கோவையில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமை ஏன் திமுக அரசு தடுத்து நிறுத்தலை என்றொரு கேள்வி. அவர்களுக்காக இல்லைன்னாலும் நண்பர்களின் புரிதலுக்காக சில விளக்கங்கள் சொல்கிறேன்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பயிற்சி முகாமோ, தனிக்கூட்டமோ நடத்துவது சட்டப்படி பெருங்குற்றம்.
விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கம் என்பது நமக்குத் தெரியும். ஆனாலும் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தைப் பயன்படுத்துவதையோ, புலிகள் இயக்கத்தின் முக்கிய நாளான மாவீரர் தினக் கொண்டாடத்தையோ தமிழ்நாட்டில் நாம் தடுத்து நிறுத்துவதில்லை. காரணம் தனி ஈழப் போராட்டம் நமக்கு
ஏற்புடைய போராட்டம் என்பதாலும், புலிகள் இயக்கத்தின் மீது தமிழ்நாட்டுக்கு பரிவு இருப்பதாலும்தான்.
ஒரு சில தனிநபர்கள் வழக்குத் தொடர்ந்த போதும் இந்திய மண்ணில் பிறந்தவர்கள் விடுதலைப் புலிகள் அல்ல. எனவே இது நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்தில்லை என்பதே தமிழ்நாட்டு அரசின் நிலைப்பாடு.
அது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. யாரெல்லாம் (அரசின் மறைமுக ஆதரவுடன்) மாவீரர் தினத்தை கொண்டாடினார்களோ அவர்கள் அனைவரும் இப்போது தடை செய்யப்படாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பயிற்சி முகாமை தடுத்து நிறுத்தக் கோருகிறார்கள். நீதிமன்றம் சென்றால் இவைகள் ஒன்றன் மீது ஒன்றாக
முடிச்சுப் போடப்படும் என்பது அறிவுள்ளோருக்குப் புரியும். இருந்தும் கூட ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தமிழ்நாட்டின் கொள்கை எதிரி. ஆளும் கட்சியான திமுக கூட்டணியின் அரசியல் எதிரி. எனவே, தடை செய்யப்படாத இயக்கமே என்றாலும் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம்களை அரசு கல்வி நிறுவனங்கள், துறைகளில் நடத்த
அனுமதிப்பதில்லை. இதுதான் ஜனநாயகத்துக்கு உட்பட்ட நிர்வாக ரீதியான எதிர்ப்பு. தனியார் அறக்கட்டளைகள், தனியார்கள் தங்களுக்கு சொந்தமான இடத்தில் அந்த முகாம்களை நடத்துவதை சட்டப்படி அரசால் தடுத்து நிறுத்திட முடியாது. அவர்கள் நீதிமன்றம் சென்றால் அரசுக்கு ஆதரவான தீர்ப்பு கிடைக்காது என்பது
மதுரைக்கு வழி தெரிந்த அனைவருக்கும் தெரியும். இந்த ஆர்.எஸ்.எஸ் முகாமுக்கு எதிரான போராட்டங்களே அவர்களுக்குத் தேவையான விளம்பரம். அதிமுக ஆட்சியில் நடந்த முகாம்களுக்கு எதிராக இவர்களில் யார் யார் போராடினார்கள் என்பதை ஆராய்ந்தால் இதன் முழு பின்னணியும் உங்களுக்குப் புரியக்கூடும்.
இறுதியாக ஒன்று. நாட்டிலேயே அதிகமாக ஆர்எஸ்எஸ் ஷாக்கா நடைபெறும் மாநிலம் எது தெரியுமா?
கேரளா. ஆம், கேரளா.
கம்யூனிஸ்டுகளை விடவா யாரும் ஆர்.எஸ்.எஸ் ஐ எதிர்த்து விட முடியும்? அவர்களாலேயே தடுத்து நிறுத்த முடியாத ஒன்றை இங்கே செய்தே தீர வேண்டும் என போராடுவது ஏன் என்பது எனக்குப் புதிர்.
இதையும் படிங்க.. 👇
"At 4,500, Kerala has highest number of shakhas held daily in the country: Senior RSS leader - The Financial Express" financialexpress.com/india-news/at-…
பி.கு : இந்த திரியை கோட் பண்ணி என்னை திட்டுறவங்க யாருமே கேரளாவை பற்றி பேச மாட்டாங்க. விடுதலைப்புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கம் என குறிப்பிட்டது பற்றி கொதிப்பாங்க பாருங்க.
அதுதான் டிசைன்.
நாம போய் புத்தாண்டை வரவேற்போம். வாங்க..
