ஆர்.எஸ்.எஸ் vs ஜெயலலிதா : போன திரெட்லே சிலர் ஜெ ஆட்சியில் இருந்தபோது ஆர்.எஸ்.எஸ் முகாம்களை நடத்த விடலையே! அவர்தானே இரும்புப் பெண்மணி என்றெல்லாம் சிலாகித்திருந்தார்கள். அதைக் கண்டு நீங்களும் வியந்திருப்பீர்கள்!
அதைப் பற்றி விரிவா பார்ப்போம். ஆர்.எஸ்.எஸ் தனது அரசியல் அமைப்பாக 1980
ஆம் ஆண்டில் பாஜகவை தொடங்கிய போது அதற்காக வைத்த சில முக்கிய செயல்திட்டங்களில் முதல் மூன்று செயல்திட்டங்கள் 1. பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில் 2. காஷ்மீர் மாநிலத்தின் தனிச் சலுகையான 370 பிரிவு நீக்கம் 3. இந்தியாவில் பொது சிவில் சட்டம்.
34 ஆண்டுகள் கழித்து 4ஆம் முறையாக (முதல்முறை
13 நாள் ஆட்சி) ஆட்சிக்கு வந்த போதுதான் முதல் இரண்டை செய்து முடித்தது. தேர்தல் கமிஷன் முதல் உச்சநீதி மன்றம் வரை ஊடுறுவி, ராஜ்ய சபா மெஜாரிட்டி இல்லையெனினும் புறவாசல் வழியே சட்டங்களை இயற்றும் வழிகளைக் கண்டறிந்த பிறகே இதை செய்ய முடிந்தது. பொது சிவில் சட்டம் அடுத்த பொதுத் தேர்தலுக்கான
மெனுவாக இருக்கும். இதில் நம் 'இரும்புப் பெண்மணி' என்ன செய்தார் என பார்ப்போம்! 1. இந்தியாவில் ராமனுக்கு கோவில் கட்டாமல் வேறெங்கே கட்ட முடியும் என பகிரங்கமாக கரசேவையை ஆதரித்தார். 2. இந்தியர்கள் அனைவருக்குமான பொது சிவில் சட்டம் தேவை என நேரடியாக அறிவித்தார். 3. காஷ்மீருக்கான 370
பிரிவை ரத்து செய்த மசோதாவின் போது அதிமுக இரு அவைகளிலும் அதை ஆதரித்து வாக்களித்தது.
இவை முழுமையான ஆதாரங்கள் கொண்ட சரித்திரப் பதிவுகள். சரியா?
பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் போதும் அதிமுக ஆதரவளிக்கும் என்பதில் ஐயமில்லை.
சரி! ஆர்.எஸ்.எஸ்க்கும் அதிமுகவுக்கும் என்ன வேறுபாடு?
ஏதுமில்லை. Absolutely Nothing. இருந்தால் யாரும் மறுக்கலாம்! திராவிட மண்ணில் அரசியல் நடத்துவதால் சமூகநீதி கோட்பாட்டில் மட்டும் அதிமுக நிலையாக நின்றது. அதிலும் EWS மசோதாவின் போது ஜெ இருந்திருந்தால் உச்சி முகர்ந்து பாராட்டி இருப்பார். எனவேதான் அதிமுகவும் அதை ஆதரித்து வாக்களித்தது.
தமிழ்நாட்டுக்கு வருவோம். இங்கே ஆர்.எஸ்.எஸ் முகாம் நடத்த ஜெ எதிர்த்தாரா?
ஆம்! கடுமையாக எதிர்த்தார்.
அதன் காரணம் குறித்து பேசுவோம். தமிழ்நாட்டின் மற்ற கட்சிகளுக்கு பாஜக அரசியல் எதிரி. ஆனால், ஜெயலலிதாவுக்கோ அது தொழில் போட்டி.
