள்ள ஈ.வே.ராவுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.
அந்நேரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஈ.வே.ராவுக்கு மக்களைத் திரட்டி உறுதியாக போராட்டம் நடத்தவது கைவந்த கலையாக இருந்தது. அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்டத்தில் தீவிரமாக செயல்படுவார் என்பதால் ஈ.வே.ரா அழைக்கப்பட்டார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்புகளை சி.இராஜகோபாலாச்சாரியிடம் கொடுத்துவிட்டு இப்போராட்டத்தில் ஈ.வே.ரா களப்பணி ஆற்றினார்.

தொடர்ந்து வைக்கம் போராட்டத்தில் ஈ.வே.ரா, ஸ்ரீ நாராயண குரு, டி.கே.மாதவன், கே.பி.கேசவமேனன், ஜார்ஜ் ஜோசப், சகோதரன் ஐயப்பன், அய்யாமுத்துக் கவுண்டர் மற்றும் பல்வேறு
சமூக நீதி ஆர்வலர்கள் கலந்துக் கொண்டு களப்பணி ஆற்றினர். திருவாங்கூர் அரசுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் ஈடுபட்ட ஈ.வே.ரா கைது செய்யப்பட்டு சுமார் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பசுப்புரா சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் சமத்துவம் போதிக்கும் ஈ.வே.ரா மரணமடைய வேண்டுமென
வைதீகர்கள் “சத்ரு சம்ஹார யாகம்” நடத்தினர் ஆனால் யாகம் நடந்து கொண்டிருந்த போதே திருவாங்கூர் அரசு மன்னர் மரணமடைந்தார் என்பது வரலாறு.

மன்னர் மறைவுக்கு பிறகு கைது செய்யப்பட்ட போராட்ட வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். பின்னர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்துடன்
வைக்கத்திற்கு வருகை தந்த காந்தி ராணி மற்றும் ஈ.வே.ராவிடம் சமரசம் பேசியதன் விளைவாக போராட்ட குழுவினரின் பெரும்பாலான கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து திருவாங்கூர் அரசு நிறைவேற்றியது. அதை தொடர்ந்து 08 அக்டோபர் 1925 அன்று வைக்கம் போராட்டம் முடிவுக்கு வந்தது. வைக்கம் போராட்டத்தில்
தொண்டாற்றிய ஈ.வே.ராவுக்கு “வைக்கம் வீரர்” என்ற பட்டத்தை திரு.வி.க வழங்கினார்.

1924-1925 காலகட்டத்தில் மக்கள் எழுச்சியுடன் வைக்கம் போராட்ட களத்தில் முன்னணியில் நின்று ஈ.வே.ரா நடத்திய போராட்டம் ஆலய நுழைவு போராட்டத்திற்கு அச்சாரம் இட்டது. அதை தொடர்ந்து 11 ஜூலை 1939 அன்று ஆலய
பிரவேச சட்டம் நிறைவேற்றப்பட்டது. மேலும் 1927 மார்ச் 20 அன்று மகத் பகுதியில் உள்ள பொதுக் குளத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் நீர் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து அம்பேத்கர் “மகத் போராட்டம்” நடத்திட ஈ.வே.ரா தலைமையில் நடைபெற்ற “வைக்கம் போராட்டம்” ஏற்படுத்திய தாக்கம் அம்பேத்கருக்கு
உத்வேகம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

5.காங்கிரஸ் கட்சியுடன் விரிசல்

நெல்லை சேரன்மாதேவியில் காந்தி ஆதரவுடன் குருகுலம் ஒன்றை நடத்தி வந்தார் வ.வே.சு.அய்யர். இக்குருகுலத்தில் பல காங்கிரஸ் தலைவர்களின் குழந்தைகள் படித்து வந்தனர். பலருடைய நன்கொடை ஆதரவில் நடத்தப்பட்ட குருகுலத்திற்கு
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ரூபாய் பத்தாயிரம் நன்கொடை வழங்கியது. அந்நேரத்தில் ஓமந்தூர் ராமசாமியின் மகன் விடுமுறைக்கு வந்திருந்த போது தந்தையிடம் குருகுலத்தில் பார்ப்பனர்கள் உயர்வாக மற்றவர்கள் தாழ்வாக நடத்தப்படுவதாகவும் பார்ப்பனர்களுக்கு அறுசுவை உணவும் மற்றவர்களுக்கு ருசியற்ற உணவு
கொடுக்கப்படுவதாகவும் தனிப்பானை, தனிப்பந்தி போன்ற விபரங்களையும் கவலையுடன் பகிர்ந்து கொண்டான். இந்த கொடுமையான செய்தி ஈ.வே.ராவின் காதுகளுக்கு எட்டியதை தொடர்ந்து 17 ஜனவரி 1925 அன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டப்பட்டது.

குருகுலத்தில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும், சமபந்தியில் ஒரே
உணவு வழங்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழு கேட்டுக்கொண்டது. ஆனால் செயற்குழுவின் தீர்மானத்தை வ.வே.சு அய்யர் ஏற்காததால் இப்பிரச்சனை வெடித்து காந்தியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சாதி ஒழிப்பு பிரச்சனையில் நீக்கு போக்காக நடந்து கொள்ளும் காந்தி “சம்பந்தி செய்வதும் பாவம்
அல்ல அதே போல ஒருவர் இன்னொருவருடன் சேர்ந்து உண்ண மறுப்பதும் பாவம் அல்ல” என்றார். வ.வே.சு.அய்யர், சி.ராஜகோபாலாச்சாரி, காந்தி உட்பட பலரும் ஈ.வே.ராவின் சமத்துவ கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. சமூகத் தீர்வை எட்ட சோமயாஜுலு கணபதி சாஸ்திரி இருதரப்புக்கும் பஞ்சாயத்து வந்த செய்து வந்த
நிலையில் பாபநாசம் அருவியில் மகளை காப்பாற்ற முயன்ற போது வ.வே.சு.அய்யர் மரணமடைய நாளடைவில் குருகுலம் மூடப்பட்டுவிட்டது. குருகுலம் பிரச்சனை நடந்த நேரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்த ஈ.வே.ரா பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.
இதற்கிடையே அனைவருக்கும் சுயமரியாதை, எவ்விடத்திலும் சமத்துவம், ஒவ்வொரு வகுப்பாரும் முன்னேற்றம் பெறுதல் போன்ற சமூகக் கருத்துக்களை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்க பத்திரிகை சிறந்த வழி என்பதை அறிந்த ஈ.வே.ரா 2 மே 1925 அன்று "குடியரசு" இதழை தொடங்கி தனது கருத்துக்களை பரப்புரை செய்தார்.
பார்ப்பனர்களிடம் குரோதம் இல்லை என்றும் ஒரு கூட்டத்தார் எப்போதும் அடிமையாக இருக்க வேண்டுமென என்னும் சிலரின் செயல்பாடுகளை தட்டி கேட்கவே குடியரசு இதழின் நோக்கம் என்பதை ஈ.வே.ரா தெளிவுபடுத்தினார்.

தாழ்த்தப்பட்டவர்கள் சமநிலைக்கு வர வேண்டுமென்றால் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் (இட
ஒதுக்கீடு) இன்றியமையாதது என்பதை அறிந்த ஈ.வே.ரா தேர்தல்களில், அரசு அமைப்புகளில், அரசு பணிகளில் ஒவ்வொரு வகுப்பினருக்கும் விகிதாசார பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டுமென்று கூட்டங்களில் கோரிக்கை வைத்தார். அதை தொடர்ந்து 1920 இல் நெல்லையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ஈ.வே.ரா
முன்மொழிந்த இட ஒதுக்கீடு தீர்மானத்தை சீனிவாச அய்யங்கார் நிராகரித்தார். 1921 இல் தஞ்சையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மாநாட்டில் ஈ.வே.ரா முன்மொழிந்த இட ஒதுக்கீடு தீர்மானத்தை எதிர்த்து இட ஒதுக்கீடு கொள்கையாக இருக்கலாம் ஆனால் தீர்மானமாக கொண்டு வர தேவையில்லை என்றார் சி.ராஜகோபாலாச்சாரி.
1922 இல் திருப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மாநாட்டில் ஈ.வே.ரா முன்மொழிந்த இட ஒதுக்கீடு தீர்மானத்தை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டனர். 1923 இல் சேலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மாநாட்டில் ஈ.வே.ரா முன்மொழிந்த இட ஒதுக்கீடு தீர்மானத்தை எதிர்த்து டெல்லி காங்கிரஸ் மாநாடு முடிந்த
பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார் சி.ராஜகோபாலாச்சாரி.

