ஈகை எவ்வளவு பெரிய விசயம்.....##

படித்ததில் மெய்சிலிர்த்தேன்.##

*உடல் அழியக் கூடியது. ஆத்மா அழியாது* என்று *அர்ஜுனனுக்கு கீதோபதேசம்* செய்த *கண்ணன்* அழுத இடம் ஒன்று உண்டு.

அஃது எந்த இடம் தெரியுமா?

*கர்ணன்* அடிபட்டு இறக்கும் தருவாயில் இருக்கிறான். *அவன் செய்த தர்மம்* *
அவனைக் காத்து நின்றது.*

*அந்த தர்மத்தையும் கண்ணன் தானமாகப் பெற்றுக் கொண்டான்* .

*கண்ணனுக்கே* தாங்கவில்லை. *"உனக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன். என்ன வரம் வேண்டுமோ கேள்"* என்றான்.

அப்போதும் *கர்ணன் "மறு பிறவி* என்று ஒன்று வேண்டாம். அப்படி *ஒரு வேளை பிறக்க நேர்ந்தால்,*
*யாருக்கும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் உள்ளத்தைத் தா"* என்று வேண்டினான்.

*கண்ணன் அழுதே விட்டான்.* இப்படி *ஒரு நல்லவனா* என்று அவனால் தாங்க முடியவில்லை.

*கீழே விழுந்து கிடந்த கர்ணனை அப்படியே எடுத்து மார்போடு அனைத்துக் கொண்டான்.*

*கண்ணனின் கண்களில் இருந்து
கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்தக் கண்ணீரால் கர்ணனை நீராட்டினான்.*

*கர்ணன் கேட்டதோ இல்லை என்று சொல்லாத உள்ளம் மட்டும் தான்* .

*கண்ணன்* மேலும் பலவற்றை சேர்த்துத் தருகிறான்

*"நீ எத்தனை பிறவி எடுத்தாலும், தானம் செய்து, அதைச் செய்ய நிறைய செல்வமும் பெற்று, முடிவில்
முக்தியும் அடைவாய் "* என்று *வரம்* தந்தான்.

*இறைவனைக்* காண வேண்டும், *முக்தி* அடைய வேண்டும் என்று எவ்வளவோ பேர் எவ்வளவோ தவம் செய்வார்கள். எவ்வளவோ படிப்பார்கள்.

*கர்ணன் இறைவனைக்* காண வேண்டும் என்று *தவம் செய்யவில்லை. முக்தி வேண்டும் என்று மெனக்கெட வில்லை* .
*இறைவன்* அவனைத் *தேடி வந்தான்.* கேட்காதபோதே *விஸ்வரூப தரிசனம்* தந்தான். அவனைக் *கட்டி அணைத்துக்* கொண்டான். *கண்ணீர்* விட்டான். *செல்வம், ஈகை, முக்தி* என்று எல்லாம் கொடுத்தான்.

*இறைவனைத் தேட வேண்டாம். அவன் நாம் இருக்கும் இடம் தேடி வருவான். கேட்காதது எல்லாம் தருவான்.
நம்மைக் கட்டி அணைத்துக் கொள்வான்.*

அதற்கு என்ன செய்ய வேண்டும்?

*கர்ணன் தானம் செய்தான், செய் நன்றி மறவாமல் இருந்தான்* .

*எளியவர்களுக்கு உதவி செய்தான், தனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி மறக்காமல் இருந்தான். அவ்வளவுதான்.*

*உலகளந்த பெருமாள்,* அவனிடம் *கை நீட்டி நின்றார்.*
*ஈகை* எவ்வளவு பெரிய நற்செயல் !

*இயன்றதை செய்வோம்*

*இல்லாதவர்க்கு*

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with I Am Pavanz Sharma

I Am Pavanz Sharma Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @PavanSharma1806

16 Jan
சரீரத்தில் ராசி, நட்சத்திரங்களின் ஆதிக்கம்!!!
---------------------------------------------------------------------------------

🌻 27 நட்சத்திரங்களும் 4 பாதங்களைக் கொண்டுள்ளது. ஆக மொத்தம் 108 நற்பண்புகள் உள்ளன. அவை 12 வகைகளாக பிறிக்கப்படுகிறது. அதுவே 12 இராசி மண்டலமாகும். Image
அவை :

