பெரியார், பெரியாறு – வித்தியாசம் தெரியாத முதல்வர் மு.க.ஸ்டாலின்..! திருவள்ளுவர் தினத்தில் தமிழுக்கு வந்த சோதனை..!
தெய்வப்புலவர் திருவள்ளுவ நாயனாரின் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, புகழஞ்சலி செலுத்தி இருந்தார்.
இதுதொடர்பாக அவர் தமிழில் வெளியிட்டு இருந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு இருப்பதாவது:-
திருவள்ளுவர் தினத்தில்,
அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை மற்றும் அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன்.
இவ்வாறு அவர், குறிப்பிட்டு இருந்தார்.
அதோடு கடந்த ஆண்டு கன்னியாகுமரியில் அவர் எடுத்திருந்த, திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை தொடர்பான வீடியோவையும் இணைத்திருந்தார்.குஜராத்தை தாய் மொழியாகக் கொண்ட,தமிழ் தெரியாத பிரதமர் நரேந்திர மோடி,திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நேற்று,
வெளியிட்ட தமிழில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், எந்தப் பிழையும் இல்லை.ஆனால் இதே திருவள்ளுவர் பிறந்த தினத்தில், தமிழினத் தலைவர் மு.கருணாநிதியின் மகனும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள முல்லைப் பெரியாறு அணை தொடர்பான செய்தியில் பிழை உள்ளது.
இதுதொடர்பாக, தமிழக முதல்வரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தி வருமாறு:-
முல்லைப் ‘பெரியார்’ அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் சிலை, அவரின் சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகரில் தமிழ்நாடு அரசின் சார்பில்,
நிறுவப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தி, தமிழக முதல்வரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பை இணைத்து வெளியிடப்பட்டு இருந்தது.
பின்னர் தமிழக அரசின் மக்கள் செய்தி தொடர்பு துறை மூலமாக வெளியிடப்பட்ட போஸ்டரை இணைத்து வெளியிடப்பட்டு இருந்தது.ஆக நேற்று ஒரே டுவிட்டர் பக்கத்தில் 2 இடத்தில் இந்த செய்தி இடம் பெற்றுள்ளது.இந்த இரண்டு செய்திகளிலும் “முல்லைப் பெரியாறு” என்பதற்குப் பதிலாக “முல்லை பெரியார்“ என்று,
குறிப்பிடப்பட்டு உள்ளது.தமிழக அரசின், இந்த செய்தி குறிப்பு, “செய்தி வெளியீடு எண் 108” 3 பக்கங்களைக் கொண்டது.அந்து செய்தி குறிப்பின் தலைப்பில் கொட்டை எழுத்தில் “பெரியாறு” – க்கு பதிலாக “பெரியார்” என்றே எழுதப்பட்டுள்ளது.இது ஏதோ கவன குறைவினால் ஏற்பட்ட பிழை என்று சொல்வதற்கு,
வாய்ப்புகள் மிக மிக குறைவு.ஏனெனில், தமிழில் பாண்டித்தியம் பெற்ற அதிகாரிகள்தான் இதனை எழுதுகிறார்கள். அதன் பின்னர், பல நிலைகளை கடந்து, எழுத்துப் பிழை, கருத்துப் பிழை எல்லாம் சரி செய்யப்பட்ட பிறகே, முதல்வரின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது.எனவே,
இது தட்டச்சுப் பிழை என்றுகூறி தப்பிப்தற்கு இடமில்லை.தட்டச்சுப் பிழை என்று சொல்வதாக இருந்தால், தமிழக அரசின் தலைமைப் பீடத்தில், செய்தி வெளியிடும் முக்கிய பொறுப்புகளில் தமிழ் தெரியாத கத்துக் குட்டிகள்தான் அமர்த்தப்பட்டுள்ளா? என்ற கேள்வி எழும்.எனவே அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
ஆனால் விஷமத்தனமாக, திட்டமிட்டு, “முல்லைப் பெரியாறு அணை” என்ற பெயரை “முல்லைப் பெரியார் அணை” என்று மாற்றுவதற்காக செய்த சதி என்று தெரிகிறது.
உண்மையிலேயே இந்தத் தவறு கவனக்குறைவால் நேர்ந்தது என்றால் உடனடியாக அதனை சரி செய்து இருப்பார்கள். ஆனால் இந்தத் தவறு சரி செய்யப்படவே உள்ளது.
ஆகவே இது திட்டமிட்டு திணிக்கப்பட்டதுதான் என்று திட்டவட்டமாக நம்பலாம் என்கின்றனர் மூத்த பத்திரிக்கையாளர்கள்.எது எப்படியோ தெய்வப்புலவர் திருவள்ளுவர் தினத்தன்று, தமிழுக்கு வந்த சோதனை, வேதனையான ஒன்று!
ஸ்டாலின் ஆட்சி மீது கடும் அதிருப்தி ! அடுத்த வாரம் டில்லி சென்று, ஆதாரங்களை அளிக்கும் கவர்னர்!