1924 இல் திருவண்ணாமலையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மாநாட்டிற்கு தலைமை தாங்கிய ஈ.வே.ரா “பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதோர் நிலை சரிசமமாக மாற வேண்டுமென்றால் இட ஒதுக்கீடு அவசியம்" என்பதை எடுத்துரைத்தார்.
ஈ.வே.ராவின் கருத்துக்களுக்கு எதிராக பார்ப்பன ஆதரவாளர்களுக்கும் ஈ.வே.ரா ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டு மாநாடு கூச்சல் குழப்பத்தில் முடிந்தது. இப்படி தொடர்ந்து காங்கிரஸ் கட்சியுடன் ஈ.வே.ராவுக்கு மனக்கசப்பு ஏற்பட்டது.

1925 இல் டி.ஏ.ராமலிங்கம் தலைமையில் ஈ.வே.ரா முன்னிலையில்
பார்ப்பனர் அல்லாதோர் நலன்கள் பாதுகாக்கப்பட இட ஒதுக்கீடு அவசியம் என்ற தீர்மானத்தை காஞ்சிபுரத்தில் கூட்டப்பட்ட காங்கிரஸ் கட்சி மாநாட்டில் சமர்ப்பித்தார். இத்தீர்மானத்தை நிறைவேற்ற 30 பேரிடமாவது கையொப்பம் பெற்றிட மாநாட்டு குழு கூறியதால் ஈ.வே.ரா 50 பேரிடம் கையொப்பம் பெற்று வந்து
சமர்ப்பித்தார். மாநாட்டில் தீர்மானம் நிறைவேறிட கூடாது என்று திட்டமிட்டு திரு.வி.க, வரதராஜலு நாயுடு உட்பட பலர் பார்ப்பனர்களுக்கு ஆதரவாக இத்தீர்மானம் பொது நன்மைக்கு எதிரானது என்று கூறி ஏற்க மறுத்தனர். மேலும் தீர்மானத்தை எடுத்துக்கொள்ளாமல் தலைவர் பேசியதை கண்டித்து இம்மாநாட்டில்
இருந்து ஈ.வே.ரா வெளியேறினார்.

6.சுயமரியாதை இயக்கம் காலகட்டம்

குருகுலம் அணுகுமுறையாலும் இட ஒதுக்கீடு தீர்மானம் ஏற்கப்படாததாலும் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் பார்ப்பனிய மயத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி 1925 இல் சுயமரியாதை இயக்கம் கண்டார்
பெரியார். பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று மனிதர்களை வேறுபடுத்துவது கொடுமை. ஒவ்வொரு மனிதனுக்கும் மான உணர்வு உண்டு அதை மதித்து ஒருவருக்கு ஒருவர் நடந்து கொள்ள வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார் ஈ.வே.ரா. 24 ஜனவரி 1926 அன்று குடியரசு இதழில் “சுயராஜ்யமா? சுயமரியாதையா?” என்ற
தலைப்பில் “தீண்டாமை ஒழிவதன் மூலமே நாடு முழுமையான சுயராஜ்யம் அடைந்திடும்” என்று ஈ.வே.ரா எழுதிய தலையங்கம் சுயமரியாதை கொள்கைகளின் பிரகடனமாக விளங்கியது.

தெருவில் நடக்கக்கூடாது, கோவிலுக்குள் நுழையக்கூடாது, பொதுக்குளத்தை பயன்படுத்தக்கூடாது, ஒரே உணவு கூடாது, ஒரே பந்தி கூடாது, ஒரே
பானையில் நீர் அருந்தக்கூடாது, பார்ப்பனர்கள் குடியிருக்கும் பக்கம் செல்லக்கூடாது, தாழ்த்தப்பட்டவர்கள் உயரக்கூடாது போன்ற பல்வேறு சமூக கொடுமைகளை கண்டு கொதித்தெழுந்த ஈ.வே.ரா வீதி வீதியாக சுயமரியாதை பிரச்சாரங்களை மேற்கொள்ள தொடங்கினார். ஈ.வே.ரா மேற்கொண்ட சுயமரியாதை பிரச்சாரங்களை
அறிந்தபின் ஈ.வே.ராவின் காங்கிரஸ் கட்சி பதவியை அதிகாரபூர்வமாக ரத்து செய்து காங்கிரஸ் கட்சிக்கும் அவருக்கும் தொடர்பில்லை என்றது காங்கிரஸ் கட்சி. களம் மாறி உழைத்து வந்த ஈ.வே.ராவை காலம் நீதிக்கட்சி பக்கம் திருப்பியது. சமூக நீதி கொள்கைகளுக்கு ஏற்ப செயல்பட்டு வந்த நீதிக்கட்சி
மாநாடுகளை பயன்படுத்திக் கொண்டு சுயமரியாதை பிரச்சாரங்களை செய்தார் ஈ.வே.ரா.

“ஒவ்வொரு வருணத்தாரும் அவரவருக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை அடிப்படையாக கொண்டு பணிகளை செய்தால் அவர்கள் உயர்ந்தவர்கள் ஆகிறார்கள்” என்று "சுதேசமித்திரன்" இதழில் காந்தி எழுதிய கட்டுரையை கண்டு வெகுண்டெழுந்த
ஈ.வே.ரா காந்தியிடம் விவாதிக்க பெங்களூரு சென்றார். அங்கே காந்தியிடம் காங்கிரஸ் கட்சியை ஒழிக்கவும், சாதியை ஒழிக்கவும், இந்து மதத்தை ஒழிக்கவும் கோரிக்கை வைத்து விவாதம் செய்தார் ஈ.வே.ரா. காந்தியுடன் கருத்து வேறுபாடுகள் முற்றிடவே ஈ.வே.ரா கடுங்கோபத்துடன் வந்துவிட்டார். வர்ணத்தை
ஆதரித்து காந்தி பேசியதை கண்ட ஈ.வே.ரா அதன் பிறகு சுயமரியாதை பிரச்சாரத்தை அதி தீவிரமாக மேற்கொண்டார்.

1928 காலகட்டத்தில் ரயில்வே தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்திற்கு தடையை மீறி போராட்டத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்ததற்காக சிறைத் தண்டனை பெற்றார் ஈ.வே.ரா. தமிழ்நாடெங்கும் சுயமரியாதை
இயக்கத்தின் அமைப்புகள் தொடங்கப்பட்டன. பார்ப்பனர் ஆதிக்கத்தை எதிர்க்கும் வகையில் பார்ப்பனர் சடங்கு இல்லாமல் திருமணம், நினைவு நாள், புதுமனை புகுவிழா போன்ற பல்வேறு புரட்சி காரியங்களை ஈ.வே.ரா அரங்கேற்றினார். அவரது வழியில் நாடெங்கும் உள்ள தொண்டர்கள் அப்புரட்சியை செய்ய தொடங்கினர்.
7 நவம்பர் 1928 அன்று "Revolt" என்ற ஆங்கில இதழை ஈ.வே.ரா தொடங்கினார்.

சுயமரியாதை இயக்க மாநாடு, சுயமரியாதை பெண்கள் மாநாடு, சுயமரியாதை இளைஞர்கள் மாநாடு போன்ற பல மாநாடுகள் கூட்டப்பட்டு சுயமரியாதை கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்றார் ஈ.வே.ரா. 1929 இல் செங்கல்பட்டில் முதல்
சுயமரியாதை இயக்க மாநாடு, 1930 இல் ஈரோட்டில் இரண்டாம் சுயமரியாதை இயக்க மாநாடு, 1931 இல் விருதுநகரில் மூன்றாவது சுயமரியாதை இயக்க மாநாடு நடத்தப்பட்டன.

சுயமரியாதை கருத்துக்களுடன் கம்யூனிசம் கருத்துக்களையும் ஈ.வே.ரா பேசி வந்த ஈ.வே.ரா 13 டிசம்பர் 1931 முதல் 08 நவம்பர் 1931 வரை கிரீஸ்,
துருக்கி, ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற ஐரோப்பா நாடுகளுக்கும் ஆப்பிரிக்கா, எகிப்து, இலங்கை போன்ற இதர நாடுகளுக்கும் ஈ.வே.ரா பயணம் மேற்கொண்டார். குறிப்பாக ரஷ்யா பயணத்தின் போது சாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமலும் கடவுள் நம்பிக்கை, மூட நம்பிக்க
இல்லாமலும் கம்யூனிசம் கொள்கையால் மக்கள் மகிழ்வுடன் சமமாக வாழ்வதை கண்டு ஈ.வே.ரா மகிழ்ந்தார். இந்தியா திரும்பியபின் குடியரசு இதழில் இயக்கத்தினர் ஒருவருக்கு ஒருவர் அழைத்து கொள்ளும் போது தோழர் என்ற சொல்லை பயன்படுத்திட வேண்டும் திருவாளர், திருமதி போன்ற சொற்களை தவிர்க்க வேண்டும்
என்றும் இந்தியாவில் காந்திய கொள்கை ஒழிந்தவுடன் சுயமரியாதை கொள்கையும் கம்யூனிசம் கொள்கையும் தானாக வந்துவிடும் என்றும் கூறினார் பெரியார். அதே நேரத்தில் தற்போதுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளில் நிலவி வரும் பார்ப்பனிய மயம் களையப்பட்டால் மாத்திரமே நாம் அவர்களுடன் இணைந்து பயணிக்க
முடியும் என்றார்.

