#பகவத்கீதை எளிய விளக்கம்:
பகவத் கீதை என்பது
விடு – பிடி அல்லது
பிடி – விடு
விடு பிடி என்றால், இந்த உலக பந்தங்களையெல்லாம்
உதறித் தள்ளிவிடு. அதே நேரம் பரந்தாமன் பாதங்களை இறுகப் பற்றிக்கொள் என்று அர்த்தம். ஆனால் நம்மைப் போன்ற சாமான்ய மக்களுக்கு, இந்த உலக பந்தங்களை எல்லாம் உதறித்
தள்ளுவது எளிதல்ல. பிறகு எவ்வாறு பரந்தாமன் பாதங்களைப் இறுகப் பற்றுவது? கவலை வேண்டாம். இன்னொரு வழி உள்ளது. அது தான் பிடி விடு.
பிடி என்றால் முதலில் பரந்தாமன் பாதங்களைப் பிடி அல்லது பற்று. அந்தப் பிடி இறுக, இறுக இந்த உலக பந்தங்களின் மேல் உங்களுக்குள்ள பிடிப்பு தானாக தளர்ந்துவிடும்.
இது எப்படி என்று புரிந்து கொள்ள ஓர் எளிய உதாரணம் உள்ளது. ஹோமத்துக்கான சில சமித்து குச்சிகள், ஒரு கயிற்றால்
இறுக்கமாகக் கட்டப்பட்டுள்ளன, முடிச்சை அவிழ்க்க முடியவில்லை.
(இது நம்முடைய உலக
பாசபந்தம் ) வேறு ஒரு கயிறு எடுத்து அதற்குப் பக்கத்திலேயே அதை விட இறுக்ககட்டி ஒரு குலுக்கு
குலுக்கி இறுக்கினால் (இந்த புதிய கட்டு என்பது பகவானின் பாதத்தைப் பற்றிய நம் உறுதியான பிடிப்பு) புதிய கயிற்றின் இறுக்கத்தில், பழைய கயிற்று இறுக்கம் தானாகத் தளர்ந்து கழன்று விடும். அது போல, நாம் பகவான் மீதான நம் பற்றை இறுக்கிக் கொண்டே சென்றால், உலகப் பற்று என்பது நம்மை விட்டு தானே
விலகி விடும். உலக பந்தங்களை விட்டு பரந்தாமன் பாதங்களைப் பற்றுவது ஞானிகளின் ஞான மார்க்கம். பரந்தாமன் பாதங்களைப் முதலில் பற்றி, தானாக உலக பந்தங்களை விட்டு விடுவது, பக்தி மார்க்கம் அதாவது சாமானிய மக்களான நமக்கானது. இதைத் தான் பகவான் கிருஷ்ணன் சரம ஸ்லோகத்தில் உபதேசித்தார்.
#ஸ்நானம் பற்றி முக்கிய தகவல்கள் அடங்கிய பதிவு இது. ஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நம் சாஸ்திரங்கள் விவரமாக சொல்கின்றன. ஸ்நானங்கள் இரு வகைப்படும். அவை #முக்கிய ஸ்நானம் #கௌண ஸ்நானம் ஆகும். க்ரியா ஸ்நானம், காம்ய ஸ்நானம், நைமித்திக ஸ்நானம், க்ரியாங்க ஸ்நானம்
மலாபாஹர்ஷண ஸ்நானம், நித்ய ஸ்நானம் ஆகியவை முக்கியமானவை.
#க்ரியா ஸ்நானம்: பவித்திரமான புண்ணிய நதிகளில் நீராடுவதே க்ரியா ஸ்நானம். நதியின் நீரோட்டம் எந்தப் பக்கம் இருக்கின்றதோ, அதற்கு எதிர்முகமாக நின்றுகொண்டு (நீரோட்டத்தை எதிர்த்தாற்போல்) நீரில் நன்கு மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும்.
