#அரங்கன்#பாண்டியன்_கொண்டை அரங்கன் தன் பக்தர்களில் ஒருவரைக் கொண்டே இந்தப் பாண்டியன் கொண்டை என்னும் ரத்தினக் கிரீடத்தைச் செய்ய வைத்தார். அவர் தான் அல்லூரி வேங்கடாத்ரி ஸ்வாமி. அவர் பரம ஏழை. உஞ்சவ்ருத்தி எடுத்துப் பணம் சேர்த்து இந்தப் பாண்டியன் கொண்டையைச் செய்து கொடுத்தார். தமிழ்
நாட்டு சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீக்ஷிதர், ச்யாமா சாஸ்திரிகள் போல் ஆந்திர நாட்டு மும்மூர்த்திகள் தலப்பாக்கம் அன்னமாசார்யா, பத்ராசலம் ராமதாசர், அல்லூரி வேங்கடாத்ரி ஸ்வாமி ஆகியோர். அவர் திருமலையில் திருமலையப்பன் சேவையிலே ஈடுபட்டு, பின்னர் அவர்
காஞ்சிக்கு வரதராஜப் பெருமாளிடம் ஈடுபாடு கொண்டு தினமும் உஞ்சவ்ருத்தி மேற்கொண்டு அதில் கிடைக்கும் பொருட்களை, தானியங்களைப் பணமாக மாற்றி அதன் மூலம் வரதராஜப் பெருமாளின் சந்நிதிக்குக்ப் பல கைங்கரியங்களைச் செய்து வந்தார். காஞ்சி மாநகரில் உள்ள மற்ற திவ்ய தேசங்களுக்கும் திருப்பணிகள் பல
செய்து வந்தார். அவரை தன் கோயிலுக்கு வரவழைக்க அரங்கன் முடிவு செய்தான். ஒரு நாள் அல்லூரி வேங்கடாத்ரி சுவாமிகளின் கனவில் அரங்கன் நம்பெருமாளாகிய உற்சவக் கோலத்தில் தோன்றித் தனக்குப் பாண்டிய மன்னனால் சமர்ப்பிக்கப்பட்ட பாண்டியன் கொண்டை பழசாகிப் பழுதடைந்து விட்டதாகவும், புதியது தேவை
என்றும் கேட்டார். வேங்கடாத்ரி சுவாமி இருந்ததோ காஞ்சியிலே. அங்கே குடி கொண்டிருந்த வரதராஜரைப் பிரார்த்தித்துக் கொண்டு எவ்விதமான அளவுகளும் இல்லாமல் அரங்கனின் பாண்டியன் கொண்டைக்கு மாதிரியாக ஒன்றைச் செய்தார். அதை எடுத்துக் கொண்டு திருவரங்கம் அடைந்தார். உள்ளே அரங்கனைக் கண்ட வேங்கடாத்ரி
சுவாமிகள் தன்னை மறந்து அரங்கன் மேலும் நம்பெருமாள் மேலும் பற்பல கீர்த்தனைகளைப் பாடினார். சுவாமிகள் கொண்டு சென்ற மாதிரிக் கிரீடம் நம்பெருமாளுக்கு வைத்துப் பார்த்தால் என்ன ஆச்சரியம்! மிக அழகாகப் பொருந்திவிட்டது. கோவில் ஊழியர்களும் மற்றப் பெரியோர்களும் சுவாமிகளின் இந்தத் திறமையையும்
அபூர்வமான ஞானத்தையும் கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். ஶ்ரீரங்கம் முழுதும் சுவாமிகளின் புகழ் பரவியது. மாதிரிக் கொண்டை போல் அசலில் செய்ய பணம் வேண்டும். வேங்கடாத்ரி சுவாமி ஒரு சபதம் எடுத்துக் கொண்டார். பாண்டியன் கொண்டையைச் செய்ய அன்றாடம் குறைந்த பட்சமாகப் பத்து ரூபாய் தேவை. தினம்
பத்து ரூபாய் கிடைக்கும் வரை தான் பட்டினியாக இருப்பது எனத் தீர்மானித்தார். சில நாட்கள் கிடைத்தது. பல நாட்கள் எதுவும் கிடைக்கவில்லை. அப்போது அவரின் முக்கியச் சீடர்கள் ஆன தரே வீடு வெங்கடசாமி நாயுடு, புதுச்சேரி அப்பாசாமி நாயுடு ஆகியோர் மனமுவந்து பத்து ரூபாய்களைக் கொடுத்து உதவினார்கள்