இதற்கிடையே, தமிழ்நாட்டில் ஈ.வே.ரா எண்ணிய உண்மையான கம்யூனிசம் கொள்கைகளை பிரச்சாரம் செய்ய அவருக்கு மா.சிங்காரவேலர் பக்கபலமாக இருந்தார். மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் எழுதிய கம்யூனிசம் கட்டுரைகள் தமிழாக்கம் செய்து ஈ.வே.ரா வெளியிட்டார். 28 டிசம்பர் 1932 அன்று
ஈரோட்டில் மா.சிங்காரவேலர் முன்னிலையில் சுயமரியாதை சமூக இயக்கத்தின் அரசியல் பிரிவாக சுயமரியாதை கொள்கையும் பொதுவுடைமை கொள்கையும் உள்ளடக்கி சுயமரியாதை சமதர்ம திட்டத்தை ஈ.வே.ரா அறிவித்தார். அதன்படி உருவான சுயமரியாதை சமதர்ம கட்சியின் பொது செயலாளரானார் ஜீவானந்தம்.
1934 இல் பிரிட்டிஷ் அரசு இந்திய பொதுவுடைமை கட்சிகளுக்கு தடை விதித்ததால் பல பொதுவுடைமை கட்சிகள் இணைந்து காங்கிரஸ் கட்சியின் ஒரு பகுதியாக காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி என்றானது. கட்சியை காங்கிரஸுடன் இணைக்க விரும்பவில்லை ஆனால் வெளியேற விரும்புபவர்கள் தாராளமாக வெளியேறலாம் என்று
வழியனுப்பினார் ஈ.வே.ரா. அதை தொடர்ந்து வெளியேறிய ஜீவானந்தம் சுயமரியாதை சோசலிஸ்ட் கட்சியை தொடங்கினார். இறுதியில் அதனை காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியாக மாற்றி காங்கிரஸ் கட்சிக்குள் கரைந்தார். சுதந்திரத்திற்கு பிறகு இந்திய பொதுவுடைமை கட்சிகள் மீதான தடை நீக்கப்பட்டது. அதன் பின்னர்
தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் முகமாக ஜீவானந்தம் செயல்படத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

29 அக்டோபர் 1933 அன்று குடியரசு இதழில் பணக்காரர்கள் செழிக்க உதவும் முதலாளித்துவ அரசு என்று பொருள்பட “இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்” என்ற தலைப்பில் தலையங்கம் எழுதினார் ஈ.வே.ரா.
இதை எழுதிய ஈ.வே.ராவையும் குடியரசு வெளியீட்டாளர் கண்ணம்மாவையும் 20 டிசம்பர் 1933 அன்று அரசால் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். அந்நேரத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சி.ராஜகோபாலாச்சாரி ஈ.வே.ராவை சந்தித்து பேசி அவரை மீண்டும் காங்கிரஸ் கட்சி பக்கம் இழுக்கப்
பார்த்தார். தமது சுயமரியாதை கொள்கை திட்டத்தை ஏற்பவர்களுடன் இணைந்து பணியாற்ற தயார் என்றார் ஈ.வே.ரா. அவர் வகுத்த சுயமரியாதை கொள்கையை காங்கிரஸ் கட்சி நிராகரித்தது ஆனால் நீதிக்கட்சி முழுமையாக ஏற்றது. இதையொட்டி, சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியும் இணைந்த பிறகு நீதிக்கட்சியை
அதிகாரபூர்வமாக ஆதரிக்க தொடங்கினார் ஈ.வே.ரா.

13 நவம்பர் 1938 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு பெண்கள் மாநாட்டில் “இங்கு இதுவரை பேசப்படாத சமூக சீர்திருத்த கருத்துக்களை பேசியும் நற்காரியங்களை ஆற்றியும் வரும் ஈ.வே.ராவை இனிமேல் சொல்லிலும் எழுத்திலும் பேச்சிலும் பெரியார் என்ற
சிறப்பு பெயரை கொண்டே அழைக்க வேண்டும்” என்ற தீர்மானத்தை ஒருமனதாக பெண்கள் நிறைவேற்றினர். பெரியார் பட்டத்தை ஈ.வே.ரா பயன்படுத்தவில்லை என்றாலும் அறிவுசார் உலகம் அவரை பெரியார் என்றே அழைக்கவும் எழுதவும் பேசவும் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

1937 இல் மெட்ராஸ் மாகாண முதலமைச்சரான
சி.ராஜகோபாலாச்சாரி பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாய பாடமாக அறிமுகம் செய்தார். இதை நீதிக்கட்சி சார்பில் பெரியார் மற்றும் தோழர்கள் கடுமையாக எதிர்க்க இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டமாக வெடித்தது. இந்தியை கட்டாயமாக்கி இந்தி பேசும் வட இந்தியர்களை முதல் தர குடிமக்களாகவும் தமிழ்
பேசும் தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாகவும் மாற்றி இந்தி திணிப்பு மூலம் திராவிடர்களின் பண்பாட்டை சிதைக்கத் ஆரியர்கள் திட்டமிடுவதாக பெரியார் குற்றம் சாட்டினார். மேலும் 1938 இல் மெட்ராஸ் கடற்கரையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் பொதுக் கூட்டத்தில் “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற
தீர்மானத்தை பேராசிரியர் மறைமலையடிகள் முன்மொழிய அதனை வழி மொழிந்து பெரியார், சோமசுந்தர பாரதியார் ஆகியோர் பேசினார்கள். 29 அக்டோபர் 1939 அன்று இரண்டாம் உலகப்போரில் இந்தியாவை ஈடுபடுத்திய பிரிட்டிஷ் அரசை எதிர்த்து காங்கிரஸ் கட்சி பதவி பதவி விலகியது. பின்னர் மாநில ஆளுனர் எர்ஸ்கின்
21 பிப்ரவரி 1940 அன்று இந்தி கட்டாய பாடமல்ல விருப்பப் பாடமாக இருக்கும் என்ற ஆணையை வெளியிட்டார். பெரியார் முன்னிலையில் 1937 இல் நடைபெற்ற முதல் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் களத்தை முன்மாதிரியாக கொண்டு 1948, 1952, 1965, 1986, 2014 நடைபெற்றன.
முகமது அலி ஜின்னாவின் முஸ்லீம் லீக் எழுப்பிய பாகிஸ்தான் என்ற தனிநாடு கோரிக்கை பெரியாரின் சிந்தனையிலும் திராவிட நாடு என்ற தனிநாடு கோரிக்கையை உண்டாக்கியது. அதை தொடர்ந்து தமிழ்நாடு தமிழருக்கே என்ற ஆரம்ப கால கோரிக்கை பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி பேசும் பகுதிகளை
ஒருங்கிணைத்து திராவிட நாடு திராவிடருக்கே என்று மாற்றம் செய்யப்பட்டது. 03 டிசம்பர் 1939 அன்று குடியரசு இதழில் திராவிட நாடு வரைபடம் வெளியிடப்பட்டது. மேலும் 04 ஆகஸ்ட் 1940 அன்று திருவாரூரில் பெரியார் தலைமையில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் “திராவிடர்களை உள்ளடக்கி தனி நாடு
பிரிக்கப்பட வேண்டும்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மும்பையில் ஜின்னாவை சந்தித்து பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கையுடன் திராவிடஸ்தான் தனிநாடு கோரிக்கை குறித்து விவாதித்தார். பேச்சுவார்த்தை நடந்தாலும் இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் அரசின் நிலைப்பாட்டை ஜின்னா எதிர்க்க பெரியார்
ஆதரிக்க பின்னர் தனிநாடு கோரிக்கை குறித்த இருவரது சந்திப்பும் முடிவுகளை எட்டவில்லை. ஏனெனில் அந்நிய ஆட்சியான பிரிட்டிஷ் அரசின் ஏகாதிபத்தியத்தை விட பார்ப்பனர் ஆதிக்கம் சளைத்தது இல்லை என்றும் பிரிட்டிஷ் ஆட்சியை விட பார்பனியத்தில் இருந்து விடுபடுவதில் தான் உண்மையான விடுதலை உள்ளது
என்று பெரியார் தீர்க்கமாக நம்பினார். அதே நேரத்தில் இங்கிலாந்து நாட்டில் அறிவாளிகளை கொண்டு நிர்வாகத்தை திறம்பட கட்டிக்காக்கும் பிரிட்டிஷார் இந்தியாவில் மட்டும் பார்ப்பனர்களுடன் சேர்ந்து சுரண்டலில் ஈடுபடுவதை சுட்டிக்காட்டவும் பெரியார் தவறவில்லை.
7.திராவிடர் கழகம் காலகட்டம்

நீதிக்கட்சியானது பெரியாரின் சமூக நீதி திட்டங்களை ஏற்று அரசியல் செய்து வந்த போதிலும் அக்கட்சி பணக்காரர்கள் கூட்டமைப்பு என்ற பாதகமான விமர்சனம் நிலவியது அதனால் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டிய சூழல் இருந்து வந்தது. அச்சூழலில் ஆசிரியர் பணி, மொழி
பெயர்ப்பாளர் பணி, உதவியாளர் பணி போன்ற பணிகளில் அனுபவம் பெற்றவரும் சமூக நீதி எழுத்தும் பேச்சும் மூச்சென கொண்டவருமான ஒரு எம்.எ பட்டதாரி இளைஞர் பெரியாருக்கு பக்கபலமாக வந்து சேர்ந்தார். அந்த இளைஞர் 1934 இல் திருப்பூரில் நடைபெற்ற செங்குந்தர் மாநாட்டில் பெரியாரை முதன்முறையாக பெரியாரை
சந்தித்தார். பெரியாரின் சமூக நீதி திட்டங்களால் ஈர்க்கப்பட்ட அந்த இளைஞர் வேறு யாருமல்ல இந்நாடு போற்றும் பேரறிஞர் அண்ணா தான்.