* மேஷம்
* ரிஷபம்
* மிதுனம்
* கடகம்
* சிம்மம்
* கன்னி
* துலாம்
* விருச்சிகம்
* தனுசு
* மகரம்
* கும்பம்
* மீனம்

ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம்
--------------
1. வைராக்கியம் (Assertiveness)
2. தேசநலன் (Citizenship)
3. நிறைவேற்றுதல் (Chivalry)
4. துணிச்சல் (Courage)
5. கீழ்படிதல் (Obedience)
6. வெளிப்படையாக (Openness)
7. ஒழுங்குமுறை (Order)
8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9. ஆன்மிகம் (Spirituality)
Read 18 tweets
15 Jan
தானம் செய்வதில் தர்மர் எப்போதும் வல்லவர், ஆனால் அனைவரும் கர்ணனின் புகழையே பெருமையாக பேசினர். இதனால் அதிருப்தி அடைந்த அர்ச்சுனன், கிருஷ்ணனிடம் போய் முறையிட்டான். கிருஷ்ணனும் யோசித்து விட்டு, "வா அர்ச்சுனா, நேரில் சென்றே பார்த்து விடுவோம்" என கூறி அந்தனர் வேடமிட்டு இருவரும் Image
சென்றனர்.

முதலாவதாக, தருமரின் அரண்மனைக்குச் சென்று, "தருமரே, நாங்கள் சமைக்க விறகு வேண்டும், மழை பெய்து கொண்டிருப்பதால் விறகு கிடைக்க வில்லை. சிறிது விறகு தானமாக கொடுங்கள்" என கேட்டனர்.
தருமரோ, "அந்தணர்களே, அரண்மனையில் இருந்த விறகுகள் சமைக்க பயன்படுத்தப்பட்டு விட்டன, மழை
பெய்வதால் தற்போது விறகு வெட்டவும் முடியாது, அதனால் நீங்கள் தாராளமாக இங்கு சாப்பிட்டு செல்லுங்கள்" என்றார்.
அதற்கு அவர்களோ, "பரவாயில்லை அரசரே, நாங்கள் வருகிறோம்" என்று கூறி அங்கிருந்து சென்றனர்.

செல்லும் வழியில், "அண்ணனிடம் இல்லாததை கேட்டால் அவரால் எப்படி தர இயலும்?"
Read 10 tweets
15 Jan
#இன்று_சனிக்கிழமை

#ஸ்ரீ_லக்ஷ்மீ_ந்ருஸிம்ஹர்
#அஷ்டோத்தர_சதநாம_ஸ்லோகம்

நாரஸிம்ஹோ மஹாஸிம்ஹோ
திவ்யஸிம்ஹோ மஹாபல:

உக்ரஸிம்ஹோ மஹாதேவ:
உபேந்த்ரச்’சாக் நிலோசந:

ரௌத்ர: சௌ’ரிர் மஹாவீர:
ஸுவிக்ரம பராக்ரம:

ஹரிகோலாஹலச்’சக்ரீ
விஜயச்’ச ஜயோ(அ)வ்ய்ய: Image
தைத்யாந்தக: பரப்ரஹ்மாப்ய
கோரோ கோரவிக்ரம:

ஜவாலாமுகோ ஜ்வாலமாலீ
மஹாஜ்வாலோ மஹாப்ரபு:

நிடிலாக்ஷ: ஸஹஸ்ராக்ஷோ
துர்நிரீக்ஷ்ய: ப்ரதாபன:

மஹாதம்ஷ்ட்ராயுத: ப்ராஜ்ஞோ
ஹிரண்யக நிஷூதன:

சண்டகோபீ ஸுராரிக்ன:
ஸதார்த்திக்ந: ஸதாசி’வ:

குணபத்ரோ மஹாபத்ரோ
பலபத்ரஸ் ஸுபத்ரக:
கராலோ விகராலாச்’ச
விகர்த்தா ஸர்வ கர்த்ருக:

பைரவாடம்பரோ திவ்யச்’
சாகம்பஸ் ஸர்வ ச’த்ருஜித்

அமோகாஸ்த்ர: ச’ஸ்த்ர தர:
ஹவ்யகூடஸ் ஸுரேச்’வர:

ஸஹஸ்ர பாஹுர் வஜ்ரநக:
ஸர்வஸித்திர் ஜநார்தந:

