இந்து மதத்திற்கு மாறிய ஷியா முஸ்லிம் தலைவர்… இந்து மதத்தை வளர்க்கப் போவதாக அறிவிப்பு…
உ.பி.யில் அதிகமுள்ள ஷியா முஸ்லிம்களின் தலைவராக இருப்பவர் சையது வசீம் ரிஜ்வீ. ஷியா மத்திய வக்ஃபு வாரியத் முன்னாள் தலைவரான இவர் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பெயர் பெற்றவர்.
இவர் அயோத்தி வழக்கில் ராமர் கோயிலுக்கு ஆதரவாக பேசினார். இதனால் முஸ்லிம் மவுலானாக்கள் இவரை காஃபீர்,
(முஸ்லிம் அல்லாதவர்) என மதத்திலிருந்து ஒதுக்கினர். முஸ்லிம்களின் மறைநூலான திருக்குர்ஆனின் 26 பக்கங்களில் கூறப்படும் கருத்துகள் தீவிரவாதத்தை வளர்ப்பதாகவும் அவற்றை நீக்கவும் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிஜ்வீ தொடர்ந்த வழக்கால் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால்,
அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், ரிஜ்வீக்கு ரூ.50,000 அபராதமும் விதித்தது. இந்நிலையில் தனது உயிருக்கு ஆபத்து என போலீஸ் பாதுகாப்பை பெற்ற ரிஜ்வீயை அவரது குடும்பத்தாரும் ஒதுக்கி வைத்தனர்.இந்நிலையில் ரிஜ்வீ நேற்று காலை காஸியாபாத்தின் மகாகால் தாஸ்னா கோயில் மடத்துக்கு சென்றார்.
மடத்தின் தலைவர் நரசிம்மானந்த்கிரி மஹராஜ் முன்னிலையில் இந்து மதத்துக்கு மாறினார். திரளான சாதுக்களும், இந்துத்துவாவினரும் இதில் கலந்துகொண்டனர். இந்த சடங்கு களில் ரிஜ்வீக்கு பூணூலும் அணிவிக் கப்பட்டது. பிறகு நரசிம்மானந்த்கிரி அறிவித்தபடி தனது பெயரை ‘ஜிதேந்தர் நாராயண்சிங் தியாகி’ என
மாற்றிக்கொண்டார் ரிஜ்வீ. மதமாற்ற சடங்கில் சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகமும் செய்த ரிஜ்வீ பிறகு யாகம் வளர்த்து பூஜையும் செய்தார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ஜிதேந்தர் நாராயண் சிங் கூறும்போது, ‘இஸ்லாத் திலிருந்து வெளியேற்றப்பட்டதால் எனது விருப்பப்படி இந்துவாக மாறி விட்டேன்.
உலகின் மிகப்பெரிய புனித மதமாக சனாதன தர்மம் உள்ளது. இஸ்லாம் ஒரு மதமே அல்ல. இனி இந்து மதத்தை வளர்க்க பாடுபடுவேன்’ என்றார்.முஸ்லிம்களின் இறைத்தூதரான முகம்மது நபி பற்றி ‘முகம்மது’என்ற பெயரில் ரிஜ்வீ கடந்த நவம்பர் 4-ம் தேதி வெளியிட்ட நூல் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தற்போது கூட உ.பி. ஷியா வக்ஃபு வாரியத்தின் உறுப்பினராக 21 மசூதிகளின் முத்தவல்லிகள் சார்பில் ரிஜ்வீ தேர்வு செய்யப்பட்டி ருந்தார். இந்த வாரியத்தில் அவர் தலைவராக இருந்தபோது வக்ஃபு நிலம் விற்றதில் ஊழல் புகார் எழுந்தது. இதில் ரிஜ்வீ மீதும் பதிவான வழக்குகள் உ.பி. பாஜக அரசால் சிபிஐக்கு,
மாற்றப்பட்டது. தன் மீதான வழக்குகளை கைவிட வேண்டும் என ரிஜ்வீ அளித்த கோரிக்கையை முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏற்காதது குறிப்பிடத்தக்கது.