1939 இல் பெரியார் நீதிக்கட்சியின் தலைவரானார். நீதிக் கட்சி தோற்றுவித்த "விடுதலை" இதழ் பிறகு பெரியாரால் நடத்தப்பட்டது. 1942 இல் பெரியாரின் வழிகாட்டுதலின்படி
“திராவிட நாடு” என்ற பத்திரிகையை அண்ணா தொடங்கினார். 27 ஆகஸ்ட் 1944 அன்று சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் நீதிக் கட்சி பெயர் மீது சுமத்தப்பட்ட விமர்சனங்களை களையெடுக்கும் விதமாக நீதிக் கட்சியானது திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் செய்யப்படும் என்ற தீர்மானத்தை நீதிக் கட்சி
செயலாளர் அண்ணா முன்மொழிந்தார். பெயர் மாற்றம் தீர்மானம் அனைவராலும் வரவேற்கப்பட்டு ஒருமனதாக ஏற்கப்பட்டது. மேலும் பிரிட்டிஷ் ஆட்சி கொடுத்த சிறப்பு பதவிகளை சிறப்பு பட்டங்களை நீதிக் கட்சி தலைவர்கள் துறக்க வேண்டும் என்ற தீர்மானமும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் திராவிட நாடு தனி நாடாக
பிரிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. 1944 முதல் திராவிடர் கழகம் சமூக அமைப்பாக மாறி தேர்தல்களில் போட்டியிடுவதை நிறுத்தி கொண்டு சமூக சீர்திருத்தங்களில் ஈடுபட தொடங்கியது. மேலும் 04 ஏப்ரல் 1946 அன்று கருப்பு செவ்வகத்தில் நடுவில் சிவப்பு வட்டத்துடன் கூடிய
திராவிடர் கழகம் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது.

14 ஆகஸ்ட் 1947 அன்று ஜின்னா கேட்ட பாகிஸ்தான் நாட்டை பிரித்துக் கொடுத்துவிட்டு 15 ஆகஸ்ட் 1947 அன்று இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கியது பிரிட்டிஷ் அரசு. திராவிட நாடு கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு வழங்கிய
சுதந்திர நாளை துக்க நாளாக அனுசரித்தார் பெரியார். அதற்கு காரணம் சமுதாய விடுதலை இல்லாமல் அரசியல் விடுதலையால் ஒரு நன்மையும் விளையப்போவதில்லை என்று பெரியார் தீர்க்கமாக நம்பினார்.

03 டிசம்பர் 1950 அன்று திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் "இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட வேண்டும்" என்று
பெரியார் முழங்கினார். பெரியார் முன்வைத்த கோரிக்கை மிகப்பெரிய அரசியல் விவாதத்தை கிளப்பிட அதை தொடர்ந்து 18 ஜூன் 1951 அன்று “நிபந்தனை (15) (4) மூலம் சமூகத்தில் மற்றும் கல்வியில் பின் தங்கிய குடிமக்கள் அல்லது பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினரின் முன்னேற்றத்திற்காக எந்தவொரு
சிறப்பு ஏற்பாடுகளையும் செய்வதிலிருந்து இந்த நிபந்தனை அல்லது பிரிவு 29 இன் நிபந்தனை (2) இல் எதுவும் மாநிலத்தை தடுக்காது” என்ற முதல் சட்ட திருத்தம் அமல்படுத்தப்பட்டது. நசுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க இட ஒதுக்கீடு குறித்து பெரியார் மேற்கொண்ட தொடர் முயற்சிகளின்
அடிப்படையில் இந்திய அரசியலமைப்பின் முதல் சட்ட திருத்தம் செய்யப்பட்டது. இந்த முதல் சட்ட திருத்தம் தான் மண்டல் ஆணைக்குழுவை நியமிக்க உதவியது. மண்டல் ஆணைக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர் கலைஞர். 07 ஆகஸ்ட் 1990 அன்று வி.பி.சிங்
தலைமையிலான தேசிய முன்னணி அரசு சமூகத்தில் மற்றும் கல்வியில் பின் தங்கிய குடிமக்களுக்கு அரசு நிறுவனங்களில் 27% இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தது.

1953 இல் பின் தங்கிய குடிமக்களை சூத்திரர்களாகவும், தாழ்ந்த பிறவிகளாகவும், பார்ப்பனர்கள் மட்டுமே உயர் பிறவியினராகவும் பல நூறாண்டுகளாக
சித்தரிக்கப்பட காரணமான கடவுள்களை ஒழிக்க வேண்டும் என்று கூறிய பெரியார் தனது சொந்த செலவில் வாங்கப்பட்ட விநாயகர் சிலைகளை உடைக்கும் போராட்டத்தை நடத்தினார்.

1957 இல் பார்ப்பன மயமான இந்திய அரசியலமைப்புச் சட்ட நகலை எரிக்கும் போராட்டத்தை பெரியார் அறிவித்தார். இதற்கு அரசியல் சாசனத்தை
விரும்பாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று நேரு எதிர்வினை ஆற்றினார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தில் இருந்து பெரியாரை தடுக்கும் நோக்கில் காமராஜர் தலைமையிலான அரசு தேசிய மரியாதையை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டம், 1957 சட்டத்தை இயற்றியது.
இச்சட்டத்தை பற்றி கவலை கொள்ளாமல் 26 நவம்பர் 1957 அன்று பெரியாரும் சுமார் 10,000 தோழர்களும் இந்திய அரசியலமைப்புச் சட்ட நகலை எரித்து சாம்பலை ஒன்றிய அமைச்சர்களுக்கும் மாநில அமைச்சர்களுக்கும் அனுப்பிட அதை தொடர்ந்து ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை
வெவ்வேறு கால அளவில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

1971 இல் கலைஞர் தலைமையிலான தி.மு.க ஆட்சியில் இருந்த காலத்தில் சேலத்தில் பெரியார் மூட நம்பிக்கை ஒழிப்பு பேரணியை நடத்த திட்டமிட்டார். பெரியாரின் பேரணிக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட ஜனசங்கம் அனுமதி கேட்டது. ஜனநாயகம் அடிப்படையில்
தி.மு.க அரசு ஜனசங்கத்திற்கு அனுமதி வழங்கியது. பெரியார் தலைமையில் மூட நம்பிக்கை ஒழிப்பு பேரணி தொடங்கிய நேரத்தில் சேலம் தீயணைப்பு நிலையத்திற்கு அருகில் ஜனசங்கம் உறுப்பினர்கள் சுமார் 50 பேர் கருப்புக்கொடி காட்டினார்கள். அப்போது பேரணி கூட்டத்திற்குள் ராமர் படம் எடுத்துச் சென்ற
வண்டியின் அருகில் ஒரு செருப்பு வீசப்பட்டது. கீழே விழுந்த அதே செருப்பை எடுத்து கொதிப்படைந்த தோழர்கள் ராமர் படத்தை செருப்பால் அடித்தார்கள். செருப்பை எடுத்து வீசியது முதல்வினை என்றால் செருப்பை எடுத்து அடித்தது எதிர்வினை. இது திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி அல்ல. ஆனால் இச்சம்பவத்தை
திரித்து ஒரு சில ஊடங்கங்கள் செய்தி பரப்பியதும் அதனால் சர்ச்சை வெடித்ததும் காலக்கொடுமை.

