இரண்டு நாள் முன்பு இந்த செய்தியை பார்த்து சிரித்து விட்டு நீங்கள் கடந்து போயிருக்க கூடும்!

ஆனால்,
இதன் பின்னால் இருக்கும் நீண்ட சர்வதேச அரசியலையும், மேற்குலகத்திற்கு 3-ம் உலக நாடுகள் வழங்கும் இலவச கல்வி மீதான பொறாமை பற்றியும் நீங்கள் அறிய வேண்டியது அவசியம்!

Thread……👇
1998-ல் தான் முதன் முதலில் (உலக வர்த்தக கழகம்) WTO-வில் கல்வியை வணிக ரீதியாக அணுக வேண்டும் என்று பேச தொடங்கினார்கள்!

மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவையை வணிகமாக மாற்றுவதில் வல்லமை பொருந்திய ஒரு ஆமை தான் இந்த WTO!
மிக மெதுவாக தங்களின் கொள்கையை சத்தமின்றி நடைமுறை படுத்தும் ஆமை!

👇
WTO மேற்குலக நாடுகளால் இணைந்து உருவாக்கப் பட்ட பெரு முதலாளிகளுக்கான ஓர் அடியாள்!

இதன் 3 வகை பிரிவுகளை நீங்கள் முதலில் தெரிந்து கொள்வது அவசியம்!

1.பொது வர்த்தக அமைப்பு ஒப்பந்தம்!
இது அனைத்து வகை உற்பத்தி பொருட்களின் வணிகம் சார்ந்தது!

ரேசன் கடைகளில் மானியம் ரத்து செய்யும்……
👇
ஒப்பந்தத்தில் நிர்மலா சீதாராமன் 2014-ல் கையெழுத்து போட்டது இதன் கீழ் தான்!

2.GATS (General Agreement Trade Services)
கல்வி
வங்கி
Insurance
Tele Communication
சுற்றுலா
அந்நியச்செலாவணி
இருநாட்டு சேவை & போக்குவரத்து
உள்ளிட்டவை!

3.அறிவியல் & தொழில்நுட்ப கண்டுபிடிப்பு காப்புரிமை!
👇
இதில் கல்வியை வணிகமயம் ஆக்கும் வேலையை 2 வகை ஒப்பந்தங்களில் வருகிறது!

இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் தங்களின் மக்களுக்கு வழங்கும் இலவச கல்வி என்பது US,UK நாடுகளில் விலை உயர்ந்த Business.

கல்விக்கடன் தருவது என்பது 1958-க்கு பிறகு US-ல் வேகம் பிடித்தது!

காரணம்……,
👇
1957-ல் ரஷ்யா Sputnik என்ற தனது செயற்கை கோளை செலுத்தி Technology யில் முன்னகர தொடங்கியது!
அடுத்த இரண்டு மாதம் கழித்து USA அதே போல செய்ய ராக்கெட் வெடித்து சிதறியது!

காரணம் விஞ்ஞான பட்டதாரிகள் 8% கூட இல்லை US-ல்!
Lack of Education என்பதை Satellite Launch தோல்விக்கு ஒரு காரணம் என்பதை பின்னாளில் தெரிய வந்தது!

Russia ஒரு பக்கம் USA -வை பச்கமாக Troll செய்து அறிக்கை விட்டது!
US விரும்பினால் நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம், நலிந்த நாடுகளுக்கு சோவியத் உதவும் அதே அடிப்படையில் என்று!
அது மிகப்பெரிய அவமானமாகப் போனது USA-வுக்கு!

நம் குழந்தைகள் University யை முடித்தால் தான் நாடு முன்னேறும் என உணர்ந்த
அதிபர். Dwight Eisenhower,
அறிவியல், விஞ்ஞான படிப்புகளுக்கு குறைந்த வட்டியில் கடன் தரும் சட்டத்தை கொண்டு வந்தார்!

1965-ல் அதை அனைத்து கல்விக்குமாக மாறியது!

