“இந்தப் புராண, இதிகாச, வேதம் என்பவை, அவை எவ்வளவு செல்வாக்கு பெற்றவையாக இருந்தாலும், அது கண்டு மனம் தளராமல், மலைத்துவிடாமல், அவை பற்றிய உண்மைகளை ஆராய்ந்து,
அவை மனிதனால் மனிதனுக்காக ஏற்படுத்தப்பட்ட பழைய கற்பனைகள், கதைகள், வாழ்க்கை முறைகள் என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டி, அவற்றின் மயக்கத்திலிருந்து அவர்களை விடுவித்து,
மனிதர்களாக்கிப் பார்ப்பதைவிட, அதற்குப் பாடுபடுவதைவிட, மனிதாபிமானம் படைத்தவர்களுக்கு வேறு என்ன வேலை இங்கு இருக்க முடியும்?”
- புவனன்
எழுத்தாளர் புவனனின் ஒரு அற்புதமான நூல் தான் கீதையோ கீதை! பைபிளோ பைபிள்! குரானோ குரான்! இதில் அவரது கட்டுரை நாத்திகம் வேண்டும், ஏன்? என்பதும் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
எல்லா மத நூல்களையும் படித்து உணர்ந்தவர்கள் தான் உண்மையான இறை மறுப்பாளர்களாக இருக்க முடியும் என்பதற்கு ஏற்றார் போல புவனன் மூன்று மத நூல்களையும் படித்து அவற்றில் உள்ள மூடத்தனங்களை பட்டியலிட்டு சொல்லி இருக்கிறார். எல்லாமே நெற்றியடி!
சாம்பிளுக்கு சில 👇: 1. கடவுளுக்கு அன்னியர் எப்படி?
பைபிளில், கடவுள் அடிக்கடி, அந்நிய தேசங்கள் (2 நாளா:12 தி அந்நிய தேவர்கள் (2 நாளா:14-13), அந்நிய சாதிகள்(எண்:15-26) அந்நிய நீதிபதிகள்(மீகா3-11), அந்நிய தீர்க்கதரிசிகள்(எரேமி:29-9), என்று சொல்வதைப் பார்க்கிறோம்.
வானமும் பூமியும், அனைத்தையும் படைத்துக் காக்கும், கடவுளின் வாயில் இந்த வார்த்தைகள் வர வேண்டுமா? வரலாமா? இவை வேத புத்தகத்தில் இடம் பெற வேண்டுமா? பெறலாமா?
2. "இங்கே பக்திதான் ஒழுக்கத்திற்கு அடிப்படை" என்று சிலர் சொல்லுகிறார்கள். இவர்கள் கன்னத்தில் பளார் என்று அடிக்கிறமாதிரி பகவான் "தீயொழுக்கம் மிக்கவனும்கூட என்னை வேறொரு நாட்டம் இன்றிப் போற்றுவானெனில், அவன் நன்னடத்தயுடையவன் என்றே கருதற்குரியவன்" (9-30) என்று உரைக்கிறார்.
3. புனிதம் என்பதே இயல்புக்கு மாறானது. இங்கு முடிந்த முடிவு என்று எதுவுமே கிடையாது. இதனால் ஒழுக்கமும் அறிவு வளர்ச்சிக்குத் தக்கபடி வசதி வாய்ப்புக்குத் தக்கபடி காலம், இடம், தேவையைப் பொறுத்து மாறுபடுவது என்பது தவிர்க்க முடியாததாகும்.
4. சொர்க்கத்தில் ஹருல், ஈன் என்னும் கண்ணழகிகள் இருப்பார்கள். அவர்கள் ஒருவராலும் பெற்றெடுக்கப்பட்டவர்கள் அல்ல, நிச்சயமாக நாம் அவர்களைப் படைத்திருக்கிறோம். இவர்கள் பேணிக்காக்கப்படும் ஆணி முத்துக்களைப் போல் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர்.
அவர்களை யாதொரு மனிதனோ, மலக்குகளோ தீண்டியதில்லை (56-22,23,35). முற்றிலும் கைபடாத ரோஜாக்கள்! ஆமா, மலக்குகளும் கைபோடுவது உண்டோ?!
5. இந்தக் கடவுள் நம்பிக்கையாளர்கள், எவ்வளவு புரட்சிக் காரர்களாக இருந்தால்கூட, எப்போதுமே மாறுபட்டே நடந்து கொள்ளுகிறார்கள்.
இதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால், மார்டின்லுதர், போப்பின் ஆதிக்கத்தை எதிர்த்து, மாபெரும் புரட்சி செய்தவர், புரட்டஸ்டான்ட் மதத்தையே உருவாக்கியவர். இவர் பேசுகிறார், "அடிமைத்தனம் ஒழிந்துவிட்டால் எல்லா மனிதர்களும் சமத்துவம் பெற்று விடுவார்கள்".
அதனால் இயேசுவின் பரலோக ராச்சியம், இவ்வுலகத்தைச் சார்ந்த ஒன்றாகிவிடும். அது கூடவே கூடாது” என்கிறார். எவ்வளவு உயர்ந்தவராக இருந்தாலும் கடவுள் நம்பிக்கையாளர்கள் மனித சுதந்திரத்துக்கு, சமத்துவத்துக்கு எதிராகவே இருப்பார்கள்.
6. பொய் என்றாலே நாம் வெறுப்பு அடைகிறோம். ஆனால் உலகிலேயே பெரிய பொய் கடவுள்தான் என்பதைத் தெரியாமல் இருக்கிறோமே. இதைப்போல பெரிய மூடநம்பிக்கை கடவுளேயாகும். இருந்தும் கடவுள் நம்பிக்கை உண்டு, மூடநம்பிக்கை கிடையாது என்று சொல்வதற்கு வெட்கப்படுவதில்லையே,
7. அன்றைய மார்க்சும், லெனினும் வளர்த்த கம்யூனிசத்தை இப்போது காணமுடியுமா? காந்தியும், நேருவும் வளர்த்த காங்கிரஸ் இன்று உண்டா? அமைப்பு என்பது பெரும்பாலும் அதை ஏற்படுத்தியவர் காலம் வரைக்கும்தான். அப்புறம் உயிர். ஆம், லட்சியம், போய் விடும். கூடுதான் மிஞ்சும்.
போலித்தனமும் (சம்பிரதாயங்கள்) வியாபாரமும் புகுந்து கொண்டு ஆட்டம் போடும். "என்னை நம்பியே இப்பெரும்பணி ஏற்றேன்" என்றுதான் பெரியார் எழுதினார். போட்டி சந்தை நடத்துகிறவர்கள்தான் கூட்டத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும்.
உண்மை எங்கே மறைத்து வைக்கப்பட்டாலும், தடுத்து வைக்கப்பட்டாலும், உலகம் அதை ஒரு நாள் அடையாளம் கண்டு தேடி வரவே செய்யும் என்ற உறுதிதான் முக்கியம்.
3 மத நூல்களுக்கும் ஒரு guide போல இருக்கும் இந்த புத்தகத்தை நிகர்மொழி பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது.
புதிது புதிதாக தோன்றும் சாமியார்களை விமர்சிக்கும் நாம், அந்த சாமியார்கள் எங்கிருந்து பாடம் கற்றார்கள் என்பதை தெரிந்து கொள்ள இந்த புத்தகத்தை அவசியம் படிக்க வேண்டும்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு என்று ஒரு சிறப்பு உண்டு, அது அதற்கென்று எந்த சிறப்பும் இல்லை என்பதே! Constantine கிறிஸ்தவ மதத்திற்கு நாட்டை மாற்றியதும் ஏற்கனவே கொண்டாடி வந்த pagan பண்டிகைகளுக்கு கிறிஸ்துவ காரணம் குடுத்தார்.
இந்த டிசம்பர் மாதம் என்பது பனியில் வீட்டுக்குள் அடைந்த மக்கள் எதோ ஒரு காரணம் சொல்லி குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முயலும் மாதமாக இருந்தது. பல மதங்களில் டிசம்பர் மாதம் பண்டிகை மாதமாக இருக்கிறது.
Winter Solstice என்னும் ரோம பண்டிகை, Saturnalia (Roman கடவுள் Saturn ஐ சிறப்பிக்கும் பண்டிகை), Dies Natalis Solis Invicti (பனிக்கால துவக்கத்தை குறிக்கும் பண்டிகை) Yule (ஜெர்மனியர்களின் பனிக்கால பண்டிகை), Hanukkah (யூத பண்டிகை), Yalda (பெர்ஷிய பனிக்கால பண்டிகை)
சமகாலத்தில் நம் கண் முன்னாடி திடீரென்று முளைக்கும் சாமியார்களை நாம் எப்படி பகடி செய்து விமர்சனம் செய்து கேள்விக்குள்ளாக்குகிறோமோ அதே போல தான் இன்று establish ஆகி இருக்கும் பல மதங்களின் தோற்றுவிப்பாளர்களை
அன்றைய காலத்தில் அவர்களது சமகால மக்கள் கேலி செய்து விமர்சனத்திற்கு உள்ளாகி இருப்பார்கள். இன்று எப்படி பிடிங்க சார் பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார் என்று பொங்குகிறோமோ அதே போல தான் அன்றும் மக்கள் பொங்கி இருப்பார்கள்.