எப்படி? பாஜக பெறும் வாக்குகள் அனைத்தும் அந்தக் கட்சி
இல்லையெனில் அதிமுகவுக்குதான் செல்லும் என்பதை அரசியல் அறிந்தோர் எவருக்கும் புரியும்.
ஜெ அடிப்படையிலேயே ஓரு வலதுசாரி. அவர் பிறந்து வளர்ந்த சூழல் அப்படி. சர்ச் பார்க் கான்வெண்ட் காலம் மட்டுமே அவருக்குக் கிட்டிய வெளியுலக ஜன்னல். அது இல்லாதிருந்தால் திராவிட அரசியலுக்கே அவர் வந்து
இருந்திருக்க வாய்ப்பு குறைவு. சோ அவரது வழிகாட்டி என்பதால் அவரது சிந்தனையின் வெளிப்பாடு அதே பிரதிபலிப்பு. எப்போதெல்லாம் அவரிடம் அரசியல் அதிகாரம் கிடைத்ததோ அப்போதெல்லாம் மதமாற்று தடைச் சட்டம், ஆடு,கோழி பலி தடைச் சட்டம், கரசேவை ஆதரவு என துக்ளக் தர்பார் தூள் பறந்தது. தோல்விகளின் போதோ
திராவிடக் கொள்கைகள், எம்ஜிஆர் பாசம் மேலோங்கும். ஸ்ரீரங்கம் தேர்தலில்தான் ஆர்.எஸ்.எஸ் இயக்கப் பணிகள் நேரடியாக தன்னை பாதிப்பதை உணர்ந்தார். தனது வாக்கு வங்கியில் அவர்களது ஊடுறுவலை அவரால் சகிக்க முடியாமல், சட்டத்தை மீறி அவர்கள் இயங்க பல பிரச்சனைகளைத் தந்தார். இந்த மோதல்கள், வழக்குகள்
அனைத்தும் வெளிப்படை ஆதாரங்களாக உள்ளன. அத்வானி பல முறை பேசியும் ஜெ மனம் இறங்காததால் கோர்ட் உத்தரவின் மூலம் பிடிவாதமாக ஆர்.எஸ்.எஸ் பேரணி கூட நடைபெற்றது. சோ தனது துக்ளக் விழாவில் பேசியபோது, I have tried my best to convince her. But I couldn't do it. May be she is right. என்றார்.
இந்த வலதுசாரி ஓட்டு வங்கிக்கான உரிமைப் பிரச்சனைதான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்குப் பிரச்சனை ஆனது தவிர அது கொள்கை எதிர்ப்பு அல்ல. அல்ல. அல்ல.
எதையெல்லாம் ஆர்.எஸ்.எஸ் தனது வாழ்நாள் லட்சியமாகக் கருதியதோ அவைகள் அனைத்தையும் ஜெ அப்பட்டமாக ஆதரித்து பேசியதும்,, வாக்களித்ததும் வரலாறு. பிறகு
வேறென்ன வித்தியாசம்?
மனசாட்சி உள்ள தமிழர்கள் சொல்லுங்கள்.
அயோத்தியில் ராமர் கோவில், பொது சிவில் சட்டம், 370 பிரிவு ரத்து ஆகிய இந்திய மக்கள் மனங்களை நிரந்தரமாக பிரிக்கும் செயல்திட்டங்களுக்கு வெளிப்படையாக ஆதரவளித்த ஜெயலலிதாவை இரும்புப் பெண்மணி என்பதும்,
ஐந்து ஆண்டுகள் பாஜக அரசில்
இருந்தாலும் மேற் சொன்னவைகளில் ஒரே ஒரு அம்சத்தைக் கூட நிறைவேற்ற அனுமதிக்காத, நாடாளுமன்றத்தில் எதிர்த்து வாக்களித்த, இடையில் முளைத்த புது பூதமான CAA / NRC சட்டத்தை எதிர்த்து வீதிகளில் போராடிய, வலதுசாரி செயல் திட்டங்களுக்கு எதிராக உறுதியாக நிற்கும் திமுகவை ஆர்.எஸ்.எஸ் அடிமை என்பதும்
வெறுமனே அரசியல் அபத்தம் மட்டுமல்ல. இது திட்டமிட்ட Narrative Setting. இதனை சோஷியல் மீடியாவில் முனைந்து பரப்பும் திடீர் போராளிகள், Pseudo Communists, Pseudo Periyarists களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.