பணம் கிடைக்கக் கிடைக்க அரங்கனின் பாண்டியன் கொண்டைத் தயாரிப்பும் மெல்ல மெல்ல நடந்து வந்தது. கொண்டையில் பதிக்க ஒரு அங்குல அளவில் சதுர வடிவிலான மரகதக் கல் ஒன்று தேவைப் பட்டது. வேங்கடாத்ரி சுவாமி மரகதப் பச்சைக்கல்லைப் பெறப் பல வழிகளிலும் முயன்றார். அப்போது அரங்கன் அவர் கனவில் மீண்டும
தோன்றி, கல்கத்தாவில் உள்ள வைர வியாபாரி ஒருவரின் வீட்டில் வடக்கு மூலையில் உள்ள இரும்புப் பெட்டியில் கொண்டையில் பதிக்கத் தேவையான மரகதப் பச்சைக்கல் இருப்பதாகவும், அதை வேண்டிப் பெறுமாறும், அந்த வைர வியாபாரியின் பெயர் மாதவ சேட் என்றும் தெரிவித்தார். சுவாமியின் பக்தர்களின் ஒருவரான காசி
தாஸ் செளகார் என்பவர் மரகதப் பச்சையை அரங்கனுக்காகக் கேட்டுக் கடிதம் எழுதினார். மாதவ சேட் இந்தத் தகவலைக் கேட்டு அதிர்ந்தார். அரங்கனே தன் கொண்டையில் வைக்க மரகதக் கல்லைக் கேட்டிருக்கிறான் என்று மகிழ்ந்து இரும்புப் பெட்டியைத் தலைகீழாகப் புரட்டிப் பார்த்து அவர் தன் தந்தையால் வைக்கப்
பட்ட மரகதக் கல்லைக் கண்டெடுத்தார். அவருக்கோ, அவர் குடும்பத்தின் உறுப்பினர்களுக்கோ அந்தக் கல் இருந்த விவரம் அன்று வரை தெரியாது. இதை அரங்கன் அறிந்து சொன்னது கல் அவனுக்குச் சொந்தம் என்பதால் தான். கல்லை உடனடியாக அனுப்பி வைத்த மாதவ சேட், கூடவே தன்னுடைய பங்காக ஆயிரம் ரூபாய் பணமும்
அனுப்பினார். கொண்டை தயாராகி வந்தது. ஆனால் திடீரென கொண்டையைச் செய்து வந்த பொற்கொல்லனுக்குப் பேராசை பிடித்து விட்டது. ஆகவே மாதவ சேட் அனுப்பிய விலை உயர்ந்த மரகதக் கல்லை ஒளித்துவிட்டு அதற்கு பதிலாகச் சாதாரணப் பச்சைக்கல் ஒன்றை வைத்து விட்டான். அரங்கன் விடவாரா? வேங்கடாத்ரி சுவாமியின்
கனவில் தோன்றி பொற்கொல்லன் கல்லை ஒளித்த விவரத்தைத் தெரிவித்து விட்டார். தன் சீடர்களோடு பொற்கொல்லனைச் சந்திக்கச் சென்ற வேங்கடாத்ரி சுவாமியிடம் கொல்லன் முதலில் தனக்கு எதுவுமே தெரியாது என சாதித்து விட்டான். ஆனால் அப்பாசாமி நாயுடுவும் மற்றும் சிலரும் அவனை மிரட்டி விசாரிக்கவே, கல்லை
மாற்றியதை ஒப்புக் கொண்டு அதைத் திரும்பக் கொடுத்தான். உண்மையான மரகதக் கல் பதிக்கப்பட்டுப் பாண்டியன் கொண்டை தயாராகி அரங்கனுக்குச் சமர்ப்பிக்க எடுத்துச் செல்லப்பட்டது. தன் சீடர்களுடன் கொண்டையை ஊர்வலமாக எடுத்துச் சென்றார் வேங்கடாத்ரி சுவாமிகள். திருவரங்கத்தில் மார்கழி மாதம் வைகுண்ட
ஏகாதசி நாளில் ருத்ரோகாரி ஆண்டில் 1863 ஆம் ஆண்டில் அந்தப் பாண்டியன் கொண்டை அரங்கனுக்குச் சமர்ப்பிக்கப் பட்டது. இன்றளவும் அந்தப் பாண்டியன் கொண்டை முக்கிய தினங்களில் மட்டுமின்றி வைகுண்ட ஏகாதசி அன்றும் நம்பெருமாளை அலங்கரித்து வருகிறது.
தகவல் இணையத்தில் இருந்து.
ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் காஞ்சி வரதராஜப் பெருமாளிடம் நேருக்கு நேர் பேசும் ஆற்றல் பெற்றவர் #திருக்கச்சிநம்பிகள். இவர் காஞ்சி வரத /தேவப்பெருமாள் கோவிலில் எம்பெருமானுக்கு ஆலவட்டம் (விசிறி) வீசும் சேவையை செய்து வந்தார். இவர் வீசும் ஆலவட்டச் சேவையில் வரதருக்கு அலாதி சுகம். திருக்கச்சி
நம்பிகள் ஒருநாள் தேவப்பெருமாள் சன்னிதிக்கு வரவில்லை என்றாலும் தேவபெருமாள் அவரை எதிர்பார்த்துக் காத்திருப்பார். திருக்கச்சி நம்பிகளும் தினம் தேவப்பெருமாளை பார்க்க வந்து விடுவார். காஞ்சிபுரத்தில் இராமானுஜரும் தன் மனைவியோடு வசித்து வந்தார். இராமானுஜர் தனக்கு ஒரு குருவைத் தேடி
அலைந்து கொண்டிருக்கையில், திருக்கச்சி நம்பிகளிடம் தன்னை சீடராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்ட, திருக்கச்சி நம்பிகளோ தாழ்வான குலத்தில் நான் பிறந்ததால் உங்களை சிஷ்யராக ஏற்க முடியாது என்று தீர்க்கமாக கூறிவிட்டார். அப்போது ஸ்ரீராமானுஜர் திருக்கச்சி நம்பிகளிடமே தன் பிரச்சினையைத் தீர்க்க
#திருத்துறைப்பூண்டிஸ்ரீமருந்தீஸ்வரர் #சுமங்கலி_பாக்கியம்
திலிபச்சக்கரவர்த்தி காட்டுக்கு வேட்டைக்கு வந்தபோது பெண் மானுடன் சுற்றிக்கொண்டிருந்த ஒரு ஆண்மான் மீது அம்பெய்தார். ஆனால் அது ஒரு முனிவராக மாறியது. அந்த முனிவர் கடும் அவஸ்தைப்பட்டு இறந்தார். இதைக்கண்ட பெண் மான் ரிஷிபத்தினி
வடிவெடுத்தது முனிவர் மீது விழுந்து அழுதாள். நிலைமை விபரீதமாகி விட்டதைக் கண்ட ராஜா, அவளருகே ஓடிவந்தார். அம்மா, மான் என்று நினைத்தே அம்பெய்தேன். இப்படி ஆகிவிட்டதே! அந்தணரைக் கொன்றதன் மூலம் கடுமையான பிரம்மஹத்திக்கு ஆளாகித் தவிக்கிறேனே என்று கண்ணீர் வடித்தார். அதுகேட்ட ரிஷிபத்தினி,
மன்னா இது தாங்கள் அறியாமல் செய்த தவறு. இது மன்னிப்பிற்குரியதே. இருப்பினும், என் கணவரின்றி என்னால் வாழ இயலாது. என்னையும் கொன்று விடுங்கள் என்று அழுதாள். மன்னரின் மனம் இன்னும் வேதனைப்பட்டது. ஒரு பெண்ணை அதிலும் அந்தணப் பெண்ணைக் கொன்று மேலும் பாவத்தை வரவழைத்துக் கொள்வதா! ஐயையோ! என்ன
#ஸ்நானம் பற்றி முக்கிய தகவல்கள் அடங்கிய பதிவு இது. ஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நம் சாஸ்திரங்கள் விவரமாக சொல்கின்றன. ஸ்நானங்கள் இரு வகைப்படும். அவை #முக்கிய ஸ்நானம் #கௌண ஸ்நானம் ஆகும். க்ரியா ஸ்நானம், காம்ய ஸ்நானம், நைமித்திக ஸ்நானம், க்ரியாங்க ஸ்நானம்
மலாபாஹர்ஷண ஸ்நானம், நித்ய ஸ்நானம் ஆகியவை முக்கியமானவை.
#க்ரியா ஸ்நானம்: பவித்திரமான புண்ணிய நதிகளில் நீராடுவதே க்ரியா ஸ்நானம். நதியின் நீரோட்டம் எந்தப் பக்கம் இருக்கின்றதோ, அதற்கு எதிர்முகமாக நின்றுகொண்டு (நீரோட்டத்தை எதிர்த்தாற்போல்) நீரில் நன்கு மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும்.
#காம்ய ஸ்நானம்: ஒரு சிலருக்கு பரிகாரத்துக்காக சில க்ஷேத்திரத்தில் இருக்கும் குளங்களில் ஸ்நானம் செய்ய நேரிடும். அவ்வாறு குளிக்கும்போது, வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் சூரியனைப் பார்த்து நின்றுகொண்டு குளத்தில் மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும்.
