வதந்திகளின் வீரியம் :
உண்மை நடந்து போனால் வதந்தி விமானத்தில் போகும் என்பார்கள். அப்படியொரு சம்பவம் நேற்று நடந்துள்ளது.
பூந்தமல்லி அருகில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கேண்டீன் தந்த தரமற்ற உணவு உண்டதினால் பலருக்கு வாந்தி, மயக்கம். ஒரே நேரத்தில் பல பெண்கள் உடல்நலம் குன்றியதாலும்
அந்த உணவுத் தரத்தின் மீது தொடர் கோபம் இருந்த காரணத்தாலும் தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண்கள் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் தொடங்கினர். உடனடியாக அரசு அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் போதே, மருத்துவமனைக்கு சென்ற பெண்கள் இறந்து விட்டதாக வதந்தி
செய்திகள் மொபைல் போனில் பரவத் தொடங்கின. கலெக்டர் நேரில் வந்து அதை மறுக்கிறார். அப்போது மேலும் அதிக வதந்திகள் உக்கிரமான வேகத்துடன் வருகிறது. கலெக்டரிடம் அதை போராட்டக்காரர்கள் காட்டி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அந்த வதந்திகள் யாரோ பெயர் அற்றவர்கள் பரப்பியது என்றால் எளிதில் அதை
மறுத்திருக்க முடியும். ஆனால், சேலத்தைச் சேர்ந்த ஒரு சமூகசேவகி பெண்மணி அதை தனது ஐடியில் இருந்து பரப்பியதும், தொடர்ந்து போராட்டக்காரர்களிடம் பேசி அதை உறுதி செய்ததும் நிலமையை பெரும் சிக்கலுக்குள்ளாக்கியது. இரண்டு அமைச்சர்களும் உடனடியாக களத்துக்கு வந்து பேசிப் பார்த்தார்கள். ஆனால்,
வதந்திகளின் வீரியத்தால் பெண்கள் மிகுந்த உணர்ச்சி வேகத்தில் இருந்தனர். இறுதியாக இறந்ததாக நீங்கள் சொல்லும் பெண்களின் பெயர்களை கொடுங்கள் என கேட்டுள்ளனர். சில மணி நேரத்துக்குப் பிறகு நான்கு பெயர்கள் கலெக்டரிடம் தரப்பட்டன. அடுத்த ஒரு மணி நேரத்தில் இறந்ததாக சொல்லப்பட்ட அந்த நான்கு
பெண்களையும் வீடியோ காலில் பேச வைத்து நீண்ட பேச்சுவார்த்தையை முடிவுக்குக் கொண்டு வந்ததுள்ளனர் அமைச்சர்களும், அதிகாரிகளும்.
இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலை பல மணி நேரம் போக்குவரத்து முடக்கப்பட்டது. வெளிநாடு செல்வோர் பலர் விமானத்தை தவற விட்டனர். மருத்துவமனை, வேலை என பலரது பொன்னான
நேரம் வீணடிக்கப்பட்டது. சாலைப் பயணத்தில் இருந்த பெண்கள் மணிக்கணக்கில் இயற்கை உபாதையாலும், குழந்தைகள் பசியாலும் துடித்த வேதனைகள் எங்கும் பதிவாகாது.
ஒரு தனியார் நிறுவனத்தின் சேவைக் குறைபாடு காரணமாக இத்தனைப் பெரிய தேசிய இழப்புகள் அநியாயம் என்றாலும், போராடிய பெண்களின் உணர்வுகளையும்
அரசு மதித்தமையால் வன்முறை பிரயோகம் இன்றி அமைதியாக பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்தனர். இத்தனைக்கும் காரணம் வதந்திப் பரப்பல்கள்! தனக்கு புகழ் வேண்டி செயல்படும் போலி சமூக ஆர்வர்கள், வன்மம் கொண்ட யூடியூபர்கள் பரப்பும் வதந்திகளின் வீரியத்தை இனியேனும் அரசு புரிந்து
கொண்டு, மீண்டும் இப்படி நடைபெறாமல் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். அந்தப் பெண், விளைவுகளை அறிந்தேதான் பொய்ச் செய்திகளைப் பரப்பி உள்ளார் என்பற்கான ஆதாரங்களுடன் கலெக்டர் புகார் அளித்திருப்பதாக அறிகிறேன். அரசு இதில் இரக்கம் காட்டாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை எனில் இது