#காம்ய ஸ்நானம்: ஒரு சிலருக்கு பரிகாரத்துக்காக சில க்ஷேத்திரத்தில் இருக்கும் குளங்களில் ஸ்நானம் செய்ய நேரிடும். அவ்வாறு குளிக்கும்போது, வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் சூரியனைப் பார்த்து நின்றுகொண்டு குளத்தில் மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும்.
#அரங்கன்#பாண்டியன்_கொண்டை அரங்கன் தன் பக்தர்களில் ஒருவரைக் கொண்டே இந்தப் பாண்டியன் கொண்டை என்னும் ரத்தினக் கிரீடத்தைச் செய்ய வைத்தார். அவர் தான் அல்லூரி வேங்கடாத்ரி ஸ்வாமி. அவர் பரம ஏழை. உஞ்சவ்ருத்தி எடுத்துப் பணம் சேர்த்து இந்தப் பாண்டியன் கொண்டையைச் செய்து கொடுத்தார். தமிழ்
நாட்டு சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீக்ஷிதர், ச்யாமா சாஸ்திரிகள் போல் ஆந்திர நாட்டு மும்மூர்த்திகள் தலப்பாக்கம் அன்னமாசார்யா, பத்ராசலம் ராமதாசர், அல்லூரி வேங்கடாத்ரி ஸ்வாமி ஆகியோர். அவர் திருமலையில் திருமலையப்பன் சேவையிலே ஈடுபட்டு, பின்னர் அவர்
காஞ்சிக்கு வரதராஜப் பெருமாளிடம் ஈடுபாடு கொண்டு தினமும் உஞ்சவ்ருத்தி மேற்கொண்டு அதில் கிடைக்கும் பொருட்களை, தானியங்களைப் பணமாக மாற்றி அதன் மூலம் வரதராஜப் பெருமாளின் சந்நிதிக்குக்ப் பல கைங்கரியங்களைச் செய்து வந்தார். காஞ்சி மாநகரில் உள்ள மற்ற திவ்ய தேசங்களுக்கும் திருப்பணிகள் பல
ஒரு சமயம் மஹா பெரியவாளைத் தரிசிக்க தேனாம்பேட்டையில் இருந்து நாற்பதுக்கும் மேற்பட்ட அந்தணர்கள் வந்திருந்தனர். வந்தவர்கள் மகானை வணங்கிய பின் தங்களுடைய பொதுவான மனவேதனையை வெளியிட்டனர். அந்த காலகட்டத்தில், சென்னை தேனாம்பேட்டை பகுதியில் பொதுவாக அந்தணர்களின் நெற்றியில் விபூதி, திருமண்,
தோளில் பூணூல், ஆகியவற்றைக் கண்டால் சில நாஸ்திகர்கள் கேலி, கிண்டல் செய்து கலாட்டாக்களில் இறங்கி விடுவதாகவும் அதனால் அந்தப் பகுதியில் பிராம்மணர்கள் கௌரவமாக நடமாட முடியவில்லை என்றும் தெரிவித்தனர். அதைப்பற்றி விவரமாகத் தெரிந்து கொண்ட மகான் அவர்களிடம் சொன்னது ஒரே விஷயந்தான்: "நீங்கள்
தினமும் காயத்ரி மந்திரத்தை ஜெபம் செய்யுங்கள். எல்லாமே பிறகு சரியாகிவிடும்" என்றார்.
அதேபோல் அவர்கள் இரண்டுமாதம் தொடர்ந்து ஜெபம் செய்து முடிப்பதற்குள், எல்லாமே சரியானதாக மறுபடியும் மகானிடம் நேரில் வந்து மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள். அப்போது பெரியவா அவர்களிடம் சொன்னார்:
இயேசு நமக்காக சிலுவையில் அறையப்பட்டு மரித்தார் என்று கிறிஸ்தவ பெண் கூறினார்.
சிவபெருமான் நமக்காக விஷம் குடித்து உயிருடன் இருக்கிறார் என்றேன்.
ஒருபுறம் கிறிஸ்துவிற்கு நான்கு ஆணிகள் அடிக்கப்பட்ட இறக்கிறார்.
