அண்டார்டிகாவை சுற்றி இருப்பது Antarctic ocean என்று பொதுவாக சொல்லி வந்தாலும் அங்கீகரிக்கப்பட்ட கடலாக இருந்தது இல்லை அதன் பகுதிகளை பசிபிக் கடல், இந்திய பெருங்கடல், அட்லாண்டிக் கடல் மூன்றுடனும் சேர்த்து தான் சொல்லுவார்கள்.
Antarctic ocean வெறும் பனி படலமா, அல்லது பசிபிக், இந்திய பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் கடலின் நீட்சியா என்று விவாதங்கள் நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில்தான் நேஷனல் ஜியோகிராபிக் Antarctic ocean ஐ Southern Ocean என்ற பெயருடன் தனிப்பெரும் கடலாக அறிவித்துள்ளது.
இந்த தெற்கு பெருங்கடல் அண்டார்டிகாவை சுற்றி 60 டிகிரி தெற்கு அட்ச ரேகையை எல்லையாக கொண்டு அமைந்துள்ளது.
பொதுவாக கடல் எல்லாம் அந்த கடல் இருக்கும் கண்டங்களை அடிப்படையாக கொண்டு எல்லை வகுக்கப்படும்.
ஆனால் தெற்கு பெருங்கடல் அதன் Antarctic Circumpolar Current எனப்படும் கடல் நீர் சுற்றும், செல்லும் திசையை வைத்து வரையறுக்கப்பட்டுள்ளது. அண்டார்டிகாவை சுற்றி 60 டிகிரி தெற்கு அட்ச ரேகையை எல்லையாக கொண்டு சுற்றும் கடல் பரப்பு இதன் எல்லையாக வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த தெற்கு பெருங்கடலை International Hydrographic Organization (IHO) எனப்படும் சர்வதேச ஹைட்ரோகிராஃபிக் அமைப்பு இன்னும் அங்கீகரிக்கவில்லை. ஆனால் அமெரிக்காவின் NOAA 1999 லேயே இந்த தெற்கு பெருங்கடலை அங்கீகரித்துவிட்டது.
நேஷனல் ஜியோகிராபிக் கொடுத்துள்ள அங்கீகாரம் காரணமாக இனி சர்வதேச வரைபடங்களில் தெற்கு பெருங்கடல் தனியாக குறிக்கப்படும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நம்பிக்கைகள், உணர்வுகள் என்பதெல்லாம் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் பலமுறை நமது சொந்தங்களை நண்பர்களை நம்பி இருப்போம். அவன் நல்லவன் நேர்மையானவன் என்று மனதார நம்பி பணம் குடுத்து இருப்போம்.
ஆனால் அவர்கள் நம்மை ஏமாற்றிய பின் அடப்பாவி உன் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்து இருந்தேன் என்று புலம்புவோம். நீங்கள் நம்பியதாலேயே அது உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் நல்லவர்கள் என்று நம்பியது உங்கள் மனப்பிராந்தி. உங்கள் நம்பிக்கைக்கும் நிஜத்திற்கும் சம்பந்தம் இல்லை.
நம்பிக்கை என்பது பகுத்தறிவின் எதிரி. ஒன்றில் மேல் உங்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டால் அதை நீங்கள் ஆராய முற்படுவதில்லை. கடவுள், சோதிடம், ஆழ்மன சக்தி, பில்லி சூன்யம், ஆவி, இல்லுமினாட்டி, பிரபஞ்ச ஈர்ப்பு விதி, சக்திமான், பூமி தட்டை, கடற்கன்னி என்று மக்கள் பல விஷயங்களை நம்புகிறார்கள்
சமீப காலமாக பச்சை மஞ்சள் டப்பாக்களுடன் கட்டம் கட்டமாக பலர் post செய்வதை பார்த்து இருப்பீர்கள். என்ன அது?
Wordle எனப்படும் online game தான் அது. சில வாரங்களாக viral ஆகி அனைவராலும் விளையாடப்படுகிறது.
Josh Wardle, என்னும் software engineer உருவாக்கிய word game ஐ powerlanguage.co.uk/wordle/ என்னும் வலைத்தளத்தில் சென்று விளையாடலாம். எந்த கட்டணமும் இல்லை. எதையும் பதிவிறக்கம் செய்ய தேவையும் இல்லை. விளம்பரங்களும் இல்லை.
எளிமையான விளையாட்டு தான் ஒவ்வொரு நாளும் ஒரு ஆங்கில ரகசிய வார்த்தை இருக்கும் உலகம் முழுவதும் அனைவருக்கும் ஒரே வார்த்தை தான். அந்த ரகசிய வார்த்தையை கண்டுபிடிக்க 6 வாய்ப்புகள் தரப்படும். முதல் வார்த்தை நீங்கள் விருப்பப்பட்ட 5 எழுத்து கொண்ட ஒரு வார்த்தை.
அமெரிக்காவில் இன்று அதிக எண்ணிக்கையிலான மக்கள், அச்சிடப்பட்டப் புத்தகங்களைவிட டிஜிட்டல் புத்தகங்களை அதிகமாகப் படிக்கின்றனர்.
அமேசானின் ‘கின்டில்’ போன்ற கருவிகள், அவற்றைப் பயன்படுத்துவோர் படித்துக் கொண்டிருக்கும்போதே அவர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டுகின்றன.
எடுத்துக்காட்டாக, ஒரு புத்தகத்தின் எந்தப் பகுதிகளை நீங்கள் விரைவாக வாசிக்கிறீர்கள், எவற்றை மெதுவாக வாசிக்கிறீர்கள், எந்தப் பக்கத்தில் ஓர் இடைவேளை எடுத்தீர்கள், எந்த வாக்கியத்துடன் அப்புத்தகத்தை ஒட்டுமொத்தமாகக் கைவிட்டீர்கள் போன்ற எல்லாத் தகவல்களையும் கின்டிலால் திரட்ட முடியும்.
முகங்களை அடையாளம் காணும் உணரிகளையும் உயிரியளவு உணரிகளையும் சேர்த்துக் கின்டில் மேம்படுத்தப்படால், நீங்கள் வாசித்த ஒவ்வொரு வாக்கியமும் உங்கள் இதயத்துடிப்பு விகிதத்தின்மீதும் ரத்த அழுத்தத்தின்மீதும் எவ்வளவு தாக்கம் ஏற்படுத்தியது என்பதையும் கின்டில் அறிந்து கொள்ளும்.
இன்று பொதுவான கருத்து ஆங்கிலேயர்கள் பண்பாடு மற்றும் நடத்தையில் சிறந்தவர்கள் என்பது. English Etiquette இன்று உலகில் பிரபலம். ஆங்கிலேயர்கள் எதையும் முறையாக செய்யக்கூடியவர்கள். எல்லாவற்றிக்கும் ஒரு ரூல் இருக்கிறது.
எதை எப்படி செய்ய வேண்டும் என்று ஒரு முறை இருக்கிறது. அடுத்தவருக்கு தொல்லை தராமல் நமது செய்கைகள் இருக்க வேண்டும் இதுதான் etiquette இன் அடிநாதம்.
வரிசையில் நிற்க வேண்டும், அடித்து பிடித்து ஓட கூடாது,
நமது பாதையில் குறுக்கே நிற்கும் ஒருவரை கடந்து செல்லும்போது excuse me சொல்ல வேண்டும், வயதானவர்கள் பெண்களுக்கு கதவை திறந்துவிட வேண்டும், புதிதாக அறிமுகம் ஆகும் போது அவர்களிடம் வயது, வருமானம் போன்றவற்றை கேட்பது அநாகரீகம்,