தொடரும். இதிலும் கார் சர்வீஸ் கடை புகழ் சாட்டை துரைமுருகன் தனது கைவரிசையைக் காட்டியுள்ளார். விரைவில் தடயங்களை இந்த சாவர்க்கார் வாரிசு அழிக்கக் கூடும். ஆனாலும் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழிகளை மீறியதற்காக பிணை ரத்து செய்யப்படக்கூடும். விளைவை அறிந்தே இவர் தொடர் குற்றவாளி ஆகிறார்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1. அனைத்துப் பள்ளிகளிலுமே இந்த life style management வகுப்பு தொடங்கி இவைகளைக் கற்றுத் தரணும். 5 ஆம் வகுப்புக்குள் ஒரு பிள்ளை தங்கள் வீடுகளில் டாய்லெட் கழுவும் பணியை விரும்பிச் செய்யும்படி அதன் அவசியம், செயல்முறை, பயன்படுத்தும் முறைகளை பயிற்றுவிக்கணும். 2. வேலைக்காரம்மா தாங்கள்
பயன்படுத்தும் டாய்லெட்டை சுத்தம் செய்ய பிறந்தவர் எனும் பொதுபுத்தியை மாற்றணும். 3. பொது இடங்களில் Uni Sex Toilet களில் பெண்களும் பயன்படுத்தும் வகையில் அதை சுத்தமாக பயன்படுத்த வேண்டும் எனும் அறிவை ஆண்பிள்ளைகளுக்கு கற்றுத் தர வேண்டும். 4. தனது வகுப்பறை, தங்கள் கழிவறைகளை சுத்தமாக
வைத்திருப்பது தங்களது பொறுப்பு என்பதை உணர்த்தும் வகையில் வாரம் ஒருமுறையேனும் தகுந்த உபகரணங்களுடன் ஆசிரியர்களுடன் இணைந்து மாணவர்களும் அவைகளை சுத்தம் community cleaning session செய்தல் வேண்டும். 5. இன்னமும் சாதிய அடிப்படையில் சுகாதாரப் பணியாளர்கள் பணி புரியும் இந்தச் சமூகத்தில்
#Maanaadu
"Listen.. Watch #Maanaadu in theatre" என நண்பன் செய்தி அனுப்பி இருந்தான். அவன் பேச்சை நான் கேட்பேன் என்பதால் சத்யம்லே பார்த்தேன். 1. முதல்வரை கொன்னுட்டு இன்னொருத்தர் முதலமைச்சராக ஆக சதி செய்யும் அரதப் பழசான கதை. 2. வெடிகுண்டு, சதி என்றாலே கலவரம், முஸ்லீம் ஆங்கிள்
கொடுக்கும் அதைவிட அரதப் பழசான கண்ணோட்டம். 3. இதைச் சொல்ல தேர்த்தெடுத்த புத்தம் புதிய திரைக்கதை அசத்தல். 4. இதைப் பயன்படுத்தி நெடுநாட்களாக இஸ்லாமியர் மீது இருந்த தவறான பார்வையை சமன் செய்யும் அந்த அக்கறை அதை விட அசத்தல். 5. ஹீரோ வில்லன் ரேஞ்சுலும், வில்லன் ஹீரோ ரேஞ்சுலும்
நடித்து கதைக்கு நியாயம் செய்துள்ளனர். எஸ்.ஜே சூர்யா இந்தப் படத்தின் வெற்றியால் தொடர்ந்து இதே போன்ற ரோலில் சிக்கி சின்னாபின்னமாகி விடாமல் இருக்க விரும்புகிறேன். 6. இயக்குநர் வெங்கட் பிரபு இனியாவது தனது நிலைய வித்வான்களை சிறிது தவிர்த்து விட்டு புதிய நடிகர்களைப் பயன்படுத்தணும்.
தமிழ்நாட்டிலும் நுழைந்த சங்கிகளின் வதந்தி அரசியல் :
நேற்று ஒரே நாளில் டிவிட்டர், பேஸ்புக் வழியே நடந்த பல வதந்திப் பரவல்களை கவனித்திருப்பீர்கள். அது ஒரு organized attack. அவைகளுக்கிடையே இருந்த pattern வடமாநில மக்களுக்கு பழக்கமானது. தமிழ்நாட்டுக்குப் புதியது. ஒவ்வொன்றாக பார்ப்போம்.
முதலில் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து சென்னையை மூழ்கடித்ததாக காலையில் ஒரு ட்வீட் வருகிறது. அதுவரை ஏரி திறக்கப்படவில்லை. மதியம் விநாடிக்கு 500 கன அடி வீதம் திறக்கப் போவதாக முந்தைய நாளே அரசு அறிவிக்கும் காணொளிகள் டிவியில் வந்தது. ஆனாலும் தெரிந்தே இந்தப் பச்சைப் புளுகு வெளியானது.
அடுத்து சென்னை மாநகரமே நீரில் மூழ்கித் தத்தளிப்பதாக
அதே நாளில் இன்னொரு ட்வீட் படத்துடன் வருகிறது. அது குஜராத்தில் எடுக்கப்பட்ட பழைய படம். சென்னை பாதுகாப்பாகவே உள்ளது என @angry_birdu ஆதாரத்துடன் மறுப்பு வெளியிட்டும், பலர் சுட்டிக்காட்டியும் இதுவரை அந்த ட்வீட் நீக்கப்படவில்லை.
