கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு என்று ஒரு சிறப்பு உண்டு, அது அதற்கென்று எந்த சிறப்பும் இல்லை என்பதே! Constantine கிறிஸ்தவ மதத்திற்கு நாட்டை மாற்றியதும் ஏற்கனவே கொண்டாடி வந்த pagan பண்டிகைகளுக்கு கிறிஸ்துவ காரணம் குடுத்தார்.
இந்த டிசம்பர் மாதம் என்பது பனியில் வீட்டுக்குள் அடைந்த மக்கள் எதோ ஒரு காரணம் சொல்லி குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முயலும் மாதமாக இருந்தது. பல மதங்களில் டிசம்பர் மாதம் பண்டிகை மாதமாக இருக்கிறது.
Winter Solstice என்னும் ரோம பண்டிகை, Saturnalia (Roman கடவுள் Saturn ஐ சிறப்பிக்கும் பண்டிகை), Dies Natalis Solis Invicti (பனிக்கால துவக்கத்தை குறிக்கும் பண்டிகை) Yule (ஜெர்மனியர்களின் பனிக்கால பண்டிகை), Hanukkah (யூத பண்டிகை), Yalda (பெர்ஷிய பனிக்கால பண்டிகை)
இப்படி பல பண்டிகைகள் அந்த காலகட்டத்தில் கொண்டாடப்பட்டு வந்தது. Constantine கிறிஸ்தவ மதத்திற்கு ஒரு பண்டிகை வேண்டும் என்பதற்காக pagan பண்டிகையை கிறிஸ்துமஸ் என மாற்றிவிட்டார். பெயரும், பண்டிகைக்கான காரணமும் தான் மாற்றம். மற்றபடி சடங்குகள் கொண்டாடும் முறை எல்லாம் pagan முறைப்படிதான்
கிறிஸ்துவின் பிறப்புக்கு பைபிளில் சரியான தேதி கொடுக்கப்படவில்லை, விளக்கங்களின் அடிப்படையில் பார்க்கையில் அது குளிர்காலத்தின் நடுப்பகுதியில் நடந்திருக்க வாய்ப்பில்லை.
1. Die Natalis Solis Invicti என்று அழைக்கப்படும் முந்தைய ரோமானிய திருவிழா 25 டிசம்பர் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை இது சூரிய கடவுளின் பிறந்தநாள்.
2. குரோனியா மற்றும் சாட்டர்னாலியா:
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியதாக நம்பப்படும் பிற பண்டிகைகள் கிரேக்க குரோனியா மற்றும் ரோமன் சாட்டர்னாலியா ஆகும்.
குரோனியா என்பது பண்டைய ஏதெனியன் திருவிழா. அறுவடையின் கடவுளான க்ரோனோஸ் (Kronos (Cronus)) கிரேக்க கடவுளை கௌரவிக்கும் ஒரு பண்டிகை . கிரேக்க கடவுள்களும் ரோமானிய கடவுள்களும் ஒன்றுதான் பெயர் மட்டும் தான் வேறு வேறு என்று முன்பே சொல்லி இருக்கிறேன்.
Cronus இன் ரோமானிய வடிவம் தான் Saturn, Saturn க்காக கொண்டாடப்படும் பண்டிகை தான் Saturnalia. குரோனியா அறுவடை காலமான கோடை காலத்திலும் Saturnalia விதைப்பு காலமான குளிர்காலத்திலும் கொண்டாடப்பட்டு வந்தது.
இந்த சாட்டர்னேலியா பண்டிகையில் பழம், ரொட்டி, wine போன்றவற்றை சாப்பிடுவதும், மெழுகுவர்த்திகள், பழங்களின் மெழுகு மாதிரிகள் மற்றும் மெழுகு சிலைகள் போன்ற சிறிய பரிசுகளை பரிமாறிக்கொள்வதும் வழக்கம்.
அது போக அந்த பனியில் தழைத்து இருக்க கூடிய மரமான pine மற்றும் mistletoe போன்றவற்றை வீடுகளில் கொண்டு வந்து அலங்கரித்து வைத்தால் அது அதிர்ஷ்டம் என்றும் நம்பினார். இதெல்லாம் Saturnalia என்னும் ரோம பண்டிகையின் கொண்டாட்ட முறைகள்.
இந்த கொண்டாட்ட முறை தவறு என்று பைபிளிலும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
எரேமியா 10: "புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்; காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும்.
வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து, அது அசையாதபடிக்கு அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள். அவைகள் பனையைப்போல நெட்டையாய் நிற்கிறது, அவைகள் பேசமாட்டாதவைகள், அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்படவேண்டும்;
அவைகளுக்குப் பயப்படவேண்டாம்; அவைகள் தீமைசெய்யக்கூடாது, நன்மைசெய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார். அவர்கள் யாவரும் மிருககுணமும் மதியீனமுமுள்ளவர்கள்; அந்தக் கட்டை மாயையான போதகமாயிருக்கிறது."