👇
Hollywood படத்தில் ஒரு காட்சி,

ஈராக்-யை ஆக்கிரமித்த பிறகு US இராணுவத்தை சேர்ந்த ஒருவன் உள்ளூர் Motor Mechanic ஒருவரிடம் கேட்பான்…,

இவ்ளோ நல்லா English பேசுறியே என்ன படிச்சிருக்க நீ?

- Engineer

What do you mean Engineer?

- B.Tech in Mechanical Engineer

👇
அவ்ளோ செலவு பண்ணி படிச்சிட்டு ஏன் இங்க War-ல மாட்டியிருக்க?

- செலவா ? என்ன செலவு?

நீ படிச்சதுக்கு செலவு?

- யாராவது படிக்க செலவு பண்ணுவாங்களா?
எல்லாமே Free எங்க அரசாங்கமே பார்த்துக்கும்!

அதற்கு மேல் வாயே திறக்க மாட்டான் அந்த US Citizen.

👇
இதுதான் 3-ம் உலக நாடுகளுக்கும் So called வளர்ந்த நாடுகளுக்கும் உண்டான வித்தியாசம்!

இதை உடைப்பது தான் WTO வின் நீண்ட கால நோக்கம்!
2002 -ல் World Bank ஒரு அறிக்கை வெளியிடுகிறது!
அதில் கல்வி-யை உலகம் முழுக்க வியாபாரமாக மாற்றினால் அதன் மதிப்பு $ 2 டிரில்லியன் என்றது!

👇
தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு 3- 5 டிரில்லியன் ஆக அதன் மதிப்பு மாறியிருக்க வாய்ப்பு அதிகம்!

அதன் ஒரு சிறு அங்கம் தான் இந்தியாவில், 2010-ல் கொண்டு வரப் பட்ட NEET தேர்வு!

Dec 2015-நைரோபி மாநாட்டில் 162 நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையை காவு கொடுக்க போகிறார்கள் என்று முதலில்…
…👇
தமிழ்நாட்டில் பிரச்சாரத்தை செப்டம்பர் 2015-ல்
முன் எடுத்தவர் கல்வியாளர்.கஜேந்திர பாபு அவர்கள்!
அப்போது தான் எனக்குமே இப்படி ஒன்று இருப்பது தெரியவந்தது!

நாம் சென்னை மழை வெள்ளத்தில் கவனத்தை வைத்திருக்கும் போது,
2015 Dec - 15 to 19 தேதிகளில் நைரோபி WTO மாநாட்டில்…,

👇
162 நாட்டு மாணவர்களின் கல்வியை வணிக பட்டியலுக்கு மாற்றும் மசோதா கையெழுத்து ஆனது!
அதில் 3-ம் உலக நாடுகளின் பிரதிநிதிகளான இந்தியாவும்,பிரேசிலும் எதிர்த்து பேசாமல் வேடிக்கை பார்த்தபடி இருக்க, மசோதா நிறைவேறியது!

இந்தியா சார்பில் சென்றவர் Commercial Minister நிர்மலா சீதாராமன்!

👇
அந்த மசோதாவின் முக்கிய அம்சம் எந்த நாட்டு மாணவர்களும் பணம் செலுத்தினால் எந்த நாட்டு கல்லூரியிலும் படிக்கலாம்!

அதாவது,
எங்க தாத்தா, அப்பா பிறகு நான்னு எல்லோரும் கட்டுன வரில வளர்ந்த தஞ்சாவூர் Medical College ல என் பொண்ணு படிக்கனும்னா NEET தேர்வு எழுதனும்!

👇
அதையும் அவ ஏற்க்கனவே படிச்ச State Board நடத்தாது!
என் ஊர்ல எவனுக்குமே சம்பந்தம் இல்லாத CBSC காரன் நடத்துவான், அதுக்கும் Question Paper அவனோட பாடத்துல இருந்தே எடுப்பானுக!

ஏன்டா,
என் காசுல கட்டுன College க்கு என் பொண்ணு படிச்சு என் ஊர் காரனுக்கு வைத்தியம் பார்க்க போறா……,
👇
இதுக்கு ஏன்டா என் ஊருக்கே தொடர்பு இல்லாத ஒருத்தன் நடத்துற Exam-யை என் பொண்ணு எழுதனும்னு கேட்டால்……,

படிப்பு விசயத்துல வியாக்யானம் பேசாதீங்க அப்டிம்பானுக!