"ஆர்எஸ்எஸ் ஐ எதிர்ப்பது என்பது அதன் கொள்கைகளை எதிர்ப்பது. அதன் செயல் திட்டங்களை
எதிர்த்து உறுதியாக நிற்பது" அதை தமிழ்நாட்டில் செய்தது திமுக & கூட்டணி மட்டுமே! ஒரு உள்ளரங்குக் கூட்டத்தை மாபெரும் கொள்கைப் பிறழ்வாக சித்தரிப்பதையும், நேரடியான வலதுசாரி ஆதரவாளரை மாபெரும் ஆளுமை என போலிப் பிம்பம் உருவாக்கலின் உள்நோக்கத்தை அறிவுள்ளோர் அடையாளம் கண்டு கொள்வார்கள்.
இந்தப் போலிகளிடம் விவாதிக்க நேரிட்டால் நீங்கள் கேட்க வேண்டியது, திமுக ஆட்சியில் இல்லாத 10 ஆண்டுகளில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ். உள்ளரங்கு பயிற்சிகள், ஷாக்கா, பேரணியை எதிர்த்து நீங்கள் போராடிய போராட்டங்கள் என்ன? அதற்கான தரவுகள் எங்கே? என்பதுதான்.
நீங்கள் குட்டிக்கரணமே அடித்தாலும் பதில்
ஏதும் வராது. இவர்கள் திமுகவை எதிர்க்கவே உருவாக்கப்பட்டவர்கள். அது மட்டுமே அவர்களின் ஒரே செயல்திட்டம்.
"தமிழ்நாடு என்று பெயர் இருக்கும் வரையில் இந்த மாநிலத்தை இந்த அண்ணாதுரைதான் ஆள்கிறான்" என்று என பேரறிஞர் அண்ணா சொன்னதைப் போல, சமூக நீதிப் பாதையில் உறுதியாக நின்று ஆளும்வரை இந்த
திராவிட மண்ணை நமது தளபதி ஸ்டாலின் தான் ஆள்வார். நாம் அனைவரும் இங்கே இணைந்து இயங்கும்வரை அதை மாற்ற யாராலும் முடியாது. இங்கே நாம் தான் கேடயம். நாம்தான் கவசம். நாம்தான் எதிர்காலம்.
பி.கு : அண்மையில் திமுக நண்பர்களிடையே கேள்வி பதிலாக ஆற்றிய உரையின் சாரம்.
#TwitterAddiction
டிவிட்டர் ஒரு நேரந்தின்னி என்பதை நாம் அறிவோம். அண்மையில் எனது Twitter Screen time data பார்த்தபோது நான் அதிர்ந்தே போனேன். ஏறத்தாழ 6 முதல் 7 மணி நேரம் சராசரியாக செலவிட்டிருக்கிறேன். இது தூங்கும் நேரத்துக்கு இணையானது. டெக்னிகல்லி டிவிட்டருக்கு இடையேதான் இயல்பு
வாழ்க்கையே நடந்திருக்கிறது. இழந்தது வெறுமனே நேரம் மட்டுமல்ல! படிக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை குறைந்து போனது. எழுத்து அறவே நின்றே போனது. இசை கேட்பதே இல்லை என்றாகிவிட்டது. சினிமா தியேட்டரில் கூட பலமுறை டிவிட்டரை திறந்து பார்க்குமளவு கை பழகி விட்டது. நடுநிசி, அதிகாலை என நேரங்காலம்
இல்லை. குனிந்தே இருந்ததில் கழுத்து வலி. சாலையில் மனிதர்களை, மரங்களை, இடங்களை பார்க்காமலேயே போனதால் ஏற்பட்ட பல்வேறு மன உளைச்சல்கள்.. சொல்லிட்டே போகலாம்.