2000 வருடங்களுக்கு முன் நடந்ததை புனிதப்போராக பார்க்கும் நாம் இன்று நடப்பதை கலக்கப்போவது யாரு என்பது போல பார்த்து சிரித்து மகிழ்கிறோம்.
எல்லா சாமியார்களும் தொடக்கத்தில் ஒரு cult தான். அது யேசுவாக இருந்தாலும், நபிகளாக இருந்தாலும், ஜக்கியாக இருந்தாலும்.
Tiresias கண் இல்லாதவராக இருந்தாலும் ஞான கண் இருக்கும் ஒரு தீர்க்கதரிசி. மக்களின் எதிர்காலத்தை சொல்லக்கூடியவர். இவரது பார்வை போனதற்கும் ஞான கண் வந்ததற்கும் இரண்டு விதமான கதைகள் இருக்கின்றன.
1. ஒருமுறை Athena நிர்வாணமாக குளித்து கொண்டு இருந்ததை தெரியாமல் பார்த்துவிட்ட Tiresias இன் கண் மேல் Athena கையை வைத்து அவரது பார்வையை பறித்து விடுகிறாள். ஆனால் தான் தெரியாமல் செய்துவிட்டதாக Tiresias வருந்தவும் பரிதாபப்பட்டு அவருக்கு ஞான கண்ணை தருகிறாள்.
பொதுவாகவே கிரேக்கத்தில் தீர்க்கதரிசிகள், அறிவாளிகள், கவிஞர்கள் எல்லாம் பார்வை இல்லாதவர்களாகவே சித்தரிப்பது கிரேக்க வழக்கம்.
2. இன்னொரு கதையில் Hera விற்கும் Zeus க்கும் நடுவில் சண்டை நடந்தபோது Tiresias, Zeusக்கு ஆதரவாக இருந்ததால் Hera அவரது பார்வையை பறித்துவிட்டதாக கூறப்படுகிறத
மதம் தான் மனிதனை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியதா? இல்லை! சிந்தனையாளர்கள் தான் மனிதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறார்கள். சாக்ரடீஸ் முதல் பெரியார் வரை புரட்சியாளர்கள் தான் சமூகத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கின்றனர்.
இவர்களது சிந்தனைகளை மதம் கால ஓட்டத்தில் தனக்குள் இணைத்து கொண்டது. எகிப்திய அரசன் Akhenaten தான் உலகில் ஒரே கடவுள் தத்துவத்தை முதலில் கொண்டு வந்தது. சூரிய வழிபாடு மட்டுமே இருக்க வேண்டும்.
மந்திரம் தந்திரம் போன்றவை இருக்க கூடாது என்றெல்லாம் இவர் கொண்டு வந்த மாற்றங்களை சகிக்காத அந்நாட்டு மதவாதிகளால் இவர் கொல்லப்பட்ட இருக்க கூடும் என்று நம்பப்படுகிறது. Akhenaten கொண்டு வந்த மாற்றங்கள் எல்லாம் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.
Doctrine of signatures அப்படின்னு ஒரு விஷயம் இந்த folk medicine அதாவது நாட்டு மருத்துவங்களில் உபயோகிக்க கூடிய ஒன்று. இது என்ன அப்படின்னா, ஒவ்வொரு வியாதிக்கும் ஒரு மூலிகை உண்டு.
அந்த மூலிகை ஒவ்வொன்றும் நாம் கண்டுபிடிக்க ஏதுவாக அந்த வியாதி அல்லது உடல் உறுப்புடன் தொடர்புடைய ஒரு குணாதிசயத்தோடு இருக்கும். உதாரணத்திற்கு மஞ்சள் காமாலை க்கு உரிய மூலிகை செடியின் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதய நோய்களுக்கு ஏற்ற மூலிகைகளின் இலைகள் இதய வடிவில் இருக்கும்.
செடிகள் மற்றும் அல்லாமல் மிருங்கங்களின் ரத்தம், உடல் உறுப்புகள், தாதுக்கள் போன்றவைகளும் நாட்டு மருத்துவத்தில் பயன்படுகிறது. பாதரசம் அடங்கிய மோதிரம் அணிவது தலைவலிக்கு நல்லது செப்பு வளையல் அணிவது மூட்டு வலிக்கு நல்லது என்றெல்லாம் இருக்கின்றன.