மறுபுறம் பீஷ்ம பிதாமகர் நூற்றுக்கணக்கான அம்புகள் கொண்ட அம்புப் படுக்கையில்
உயிருடன் இருக்கிறார்.
மூன்றாம் நாள் இயேசு சுய நினைவுக்கு வந்தார்.
அதே நேரத்தில் பீஷ்மர் 58 நாட்கள் அம்பு படுக்கையில் முழு சுயநினைவுடன் இருந்தார். வாழ்க்கை, ஆன்மீகம், அறிவு ஆகியவற்றின் விலை மதிப்பற்ற சொற்பொழிவுகளை வழங்கினார். மேலும் தனது உடலை விட்டு, தான் விருப்பப்பட்ட காலத்தில்
உயிர் துறந்தார். நம் பாரத தேசத்தில் பிதாமகர் பீஷ்மரைப் போல் எண்ணற்ற பெரிய ஞானிகள் இருந்திருக்கிறார்கள்.
சிந்தித்துப் பாருங்கள். நாம் ஏன் நம் இந்துக் குழந்தைகளை சாண்டா கிளாஸ் ஆக்க வேண்டும்? ஏன் வீட்டில் பிளாஸ்டிக் கிறிஸ்துமஸ் மரத்தை வைக்க வேண்டும்? மத மாற்ற வலையில் விழ வேண்டாம்.
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் தொண்டைமான் என்ற மன்னன் நாட்டு நன்மைக்காக ஓர் யாகம் செய்ய ஆசைப்பட்டார். தனது விருப்பத்தைத் தன் புரோகிதரான ஜடாதாரியிடம் சொன்னார். அவரும் சம்மதித்தார். ஜடாதாரியோ தீய எண்ணத்துடன் ஒரு துர்தேவதையைக் குறித்து யாகம் செய்து நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கத் திட்டம்
இட்டார். அந்த யாகத்துக்கு அனைத்து ரிஷிகளையும் அழைக்கும்படி ஜடாதாரியிடம் மன்னன் கூறினார். அவரும் நாராயண ரிஷி உட்பட அனைத்து ரிஷிகளையும் நேரில் சென்று வரவேற்றார். ஆனால் நாராயண ரிஷி மட்டும் திருமலையப்பன் அருளால் இவர் ஏதோ தீய எண்ணத்தில் யாகம் செய்கிறார் என உணர்ந்து கொண்டார்.
அதனால்
யாகத்துக்கு வர மறுத்துவிட்டார். மேலும், இந்த யாகத்தால் நாட்டுக்குத் தீங்கு ஏற்படாமல் காக்குமாறு மலையப்பனை வேண்டினார். நாராயண ரிஷியால் தனது திட்டத்துக்கு ஆபத்து ஏற்படலாம் என உணர்ந்த ஜடாதாரி அவரைப் பற்றி அவதூறாக மன்னனிடம் பலவாறு கூறினார். தொண்டைமான் என்ன பெரிய மன்னனா? அவன்
கடன் தொல்லையில் இருந்து விடுபட ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மரின் #ருண_விமோசன ஸ்தோத்திரம் மிக சக்தி வாய்ந்தது. இதை காலை மாலை இரு வேளையும் சொல்லி வந்தால் நிச்சயம் கை மேல் பலன். பூர்வ ஜன்ம பாவங்களும் அதனால் படும் அவஸ்தையும் கழியும் ஏனென்றால் அதுவும் ஒரு கடன் தானே!
தேவதா கார்ய ஸித்யர்த்தம்
ஸபா ஸ்தம்ப ஸமுத்பவம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே
தேவதைகளின் காரியத்தை ஸாதிப்பதற்காக ஹிரண்யகசிபுவின் சபையில் தூணிலிருந்து வெளிப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை
கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வர தாயகம்
ஸ்ரீ நரஸிம்ஹம்
மஹாவீரம் நமாமி ருண முக்தயே
மகாலக்ஷ்மியை இடப்பாகத்தில் அணைத்துக் கொண்டு, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு விரும்பிய வரங்களைத் தருபவரும்,மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.