அனந்தோ பகவான் ஸ்த்தூலச்’
சாகம்யச்’ச பராவர:
Read 6 tweets
13 Dec 21
கிளி மாலையுடன்
நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் என்கிற மோஹினி அலங்காரம்

#ஸ்ரீரங்கம், ஸ்ரீ #அரங்கநாதசுவாமி திருக்கோயில். (1-வது திவ்யதேசம்)🍃🌺#பெரியதிருநாள் - திரு அத்யயன உற்சவம் (வைகுண்ட ஏகாதசி பெருவிழா)🌺🍃🌸#பகல்பத்து உற்சவம் 10 ஆம் திருநாள் காலை
ஸ்ரீ #நம்பெருமாள் 🌟நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில்🌟
⭐️ ரத்தினக்கிளி
⭐️ தலையில் நாகாபரணம்
⭐️ பவளமாலை
⭐️ அடுக்கு பதக்கம்
⭐️ ஏலக்காய் ஜடை தரித்து மூலஸ்தானத்திலிருந்து தங்கப் பல்லக்கில் புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி
பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.
🌸 13-12-21
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
#Srirangam, #Trichy, Sri #Aranganathaswamy Temple. (1st Divya Desam)🍃🌷#Adhyayanotsavam - #Vaikunda #Ekadasi Festival 🌷🍃🌻#Pagal_Pathu Day 10, Sri #Namperumal decorated as Sri
Read 4 tweets
12 Dec 21
🌹 🌿 பெருமாளுக்கு உகந்த நாள் வைகுண்ட ஏகாதசி 🌿🌹

🌹 🌿 சொர்க்கம் பக்கத்தில் ஸ்ரீரங்கம் (வைகுண்ட ஏகாதசி 14.12.2021)🌿 🌹

🌹 🌿 ✨ குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு Image
உடலெனக் குருகு மாலோ என் செய்கேன் உலகத்தீரே.✨🌿🌹

🌹 🌿 பொருள்:

🌹 🌿 கடல் போல கரிய நிறம் கொண்ட ரங்கநாதனின் அழகை எப்படி சொல்லுவேன்?

🌹 🌿 மேற்கில் தலையும்,

🌹 🌿 கிழக்கில் திருவடியும் நீட்டியபடி,

🌹 🌿 வடக்கில் முதுகை காட்டி துயில்கிறான்.
🌹 🌿 தெற்கிலுள்ள இலங்கையைப் பார்த்தபடி இருக்கும் அவனது அழகு உருவம் கண்டு உள்ளமும், உடலும் உருகி விட்டது. செய்வதறியாமல் திகைத்து நிற்கிறேன்.

🌹 🌿 சொர்க்கம் என்பது வேறு எங்கும் இல்லை, அது நம் மனதில் தான் இருக்கிறது. அதை வாழும் காலத்திலேயே அனுபவிக்கலாம்
Read 15 tweets
12 Dec 21
இன்று!

கார்த்திகை 26, டிசம்பர் 12/12/2021, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி

சிறப்பு : நன்மை வழங்கும் ராமர் வழிபாட்டு நாள். அகோபிலமடம் 45வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்,

வழிபாடு: ராமருக்கு விரதமிருந்து துளசி மாலை சாத்தி வழிபடுதல்.

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ராமாவதாரம் Image
பரிபூரண அவதாரம் ஆகும். அறமே வாழ்வின் ஆன்மிக ஜோதி. அறத்தை வளர்ப்பதற்கும், மனிதனிடம் மறைந்து கிடக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதற் கும் ஸ்ரீமன் நாராயணன் ராமனாக அவதாரம் செய்தார்.

மனிதன் நீதிமுறைகள், ஒழுக்க நியதிகள் மற்றும் ஆன்மிக லட்சியங்கள் குறித்து உறுதியான கொள்கையுடன் விளங்க
வேண்டும். இப்படி தான் வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியது ராமாவதாரம். ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் என்று வாழ்ந்தவர் அவர்.

ராமன் பிறந்தகாலத்தில் ஐந்து கிரகங்களும் மிகவும் உச்சநிலையில் இருந்தது. அதனால் ராமருடைய ஜாதகத்தை எழுதி, அதை பூஜை அறையில் வைத்து பூஜை செய்பவர்களுக்கு
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(