8.பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம்

மனிதன் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில் ஏற்பட்ட தமிழ் மொழியானது காலத்திற்கு ஏற்ப மாற்றப் பெறாத மொழியாக விளங்கினால் வளர்ச்சிக்கும் விஞ்ஞான
முன்னேற்றத்திற்கும் பயனில்லை என்ற பொருளிலே தான் பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்றார். ஏனெனில் எந்தவொரு மொழியின் பெருமையும் எழுத்துக்களின் மேன்மையும் சுலபத்தில் தெரிந்து கொள்ளவும் கற்றுக் கொள்ளவும் கூடியதாக இருப்பதை தவிர வேறில்லை என்றார் பெரியார். மேலும் ஆங்கில மொழியில்
உள்ள 26 எழுத்துக்களை கொண்டு ஆங்கிலேயர்கள் உலகத்தை ஆள்கின்ற சூழலில் நம் தமிழ் மொழிக்கு நிறைய எழுத்துக்கள் தேவையில்லை. உயிரெழுத்து 10, உயிர் மெய்யெழுத்து 18, ஒற்றெழுத்து 19 எழுத்துக்களின் குறிப்புகள் 7, குற்றெழுத்து உள்பட ஒரு 10 எழுத்து ஆக மொத்தம் 64 எழுத்துக்கள் ஆக்கி காலத்திற்கு
ஏற்ப தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் அவசியம் என்பதை வலியுறுத்தினார் பெரியார்.

பெரியாரின் நேரடி எழுத்துச் சீர்திருத்தம் “அவ், அய், ணா, ணை, ணொ, ணோ, லை, ளை, றா, றொ, றோ, னா, னை, னொ, னோ” ஆகிய 15 எழுத்துகளை உள்ளடக்கி இருந்தது. பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தங்களை திராவிட இயக்க
பத்திரிகைகள் 1930 களில் இருந்தே நடைமுறைப்பபடுத்த தொடங்கினர். 1977 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் தி.மு.க “எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவோம்” என்று அறிவித்தது. ஆனால் 1977 அத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்று எம்.ஜி.ஆர் முதல்வரான பின் “அய், அவ்”
ஆகிய இரு எழுத்துகளைத் தவிர்த்து பிற 13 எழுத்துகளின் சீர்திருத்தங்களை அங்கீகரித்து அரசாணையை எம்.ஜி.ஆர் வெளியிட்டார்.

9.பெரியாரின் சமூக நீதி

சமூக நீதி மூலம் சமத்துவம் மலர பெரியார் எடுத்துரைத்த சுயமரியாதையும் பகுத்தறிவும் அவசியமானது. மேலும் பகுத்தறிவு கொண்டு பகுத்து (Analyze)
அறிந்தால் மூட நம்பிக்கை, தீண்டாமை, பார்ப்பனியம் உள்ளிட்ட பலவும் தனியொரு மனிதனின் சுயமரியாதைக்கு இழுக்கு என்கிற பொறி தட்டும். ஏன்? எப்படி? எதற்கு? என்ற கேள்வி எழுந்தால் பெறக்கூடிய சுயமரியாதைக்கு அடிப்படை பகுத்தறிவு, பகுத்தறிவுக்கு அடிப்படை சுயமரியாதை. தொடக்க காலத்தில் இயல், இசை,
நாடகம், சினிமா என்று செய்தி பரப்பும் ஊடகங்களை பயன்படுத்தி சுதந்திரம், பார்ப்பனியம், முதலாளித்துவம் போன்ற கருத்துக்களை காங்கிரஸ் அதிகளவில் பரப்பி வந்த வேலையில் என்.எஸ்.கிருஷ்ணன், அண்ணா, கலைஞர், எம்.ஆர்.ராதா, புலவர் குழந்தை, எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், முரசொலி
மாறன், கே.ஆர்.ராமசாமி போன்ற கலைஞர்கள் பெரியாரின் சமூக நீதி கொள்கைகளை போற்றி கலை ஊடகங்களை பயன்படுத்தி மக்களிடம் எழுச்சிமிகு கருத்துக்களை பரப்பியது குறிப்பிடத்தக்கது. பெரியார் முழங்கிய சமூக நீதி கொள்கைகளை சில வரிகளில் எடுத்துரைப்பது இயலாத காரியம். அதனை எளிய எழுத்து நடையில்
சுருக்கமாக கூறுவதென்றால்,

*குழந்தை திருமணத்தை தடை செய்ய வேண்டும்.

*கைம்பெண் மறுமணத்தை அங்கீகரிக்க வேண்டும்.

*அலங்காரத்தில் பெண்கள் நாட்டம் செலுத்த கூடாது.

*அடிமை சின்னமாக விளங்கும் தாலியை தவிர்க்க வேண்டும்.

*வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
*அறிவை வளர்க்கவும் ஒழுக்கத்தை பேணவும் திருக்குறளை பரப்ப வேண்டும்.

*பார்ப்பனர்களிடம் இருந்து தொற்றிய வரதட்சணை சுரண்டல் ஒழிக்கப்பட வேண்டும்.

*இந்து மதத்தை நிலைநாட்ட உதவும் புராண இதிகாச பிரச்சாரங்களை ஒழிக்க வேண்டும்.

*விளையாட்டு துறையிலும் கல்வித் துறையிலும் சாதிக்க துடிக்கும்
பெண்களை ஊக்குவிக்க வேண்டும்.

*பார்ப்பனர்களை மையமாக வைத்து கட்டமைக்கப்பட்ட இந்து மதத்தை தகர்த்தெறிய வேண்டும்.

*சுயமரியாதை திருமணங்களையும் கலப்பு திருமணங்களையும் சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும்.

*இந்து மதத்தின் பெயரால் பெண்களை பாலியல் தொழிலுக்கு அர்ப்பணிக்கும் தேவதாசி அமைப்பை
ஒழிக்க வேண்டும்.

*சுயமரியாதை உணர்வு கொண்டவர்கள் சாதி - மதம் - பூதம் - மூட நம்பிக்கை போன்றவற்றை உடைத்தெறிய வேண்டும்.

*பார்ப்பனர் சடங்கு இல்லாமல் திருமணம் - நினைவு நாள் - புதுமனை புகுவிழா போன்றவற்றை நடத்த வேண்டும்.

*அறிவியல் அடிப்படை இல்லாமல் போலி அறிவியலை போதிக்கும் ஜோதிடத்தை
ஒழிக்க மக்கள் முன்வர வேண்டும்.

*பெற்றோர் தங்கள் சொத்துக்களில் சரிபாதி ஆணுக்கும் சரிபாதி பெண்ணுக்கும் கொடுக்க வழிவகை செய்ய வேண்டும்.

*அனைத்து துறைகளிலும் நிலவி வரும் ஆணாதிக்கத்தை ஒழித்து பெண்களையும் உள்ளடக்கி சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும்.

*தங்கள் நலனுக்கு ஏற்ப திருக்குறளுக்கு
ஆரியர்கள் எழுதியுள்ள உரைகளை தமிழறிஞர்கள் ஒழித்து சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும்.

*உரிய காரணம் இருந்தால் ஆண்களை போல பெண்களும் தங்கள் திருமணத்தை ரத்து செய்திட விவாகரத்து கோருவது எளிமையாக்கப்பட வேண்டும்.

*காமத்தை குறிக்கும் போது தலைவன் தலைவி என்று பேசிவிட்டு கற்பு என்று
வந்தவுடன் பெண்களை மட்டும் அடிமையாக கருதி ஆண் என்றால் ஒரு நீதி பெண் என்றால் ஒரு நீதி என்றில்லாமல் இருபாலருக்கும் ஒரே நிலையுடைய கற்பு முறையை ஏற்படுத்த வேண்டும்.

11.திராவிட நாடு பயணித்த பாதை

சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம் மொழி பேசும் மக்களை
உள்ளடக்கி திராவிட நாடு கோரிக்கையை பெரியார் எழுப்பினார். பெரியார் முன்வைத்த திராவிட நாடு கோரிக்கைக்கு ஆதரவாக “அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு” என்றார் அண்ணா. தி.மு.கவை உருவாக்கிய தொடக்க காலகட்டத்தில் திராவிட நாடு கோரிக்கையை பிரச்சாரம் செய்தார் அண்ணா. நாளடைவில் அரசியல்
ரீதியாக தன்னை தனிமைப்படுத்தும் முயற்சிகள் ஒன்றிய அரசால் நடப்பதை உணர்ந்து அக்கோரிக்கையை அண்ணா ஒத்தி வைத்தார். திராவிட நாடு கோரிக்கை கைவிடப்பட்டாலும் அதற்கான காரணங்கள் உயிர்ப்போடு இருக்கவே செய்கிறது என்று நாடாளுமன்றத்தில் அண்ணா உரையாற்றியது குறிப்பிடத்தக்கது. காலப்போக்கில்
“திராவிட நாடு” என்ற முழுக்கம் “தனி தமிழ்நாடு” என்ற முழக்கமானது. பின்னர் “மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி” என்ற கலைஞரின் முழக்கமே பின்பற்றப்படுகிறது.

