•உலகெங்குமுள்ள தமிழர்கள் பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாக, தமிழ்ப்புத்தாண்டாக
கொண்டாடுகின்றனர்.
•ஒரு காலத்தில் பொங்கலுக்கு மதச் சாயம், புராணச் சாயம் பூசி அதை இந்து மதப்
பண்டிகையாக்கப் பார்த்தனர்.
•தீபாவளி, சரஸ்வதி பூசை போன்ற புராணக் கதைகளைக்
கொண்டாடுவதை நிறுத்தி விட்டு தமிழர் திருநாளாம் பொங்கலைக் கொண்டாடுமாறு தந்தை பெரியார்
கேட்டுக் கொண்டார்.
பொங்கல் பண்டிகையைத் தமிழர் பண்டிகையாகக் கொண்டு கொண்டாடலாம் என்று
சுயமரியாதை இயக்கம் விடை கூறிற்று.” – விடுதலை 19.01.1969
•ஆரியர்கள் நமது பண்பாட்டை அழித்து அவர்களின் பண்பாட்டைப் புகுத்தி அதன் பெயராலேயே
நம்மை அடிமைப்படுத்தினர்.
•அதனால்தான் தந்தை பெரியார் வெறுமனே மொழிப் போராட்டம் மட்டுமே
நடத்தாமல் பண்பாடு மற்றும் இனப் போராட்டம் நடத்தி அதில் வெற்றி பெறும்போதுதான் ஆரிய
அடிமை விலங்கு உடையும் என்றார்.
•சட்டம், சாஸ்திரம், சமுதாயம், சம்பிரதாயப் பழக்கவழக்கங்கள், புராணங்கள், இதிகாசங்கள்,
இவை
எல்லாவற்றிலுமே நம் இழிவு நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது.
•எனவே, இவை எல்லாவற்றிலிருந்துமே நம்
இழிவு நீக்கமடைந்தாக வேண்டும். மொழியால் மேம்பாடும் வெற்றியும் பெற்றுவிடுவதாலேயே நமது
இழிவும்,
இழிவுக்கு ஆதாரமான கலாச்சாரமும் ஒழிந்துவிடமாட்டா.” – தந்தை பெரியார் ('விடுதலை '–
27.01.1950)
•ஆரிய/ பார்ப்பன இந்துமதப் பண்டிகைகளைக் கொண்டாடாதே, தமிழர்களுக்கு விழா என்றால் அது பொங்கல்தான், அதுதான் ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட விழா, அதுதான் 'தீட்டு' என்கிற,
ஆரிய கருத்தாக்கத்தை ஏற்காத விழா, அதுதான் தமிழர்களின் புத்தாண்டு விழா என்று தமிழகத்தின் மூளை முடுக்கெல்லாம் சென்று பரப்புரை செய்தவர் பெரியார்.
•அதன் தொடர்ச்சியாகத்தான் இன்று பொங்கல் என்பது தமிழர் திருநாளாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
•பொங்கல் என்பது தமிழனுக்கு, பார்ப்ப னரல்லாதாருக்கு உள்ள ஒரு பண்டிகை. இந்தப் பண்டிகை யின் பொருள்
என்னவென்றால், விவசாயிகள் தாங்கள் செய்த விவசாயத்தில் உற்பத்தியான பொருளை, அவ்வாண்டு முதல்
தடவையாகச் சமைப்பது மூலம் பயன்படுத்திக் கொள்ளும் நிகழ்ச்சி என்பதாகும்.
•இது தமிழனுக்கே உரியதாகும் என பொங்கலை தமிழர் திருநாளாக உறுதி செய்கிறார் தந்தை பெரியார்.
பெரியாரின் பொங்கல் பற்றிய கருத்துக்களை நாளை பார்ப்போம் 🙏🙏🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
•வடமாநிலங்களில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நாள் உண்டு.
•இந்தியாவின் வட மாநிலங்களில்,
இது மகர சங்கராந்தி எனவும் சங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது.
•மணிப்பூர் மாநிலத்தில் குடியிருக்கும் தமிழ்மக்கள் தங்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையைக் கொண்டாடப்படுகிறது.
✓தமிழக அரசுகள் செய்த
மாற்றங்கள்.
•2006-2011 வரையிருந்த தமிழக அரசு, தை 1 தமிழாண்டின் முதல் நாளானபடியால், அதுவே தமிழர்களின் தமிழ்ப் புத்தாண்டு என சனவரி 29, 2008 அன்று அறிவித்தது.
•1967 இல் நடைபெற்ற தேர்தலில் பங்கு பெற்ற திமு கழகம் வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தது.
•அவரது தலைமையில் 1967 மார்ச் 6இல் அமைந்த
அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது.
•ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிப்படுத்தினார்.
•இரு மொழி சட்டங்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம்)
உருவாக்கி முந்தைய அரசின் மும்மொழித்திட்டத்தினை (தமிழ், இந்தி, ஆங்கிலம்) முடக்கினார், மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை 1967 ஏப்ரல் 16 இல்தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார்.
•அமெரிக்கரல்லாத அண்ணாதுரை அவர்களுக்கு
•1965 மதராஸ் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்.
• இந்தியா 1950 இல் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டதிற்கு பின், இந்தியா ஒரு குடியரசு நாடு என அறிவிக்கபட்டதற்கு பின்னர்,
இந்திக்கு இந்திய அரசியலமைப்பில் தனி அங்கிகாரம் கிடைத்தது.
•இந்தியாவின் அலுவலக, ஆட்சி மொழியாக 15 ஆண்டிற்குப் பின் 1965 இல் அறிவிக்கப்பட்டது.
•இந்த அறிவிப்பு தமிழக மாணவர்களிடையே கவலையை ஏற்படுத்தியது.
•இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டது குறித்து அண்ணாதுரை இவ்வாறு கூறினார்:
“இந்தி பொதுமொழியாக ஆக்கப்பட்டது, அது பெரும்பான்மை மக்களால் பேசப்படுவதால்.
ஏன் புலி மட்டும் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது? உண்மையில் பெரும்பான்மையாக இருப்பது எலி தானே.
•1953 இல், அண்ணாதுரை வழிகாட்டுதலின்படி திமுக
மூன்று கண்டனத்தீர்மானங்களை முன்மொழிந்தது:
•இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மதராஸ் மாநிலத் தலைவர்களின் மொழிக்கொள்கையை இழிவுபடுத்துகின்ற செயலை கண்டனம் தெரிவித்தது.
•மதராஸ் மாநில முதல்வர் சி.ராஜகோபாலச்சாரி (இராஜாஜி), அறிமுகப்படுத்திய குலக்கல்வித் திட்டம் ,
எதிர்மறையாக குலத்தொழிலை வலியுறுத்தும் விதமாக அமைந்திருப்பதை (குலவழிக்கல்விமுறை) எதிர்த்து கண்டனம் தெரிவித்தது.
•கல்லக்குடியை டால்மியாபுரம் என்ற பெயர் மாற்றியதை எதிர்த்து, மீண்டும் கல்லக்குடி என்று மாற்றக்கோரி நடைபெற்ற போராட்டத்தில்,