அமித்ஷாவின் அடுத்த அதிரடி ! கோவாவில் மீண்டும் பிஜேபி ஆட்சி உறுதி !
கோவாவில் பிஜேபி ஆட்சி உறுதி ஒரு வழியாக கோவாவில் கூட்டணி குழப்பங்கள் முடிவுக்கு வந்து விட்டது. பிஜேபிகூட்டணி ஆட்சியில் இருந்த கோவா பார்வர்டு பார்ட்டி காங்கிரஸ் கூட்டணிக்கும் மகாராஷ்டிரா கோமந்தக் பார்ட்டி,திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணிக்கு சென்று இருக்கிறது.
பாஜகவினரால் அரசியல் சாணக்கியர் என அழைக்கப்படும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவா மாநில தேர்தல் பொறுப்பாளராக தேவேந்திர பட்னாவிஸும் நியமித்து மீண்டும் கோவா மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க அடுத்த அதிரடி காட்டியுள்ளார்.
திடீரென அழைத்த அமித்ஷா !
டெல்லிக்கு பறந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி !
சென்னை:கவர்னர் ஆர்.என்.ரவி திடீரென டில்லி புறப்பட்டு சென்றது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக கவர்னராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி, செப்டம்பர் 18ல் பதவி ஏற்றார். அதே மாதம் 23ம் தேதி டில்லி சென்று,ஜனாதிபதியை சந்தித்து பேசினார்.அக்டோபர் 23ல் மீண்டும் டில்லி சென்று,
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து சென்னை திரும்பினார்.
சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின், கவர்னரை சந்தித்து, ‘நீட்’ தேர்வு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப வலியுறுத்தினார்.
அமித்ஷாவின் அடுத்த மாஸ்டர் பிளானா ! புதிய கட்சியை தொடங்கும் குலாம் நபி ஆசாத் ? @AmitShah
முன்னாள் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் டெல்லியில் சிலநாட்கள் முன்பு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து பேசினர். அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு காங்கிரஸ் கட்சியில் கலக்கம் ஏற்பத்தியுள்ளது.
பஞ்சாப் மாநில முன்னாள் முதல்-மந்திரி அமரீந்தர் சிங், காங்கிரசில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை தொடங்கி உள்ளார்.அவர் பா.ஜனதாவை சேர்ந்த அரியானா மாநில முதல்-மந்திரி மனோகர் லால் கட்டாரை சந்தித்தார். பஞ்சாபில் பா.ஜனதா மற்றும் சுக்தேவ்சிங் திண்ட்சா தலைமையிலான,
சென்னை உயா் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவில், ‘ கடந்த 2003-ஆம் ஆண்டு கடலூரில் சாதி மறுப்பு திருமணம் செய்த கண்ணகி – முருகேசன் ஆகியோா் ஆணவக் கொலை செய்யப்பட்டனா்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களில் 13 போ் குற்றவாளிகள் என கடலூா் நீதிமன்றம், கடந்த செப்டம்பரில் தீா்ப்பளித்துள்ளது. அதில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு குறித்தும்,
விவசாயிகளை விவசாயம் செய்யவிடுங்கள் ! திமுகவை வறுத்தெடுத்த அண்ணாமலை !! @annamalai_k
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் விவசாயமக்கள் மத்தியில் பேசியது குறித்து கருது குறிப்பிட்டுள்ளார்..
விவசாயிகளை விவசாயம் செய்யவிடுங்கள் ! விவசாயத்தை அழித்து அந்த இடத்தில் ஒரு செங்கல்லைக் கூட நட விடமாட்டோம் !
“1, “ஆட்சிக்கு வந்தது முதல் எந்தவொரு மக்கள் நலத்திட்டத்தையும் செயல்படுத்தாத @arivalayam அரசு,விவசாய பூமியான அன்னூர் பகுதியைக் கந்தக பூமியாக மாற்றவே TIDCO தொழிற்பேட்டையைக் கொண்டு வருகிறது.ஒரு கார்ப்பரேட் நிறுவனம் சிறு சிறு துண்டுகளாக வாங்கி வைத்திருக்கும் பூமியைச் சுற்றி இருக்கும்