12.பெரியாரும் அம்பேத்கரும்

1944 இல் பெரியாரின் அரசியல் முன்னெடுப்புகளில் அதிருப்தி கொண்டிருந்த நீதிக் கட்சியின் ஒரு
பிரிவினர் கட்சிக்குள் கிளர்ச்சி செய்ய திட்டமிட்டு அம்பேத்கரின் ஆதரவைப் பெற்று பெரியாரை வெல்லலாம் என்று எண்ணி அம்பேத்கரை சந்தித்தனர். அதையொட்டி மெட்ராஸ் வந்த அம்பேத்கர் மெட்ராஸ் கன்னிமரா ஹோட்டலில் சண்டே அப்சர்வர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று
“பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க பெரியார் போன்றதொரு தலைவரும் அவர் வகுத்த கொள்கை திட்டங்களும் சமூக நீதி கருத்துகளும் தேவை” என்று கூறி அழைத்தவர்களின் விருப்பத்திற்கு எதிராக பேசினார். பெரியார் மற்றும் அம்பேத்கர் நட்புக்கு இது ஒரு சான்றாக அமைந்தது.
உயர் சாதி இந்துக்களின் சார்பின்றி தாழ்த்தப்பட்ட மக்கள் தமது அரசியல் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பிரதிநிதித்துவத்தால் இந்து சமூகத்தின் வர்ண அமைப்பு சீர்குலையும் என காந்தி கருதினார். தாழ்த்தப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவம் தவிர்த்து பிற சாதி மத மக்களுக்கு பிரிட்டிஷ் அரசு
வழங்கிய தேர்தல் சலுகை அறிவிப்புகளை காந்தி ஏற்றுக்கொண்டார் என்பது கவனிக்கத்தக்க நுண்ணரசியல். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட இரட்டை வாக்குரிமையுடன் கூடிய 71 தனித்தொகுதி அறிவிப்பை ரத்து செய்ய கோரி காந்தி அம்பேத்கரை அச்சுறுத்தும் வகையில் பூனா ஏர்வாடா சிறையில் சாகும் வரை
உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார். காந்தியின் உயிரைவிட எமது மக்களின் அரசியல் அதிகாரம் முக்கியம் என அம்பேத்கர் அறிவித்தார். காந்தி இறந்து விடுவாரோ என்று பயந்து தாழ்த்தப்பட்டவர்களுக்கான இந்த வாய்ப்பு வாபஸ் பெறப்பட்டால் அது ஒருவரைக் காப்பாற்ற பல கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிரைத்
தியாகம் செய்வது போன்றது என்பதில் உறுதியாக உள்ளோம் என்பதால் காந்தியின் உண்ணாவிரத அரசியலை நம்ப வேண்டாம் என அறிவுரை கூறி பெரியார் ரஷ்யாவில் இருந்து 18 செப்டம்பர் 1932 அன்று அம்பேத்கருக்கு தந்தி அனுப்பினார். ஆனால் உண்ணாவிரதம் போராட்டம் மூலம் காந்தி வென்றது வேதனைக்குரிய தனிக்கதை.
12.பெரியாரும் மணியம்மையும்

சுயமரியாதை கொள்கைகளில் தீவிர நம்பிக்கை கொண்ட நீதிக் கட்சி உறுப்பினரான கனகசபையின் மறைவுக்குப் பிறகு அவரது மகள் மணியம்மை 1943 இல் பெரியாரின் திராவிடர் கழகத்தில் இணைந்தார். சுயமரியாதை கொள்கையில் உறுதியாக இருந்த மணியம்மை பெரியாரின் நம்பிக்கைக்குரிய
சீடராகவும் பெரியாரின் முதுமையில் அவரைப் பராமரிப்பவராககவும் மணியம்மை இருந்தார். அந்நேரத்தில் திராவிடர் கழகத்திற்குள் கருத்து வேறுபாடுகள் நிலவிய காலகட்டத்தில் கழகத்தின் சொத்துக்கள் தனி நபர் கைகளுக்கு செல்லாமல் இருக்க ஒரு அறக்கட்டளையை உருவாக்கவும், இயக்க பணிகளை முன்னெடுத்துச்
செல்லவும், நலன்புரி நடவடிக்கைகளைத் தொடரவும், இயக்கத்திற்கு பெண்களை பெருமளவில் ஈடுபடுத்தவும் மணியம்மையை நம்பிக்கைக்குரியவராக கருதி அவரை அரசியல் வாரிசாக சட்டபூர்வமாக்க 09 ஜூலை 1949 அன்று பெரியார் மணியம்மையை திருமணம் புரிந்து கொண்டார். இந்த திருமணம் நடைபெற்ற சூழல் குறித்து ஆராயாமல்
போகிற போக்கில் பெரியார் மீது சேற்றை வாரி இறைப்பது கண்டனத்திற்குரியது.

பெரியார் காலத்திற்கு பின் பெரியாரின் நம்பிக்கைக்கு ஏற்ப 1973 வரை சமூக சீர்திருத்தங்களை வீதி வீதியாக பிரச்சாரம் செய்து திராவிடர் கழகத்தை திறம்பட நடத்தினார் மணியம்மை. 16 மார்ச் 1978 அன்று மணியம்மை மரணமடைந்த
பிறகு திராவிடர் கழகத்தை இன்று வரை ஆசிரியர் கே.வீரமணி வழிநடத்தி வருகிறார்.

13.பெரியார் மறைந்துவிட்டாரா?

வாழ்வின் இறுதி 10 ஆண்டுகள் நடக்காத இயலாத நிலைக்கு தள்ளப்பட்டாலும் மூத்திரப் பையுடன் வாழ வேண்டிய சூழலிலும் வீட்டில் முடங்காமல் தீவிரமாக சமூக நீதி கொள்கைகளை பிரச்சாரம் செய்து
வந்தார் பெரியார். 8-9 டிசம்பர் 1973 அன்று மெட்ராஸில் நடைபெற்ற “தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு” மாநாட்டில் “சுதந்திர தமிழ்நாடு” கோரிக்கையை முன்வைத்து இதுவே நமது இறுதிப் போராட்டம் என்றார் பெரியார். மேலும் தமிழ்நாட்டை தமிழருக்கே தாருங்கள் என்று ஒன்றிய அரசுக்கு 25 ஜனவரி 1974 வரை கெடு
விதித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

19 டிசம்பர் 1973 அன்று மெட்ராஸ் தியாகராய நகரில் நடைபெற்ற “கடைசி” பொதுக் கூட்டத்தில் “வாழ்ந்தால் இழவுகளை ஒழித்துவிட்டு வாழ வேண்டும் இல்லையென்றால் செத்து மடிய வேண்டும் என்றும் சாதி முறையும் இழிவு நிலையும் ஒழித்துக்கட்ட மக்கள் அனைவரும்
ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என்றும் தமிழ்நாடு தனியாகப் பிரிந்தால் 10 வருசத்துக்குள்ளாக நாமெல்லாம் பல்வேறு முன்னேற்றங்களை காணலாம்” என்று பேசினார் பெரியார்.

20 டிசம்பர் 1973 அன்று ஹெர்னியா நோய் காரணமாக ஏற்பட்ட தாங்க முடியாத கடுமையான வலியால் சென்னை அரசு பொது மருத்துவமனையில்
பெரியார் அனுமதிக்கப்பட்டார். அதை தொடர்ந்து 21 டிசம்பர் 1973 அன்று உயர் சிகிச்சைக்காக கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் பெரியார் அனுமதிக்கப்பட்டார். 8,20,000 மைல்கள் பயணம் செய்து 10,700 நிகழ்ச்சிகளில் பங்கேற்று 21,400 மணி நேரம் உரையாற்றிய பெரியார் இறுதியில் சிகிச்சை பலனின்றி
24 டிசம்பர் 1973 அன்று காலை 7.22 மணிக்கு சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார் பெரியார். பெரியார் மறைந்துவிட்டாரா? ஆம், உடலால் மறைந்துவிட்டார் ஆனால் கொள்கையால் நேற்று வாழ்ந்தார் இன்று வாழ்கிறார் நாளையும் வாழ்வார் என்றும் வாழ்வார்.
2000 வருட ஆரிய அரசியலை வெறும் 100 வருட திராவிட அரசியலை கொண்டு ஓரிரவில் அனைத்தையும் மாற்றிவிட முடியாது. ஆனால் சமூக நீதி கொள்கைகளை மக்களிடம் எடுத்துரைத்து பூனைக்கு மணிக்கட்டும் வேலையை யாராவது செய்ய முன்வர வேண்டும் அதற்கு தமிழ்நாட்டில் முதலில் அச்சாரம் இட்டவர் பெரியார் என்றால்
மிகையல்ல. ஏனெனில் பெரியார் பிறந்து 142 வருடங்கள் ஆகிவிட்டது, பெரியார் மறைந்து 48 வருடங்கள் ஆகிவிட்டது என்றாலும் வலதுசாரிகள் பெரியார் "பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல" என்ற ரீதியில் அணுகுவதில் இருந்தே நாம் இன்றும் பெரியாரின் தேவை உள்ளதை நன்கு அறிந்து கொள்ளலாம்.
14.திராவிட முன்னேற்ற கழகம்