இந்த ஆண்டு ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஸ்கிரீன் டைம் ஒரு மணி நேரம், விடுமுறை நாளில், பயணத்தின் போது இரண்டு மணி நேரம் மட்டுமே
கோவையில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமை ஏன் திமுக அரசு தடுத்து நிறுத்தலை என்றொரு கேள்வி. அவர்களுக்காக இல்லைன்னாலும் நண்பர்களின் புரிதலுக்காக சில விளக்கங்கள் சொல்கிறேன்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பயிற்சி முகாமோ, தனிக்கூட்டமோ நடத்துவது சட்டப்படி பெருங்குற்றம்.
விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கம் என்பது நமக்குத் தெரியும். ஆனாலும் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தைப் பயன்படுத்துவதையோ, புலிகள் இயக்கத்தின் முக்கிய நாளான மாவீரர் தினக் கொண்டாடத்தையோ தமிழ்நாட்டில் நாம் தடுத்து நிறுத்துவதில்லை. காரணம் தனி ஈழப் போராட்டம் நமக்கு
ஏற்புடைய போராட்டம் என்பதாலும், புலிகள் இயக்கத்தின் மீது தமிழ்நாட்டுக்கு பரிவு இருப்பதாலும்தான்.
ஒரு சில தனிநபர்கள் வழக்குத் தொடர்ந்த போதும் இந்திய மண்ணில் பிறந்தவர்கள் விடுதலைப் புலிகள் அல்ல. எனவே இது நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்தில்லை என்பதே தமிழ்நாட்டு அரசின் நிலைப்பாடு.
வன்முறை : நாதக தம்பிங்க, தமிழ்த்தேசியவாதிகளுக்கு என எப்போதும் தனி அகராதி உண்டு. அதிலும் சீமான் தினமும் புதுபுது சொற்களை அதற்கு கொடை அளிப்பார்.
இன்னைக்கு அவங்க டாபிக் வன்முறை. நேத்திக்கு கருத்துரிமை.
வன்முறைக்கு ஒரே பொருள் வன்மையான முறையில் ஒரு செயலை செய்வது. ஆனா, 1. பெல்ட் பாம்
கட்டிட்டு முன்னாள் பிரதமர் உட்பட 16 பேரை கொன்ற போது அதுக்கு பழிக்கு பழி என பெயர். 2. எதிர் நிலையில் இருந்த போராளிகளை கொன்றபோது அதுக்கு பேர் சீரமைத்தல். 3. இஸ்லாமியர்களை கொன்ற போது அது இனச் சுத்திகரிப்பு. 4. சிங்களவர்களைக் கொன்ற போது அது விடுதலைப் போர். 5. நெய்தல் படை அமைத்து
இலங்கைக்கு போகும்போது அது இன மீட்பு 6. பச்சை மட்டையால் தோலை உரித்தால் அது ஒழுங்குமுறை பயிற்சி 7. மைக்கை பிடித்தால் கலைஞர் முதல் ரஜினி வரை அத்தனைப் பேர் பிறப்பையும் இழிவுபடுத்தி பேசினால் அது கருத்துரிமை. 8. ஒரு கட்சியோட கொடி நிறத்தில் செருப்பை தேடி வாங்கி பொதுமேடையில் தூக்கிக்
வதந்திகளின் வீரியம் :
உண்மை நடந்து போனால் வதந்தி விமானத்தில் போகும் என்பார்கள். அப்படியொரு சம்பவம் நேற்று நடந்துள்ளது.
