களத்தில் அண்ணாமலை! தனியார் சேனல் மீது நடவடிக்கைக்கு தயாரான மத்தியமைச்சர் முருகன்! சம்பவம் இருக்கு! 🔥 @annamalai_k@Murugan_MoS
தமிழகத்தில் பிரதமர் மோடி பதவியேற்றத்திலிருந்து தவறான நோக்கில் விமர்சனம் செய்வது வழக்கமாய் கொண்டுள்ளது தனியார் தொலைக்காட்சிகள். மேலும் படங்களிலும் காட்சிகள் வைக்கப்படுவது வழக்கமாகி வருகிறது. இதுவரை கருத்து சுதந்திரம் என்று படைப்பாளிகள் கம்பு சுத்தி வந்தார்கள்.
இனி பிரதமரையோ அல்லது தாய்நாட்டை அவமதித்தால் சும்மா இருக்கப்போவதில்லை என சட்டையை சுழற்றியிருக்கிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.ஜீ நெட்ஒர்க் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி ஷோ நடைபெற்று வருகிறது.அந்த தொலைக்காட்சியில் குழந்தைகள் உட்பட பலர் பங்கு பெரும்
ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ரியாலிட்டி சோ வில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து தவறான கண்ணோட்டத்தில் விமர்சனம் செய்வது போன்ற ஒரு காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது,இந்த வீடியோவை பிரதமர் மோடிக்கு எதிராக இயங்கும் சமூக வலைத்தளங்கள் பக்கங்களில்,
பதிவிட்டு ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்கள். மேலும் சமூக வலைதளபக்கங்களில் பொழுது போக்கு நிகழ்ச்சியான என பார்ப்பவர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிறு குழந்தைகளை வைத்து பிரதமர் மோடி மற்றும் பணமதிப்பிழப்பு குறித்து
அரசியல் சார்ந்த செயல்களும் இடம்பெற்று இருப்பது கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. இதில் மிகப்பெரும் காழ்ப்புணர்ச்சி இருப்பதாகவே தெரிகிறது.
பிரதமர் மோடி பணமதிப்பு இழப்பு செய்யப்பட்டதன் பயன்களை மறைத்து அதனை அப்படியே முட்டாள் தனம் என நகைச்சுவையாக விமர்சனம் செய்துள்ளனர்.
பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் செயல் என பலரும் கருத்து வெளியிட்டு வருகிறார்கள். டிஜிட்டல் இந்தியா மூலம் எவ்வளவு கருப்பு பணம் ஒழிக்கப்பட்டுள்ளது என்பதை சொல்ல வேண்டியது தானே?? UPI, BHIM பற்றி உலக நாடுகளே இந்தியாவை பாராட்டி வருகிறது.ஒரு நொடியில் ஒரு APP-இன் மூலம் சுலபமாக
பண பரிவர்த்தனை செய்ய முடிகிறது. பேரிடர் காலத்தில் இது எந்த அளவிற்கு உதவியது என்பது அனைவருக்கும் தெரியும்.ஊடங்களை பிடித்த பீடை மெல்ல தற்போது இது போன்ற ரியாலிட்டி ஷோ விலும் தொற்ற ஆரம்பித்துள்ளது.
இதனை தொடர்ந்து தொலைக்காட்சி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரியும்
மொபைலில் ZEE 5 app இருந்தால் uninstall செய்யுங்கள். அந்த app இருந்தாலும் இல்லையென்றாலும் App store-ல் சென்று ZEE 5 என்று type செய்து ஒரு ஸ்டார் கொடுத்து complaint கொடுங்கள்…என பலரும் சமூகவலைத்தளத்தில் பதிவிட தொடங்கினார்கள்.இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின்
பார்வைக்கு கொண்டுசெல்லப்பட்டது. உடனே தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடர்பாக மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் முருகன் அவர்களிடம் எடுத்து கூறியுள்ளார். அண்ணாமலை கூறியதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார். மத்திய இணையமைச்சர் முருகன். இதனால்,
பல சேனல்கள் சற்று பதட்டத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு @Murugan_MoS அவர்கள் தொடர்பு கொண்டு தமிழகத்தில் ஒரு ரியாலிட்டி டிவி ஷோவில்
பாரத பிரதமர் அவர்கள் மாண்பை குறைப்பது போல் சில காட்சிகளை வைத்திருப்பதைப் பற்றி கேட்டறிந்தார் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்!அவருக்கு என் நன்றிகள்.
ஸ்டாலின் ஆட்சி மீது கடும் அதிருப்தி ! அடுத்த வாரம் டில்லி சென்று, ஆதாரங்களை அளிக்கும் கவர்னர்!