இது இப்படித்தான் முடியும்.
முதல் நுழைவாயில் : தமிழர்கள் மட்டும் உள்ளே வாங்க. திராவிடர் என சொல்பவர்களுக்கு அனுமதி இல்லை.
இரண்டாம் நுழைவாயில்: வெளிநாட்டு மதங்களைச் சார்ந்தோர் தாய் மதத்தில் சேர்ந்தால் மட்டுமே உள்ளே வரலாம். சைவம், வைணவ சமயங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி.
மூன்றாவது நுழைவாயில்: சைவம் தான் தமிழ்ச் சமயம். வைணவம் வந்தேறி. எனவே சிவனை வழிபடுபவர்கள் மட்டும் உள்ளே வாங்க.
நான்காவது நுழைவாயில் : ஆண்ட சாதிகளுக்கு முன்னுரிமை தருவதுதான் வழக்கம். அவங்க மட்டும் உள்ளே வரலாம்.
ஐந்தாம் நுழைவாயில்: முப்பாட்டன் ராஜராஜன் காலத்திலேயே பிராமணர்கள்
சொல்படிதான் கேட்டு நடந்திருக்காங்க. அவங்க மட்டும் நாற்காலியில் உட்காரட்டும். நாமெல்லாம் வசதியா தரையிலேயே உட்கார்ந்துக்கலாம் என்பார்கள்.
இது இப்படித்தான் முடியும். ஆயிரமாண்டுகள் ஒவ்வோர் அடியாக முன்னெடுத்துதான் அதிகாரத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறோம். இனி ஓர் அடி கூட பின்னோக்கி
#Thread முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு, வழக்கு, கைதுகள் பழி வாங்கும் நடவடிக்கையா? இதிலே பார்ப்போம்.
1996ல் இதை முதலில் தொடங்கி வைத்தது திமுக. அதற்கும் முன்னரும் பல குற்றச்சாட்டுகள் எம்ஜிஆர், கலைஞர் மோதலில் வந்தாலும் அவைகள் விசாரணைக் கமிஷன் என்ற அளவில் போயிடும். கைது வரை சென்றது
96ல் தான். 91-96 ஜெ ஆட்சியில் நடந்த அராஜகங்கள் அப்படி! மக்கள் கொந்தளிச்சுப் போயிருந்தனர். சிட்டிங் சி.எம்மை தோற்கடித்தது அப்போதுதான். அதிமுக கோட்டையான பர்கூரில் ஜெ தோற்கடிக்கப்பட்டார். அப்போது ஜெ & சசி டீம் அடிச்ச கொள்ளை, நடத்திய அராஜகச் செயல்கள் (ஐ.ஏ.எஸ் அதிகாரி மீதே ஆசிட்)
தாளாமல் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தந்த அழுத்தத்தினாலும் ஜெ & கோ மீது ரெய்டு நடத்தப்பட்டது. அங்கே கிடைத்த நகைகள், வைரக்குவியல்கள், சொத்துப் பத்திரங்கள் அவரை சிறைச்சாலைக்கும் அழைத்துச் சென்றது. அப்போதும் இதை அதிமுக பழிவாங்கும் நடவடிக்கை என விமர்சித்தனர்.
அந்த ரெய்டின் விளைவாக
#திமுகஇளைஞரணி
தாய்க் கழகத்துக்குப் பிறகு திமுகவின் மிக முக்கிய அணியாக இளைஞர் அணி இருப்பதின் காரணம் யாவரும் அறிந்ததுதான்! அந்த அணியைத் துவக்கி, 30 ஆண்டுகள் திறம்பட நடத்தி வந்தது திமுகவின் தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின். இதனாலேயே இயல்பாக கூடுதல் கவனம் பெற்ற இளைஞர் அணி உருவாக்கிய
தலைவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். பெரும் வெற்றிகளின் போதும், தொடர் தோல்விகளின் போதும் கட்சிக்கு அச்சாணியாக இருந்து செயல்பட்டது திமுக இளைஞர் அணிதான். அந்த இடத்தை இட்டு நிரப்ப மூன்றாண்டுகளுக்கு முன்னர் @Udhaystalin தேர்வு செய்யப்பட்ட போது அவர் எதிர்கொண்ட கடுமையான விமர்சனமும், இங்கே
நடந்த தொடர் விவாதங்களும் திமுக இளைஞர் அணிச் செயலாளர் பதவியை தமிழ்நாட்டு முதலமைச்சர் பதவியைப் போல பூதாகரமாக்கியது. அதனாலேயே, இளைஞர் அணிச் செயலாளரின் தேர்வு அனைவராலும் உற்று நோக்கப்பட்டது.
நான் கவனித்தவரை இளைஞர் அணியின் இந்த மூன்றாண்டு செயல்பாடுகளை தொகுத்து எழுதினால் அது ஒரு