சுதந்திர நாளை துக்க நாளாக அனுசரித்த பெரியார், தேர்தலில் நிற்காமல் இயக்க அரசியல் மூலமே மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற பெரியார், திராவிடர் கழகத்திற்கு அண்ணா அல்லது ஈ.வி.கே.சம்பத் அரசியல் வாரிசாக கருதப்பட்ட சூழலில் பெரியார் - மணியம்மை திருமணம் என்று
திராவிடர் கழகத்திற்குள் கருத்து வேறுபாடுகள் முற்றியதால் திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணா உட்பட பலர் விலகினர். அதை தொடர்ந்து அண்ணா தலைமையில் ஈ.வெ.கி.சம்பத், நாவலர் நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், என்.வி.நடராசன், கலைஞர், மதுரை முத்து, சத்தியவாணி முத்து, டி.கே.சீனிவாசன், கே.அன்பழகன்,
ஏ.வி.பி.ஆசைத்தம்பி, கே.கே.நீலமேகம் உட்பட பலர் பெரியாரின் சமூக நீதி கொள்கைகளை உள்ளடக்கி 17 செப்டம்பர் 1949 அன்று மெட்ராஸ் ராயபுரம் பகுதியில் உள்ள ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.
8 வருடங்கள் கழித்து 1957 முதல் தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிட தொடங்கியது தி.மு.க. தேர்தல்களில் வென்று அரசியல் அதிகாரங்கள் கிடைத்த போதெல்லாம் தி.மு.க பார்ப்பனிய கொள்கைகளுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் விதமாக சமூகத்திற்கு தேவையான பல திட்டங்களையும் கொண்டு வந்து சேர்த்தது. தேர்தல்
அரசியலில் வென்று பெரியாரின் கொள்கைகளை நடைமுறைக்கு கொண்டு வந்து சாத்தியம் ஆக்கியவர் அண்ணா. குறிப்பாக சுயமரியாதை திருமணம், கைம்பெண் மறுமணம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது, கோவிலில் தமிழ் ஆகமங்கள் ஒலிப்பது, கோவில் நிலங்களை மற்றும் கோவில் சொத்துக்களை பராம்பரிக்க இந்து
அறநிலையத்துறை, தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கை, சமசீர் பாடத்திட்டம், அறிவியல் வளர்ச்சி, நில உச்சவரம்பு சட்டம், பெண்களுக்கு சொத்துரிமை, மருத்துவ காப்பீட்டு திட்டம், மாற்றுத்திறனாளி நலவாரியம், தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு சமூகநல திட்டங்கள் திராவிட
அரசியல் வாயிலாக தமிழ்நாட்டிற்கு கிடைத்தது. திராவிட அரசியலின் திட்டங்கள் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முன்மாதிரியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

15.முடிவுரை

மக்களை படிக்க, சிந்திக்க, எழுத செய்து சமுதாயத்தின் தலைகீழாக்கத்தை நேர் செய்தது திராவிட இயக்கம். இன்னும் சொல்லப்போனால்
பேரரசுகள் வீழ்ந்து ஜனநாயகம் பிறந்த பிறகும் பார்ப்பனியம் பாதை மாறாமல் ஏற்ற தாழ்வை உறுதி செய்து கொண்டிருந்த நேரத்தில் தமிழ்நாட்டில் ஏற்றத்தாழ்வை எதிர்த்து வீறு கொண்டு கிளம்பிய இயக்கம் திராவிட இயக்கமாகும். சுதந்திரம் என்பது விருப்பம் போல் வாழ்வது. சமத்துவம் என்பது சமமாக வாழ்வது.
இங்கே வர்ணத்தை கற்பித்து பிறரின் சுதந்திரத்தை உயர் சாதியினர் ஒடுக்கிய போது தான் சமத்துவம் பாதிக்கப்பட்டது. அந்த பாதிப்பை இயன்ற வரை சரி செய்ய முனைந்தது திராவிட இயக்கமே.

சுயமரியாதை இயக்கம், தென்னிந்திய நல உரிமைச் சங்கம், நீதிக் கட்சி, திராவிடர் கழகம் போன்ற இயக்கங்கள்
தமிழ்நாட்டிற்காக, தமிழ் மக்களுக்காக, தமிழ் மொழிக்காக ஆற்றிய நற்பணிகள் எண்ணில் அடங்கா. அவ்வகையில் பெரியார் காட்டிய பாதையில் பேரறிஞர் அண்ணா சென்ற வழியில் கலைஞர் கொண்ட கொள்கையில் ஈடுபாடு கொண்டு இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் எண்ணற்ற தோழர்கள் திராவிட அரசியலை முன்னெடுத்து செல்வது
மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

16.இதர செய்திகள்

# சிவாஜி கணேசன் நடித்த 125வது திரைப்படமான உயர்ந்த மனிதன் திரைப்பட விழாவிற்கு வருகை தந்த பேரறிஞர் அண்ணா “சிலர் பேருடைய உதவியால் தான் சிவாஜி சினிமாவிற்கு வந்தார் என்று எல்லாரும் சொல்கிறார்கள் ஆனால் பல பேருடைய உதவி இல்லாவிட்டாலும்
சில நாள் கழித்து வந்திருப்பார் அவருடைய முன்னேற்றத்தை யாரும் தடுக்க முடியாது” என்று சொன்னார். இதன் பொருள் யாதெனில் “தண்ணிக்குள் பந்தை பொத்தி வெச்சாலும் பந்து தண்ணி மேலத் தான் வரும் என்பது போல திறமையும் முயற்சித்தலும் உந்துதலும் உள்ள ஒரு மனிதர் எப்படியும் மேலேறி தான் வருவார்,
வந்து தான் ஆக வேண்டும்”. அதாவது தனது உதவி இல்லாமல் கூட சிவாஜி நடிகன் ஆகி இருப்பார் என்பது அண்ணாவின் சூசகமான பேச்சாகும். நடிப்பின் மீது தாகம் கொண்ட சிவாஜி நாடு போற்றும் சிறந்த நடிகர் ஆகி விட்டார். சமூக முன்னேற்றத்தின் மீது தாகம் கொண்ட பெரியார் நாடு போற்றும் சிறந்த தலைவர்
ஆகிவிட்டார். தண்ணீருக்குள் பந்தை அழுத்தினாலும் அப்பந்து மேலே வரும் என்பது போல தான் பெரியாரின் சமூக சீர்திருத்த எண்ணங்கள் மேலோங்கி வந்தன.

# திராவிடர் கழகத்தின் வாரிசாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டு பின்னர் பெரியாரை விட்டு விலகி 1949 இல் தொடங்கப்பட்ட தி.மு.கவில் களப்பணி
ஆற்றிய “சொல்லின் செல்வர்” ஈ.வெ.கி.சம்பத் 1961 இல் அண்ணாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்து தமிழ் தேசியக் கட்சி என்ற தனிக்கட்சியை தொடங்கினார் பின்னர் அக்கட்சியை 1964 இல் இந்திய தேசிய காங்கிரசுடன் இணைத்து விட்டார்.
# பெரியாரின் அனைத்து சொற்பொழிவுகளையும் ஒலிபரப்பினால் அவை 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிக்கும்.

# பெரியாரை விட்டு கண்ணீருடன் பிரிவதாக அண்ணா தலைமையில் பிரிந்தவர்கள் கூறிட "போகட்டும் கண்ணீர்த்துளி பசங்க!" என்றார் பெரியார்.
# பெரியாரை விட்டு வெளியேறினாலும் பெரியாரின் சமூக நீதி கொள்கைகளை வலியுறுத்தி பெரியாரின் பிறந்த நாள் அன்றே அண்ணா தி.மு.கவை தொடங்கினார்.

# அண்ணாவின் மருத்துவ சிகிச்சைக்கு தி.மு.க கட்சி செலவு செய்தது அத்துடன் பெரியார் 25,000 ரூபாய் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
18.விவரணைகள்

பெரியாரின் கதை



பெரியார் - மணியம்மை திருமணம்



என்ன சாதித்தார் பெரியார்? 



அண்ணாவின் கதை 



அண்ணா ஆட்சியைப் பிடித்த கதை

திராவிடத் தலைமகன் அண்ணாவின் கதை



தேவதாசி வரலாறு



திராவிட மாதத்தின் கதை



நீதிக் கட்சி வரலாறு ஒரு பார்வை



பெரியார் திரைப்படம்

பெரியாரின் கடைசி பேச்சு



Periyar Timeline Events

pmu.edu/centres/pdf/Bi…

Importance of Periyar in Tamil Nadu



The Social Reformer Periyar



வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.
My Blog 🔽

// பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல //

chocksvlog.blogspot.com/2021/12/blog-p…

*கட்டுரை நேரியல் அல்லாத நேர மண்டலத்தை (Non-linear Time Zone) அடிப்படையாகக் கொண்டிருப்பதால் மெதுவாகவும் பொறுமையாகவும் வாசிக்க வேண்டுகிறேன்.
பெரியார் குறித்த கட்டுரை PDF Version (Updated) 🔽

drive.google.com/drive/u/0/fold…

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Chocks

Chocks Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @chockshandle

24 Dec
சரியான கேள்வி தோழர். தமிழ் இலக்கியத்தில் யவனர்களின் வணிகம் தொடர்பாக (குறிப்பாக காவிரிப்பூம்பட்டினம் போக்குவரத்து) பதிவுகள் உண்டு.

