ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள் இராமேஸ்வரம், திருப்புல்லானி மற்றும் கயா அக்ஷயவடம் போன்ற இடங்களில் தில ஹோமம் செய்வது தர்ப்பணம் செய்வது பித்ரு தோஷத்தை போக்கும் என்கிறது சாஸ்திரம்.
தை அமாவாசை நாளில் கடற்கரையிலும் நதிக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் முன்னோருக்கு தர்ப்பணம் செய்வார்கள். புனித தலங்களுக்கு செல்ல முடியாவிட்டாலும் வீட்டில் இருந்தும் வழிபட்டு தர்ப்பணம் செய்யலாம்.
தை அமாவாசை தினத்தில் முன்னோர்களை வணங்கி தர்ப்பணம் கொடுப்பதுடன் நம்முடைய பிரச்சினைகள் நீங்க தானம் கொடுக்கலாம். முன்னோர்களின் ஆசியுடன் சகல செல்வ வளமும் பெருகும்.
அமாவாசை நாளில் நமது முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்யலாம். இதன் மூலம் நமது கடன் பிரச்சினை நீங்கும் வறுமை நிலை மாறும்.
அமாவாசை தினத்தன்று ஏழைகளுக்கும் இயலாதவர்களுக்கும் ஆடை தானமாகக் கொடுத்தால் ஆரோக்கியம் அதிகரிக்கும் நோய் பிரச்சனை நீங்கும்.
ஆயுள் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் ஏற்படுவதில் தடை இருப்பவர்கள் அமாவாசை தினத்தில் தேன் வாங்கி தானம் கொடுக்கலாம். இதன் மூலம் புத்திர பாக்கியம் உண்டாகும். காரிய தடை உள்ளவர்கள் காரிய வெற்றிக்கு தேங்காய் தானமாக கொடுக்கலாம்.
மனக்குழப்பங்கள் நீங்க பழங்களை தானமாக வழங்கலாம்.
தோஷங்கள் நீங்கும். துன்பங்கள் துயரங்கள் நீங்க வெள்ளி தானமாக கொடுக்கலாம். நெய் தானம் கொடுக்க தீராத நோய்கள் தீரும். பால், தயிர் தானமாக கொடுக்கலாம் கணவன் மனைவி பிரச்சினை தீரும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.
கண் பிரச்சினை உள்ளவர்கள் தீபம், விளக்கு தானமாக கொடுக்கலாம். பார்வை கோளாறுகள் நீங்கும். கண் பிரச்சினைகள் நீங்கும்.
🇮🇳🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். அசுரனை வென்ற அவர் இந்த தலத்தில் இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். 🙏🇮🇳1
முருகன் அமர்ந்த கோலத்தில் இருப்பது சிறப்பு. இத்தலத்தில் மலை வடிவில் சிவபெருமான் அருள்புரிகிறார். சிவனின் பெயரால் இத்தலம் "திருப்பரங்குன்றம்' எனப்படுகிறது. முருகனின் அருகில் நாரதர் தாடியுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.
முருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர். இது கடலோரத்தில் அலைகள் வீச அமைந்துள்ளதால் அலைவாய் என்ற பெயரும் உண்டு. இந்ததலம் கைலாயத்திற்கு சமமானது. முருகப்பெருமான் சூரர்களை வெல்வதற்கு முன்னும் பின்னும் தங்கிய இடம். 🙏🇮🇳3
அவர் இறந்து விட்டார். அடக்கம் செய்யணும்.., சொல்லிக் கொண்டே சென்றார்கள்..!!
மெல்ல எட்டிப் பார்த்தேன் மூச்சு இல்லை – ஆனால் இப்போதுதான் இறந்திருந்தார் என்பதை மட்டும் நம்ப முடியவில்லை..!!
இருபது வருடங்கள் முன்னாடி... அவர் மனைவி இறந்த பிறகு, *சாப்பிட்டாயா..!!* என்று யாரும் கேட்காத நேரத்தில்.. அவர் இறந்திருந்தார், யாருமே கவனிக்கவில்லை...!!
*பொண்டாட்டி போனதுமே போய்த் தொலைய வேண்டியதுதானே..* – என்று காதுபட மருமகள் பேசியபோது அவர் இறந்திருந்தார் அப்போதும் யாருமே கவனிக்க வில்லை...!!
*தாய்க்குப் பின் தாரம்.. தாரத்துக்குப் பின்.. வீட்டின் ஓரம் ...!!!* என்று வாழ்ந்த போது – அவர் இறந்திருந்தார். யாருமே கவனிக்க வில்லை ..!!!
கார்த்திகை திருவிழா, மார்கழியில் திருவாதிரை திருவிழா, தைப்பூச திருவிழா, மாசி சிவராத்திரி விழா மற்றும் பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் இந்தக் கோயிலில் திருவிழா நடைபெறுகிறது.
சிவன், பிரம்மா, திருமால் என்று மும்மூர்த்திகளுக்கும் ஒரே கோவிலாக ஈரோடு மாவட்டத்தில் அமைந்து இருக்கும் புண்ணியஸ்தலம் கொடுமுடி.
ஈரோட்டில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கொடுமுடி.
🙏🇮🇳1
பிரம்மன் இந்த தலத்துக்கு வந்து வழிபட்டதால் பிரம்மபுரி என்றும், திருமால் பூஜித்ததால் அரிகரபுரம் என்றும், கருடன் பூஜித்து தேவலோகம் சென்று அமுதம் கொண்டு வந்ததால் அமுதபுரி என்றும் இந்த தலத்துக்கு இன்னும் பல பெயர்கள் உள்ளன.
🙏🇮🇳2
திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய 3 பேராலும் பாடப்பட்ட தலம் என்பது மிகவும் சிறக்குரியதாகும்.
மலையின் முடியே இங்கு சிவலிங்கமாக காட்சி அளிப்பதால் கொடுமுடி என்று அழைக்கப்படுகிறது.
தல விருட்சம்
புன்னை, சதுரகள்ளி, மகிழம், குருந்த மரம்
🙏🇮🇳1
தீர்த்தம்
கோவிலுக்கு உள்ளே 22 தீர்த்தங்களும், கோவிலுக்கு வெளியே 22 தீர்த்தங்கள்.
பாடல் வகை
தேவாரம்
பாடியவர்கள்
சம்பந்தர், அப்பர்
🙏🇮🇳2
*தலவரலாறு*
இலங்கைப் போரில் ராவணனைக் கொன்ற பிறகு, சீதையை சிறைமீட்டு ராமபிரான் அழைத்துவருகிறார்.
ராமேஸ்வரம் தலம் வந்த பிறகு, ராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் விலக சிவபெருமானை வழிபடத் தீர்மானித்து, அனுமனை சிவலிங்கம் கொண்டு வருமாறு காசிக்கு அனுப்புகிறார்.