ஆனால் ரோம மக்கள் பண்டிகை கொண்டாடிய தீரவேண்டும் என்று உறுதியாக இருந்ததால் Constantine இந்த வசனத்தை எல்லாம் choice ல விட்டுட்டாரு.
3. Dionysus:
இவர் ஒரு கிரேக்க கடவுள் இவரோட Roman version Bacchus. இந்த Dionysus மது, திராட்சை அறுவடை, சடங்கு, பண்டிகை மற்றும் நாடகத்தின் கடவுள்.
Dionysus, Zeus இன் மகன் இந்த டைடன்களுக்குள் நடந்த சண்டையில் இறந்த Dionysus மீண்டும் உயிர்த்தெழுகிறார் (எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா?!). டியோனிசஸ் ஒரு தொன்மையான தெய்வம், உயித்தெழுதலின் தெய்வம். இந்த Dionysus கதையை அப்படியே summarize பண்ணி பாருங்க.
Dionysus அப்பா தான் எல்லாம் வல்ல கடவுள் Zeus. அம்மா ஒரு மனுஷி கடவுள் இல்லை. மனிதனுக்கும் கடவுளுக்கும் பிறந்த இவர் கொல்லப்படுகிறார். பின் மீண்டும் உயிர்த்தெழுந்து வருகிறார். இவருடைய பிறப்பு டிசம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
4. சாண்டா கிளாஸ் (Santa Claus) மற்றும் புனித பசில் ( Saint Basil):
உலகளவில் கிறிஸ்துமஸ் கதைகளுடன் மிகவும் தொடர்புடைய நபர் சாண்டா கிளாஸின் உருவமாக இருக்கலாம். குழந்தைகளுக்கான பரிசுகளை எடுத்துச் செல்லும் வெள்ளைத் தாடியுடன் கூடிய மகிழ்ச்சியான மனிதராக சாண்டாவின் நவீன சித்தரிப்பு
பல்வேறு (முக்கியமாக ஐரோப்பிய) மரபுகளின் கலவையை அடிப்படையாகக் கொண்டது. Santa Claus புனித நிக்கோலஸ் (Saint Nicholas) என்னும் வரலாற்று நபருடன் தொடர்புடையதாகத் தெரிகிறது,
Santa Claus டச்சு வார்த்தையான “Sinterklaas“, அதாவது St Nicholas என்னும் வார்த்தையில் இருந்து வந்து இருக்க கூடும் என சொல்லப்படுகிறது.
கிரேக்கத்தில், பரிசு தாங்கிய தாடி முதியவரின் உருவம் செயிண்ட் நிக்கோலஸுக்குப் பதிலாக செயிண்ட் பசில் என சொல்லப்படுகிறது;
அவர் புத்தாண்டு தினத்தில் பரிசுகளை கொண்டு வருவார் என்று நம்பப்படுகிறது, இது கிரேக்கத்தில் புனித பசிலின் பண்டிகை நாளாகவும் உள்ளது.
கிறிஸ்துவம் பரவிய எல்லா நாடுகளிலும் இருந்தும் எல்லா மதத்தில் இருந்தும் சடங்குகளை எடுத்துக்கொண்டு இன்று ஒரு கூட்டு போல அமைந்து இருக்கிறது கிறிஸ்துமஸ் பண்டிகை. Mistletoe, elf on shelf, gingerbread house, Santa Claus, Christmas tree, Grinch, snowman, carols, stockings, yule log
இப்படி எக்கச்சக்கமான pagan சடங்குகள் இன்று கிறிஸ்துமஸ் சடங்காக உருமாற்றப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு இறந்து 300 வருடங்கள் கழித்து ஆரம்பிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் விழாவிற்கும் யேசுவிற்கும் பெயரை தவிர எந்த சம்பந்தமும் இல்லை என்பதுதான் உண்மை.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இன்று பொதுவான கருத்து ஆங்கிலேயர்கள் பண்பாடு மற்றும் நடத்தையில் சிறந்தவர்கள் என்பது. English Etiquette இன்று உலகில் பிரபலம். ஆங்கிலேயர்கள் எதையும் முறையாக செய்யக்கூடியவர்கள். எல்லாவற்றிக்கும் ஒரு ரூல் இருக்கிறது.
எதை எப்படி செய்ய வேண்டும் என்று ஒரு முறை இருக்கிறது. அடுத்தவருக்கு தொல்லை தராமல் நமது செய்கைகள் இருக்க வேண்டும் இதுதான் etiquette இன் அடிநாதம்.