ஆனால் நான் கூறிய பதிவின் நோக்கம் யாதெனில் இந்தியாவில் ஆங்கிலேயர் வணிகமும் ஆங்கிலேயர் ஆட்சியும் நடைபெற நவீன கால ஐரோப்பியர்கள் இந்தியாவுக்கான
கடல்வழியை அறிந்து கொண்டது முக்கியமாகும். அவ்வகையில் போர்த்துகிசீயர் வாஸ்கோடகாமாவின் இந்தியாவுக்கான முதல் கடல்வழி பயணம் குறிப்பிடத்தக்கது.

நாளடைவில் முதல் நவீன கால "இந்தியா - ஐரோப்பா" வணிகத்தை வெற்றிகரமாக செய்தார்கள் போர்த்துகிசீயர்கள்.
இவர்களின் வணிக வளர்ச்சியை 1612 இல் Battle of Swally மூலம் தடுத்து தன் பங்குக்கு வணிகம் செய்ய இந்தியாவில் காலூன்ற தொடங்கினார்கள் ஆங்கிலேயர்கள்.

ஆனால் போர்த்துகிசீயர்கள் 1505-1961 வரை கோவாவை மட்டும் கட்டுப்படுத்தி வந்தாலும் 1961 இல் நேரு நடவடிக்கை மூலம் கோவா இந்தியாவுடன் இணைந்தது.
Read 6 tweets
19 Dec
குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் 💣

// இந்திய அரசியல் சரித்திரத்தை மாற்றிய Bofors //

1.முகவுரை

1985 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் Bofors ஊழல், சீக்கியர்கள் மீதான தாக்குதல், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி, மூன்றாவது அணி ஆட்சி அமைப்பு,
மண்டல் கமிஷன் பரிந்துரை ஏற்கப்பட்டது இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. Bofors ஊழல் இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியது. இப்புயலில் சிக்கிய ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் 1989 நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது.
இக்கட்டுரையில் பரபரப்பாக விவாதிக்கப்பட்ட Bofors ஊழல் குறித்து சில செய்திகளை காண்போம்.

2.ஜெரால்டு புல் கைவண்ணம்

1970 இன் பிற்பகுதியில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனரும் (Space Research Corporation - SRC) கனடா ஆயுத பொறியாளருமான ஜெரால்ட் புல் முந்தைய பீரங்கிகளை விட மிக நீண்ட தூரம்
Read 103 tweets
17 Dec
// 1980 - 2000 காலகட்டம் குறித்து சிறு பார்வை //

1980-1985 🔽

இந்திய அளவில் பொற்கோவில் மீதான தாக்குதல், இந்திரா காந்தி படுகொலை, இந்திய உலகக்கோப்பை வெற்றி.

தமிழக அளவில் அ.தி.மு.க ஆட்சியில் எரிசாராய ஊழல், எம்.ஜி.ஆர் உடல்நலக்குறைவு, ஜெயலலிதா அரசியல் நுழைவு.
1985-1990 🔽

இந்திய அளவில் சீக்கியர்கள் மீதான தாக்குதல், போபர்ஸ் ஊழல், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி, மண்டல் கமிஷன் பரிந்துரை ஏற்கப்பட்டது.

தமிழக அளவில் எம்.ஜி.ஆர் மறைவு, அ.தி.மு.க பிளவு, கலைஞர் மீண்டும் முதல்வராகுதல் குறிப்பிடத்தக்கது.
1990-1995 🔽

இந்திய அளவில் ராஜீவ் காந்தி படுகொலை, தாராளமய கொள்கை, பாபர் மசூதி இடிப்பு, மத கலவரம், மும்பை தொடர் குண்டுவெடிப்பு, ஹர்ஷத் மேத்தா பங்கு சந்தை ஊழல்.

தமிழக அளவில் தி.மு.க ஆட்சி டிஸ்மிஸ், ஜெயலலிதா முதல்வராகுதல், சுதாகரனுக்கு ஆடம்பர திருமணம், வீரப்பன் அட்டூழியங்கள்.
Read 4 tweets
17 Dec
// ஈழமும் சிங்களமும் //

1. முகவுரை
2. விஜயனும் குவேனியும்
3. குவேனியின் சாபம்
4. விஜயனின் வருகை அஞ்சல் தலை (1956)
5. இலங்கையில் பாண்டியர்கள்
6. இலங்கையில் சோழர்கள்
7. இலங்கை இராச்சியம்
8. இலங்கை காலனித்துவம்
9. பிரிட்டிஷின் கட்டுப்பாடு
10. பிரிட்டிஷுக்கு பிந்தைய காலம் Image
11. இலங்கை அரசு
தந்தை செல்வா
JVP கிளர்ச்சிகள்
11. உள்நாட்டுப் போர்கள்
12. ஆபரேஷன் பூமாலை
13. இந்திய அமைதி காக்கும் படை
14. ராஜீவ் காந்தி படுகொலை
15. படுகொலைக்குப் பின்னால்
16. பல்நோக்கு ஒழுங்கு விசாரணை ஆணையம்
17. ஈழ அரசியலில் தமிழ்நாடு
18. நார்வே அமைதிப் பேச்சு
19. விடுதலைப் புலிகள்
20. முடிவுரை
21. விவரணைகள்

முகவுரை

ஆரிய வரலாறை எடுத்துரைக்க “திராவிட மண்ணில் ஆரியர்களின் பண்பாட்டு படையெடுப்பு” என்னும் கட்டுரையை முன்னர் எழுதிருந்தேன். அது போல இலங்கை வரலாறை எடுத்துரைக்க “ஈழமும் சிங்களமும்” என்னும் கட்டுரையை இன்று எழுதியிருக்கிறேன்.
Read 6 tweets
12 Dec
// போலக்குளம் பீதாம்பரன் வழக்கு //

1.முகவுரை
2.ஒரு சி.பி.ஐ டைரி குறிப்பு
3.போலி மனித உடல் பரிசோதனை
4.போலக்குளம் பீதாம்பரன்
5.ஆரம்பகட்ட விசாரணை
6.சிறப்பு குற்றப்பிரிவு விசாரணை
7.உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு
8.உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
9.சி.பி.ஐ விசாரணை
10.இறுதியில் நடந்ததென்ன?
11.தடயவியல் மருத்துவர் உமாதாதன்
12.முடிவுரை
13.விவரணைகள்

# அனைத்து வழக்குகளின் தொடக்கமும் முடிவும் ஒன்றாக அமைய வேண்டிய கட்டாயமில்லை என்ற அடிப்படையில் இக்கட்டுரையை வாசிக்க வேண்டுகிறேன்.
முகவுரை

உலக சினிமாவில் கொலையை துப்பறிந்து கொலையாளியை கண்டுபிடிப்பது மிக பிரபலமான கதைக்களங்களில் ஒன்றாகும். அவ்வகையில் சுவாரஸ்யமான துப்பறியும் திரைப்படங்களின் வரிசையில் மம்முட்டி நடித்த சி.பி.ஐ திரைப்படத் தொடர் மலையாள சினிமாவில் புகழ் பெற்றது. 1988 இல் சி.பி.ஐ திரைப்படத் தொடரின்
Read 40 tweets
5 Dec
// கேரளாவை உலுக்கிய ஒரு மாணவரின் கதை //

ராஜனும் ராஜாக்கண்ணும்

1.முகவுரை
2.நக்சல் தாக்குதல்
3.இரு மாணவர்கள் கைது
4.விசாரணை முகாம்
5.சித்தரிப்பும் உண்மையும்
6.மக்களின் குரல் ஓங்கியது
7.தந்தையின் போராட்டம்
8.இரு முதலமைச்சர்கள்
9.வேறுபட்ட வாக்குமூலங்கள்
10.முக்கிய சாட்சியங்கள்
11.உயர்நீதிமன்றம் ஆணை
12.பதவி விலகிய முதலமைச்சர்
13.கேரளா அரசின் பதில்
14.ஒப்புக்கொண்ட பிரதிவாதிகள்
15.இறுதி நடவடிக்கை
16.ராஜனின் உடல்
17.முடிவுரை
18.விவரணைகள்

1.முகவுரை

அரசியல் ரீதியாக சுதந்திர இந்தியாவின் கருப்பு பக்கங்களில் சாதி, மதம், இனம், வர்க்கம் சார்ந்த தாக்குதல்கள் போல
நெருக்கடி நிலை (State of Emergency from 25-06-1975 to 21-03-1977) கால தாக்குதல்களும் கவனத்திற்குரியது. நெருக்கடி நிலை காலத்தின் போது கேரளா காவல்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணையின் போது இறந்த ராஜன் என்பவர் குறித்த வழக்கும் விசாரணையும் கேரளா அரசியலை புரட்டி போட்டது.
Read 64 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(