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஆர்.எஸ்.எஸ் vs ஜெயலலிதா : போன திரெட்லே சிலர் ஜெ ஆட்சியில் இருந்தபோது ஆர்.எஸ்.எஸ் முகாம்களை நடத்த விடலையே! அவர்தானே இரும்புப் பெண்மணி என்றெல்லாம் சிலாகித்திருந்தார்கள். அதைக் கண்டு நீங்களும் வியந்திருப்பீர்கள்!
அதைப் பற்றி விரிவா பார்ப்போம். ஆர்.எஸ்.எஸ் தனது அரசியல் அமைப்பாக 1980
ஆம் ஆண்டில் பாஜகவை தொடங்கிய போது அதற்காக வைத்த சில முக்கிய செயல்திட்டங்களில் முதல் மூன்று செயல்திட்டங்கள் 1. பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில் 2. காஷ்மீர் மாநிலத்தின் தனிச் சலுகையான 370 பிரிவு நீக்கம் 3. இந்தியாவில் பொது சிவில் சட்டம்.
34 ஆண்டுகள் கழித்து 4ஆம் முறையாக (முதல்முறை
13 நாள் ஆட்சி) ஆட்சிக்கு வந்த போதுதான் முதல் இரண்டை செய்து முடித்தது. தேர்தல் கமிஷன் முதல் உச்சநீதி மன்றம் வரை ஊடுறுவி, ராஜ்ய சபா மெஜாரிட்டி இல்லையெனினும் புறவாசல் வழியே சட்டங்களை இயற்றும் வழிகளைக் கண்டறிந்த பிறகே இதை செய்ய முடிந்தது. பொது சிவில் சட்டம் அடுத்த பொதுத் தேர்தலுக்கான
#TwitterAddiction
டிவிட்டர் ஒரு நேரந்தின்னி என்பதை நாம் அறிவோம். அண்மையில் எனது Twitter Screen time data பார்த்தபோது நான் அதிர்ந்தே போனேன். ஏறத்தாழ 6 முதல் 7 மணி நேரம் சராசரியாக செலவிட்டிருக்கிறேன். இது தூங்கும் நேரத்துக்கு இணையானது. டெக்னிகல்லி டிவிட்டருக்கு இடையேதான் இயல்பு
வாழ்க்கையே நடந்திருக்கிறது. இழந்தது வெறுமனே நேரம் மட்டுமல்ல! படிக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை குறைந்து போனது. எழுத்து அறவே நின்றே போனது. இசை கேட்பதே இல்லை என்றாகிவிட்டது. சினிமா தியேட்டரில் கூட பலமுறை டிவிட்டரை திறந்து பார்க்குமளவு கை பழகி விட்டது. நடுநிசி, அதிகாலை என நேரங்காலம்
இல்லை. குனிந்தே இருந்ததில் கழுத்து வலி. சாலையில் மனிதர்களை, மரங்களை, இடங்களை பார்க்காமலேயே போனதால் ஏற்பட்ட பல்வேறு மன உளைச்சல்கள்.. சொல்லிட்டே போகலாம்.
இந்த ஆண்டு ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஸ்கிரீன் டைம் ஒரு மணி நேரம், விடுமுறை நாளில், பயணத்தின் போது இரண்டு மணி நேரம் மட்டுமே
வன்முறை : நாதக தம்பிங்க, தமிழ்த்தேசியவாதிகளுக்கு என எப்போதும் தனி அகராதி உண்டு. அதிலும் சீமான் தினமும் புதுபுது சொற்களை அதற்கு கொடை அளிப்பார்.
இன்னைக்கு அவங்க டாபிக் வன்முறை. நேத்திக்கு கருத்துரிமை.
வன்முறைக்கு ஒரே பொருள் வன்மையான முறையில் ஒரு செயலை செய்வது. ஆனா, 1. பெல்ட் பாம்
கட்டிட்டு முன்னாள் பிரதமர் உட்பட 16 பேரை கொன்ற போது அதுக்கு பழிக்கு பழி என பெயர். 2. எதிர் நிலையில் இருந்த போராளிகளை கொன்றபோது அதுக்கு பேர் சீரமைத்தல். 3. இஸ்லாமியர்களை கொன்ற போது அது இனச் சுத்திகரிப்பு. 4. சிங்களவர்களைக் கொன்ற போது அது விடுதலைப் போர். 5. நெய்தல் படை அமைத்து
இலங்கைக்கு போகும்போது அது இன மீட்பு 6. பச்சை மட்டையால் தோலை உரித்தால் அது ஒழுங்குமுறை பயிற்சி 7. மைக்கை பிடித்தால் கலைஞர் முதல் ரஜினி வரை அத்தனைப் பேர் பிறப்பையும் இழிவுபடுத்தி பேசினால் அது கருத்துரிமை. 8. ஒரு கட்சியோட கொடி நிறத்தில் செருப்பை தேடி வாங்கி பொதுமேடையில் தூக்கிக்
வதந்திகளின் வீரியம் :
உண்மை நடந்து போனால் வதந்தி விமானத்தில் போகும் என்பார்கள். அப்படியொரு சம்பவம் நேற்று நடந்துள்ளது.