சரி அந்த Exam எழுத முடிவு பண்ணிடுறோம்னு வைங்க, அதுக்கு Coaching Class போகவே 2 லட்சம் குறைஞ்சது கட்டனும்!

👇
அதையும் போய் பரிட்சை எழுதி Pass பண்ணிட்டா……, அதன் பிறகு சீட் கிடைக்குமாங்குறதும் தெரியாது!

Example :- கோவை மாணவி

இப்படி பாஸ் பண்ணியும் சீட் கிடைக்கலைன்னா என் பொண்ணை ரஷ்யா, பிலிப்பைன்ஸ்-ன்னு அனுப்பி தான் படிக்க வைக்கனும்!
அதுக்கு என்னால செலவு செய்ய முடியும்!
மற்றவர்கள்?
👇
இப்படி நமது மாணவிகள் விட்டு செல்லும் இடங்களை தான் International Market -ல் விற்கும் பாதையை போட்டு தருகிறது WTO-வின் 2015 நைரோபி ஒப்பந்தம்!

காஞ்சிபுரத்து மாணவி கைவிட்ட மருத்துவ படிப்பு கலிஃபோர்னியா மாணவிக்கு கிடைப்பது இப்படித்தான்!

👇
மேற்குலக நாடுகளில் கல்வி கடன் என்பது குறைந்து 10 ஆயிரம் முதல் 1 லட்சம் $ வரை தருகிறார்கள்!

வேலைக்கு சேர்ந்து பல ஆண்டுகளாக வெறும் வட்டி மட்டுமே கட்டும் நபர்களும் உண்டு!

அவர்களின் சிரமத்தை குறைக்கவும், மேற்குலகில் அதிகரிக்கும் செலுத்தப்படாத கல்வி கடன்களை தவிர்க்கவும் தான்…,

👇
மூன்றாம் உலக நாடுகளின் கல்வியில் கை வைத்திருக்கிறது WTO.

அதாவது $ 10K (₹ 7லட்சம்) இருந்தால், International Quote aa வில் எளிதாக NEET யை பாஸ் செய்து அல்லது ஹிந்தி மாநிலங்களை போல
Answer Paper ல் Forgery செய்து முதலிடத்தை பிடிப்பார்கள்!

👇
அதாவது,
நீங்களும் நானும் கட்டுற Tax-ல் நடக்கும் கல்லூரியில் கலிஃபோர்னியா மாணவி படிப்பாள்!

உங்க பொண்ணும் என் பொண்ணும்…, தான் எதுக்குமே லாயக்கு இல்லாம தோற்றவள்-னு அவளே நம்பி தன் உயிரையே விட்றனும்!

இது தான் சூத்திரன் படிக்க கூடாது என்ற வர்ணாசிரம,சனாதன கட்சிகளும் விரும்புவது!

👇
NEET என்ற அரக்கன் WTO என்ற மேற்குலக முதலாளிகளின் 13, 14-வது கட்ட அடியாள் தான்!

இதை தடுப்பது மட்டுமே நிரந்தர தீர்வு அல்ல!
இந்தியா ஒன்றியம் WTO வில் கையெழுத்து இட்ட இது போன்ற பல ஒப்பந்தங்களில் இருந்து வெளியேறுவதே நிரந்தர தீர்வாகும்!

<End>

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தோழன் O.3

தோழன் O.3 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @pk_comrade_03

6 Jun 21
ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் நாங்கள் அவர்களோடு தான் நிற்கிறோம்!
-இது 2020 ல்……,
தோழர். திருமுருகன் காந்திக்கும் திமுக MP செந்தில் அவர்களுக்கும் விடுதலை புலிகள் குறித்து Twitter-ல் நடந்த விவாதத்திற்கு பிறகு @arivalayam வெளியிட்ட அறிக்கை இது!

Thread……👇
1/n
அன்று பெரியாரிஸ்ட்-கள் பலரும் இந்த அறிக்கை 2.O என்ற பெயரில் நடமாடும் சுப்பிரமணிய சாமி சீடர்களுக்கு விழுந்த அடியாகவே இதை கூறினார்கள்!