#பகவத்கீதை எளிய விளக்கம்:
பகவத் கீதை என்பது
விடு – பிடி அல்லது
பிடி – விடு
விடு பிடி என்றால், இந்த உலக பந்தங்களையெல்லாம்
உதறித் தள்ளிவிடு. அதே நேரம் பரந்தாமன் பாதங்களை இறுகப் பற்றிக்கொள் என்று அர்த்தம். ஆனால் நம்மைப் போன்ற சாமான்ய மக்களுக்கு, இந்த உலக பந்தங்களை எல்லாம் உதறித்
தள்ளுவது எளிதல்ல. பிறகு எவ்வாறு பரந்தாமன் பாதங்களைப் இறுகப் பற்றுவது? கவலை வேண்டாம். இன்னொரு வழி உள்ளது. அது தான் பிடி விடு.
பிடி என்றால் முதலில் பரந்தாமன் பாதங்களைப் பிடி அல்லது பற்று. அந்தப் பிடி இறுக, இறுக இந்த உலக பந்தங்களின் மேல் உங்களுக்குள்ள பிடிப்பு தானாக தளர்ந்துவிடும்.
இது எப்படி என்று புரிந்து கொள்ள ஓர் எளிய உதாரணம் உள்ளது. ஹோமத்துக்கான சில சமித்து குச்சிகள், ஒரு கயிற்றால்
இறுக்கமாகக் கட்டப்பட்டுள்ளன, முடிச்சை அவிழ்க்க முடியவில்லை.
(இது நம்முடைய உலக
பாசபந்தம் ) வேறு ஒரு கயிறு எடுத்து அதற்குப் பக்கத்திலேயே அதை விட இறுக்ககட்டி ஒரு குலுக்கு
ஒரு சமயம் மஹா பெரியவாளைத் தரிசிக்க தேனாம்பேட்டையில் இருந்து நாற்பதுக்கும் மேற்பட்ட அந்தணர்கள் வந்திருந்தனர். வந்தவர்கள் மகானை வணங்கிய பின் தங்களுடைய பொதுவான மனவேதனையை வெளியிட்டனர். அந்த காலகட்டத்தில், சென்னை தேனாம்பேட்டை பகுதியில் பொதுவாக அந்தணர்களின் நெற்றியில் விபூதி, திருமண்,
தோளில் பூணூல், ஆகியவற்றைக் கண்டால் சில நாஸ்திகர்கள் கேலி, கிண்டல் செய்து கலாட்டாக்களில் இறங்கி விடுவதாகவும் அதனால் அந்தப் பகுதியில் பிராம்மணர்கள் கௌரவமாக நடமாட முடியவில்லை என்றும் தெரிவித்தனர். அதைப்பற்றி விவரமாகத் தெரிந்து கொண்ட மகான் அவர்களிடம் சொன்னது ஒரே விஷயந்தான்: "நீங்கள்
தினமும் காயத்ரி மந்திரத்தை ஜெபம் செய்யுங்கள். எல்லாமே பிறகு சரியாகிவிடும்" என்றார்.
அதேபோல் அவர்கள் இரண்டுமாதம் தொடர்ந்து ஜெபம் செய்து முடிப்பதற்குள், எல்லாமே சரியானதாக மறுபடியும் மகானிடம் நேரில் வந்து மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள். அப்போது பெரியவா அவர்களிடம் சொன்னார்:
இயேசு நமக்காக சிலுவையில் அறையப்பட்டு மரித்தார் என்று கிறிஸ்தவ பெண் கூறினார்.
சிவபெருமான் நமக்காக விஷம் குடித்து உயிருடன் இருக்கிறார் என்றேன்.
ஒருபுறம் கிறிஸ்துவிற்கு நான்கு ஆணிகள் அடிக்கப்பட்ட இறக்கிறார்.
மறுபுறம் பீஷ்ம பிதாமகர் நூற்றுக்கணக்கான அம்புகள் கொண்ட அம்புப் படுக்கையில்
உயிருடன் இருக்கிறார்.
மூன்றாம் நாள் இயேசு சுய நினைவுக்கு வந்தார்.
அதே நேரத்தில் பீஷ்மர் 58 நாட்கள் அம்பு படுக்கையில் முழு சுயநினைவுடன் இருந்தார். வாழ்க்கை, ஆன்மீகம், அறிவு ஆகியவற்றின் விலை மதிப்பற்ற சொற்பொழிவுகளை வழங்கினார். மேலும் தனது உடலை விட்டு, தான் விருப்பப்பட்ட காலத்தில்
உயிர் துறந்தார். நம் பாரத தேசத்தில் பிதாமகர் பீஷ்மரைப் போல் எண்ணற்ற பெரிய ஞானிகள் இருந்திருக்கிறார்கள்.
சிந்தித்துப் பாருங்கள். நாம் ஏன் நம் இந்துக் குழந்தைகளை சாண்டா கிளாஸ் ஆக்க வேண்டும்? ஏன் வீட்டில் பிளாஸ்டிக் கிறிஸ்துமஸ் மரத்தை வைக்க வேண்டும்? மத மாற்ற வலையில் விழ வேண்டாம்.