முதல்வர் ஸ்டாலின் ஆட்சி மீது, கவர்னர் ரவிக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசிடம், இதுகுறித்து அவர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அடுத்த வாரம் டில்லி சென்று, ஆதாரங்களை அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோஹித்,
2021 செப்டம்பர் மாதம் மாற்றப்பட்டார். புதிய கவர்னராக ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டார். மருத்துவ படிப்புக்கான, ‘நீட்’ நுழைவு தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதாக வாக்குறுதி அளித்து, தி.மு.க., தேர்தலில் வெற்றி பெற்றது; அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.
களத்தில் அண்ணாமலை! தனியார் சேனல் மீது நடவடிக்கைக்கு தயாரான மத்தியமைச்சர் முருகன்! சம்பவம் இருக்கு! 🔥 @annamalai_k@Murugan_MoS
தமிழகத்தில் பிரதமர் மோடி பதவியேற்றத்திலிருந்து தவறான நோக்கில் விமர்சனம் செய்வது வழக்கமாய் கொண்டுள்ளது தனியார் தொலைக்காட்சிகள். மேலும் படங்களிலும் காட்சிகள் வைக்கப்படுவது வழக்கமாகி வருகிறது. இதுவரை கருத்து சுதந்திரம் என்று படைப்பாளிகள் கம்பு சுத்தி வந்தார்கள்.
இனி பிரதமரையோ அல்லது தாய்நாட்டை அவமதித்தால் சும்மா இருக்கப்போவதில்லை என சட்டையை சுழற்றியிருக்கிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.ஜீ நெட்ஒர்க் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி ஷோ நடைபெற்று வருகிறது.அந்த தொலைக்காட்சியில் குழந்தைகள் உட்பட பலர் பங்கு பெரும்
தமிழகத்தில் நடக்கும்சதி திட்டம் அம்பலம்! கியா தொழிற்சாலை போல் ஆப்பிள்தொழிற்சாலையும் கை நழுவுகிறதா?
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை, ஒப்பந்த அடிப்படையில், பாக்ஸ்கான் நிறுவனம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்து அளிக்கிறது. இதில் சுமார் 2,000 பேர் பணிபுரிகின்றனர். டிசம்பர் 15 அன்று மதிய உணவு உட்கொண்ட சுமார் 200 பெண் தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு,
அருகே உள்ள மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து பாக்ஸ்கான் தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதே போல் தான் ஸ்டெர்லைட் பிரச்சனையும் ஆரம்பித்தது., ஐஃபோன் தயாரிப்பை மீண்டும் சீனாவுக்கு கொண்டு போக சீனா தன் விசுவாசிகளை கொண்டு செய்யும் சதி நாடகமா?
சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ பள்ளி கல்லூரிகளில் மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொல்லை! பள்ளி நிர்வாகத்தினை அரசாங்கம் கையகப்படுத்துமா அன்பில் மகேஷ்?!
திருநெல்வேலி மாவட்டம் சி.எஸ்.ஐ. கிருஸ்துவ நிர்வாகம் நடத்தி வரும் பள்ளியில் தொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வந்த தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் மீது பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் கொடுத்துள்ளதால் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து சி.எஸ்.ஐ. கிருஸ்துவ பள்ளியின் தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் தலைமறைவானார். மேலும் ஒரு பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சிக்கலில் உள்ளனர்.திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை சமாரியா தூய யோவான் மேல்நிலைப்பள்ளி தென்னிந்திய திருச்சபை டயோசீசன் நடத்தும் அரசு உதவி பெறும் பள்ளியாகும்.
தி.மு.க வினர் டார்ச்சர்..எஸ்.ஐ. தற்கொலையா! எஸ்.ஐ வெளியிட்ட ஆடியோ வைரல்! அச்சத்தில் மக்கள்!
ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்றதிலிருந்து பல்வேறு சட்டம் ஒழுங்கு சரியில்லை என அனைவரும் குற்றம் சுமத்தி வருகிறார்கள். தமிழகம் முழுதும் 200 நாட்களில் 500க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து பெண் குழந்தைகள் சீரழிக்கப்பட்டு தற்கொலை,செய்தும் கொலையும்,
நடந்து வருகிறது.இது ஒருபுறம் என்றால் திமுகவினர் டார்ச்சர் தாங்கமுடியாமல் காவல்துறை அதிகாரிகள் தற்கொலை செய்துவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களை காக்கும் காவல்துறையினருகே இந்த நிலைமை என்றால் சாதாரண பொதுமக்கள் தமிழகத்தில் நிம்மத்தியாக வாழ முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மோடி அலை வீச போகிறது.. 400 எம்பிக்களுடன் பாஜக ஆட்சியை பிடிக்கும்: அண்ணாமலை உறுதி! @annamalai_k
2024 ஆம் ஆண்டு மோடி அலைதான் வீச போகிறது. 400 எம்பிக்களுடன் பிரதமராக 3ஆவது முறை அவரே அமர்வார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.இந்த ஆண்டின் கடைசி மன்கீ பாத் நிகழ்ச்சி என்பதால் இதை திருவிழா போல் கொண்டாட அடையாற்றில் கராத்தே தியாகராஜன் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில் 2015- 16 ஆம் ஆண்டில் நீட் தொடர்பான பிரச்சினைகள் இருந்தது. அதை ஒப்புக் கொள்கிறோம். ஆனால் 2020 ஆம் ஆண்டு நீட் தேர்வு வெற்றி பெற்றது.