வரிசையில் நிற்க வேண்டும், அடித்து பிடித்து ஓட கூடாது,
நமது பாதையில் குறுக்கே நிற்கும் ஒருவரை கடந்து செல்லும்போது excuse me சொல்ல வேண்டும், வயதானவர்கள் பெண்களுக்கு கதவை திறந்துவிட வேண்டும், புதிதாக அறிமுகம் ஆகும் போது அவர்களிடம் வயது, வருமானம் போன்றவற்றை கேட்பது அநாகரீகம்,
அகக்கண்ணாடி
ஒரு மனநல மருத்துவரின் டைரிக்குறிப்புகள்
டாக்டர் ரைஸ் இஸ்மாயில்
2021 முடியும் போது ஒரு நல்ல புத்தகத்துடன் முடித்து இருக்கிறேன் என்கிற நிறைவு இந்த புத்தகத்தை முடித்ததும் வந்தது.
நடைமுறை வாழ்வியல் சார்ந்த அறிவியல் மனப்பான்மையை மக்களிடம் வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் “வாழ்க்கைக்கான அறிவியல்" (Science of Living) எனும் தலைப்பில், இந்நூலை நிகர்மொழி பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது. மனநலத்திற்கு நமது சமூகம் இன்றளவும் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை.
எல்லாம் போகப் போக சரியாப் போயிடும், பூஜை போட்டா சரியா போயிடும், கல்யாணம் செய்தால் சரியா போயிடும், tour போனால் சரியா போயிடும் என்று அலட்சியமாக தான் கையாளப்படுகிறது. மருத்துவ ஆலோசனை பெறுவதை அவமானமாகவும் கருதுகிறது.
“இந்தப் புராண, இதிகாச, வேதம் என்பவை, அவை எவ்வளவு செல்வாக்கு பெற்றவையாக இருந்தாலும், அது கண்டு மனம் தளராமல், மலைத்துவிடாமல், அவை பற்றிய உண்மைகளை ஆராய்ந்து,
அவை மனிதனால் மனிதனுக்காக ஏற்படுத்தப்பட்ட பழைய கற்பனைகள், கதைகள், வாழ்க்கை முறைகள் என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டி, அவற்றின் மயக்கத்திலிருந்து அவர்களை விடுவித்து,
மனிதர்களாக்கிப் பார்ப்பதைவிட, அதற்குப் பாடுபடுவதைவிட, மனிதாபிமானம் படைத்தவர்களுக்கு வேறு என்ன வேலை இங்கு இருக்க முடியும்?”
சமகாலத்தில் நம் கண் முன்னாடி திடீரென்று முளைக்கும் சாமியார்களை நாம் எப்படி பகடி செய்து விமர்சனம் செய்து கேள்விக்குள்ளாக்குகிறோமோ அதே போல தான் இன்று establish ஆகி இருக்கும் பல மதங்களின் தோற்றுவிப்பாளர்களை
அன்றைய காலத்தில் அவர்களது சமகால மக்கள் கேலி செய்து விமர்சனத்திற்கு உள்ளாகி இருப்பார்கள். இன்று எப்படி பிடிங்க சார் பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார் என்று பொங்குகிறோமோ அதே போல தான் அன்றும் மக்கள் பொங்கி இருப்பார்கள்.
2000 வருடங்களுக்கு முன் நடந்ததை புனிதப்போராக பார்க்கும் நாம் இன்று நடப்பதை கலக்கப்போவது யாரு என்பது போல பார்த்து சிரித்து மகிழ்கிறோம்.
எல்லா சாமியார்களும் தொடக்கத்தில் ஒரு cult தான். அது யேசுவாக இருந்தாலும், நபிகளாக இருந்தாலும், ஜக்கியாக இருந்தாலும்.
Tiresias கண் இல்லாதவராக இருந்தாலும் ஞான கண் இருக்கும் ஒரு தீர்க்கதரிசி. மக்களின் எதிர்காலத்தை சொல்லக்கூடியவர். இவரது பார்வை போனதற்கும் ஞான கண் வந்ததற்கும் இரண்டு விதமான கதைகள் இருக்கின்றன.
1. ஒருமுறை Athena நிர்வாணமாக குளித்து கொண்டு இருந்ததை தெரியாமல் பார்த்துவிட்ட Tiresias இன் கண் மேல் Athena கையை வைத்து அவரது பார்வையை பறித்து விடுகிறாள். ஆனால் தான் தெரியாமல் செய்துவிட்டதாக Tiresias வருந்தவும் பரிதாபப்பட்டு அவருக்கு ஞான கண்ணை தருகிறாள்.
பொதுவாகவே கிரேக்கத்தில் தீர்க்கதரிசிகள், அறிவாளிகள், கவிஞர்கள் எல்லாம் பார்வை இல்லாதவர்களாகவே சித்தரிப்பது கிரேக்க வழக்கம்.
2. இன்னொரு கதையில் Hera விற்கும் Zeus க்கும் நடுவில் சண்டை நடந்தபோது Tiresias, Zeusக்கு ஆதரவாக இருந்ததால் Hera அவரது பார்வையை பறித்துவிட்டதாக கூறப்படுகிறத