அந்த அறிக்கை-க்கு பின் வந்த நேர் காணலில், தேசிய தலைவர் பிரபாகரன் என்று கவனமாக வார்த்தையை பயன்படுத்தினார் M.P செந்தில்!

2/n
ஆக……,
இந்த நொடி வரை திமுக-வின் நிலைப்பாடு ஈழத்திற்கு ஆதரவாக தான்!
இன்றும் ஈழத்திற்காக நிற்கும் தோழர். தமிழச்சி தங்க பாண்டியன், அம்மா சுப்புலட்சுமி ஜெகதீசன் என்று ஈழ ஆதரவாளர்கள் பரவலாகவே திமுக-வில் உள்ளனர்!

அதே நேரம் புலம்பெயர் ஈழ தமிழ் அமைப்புகள்…,

3/n
Read 13 tweets
2 Jun 21
நாம் தமிழர் கட்சியின் @mrpaluvets கேட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் தருவதற்காகவே இந்த Thread..!

முதலில் நான் ஒரு தமிழ் தேசியவாதி, பெரியாரிஸ்ட், பள்ளி படிக்கும் 2002-ல் இருந்தே ஈழ ஆதரவாளன்!
2009 க்கு பிறகு தமிழீழ ஆதரவு இயக்கங்களை பின் தொடர்பவன்!
அதில் நாம் தமிழர்...,

1/n
கட்சியையும் ஒரு காலத்தில் ஆதரித்தவன்!
தற்போது மே 17 இயக்க ஆதரவாளன்!
என்னை பற்றிய தகவல்கள் இங்கு பலருக்கும் நன்கு தெரியும்!

தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் மே 17 இயக்க தோழர்கள் கிட்ட Detail aa பதில் வாங்கி தர்றேன்!
நான் இல்லை, எந்த மே 17 இயக்க ஆதரவாளன் கேட்டாலும்...,

2/n
- அமைப்பு இந்த தரவுகளை தரும்!

இப்போது, @mrpaluvets எனும் தாங்கள் யார்? இது தான் உண்மையான பெயரா என்று கூட எனக்கு தெரியாது! Twitter- -ல் பழகியதோடு சரி!

நீங்கள்...,
ஈழத்தமிழரா, முழுக்க புலம்பெயர் தேசத்தில் பிறந்து வளர்ந்தவரா அல்லது தமிழ்நாட்டை சேர்ந்தவரா அல்லது...,

3/n
Read 7 tweets
1 Jun 21
தான் ஏதோ தேர்தல் வரவு செலவு குறித்து கேள்வி கேட்டதாகவும், அதற்கு மே 17 தோழர்கள் எதிர் வினை ஆற்றுவதாகவும் பச்சையான பொய்யை சொல்லிக் கொண்டிருக்கிறார் @mrpaluvets.

நான் எழுதிய முதல் ட்வீட் இங்கே உள்ளது அது @savukku ஒரு Space-ல் பேசியது!

அதற்கு @NaamTamilarOrg யிடம்……,
1/n
பதில் இல்லாததால் பழு. முதல் திசை திருப்பல் அவதூறை தொடங்கினார்!
அன்று இரவு NTK கட்சியின் அநாகரிக கும்பலை இறக்கி எப்படி எல்லாமோ திசை திருப்பி பார்த்தார்கள்!
அப்போதும் அவர்கள் நினைத்தது நடக்கவில்லை
மே 17 தோழர்கள் தெளிவாக இரு கேள்வியை மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்!

2/n
அதன் பிறகு,
பழு. ஒரு நீண்ட Thread யை எழுதி முழுக்க முழுக்க அவதூற்றை மட்டுமே தூக்கி வந்தார்!

அப்போதும் நாங்கள் கேட்ட கேள்வி கீழே ;-

அடுத்து நிதி பற்றி பேசுவதற்கு மே 17 இயக்கம் தயாராக உள்ளது!

"ஈழத்து தமிழர்களிடமோ புலம் பெயர் ஈழத் தமிழர்களிடமோ 1 ₹ கூட நிதி வாங்க கூடாது"……
3/n
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(