முதல்வர் ஸ்டாலின் ஆட்சி மீது, கவர்னர் ரவிக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசிடம், இதுகுறித்து அவர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அடுத்த வாரம் டில்லி சென்று, ஆதாரங்களை அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோஹித்,
2021 செப்டம்பர் மாதம் மாற்றப்பட்டார். புதிய கவர்னராக ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டார். மருத்துவ படிப்புக்கான, ‘நீட்’ நுழைவு தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதாக வாக்குறுதி அளித்து, தி.மு.க., தேர்தலில் வெற்றி பெற்றது; அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.
பெரியார், பெரியாறு – வித்தியாசம் தெரியாத முதல்வர் மு.க.ஸ்டாலின்..! திருவள்ளுவர் தினத்தில் தமிழுக்கு வந்த சோதனை..!
தெய்வப்புலவர் திருவள்ளுவ நாயனாரின் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, புகழஞ்சலி செலுத்தி இருந்தார்.
இதுதொடர்பாக அவர் தமிழில் வெளியிட்டு இருந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு இருப்பதாவது:-
திருவள்ளுவர் தினத்தில்,
அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை மற்றும் அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன்.
தமிழகத்தில் நடக்கும்சதி திட்டம் அம்பலம்! கியா தொழிற்சாலை போல் ஆப்பிள்தொழிற்சாலையும் கை நழுவுகிறதா?
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை, ஒப்பந்த அடிப்படையில், பாக்ஸ்கான் நிறுவனம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்து அளிக்கிறது. இதில் சுமார் 2,000 பேர் பணிபுரிகின்றனர். டிசம்பர் 15 அன்று மதிய உணவு உட்கொண்ட சுமார் 200 பெண் தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு,
அருகே உள்ள மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து பாக்ஸ்கான் தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதே போல் தான் ஸ்டெர்லைட் பிரச்சனையும் ஆரம்பித்தது., ஐஃபோன் தயாரிப்பை மீண்டும் சீனாவுக்கு கொண்டு போக சீனா தன் விசுவாசிகளை கொண்டு செய்யும் சதி நாடகமா?
சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ பள்ளி கல்லூரிகளில் மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொல்லை! பள்ளி நிர்வாகத்தினை அரசாங்கம் கையகப்படுத்துமா அன்பில் மகேஷ்?!
திருநெல்வேலி மாவட்டம் சி.எஸ்.ஐ. கிருஸ்துவ நிர்வாகம் நடத்தி வரும் பள்ளியில் தொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வந்த தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் மீது பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் கொடுத்துள்ளதால் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து சி.எஸ்.ஐ. கிருஸ்துவ பள்ளியின் தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் தலைமறைவானார். மேலும் ஒரு பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சிக்கலில் உள்ளனர்.திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை சமாரியா தூய யோவான் மேல்நிலைப்பள்ளி தென்னிந்திய திருச்சபை டயோசீசன் நடத்தும் அரசு உதவி பெறும் பள்ளியாகும்.
தி.மு.க வினர் டார்ச்சர்..எஸ்.ஐ. தற்கொலையா! எஸ்.ஐ வெளியிட்ட ஆடியோ வைரல்! அச்சத்தில் மக்கள்!
ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்றதிலிருந்து பல்வேறு சட்டம் ஒழுங்கு சரியில்லை என அனைவரும் குற்றம் சுமத்தி வருகிறார்கள். தமிழகம் முழுதும் 200 நாட்களில் 500க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து பெண் குழந்தைகள் சீரழிக்கப்பட்டு தற்கொலை,செய்தும் கொலையும்,
நடந்து வருகிறது.இது ஒருபுறம் என்றால் திமுகவினர் டார்ச்சர் தாங்கமுடியாமல் காவல்துறை அதிகாரிகள் தற்கொலை செய்துவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களை காக்கும் காவல்துறையினருகே இந்த நிலைமை என்றால் சாதாரண பொதுமக்கள் தமிழகத்தில் நிம்மத்தியாக வாழ முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மோடி அலை வீச போகிறது.. 400 எம்பிக்களுடன் பாஜக ஆட்சியை பிடிக்கும்: அண்ணாமலை உறுதி! @annamalai_k
2024 ஆம் ஆண்டு மோடி அலைதான் வீச போகிறது. 400 எம்பிக்களுடன் பிரதமராக 3ஆவது முறை அவரே அமர்வார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.இந்த ஆண்டின் கடைசி மன்கீ பாத் நிகழ்ச்சி என்பதால் இதை திருவிழா போல் கொண்டாட அடையாற்றில் கராத்தே தியாகராஜன் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில் 2015- 16 ஆம் ஆண்டில் நீட் தொடர்பான பிரச்சினைகள் இருந்தது. அதை ஒப்புக் கொள்கிறோம். ஆனால் 2020 ஆம் ஆண்டு நீட் தேர்வு வெற்றி பெற்றது.