பூந்தமல்லி அருகில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கேண்டீன் தந்த தரமற்ற உணவு உண்டதினால் பலருக்கு வாந்தி, மயக்கம். ஒரே நேரத்தில் பல பெண்கள் உடல்நலம் குன்றியதாலும்
அந்த உணவுத் தரத்தின் மீது தொடர் கோபம் இருந்த காரணத்தாலும் தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண்கள் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் தொடங்கினர். உடனடியாக அரசு அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் போதே, மருத்துவமனைக்கு சென்ற பெண்கள் இறந்து விட்டதாக வதந்தி
செய்திகள் மொபைல் போனில் பரவத் தொடங்கின. கலெக்டர் நேரில் வந்து அதை மறுக்கிறார். அப்போது மேலும் அதிக வதந்திகள் உக்கிரமான வேகத்துடன் வருகிறது. கலெக்டரிடம் அதை போராட்டக்காரர்கள் காட்டி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அந்த வதந்திகள் யாரோ பெயர் அற்றவர்கள் பரப்பியது என்றால் எளிதில் அதை
1. அனைத்துப் பள்ளிகளிலுமே இந்த life style management வகுப்பு தொடங்கி இவைகளைக் கற்றுத் தரணும். 5 ஆம் வகுப்புக்குள் ஒரு பிள்ளை தங்கள் வீடுகளில் டாய்லெட் கழுவும் பணியை விரும்பிச் செய்யும்படி அதன் அவசியம், செயல்முறை, பயன்படுத்தும் முறைகளை பயிற்றுவிக்கணும். 2. வேலைக்காரம்மா தாங்கள்
பயன்படுத்தும் டாய்லெட்டை சுத்தம் செய்ய பிறந்தவர் எனும் பொதுபுத்தியை மாற்றணும். 3. பொது இடங்களில் Uni Sex Toilet களில் பெண்களும் பயன்படுத்தும் வகையில் அதை சுத்தமாக பயன்படுத்த வேண்டும் எனும் அறிவை ஆண்பிள்ளைகளுக்கு கற்றுத் தர வேண்டும். 4. தனது வகுப்பறை, தங்கள் கழிவறைகளை சுத்தமாக
வைத்திருப்பது தங்களது பொறுப்பு என்பதை உணர்த்தும் வகையில் வாரம் ஒருமுறையேனும் தகுந்த உபகரணங்களுடன் ஆசிரியர்களுடன் இணைந்து மாணவர்களும் அவைகளை சுத்தம் community cleaning session செய்தல் வேண்டும். 5. இன்னமும் சாதிய அடிப்படையில் சுகாதாரப் பணியாளர்கள் பணி புரியும் இந்தச் சமூகத்தில்
#Maanaadu
"Listen.. Watch #Maanaadu in theatre" என நண்பன் செய்தி அனுப்பி இருந்தான். அவன் பேச்சை நான் கேட்பேன் என்பதால் சத்யம்லே பார்த்தேன். 1. முதல்வரை கொன்னுட்டு இன்னொருத்தர் முதலமைச்சராக ஆக சதி செய்யும் அரதப் பழசான கதை. 2. வெடிகுண்டு, சதி என்றாலே கலவரம், முஸ்லீம் ஆங்கிள்
கொடுக்கும் அதைவிட அரதப் பழசான கண்ணோட்டம். 3. இதைச் சொல்ல தேர்த்தெடுத்த புத்தம் புதிய திரைக்கதை அசத்தல். 4. இதைப் பயன்படுத்தி நெடுநாட்களாக இஸ்லாமியர் மீது இருந்த தவறான பார்வையை சமன் செய்யும் அந்த அக்கறை அதை விட அசத்தல். 5. ஹீரோ வில்லன் ரேஞ்சுலும், வில்லன் ஹீரோ ரேஞ்சுலும்
நடித்து கதைக்கு நியாயம் செய்துள்ளனர். எஸ்.ஜே சூர்யா இந்தப் படத்தின் வெற்றியால் தொடர்ந்து இதே போன்ற ரோலில் சிக்கி சின்னாபின்னமாகி விடாமல் இருக்க விரும்புகிறேன். 6. இயக்குநர் வெங்கட் பிரபு இனியாவது தனது நிலைய வித்வான்களை சிறிது தவிர்த்து விட்டு புதிய நடிகர்களைப் பயன்படுத்தணும்.