பூந்தமல்லி அருகில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கேண்டீன் தந்த தரமற்ற உணவு உண்டதினால் பலருக்கு வாந்தி, மயக்கம். ஒரே நேரத்தில் பல பெண்கள் உடல்நலம் குன்றியதாலும்
அந்த உணவுத் தரத்தின் மீது தொடர் கோபம் இருந்த காரணத்தாலும் தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண்கள் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் தொடங்கினர். உடனடியாக அரசு அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் போதே, மருத்துவமனைக்கு சென்ற பெண்கள் இறந்து விட்டதாக வதந்தி
செய்திகள் மொபைல் போனில் பரவத் தொடங்கின. கலெக்டர் நேரில் வந்து அதை மறுக்கிறார். அப்போது மேலும் அதிக வதந்திகள் உக்கிரமான வேகத்துடன் வருகிறது. கலெக்டரிடம் அதை போராட்டக்காரர்கள் காட்டி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அந்த வதந்திகள் யாரோ பெயர் அற்றவர்கள் பரப்பியது என்றால் எளிதில் அதை
1. அனைத்துப் பள்ளிகளிலுமே இந்த life style management வகுப்பு தொடங்கி இவைகளைக் கற்றுத் தரணும். 5 ஆம் வகுப்புக்குள் ஒரு பிள்ளை தங்கள் வீடுகளில் டாய்லெட் கழுவும் பணியை விரும்பிச் செய்யும்படி அதன் அவசியம், செயல்முறை, பயன்படுத்தும் முறைகளை பயிற்றுவிக்கணும். 2. வேலைக்காரம்மா தாங்கள்
பயன்படுத்தும் டாய்லெட்டை சுத்தம் செய்ய பிறந்தவர் எனும் பொதுபுத்தியை மாற்றணும். 3. பொது இடங்களில் Uni Sex Toilet களில் பெண்களும் பயன்படுத்தும் வகையில் அதை சுத்தமாக பயன்படுத்த வேண்டும் எனும் அறிவை ஆண்பிள்ளைகளுக்கு கற்றுத் தர வேண்டும். 4. தனது வகுப்பறை, தங்கள் கழிவறைகளை சுத்தமாக
வைத்திருப்பது தங்களது பொறுப்பு என்பதை உணர்த்தும் வகையில் வாரம் ஒருமுறையேனும் தகுந்த உபகரணங்களுடன் ஆசிரியர்களுடன் இணைந்து மாணவர்களும் அவைகளை சுத்தம் community cleaning session செய்தல் வேண்டும். 5. இன்னமும் சாதிய அடிப்படையில் சுகாதாரப் பணியாளர்கள் பணி புரியும் இந்தச் சமூகத்தில்
#Maanaadu
"Listen.. Watch #Maanaadu in theatre" என நண்பன் செய்தி அனுப்பி இருந்தான். அவன் பேச்சை நான் கேட்பேன் என்பதால் சத்யம்லே பார்த்தேன். 1. முதல்வரை கொன்னுட்டு இன்னொருத்தர் முதலமைச்சராக ஆக சதி செய்யும் அரதப் பழசான கதை. 2. வெடிகுண்டு, சதி என்றாலே கலவரம், முஸ்லீம் ஆங்கிள்
கொடுக்கும் அதைவிட அரதப் பழசான கண்ணோட்டம். 3. இதைச் சொல்ல தேர்த்தெடுத்த புத்தம் புதிய திரைக்கதை அசத்தல். 4. இதைப் பயன்படுத்தி நெடுநாட்களாக இஸ்லாமியர் மீது இருந்த தவறான பார்வையை சமன் செய்யும் அந்த அக்கறை அதை விட அசத்தல். 5. ஹீரோ வில்லன் ரேஞ்சுலும், வில்லன் ஹீரோ ரேஞ்சுலும்
நடித்து கதைக்கு நியாயம் செய்துள்ளனர். எஸ்.ஜே சூர்யா இந்தப் படத்தின் வெற்றியால் தொடர்ந்து இதே போன்ற ரோலில் சிக்கி சின்னாபின்னமாகி விடாமல் இருக்க விரும்புகிறேன். 6. இயக்குநர் வெங்கட் பிரபு இனியாவது தனது நிலைய வித்வான்களை சிறிது தவிர்த்து விட்டு புதிய நடிகர்களைப் பயன்படுத்தணும்.